Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
குரு பகவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குரு பகவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜூன், 2011

மீன ராசியிலிருந்து மேஷத்திற்கு இடம் பெயர்ந்தார் குரு பகவான்

0 comments

ஆலங்குடி: மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு நேற்று நள்ளிரவில் இடம் பெயர்ந்தார் குரு பகவான்.

நேற்று குருப் பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இக்கோவிலில் நேற்று நள்ளிரவில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. காலையில் குரு பரிகார பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

நள்ளிரவு 12.48 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோயிலில் குருப் பெயர்ச்சியின் இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா வரும் 12-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெறும்.
Continue reading >>