ரேகை அமைவுகளில் உள்ள சிறப்பான பதிவுகள் என்று, உதாரணத்திற்கு, சூரிய மேட்டில் நட்சத்திரம் இருந்தால் நல்லது என்றெல்லாம் கூறுகிறார்களே, இதெல்லாம் உண்மைதானா? இப்படியெல்லாம் இருக்கிறதா?
நிறைய பார்க்கிறோம். அதாவது படைப்பாற்றல் உள்ளவர்கள் என்று சொல்வார்களே அவர்களுக்கெல்லாம் நட்சத்திரங்கள் உள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கடுத்து அம்மன் ரேகை, சூல ரேகை இதெல்லாம் கூட பார்க்கிறோம்.
திரிசூலம் இருந்தால் நிறைய காசு பணம் வர ஆரம்பிக்கும். மூன்று கூறுகளாக பிரிந்து முப்பகுதியில் மூன்று கிரகங்கள் கடைசியில் ஒன்றாக வந்து இணையும். தாமரை உள்ளவர்களையெல்லாம் கூட பார்க்கிறோம். தாமரை மொட்டு இருக்கிறதல்லவா? அதுபோல இருக்கும்.
இது ஏறக்குறைய சுக்ரன் மேடு அமையும் இடத்தில் வரும். சுக்ரன் மேடும், சந்திரன் மேடும் இணையும் இடத்தில் தாமரை மொட்டு போல குவிந்து காணப்படும். இதெல்லாம் சாதகமான அமைவுகள். வீடு, சொத்து, சுகம், வாகன வசதிகள் என்று அனைத்தையும் கொடுக்கும்.
எந்த மேடாக இருந்தாலும் நேர்க்கோடு இருத்தல் அருமையான அமைவு. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அடுத்தவர்களை வழிநடத்தும் அளவிற்கு தெளிவாக இருப்பார்கள்.
இதேபோல, புதன் வளையம், சூரிய வளையம் என்று இருக்கிறது. சூரிய மேட்டையும், புதன் மேட்டையும் ஒரு ரேகை உருவாகி இணைக்கும். சூரிய மேடு என்பது மோதிர விரலிற்குக் கீழ் இருப்பது. புதன் மேடு என்பது சுண்டுவிரலிற்குக் கீழ் இருப்பது. இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய ரேகைகளையெல்லாம் நாம் பார்க்கிறோம்.
அவர்களெல்லாம் பார்த்தீர்களென்றால், இன்வென்ஷன், சமுதாயத்திற்கு ஏதாவது பயன்தரும் வகையில் ஏதாவது ஒன்றை கண்டுபிடிப்பார்கள். பட்ஜெட் தயார் செய்யும் அளவிற்கு இருப்பார்கள். புள்ளியியல் நிபுணர்கள் என்று சொல்வார்களே, அதுபோல.
சென்னையில் கூட ஒருத்தர் இருக்கிறார். அவர் பட்ஜெட் உருவாவதற்கு காரணமாக இருந்தவர். 1990, 1991ல் அறிமுகமானார். அப்பொழுது அவருடைய கையைப் பார்த்துவிட்டு சூரிய வளையமெல்லாம் இருக்கிறதே, இதுபோல வருவீர்கள் என்று சொன்னேன்.
அதற்கடுத்தது, செவ்வாய் மேடு. சுண்டுவிரலிற்கு கீழிருக்கும் புதன் மேட்டிற்கு அடுத்த மேடுதான் செவ்வாய் மேடு. இதில் சிலருக்கு நேர்க்கோடுகள் உருவாகியிருக்கும். இவர்கள் கம்யூனிச சிந்தனைகள் அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். தோழர்கள் புடைசூழ என்று சொல்வார்கள் பாருங்கள். அந்த மாதிரியானவர்களாக இருப்பார்கள்.
இதுபோல பல நல்ல குறியீடுகள் உண்டு. தாமரை, சூலம், நட்சத்திரக் குறியீடுகள் உண்டு. நட்சத்திரக் குறியீடுகள் உள்ளவர்கள் அரசாங்கத்தில் விருது, பரிசு, பாராட்டு, திடீர் யோகம் பெறுவார்கள்.
நட்சத்திரம் எந்த மேட்டில் அமைந்திருக்கிறதோ அதன் மூலமாக. புதன் மேட்டில் இருந்தால் இலக்கியம், கட்டுரை, போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுதல், விளையாட்டப் போட்டிகள் இந்த மாதிரி. இதுவே சுக்ரன் மேட்டில் இருந்தால், வீடு, மனை வாங்கி விற்பது போன்று இருக்கும். இதுபோல ஒவ்வொரு மேட்டிற்கும் ஒவ்வொரு அமைப்புகள் உண்டு.
இதேபோல கெட்ட குறியீடுகளும் உண்டு. இதில் பிரதானமானது கரும்புள்ளி. இது அவ்வளவு சீக்கிரத்தில் வரக்கூடாது. உள்ளங்கையில் எந்த மேட்டில் வருகிறதோ அந்த மேட்டிற்கு பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். நம்மிடம் வந்த ஒருவருக்கு செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தது. சகோதரர் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்.
உங்களுக்குள் பிரச்சனை வராது. அவருடைய வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்கச் சொல்லுங்கள் என்று சொன்னேன். திடீரென்று ஒருநாள் வந்து தம்பி போய்விட்டார் என்று அழுதார். இதுபோன்றெல்லாம் பார்க்கிறோம். நமக்கு அறிவுறுத்துகிறது. செவ்வாய் மேடு சகோதரன். இதில் உள் செவ்வாய் மேடு, வெளி செவ்வாய் மேடு என்றெல்லாம் இருக்கிறது.
இன்னொருத்தவர் கையைப் பார்த்து, சகோதரனுக்கு பாதிப்பு உண்டாகும் என்று சொன்னேன். அதற்கு அவர், எனக்கு சகோதரனே கிடையாது என்று சொன்னார். அப்படியானால் இரத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். 6 மாதம் கழித்து வந்தார். இரத்தத்தில் ஒரு விநோதமான நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரத்தத்தில் முக்கியமான வெள்ளை அணுக்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று மருத்துவர் கூறியிருக்கிறார். இதுபோன்ற சில விடயங்களெல்லாம் உண்டு.
ரேகைகள் சில நேரங்களில் கண்ணாடி போல காட்டுவதும் உண்டு. அதனால்தான் நல்ல குறியீடுகள், கெட்ட குறியீடுகள் என்று எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். சிலருக்கு சுக்ரன் மேட்டிலிருந்து ஒரு ரேகை கிளம்பி புத்தி ரேகையையெல்லாம் கடந்து செல்லும். அதுபோலவெல்லாம் கடந்து சென்றால் பாலியல் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
கருத்துரையிடுக