Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 2 டிசம்பர், 2022

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன ? அது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் . ? இதற்கான பரிகாரங்கள் என்ன ?


காலசர்ப்ப தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பரிகாரங்கள்

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? கால சர்ப்ப தோஷம் என்பது உண்மையில் ஒரு தோஷமாக அல்லது யோகமா, மற்றும் கால சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரங்கள் என அனைத்து அம்சங்களையும் இங்கே விரிவாக பார்க்கலாம்.

அத்துடன், அடுத்து வரும் 25 வருடங்களில் எப்போது கால கர்ப்ப தோஷம் ஏற்படும் நிலை உண்டாகும்.

அதனால் அந்த கால கட்டங்களில் குழந்தை பிறப்பதை தவிர்த்தால் அந்த குழந்தை கால சர்ப்ப தோஷம் இல்லாத ஜாதக அமைப்புகளுடனும் பிறக்கும் என்பது குறித்தும் பார்க்கலாம்

ஜோதிட அறிவியலில் ராகு மற்றும் கேது நாகத்தை குறிக்கும் கிரகங்களாகும். ராகு என்பது பாம்பின் தலையையும், கேது கிரகம் பாம்பின் வால் பகுதியாகவும் கருதப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் லக்கினம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு, மற்றும் கேது கிரகங்களுக்கு இடைப்பட்ட கட்டங்களிலிருந்தால், அந்த ஜாதகருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது என அறியலாம்.

ராகு மற்றும் கேது கிரகங்களிடையே உள்ள கட்டங்களில் இடைவெளி இல்லாமல் மற்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு கால சர்ப்ப தோஷம் முழுமையாக இருக்கும்.

ராகுவோ, அல்லது கேதுவோ 7 -ஆம் இடத்தில் இருந்தாலோ, லக்கினத்தில் இருந்தாலோ, அத்துடன் வேறு ஏதாவது கிரகம் சேர்ந்திருந்தால், அங்கே கால சர்ப்ப தோஷத்தின் விளைவுகள் முற்றிலும் மாறி அது கால சர்ப்ப யோகமாக மாறிவிடும்.

இந்த யோகத்தால், அந்த ஜாதகர் வாழ்வில் பல வெற்றிகளை பெற்று உச்ச நிலையை அடைவார்.

ராகு, கேதுவை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு பகவான் மற்றும் சனீஸ்வரன், இந்த இரண்டு சர்ப்ப கிரகங்களிடையே இருந்தால், அந்த ஜாதகம் கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்.

உதாரணத்திற்கு, ராகு சிம்ம லக்னத்திலும், கேது கும்ப லக்னத்திலிருந்தும் அமர்ந்து மற்ற கிரகங்கள் மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகத்தில் இருந்தால், அந்த ஜாதகம் கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டது என அறியலாம்.

கால சர்ப்ப தோஷம், சில ஜோதிட விதிகளின்படி யோகமாக மாறினாலும், இதை பொதுவாக கால சர்ப்ப தோஷம் என கூற காரணம், இது அதிகபட்சமாக எதிர்மறை பலன்களையே தரும் என்பதால்தான்,

ராகு, கேது கிரகங்கள், மற்ற கிரகங்களை போலல்லாமல், ஒரு ஜாதக கட்டத்தில் எதிர் புறத்தில் சுற்றிவரும்.


மற்ற கிரகங்கள் Clockwise-இல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெயர்ச்சியாகும்போது, ராகு, கேது கிரகங்கள் Anti-Clock Wise -இல் இடம் மாறும்.

உதாரணத்திற்க்கு, ராகு கும்ப லக்கினத்தில் அமர்ந்து கேது, சிம்ம லக்கினத்தில் இருந்து, மற்ற கிரகங்கள் முறையே, மகரம், தனுசு, விருச்சிகம், துலாம், மற்றும் கன்னி வீடுகளில் அமர்ந்திருந்தால் அது கால சர்ப்ப யோகமாகும்.

அதுவே, நான் முன்னர் கூறியபடி, கேது சிம்ம லக்கினத்தில் அமர்ந்து, ராகு கும்பத்தி இருந்து மற்ற கிரகங்கள், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், மற்றும் கடக லக்கினத்தில் இருந்தால் அது கால சர்ப்ப தோஷமாகும்.

இந்த அமைப்பு அந்த ஜாதகருக்கு வாழ்வில் பல தொல்லைகளை தரும்.

ஒரு ஜாதகத்தில் கால சர்ப்ப யோகம் இருந்து, அந்த நிலையில், ராகு மற்றும் கேது திரிகோணத்தில் இருந்தால், இந்த யோகத்தால் ஏற்படும் நற்பலன்கள் பல மடங்கு இருக்கும்.

ராகு, கேதுவோடு, மற்ற எதாவது ஒரு கிரகம் சேர்ந்திருந்து, அந்நிலையில் அந்த கிரகம் அந்த இடத்தில் ஆட்சி அதிபதியாக இருந்தாலோ, அல்லது உச்சமடைந்தாலோ, அந்த ஜாதகருக்கு வாழ்வில் பல நல்ல பலன்கள் உண்டாகும்.

ஆனால், கால சர்ப்ப தோஷ நிலையில், ஒரு ஜாதகத்தில் ராகு, மற்றும் கேது கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் அந்த தோஷத்தின் எதிர்மறை பலன்கள் அதிகளவில் இருக்கும். அதனால், அந்த ஜாதகருக்கு வாழ்வு ஒரு போராட்டமாக இருக்கும்.

ராகு, மற்றும் கேது கிரகங்கள், நம்முடைய கடந்த பிறவிகளினால் உண்டான கர்ம பலன்களை குறிப்பவை.

இந்த கால சர்ப்ப தோஷத்தால், மற்ற கிரகங்கள், சர்ப்ப கிரகங்களின் பிடியில் சிக்கிக் கொண்டு, கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டால், நம் கர்ம வினைகளின் காரணமாக அந்த ஜாதகரின் வாழ்கை ஒரு போர்க்களமாக இருக்கும்.

பொதுவாக, கால சர்ப்ப தோஷம் முழுமையாக உள்ளவர்களுக்கு, ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்கும். அவர்களுக்கு ஆண் வாரிசு இருக்காது. அது மட்டுமல்லாமல், கணவர்-மனைவியிடையே பரஸ்பர புரிதல் இல்லாமல், இல்லற வாழ்கை எப்போதும் வாக்குவாதங்களுடனும் மற்றும் சண்டை சச்சரவுகளும் நிறைந்து இருக்கும். பணியிலும், செய்யும் தொழிலிழும் முழு திருப்தி இருக்காது


இதுபோன்ற குடும்ப சூழ்நிலை உள்ளவர்கள் மற்றும் ஆண் வாரிசு இல்லாதவர்கள், கால சர்ப்ப தோஷத்திற்கு உரிய பரிகாரங்களை செய்தால், அவர்களின் வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான தொல்லைகள் மறைந்துவிடும்.

ஒரு ஜாதகத்தில், ராகு, மற்றும் கேதுவின் நிலைகளை வைத்து, கால சர்ப்ப தோஷம் 12 -வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதில் முதலாவது அனந்த கால சர்ப்ப தோஷம். ராகு லக்னத்திலிருந்து, கேது 7-ஆம் பாவத்தில் இருந்தால் இந்த வகை கால சர்ப்ப தோஷம் உண்டாகும்.

இந்த வகை சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வாழ்க்கை முழுவதும் பொருளாதார பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும்.

எவ்வளவு வந்தாலும் அதற்கு மேல் செலவுகள் இருக்கும். மூதாதையர் சொத்துக்களும் அவர்களுக்கு எளிதில் கிடைக்காது.

ஆனால், மற்ற கிரங்கள் சரியான நிலையில் இருந்து, இந்த தோஷத்திற்கான பரிகாரங்களையும் முழுவதுமாக செய்தால், அந்த ஜாதகருக்கு 33- வயதிற்கு பின்னர் இந்த தோஷம், யோகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளது. அதன் மூலம், அந்த ஜாதகம், வாழ்விலே பல நல்ல திருப்பங்களை சந்திப்பார்.

கால சர்ப்ப தோஷத்தில் 2-வது வகை குளிகை கால சர்ப்ப தோஷமாகும்.

இது ராகு லக்னத்திலிருந்து, 2-ஆம் இடத்தில் அமர்ந்து, கேது 8-ஆம் இடத்தில் இருந்து, மற்ற கிரகங்கள் இவை இரண்டின் இடைப்பட்ட பாவங்களில் வந்தால் இந்த வகை தோஷம் உண்டாகும்.

இந்த வகை தோஷத்தால், ஒருவரின் திருமண வாழ்வில் பல தொல்லைகள் ஏற்படும். அவரின் வாழ்க்கை துணை மூலம், அவருக்கு எந்த லாபமும் இருக்காது. இந்த வகை தோஷம் உள்ளவர்களுக்கு காலம் கடந்தே திருமணம் நடக்கும். ஆனால் அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். மற்ற கிரங்கங்கள் சாதகமான நிலையில் இருந்தால் அந்த ஜாதகரின் 27-ஆம் வயதிற்கு மேல் பல நல்ல பலன்கள் உண்டாகும்.

கால சர்ப்ப தோஷத்தால் 3-வது வகை வாசுகி கால சர்ப்ப தோஷமாகும்.

இது ராகு லக்னத்திலிருந்து 3-ஆம் வீட்டில் இருந்து, கேது 9-ஆம் வீட்டில் இருந்தால் அந்த வகை தோஷம் உண்டாகிறது.

இந்த வகை தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கடல் பெற்றோரிடமும், மற்றும் உடன்பிறந்தோர்களிடமும் உறவு முறை நன்றாக இருக்காது.

தாய் தந்தையருடன் எப்போதும் வாக்கு வாதங்கள், சகோதர, சகோதரர்களிடம் சொத்து பிரிச்சனைகள் என அவர்களின் குடும்ப உறவு நிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாகும்.

கடுமையான முயற்சிகள் செய்தாலும் அவர்களுக்கு அதற்குரிய பலன்கள் இருக்காது.

மற்ற கிரகங்களின் நிலைகள் ஒத்துழைத்தால், இந்த ஜாதகர் அவரின் 36-வயதிற்கு பின் படிப்படியாக முன்னேற்றங்களையும், நல்ல பலன்களையும் பெறுவார்.


இந்த தோஷத்தின் நான்காவது வகை, இந்த வகை ஷங்க்பால் கால சர்ப்ப தோஷமாகும்.

இந்த வகை தோஷம், ஒரு ஜாதகத்தில் ராகு லக்னத்திலிருந்து 4-ஆம் வீட்டில் அமர்ந்து, கேது 10-ஆம் வீட்டில் இருந்தால் உண்டாகும். இந்த வகை தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வியில் தடைகள் இருக்கும். பள்ளிப்படிப்பை முடிப்பதே பெரும்பாடாகி விடும், பணியிலும், தொழிலிலும் பல தொல்லைகள் ஏற்படும். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இருந்தால் அந்த ஜாதகர் அவருடைய 43-வயதிற்கு பின்னர் பெரிய தொழிலதிபராக வாய்ப்பு உண்டாகும். அல்லது தான் பணிபுரியும் இடத்தில் மிகப் பெரிய பொறுப்புக்கு வருவார்.

பத்ம கால சர்ப்ப தோஷம் என்பது எந்த தோஷத்தில் 5-வது வகையாகும்.

லக்னத்திலிருந்து ராகு 5-ஆம் வீட்டிலும், கேது 11-ஆம் வீட்டிலும் இருந்தால் இந்த வகை கால சர்ப்ப தோஷம் உண்டாகிறது. 5-ஆம் இடம் ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய நிலையை குறிப்பது.

இந்த வகை தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பூர்வ புண்ணிய நற்பலன்கள் அவ்வளவாக இருக்காது. இவர்களின் பிறப்பே, பிரசவ காலமே சற்று கடுமையாக இருக்கும். குழந்தை பருவத்திலும் பலவித நோய்களாலும், வாலிப வயதில் பல வேண்டாத சச்சரவுகளாலும் இவர்கள் பாதிப்படைவார்கள். மற்ற கிரகங்கள் உதவினால், இவர்களின் 48-வது வயதிற்கு பின் வாழ்வில் நல்ல பலன்களை பெறுவார்கள்.

ஆறாவது மஹா பத்ம கால சர்ப்ப தோஷமாகும்.

இது ராகு லக்னத்திலிருந்து 6-ஆம் வீட்டில் அமர்ந்து, கேது 12-ஆம் வீட்டில் அமர்வதால் உண்டாகும் நிலையாகும். உண்மையில் இது ஒரு தோஷமில்லை. இந்த வகை தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை முழுவதுமே எதிரிகள் சூழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள். ஒரு சாதாரண பேச்சு வார்த்தையே பெரிய சண்டையில் போய் முடியும். தொழிலும், பணியிலும் கூட இருப்பவர்கள் அனைவருமே விரோதியாக மாறுவதால், இவர்களுக்கு எங்குமே மன அமைதி கிடைக்காது. பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என அனைவரும் இவர்களின் சொல் பேச்சை கேட்க மாட்டார்கள். மற்ற கிரகங்கள் உதவினால், இவர்களின் 54-வது வயது முதல் கெடுபலன்கள் படிப்படியாக குறையும்.

காலசர்ப்ப தோஷத்தில் 7-வது வகை தஹக் கால சர்ப்ப தோஷமாகும்.

உண்மையில் இதுதான் மிக சக்திவாய்ந்த கால சர்ப்ப தோஷ நிலையாகும். ஜோதிட அறிவியலில், வேத நூல்கள், தெய்வீக ரகசியங்கள் என இறை சம்பந்தமான விஷயங்களில் நன்கு தேர்ச்சி பெறுவார்கள்.

பின் வருவதை முன்னரே சரியாக கணிக்கக்கூடிய தீர்க்கதரிசிகள் இவர்கள். மற்ற கிரகங்கள் உதவினால், இந்த யோக அமைப்பு உள்ளவர்கள் அவர்களின் 60-வயதிற்கு பின்னால், மிகச்சிறந்த, பண்பட்ட குருவின் நிலையை அடைவார்கள். இவர்களின் அறிவுரைகளை கேட்டு, அதன்படி நடக்க அவர்களின் பின்னே ஒரு பெரிய கூட்டமே இருக்கும்.

இந்த வகை யோகத்தை தன் ஜாதகத்தில் பெற்றிருப்பவர்கள், ஒரு ஞான நிலையை எட்டுவார்கள். 27-வயது வரை சில தொல்லைகள் ஏற்பட்டாலும், அதன்பின் வாழ்வில் உச்ச நிலையை எட்டுவார்கள்.

கால சர்ப்ப தோஷத்தால் 8-வது வகை கார்கோடக கால சர்ப்ப தோஷமாகும்.

இது ஒரு ஜாதகத்தில் ராகு 8-ஆம் பாவத்தில் அமர்ந்து, கேது 2-ஆம் வீட்டில் இருந்தால் உண்டாகும் தோஷமாகும். இது சற்று கடுமையான தோஷம். இவர்களின் வாழ்வில் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திப்பார்கள். பூர்விக சொத்துகள் நிறைய கிடைத்தாலும், அவை முற்றிலுமாக இழக்க கூடிய நிலை கூட சிலருக்கு வரலாம். வாழ்வில் அடிக்கடி பல விபத்துகளை சந்திப்பார்கள். சட்டபூர்வமான பல வழக்குகளை கூட சந்திக்க நேரலாம். மற்ற கிரகங்கள் உதவினால், இவர்களின் 33-வயதிற்கு பின்னர் பல சங்கடங்கள் படிப்படியாக குறையும்.

ஒன்பதாவது வகை கால சர்ப்ப தோஷம் சங்க சூர் கால சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஜாதகத்தில் ராகு 9-ஆம் இடத்தில் அமர்ந்து, கேது 3-ஆம் வீட்டில் அமர்ந்தாள் ஏற்படுகிறது.

இந்த வகை தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தந்தை வகை உறவு நிலை சரியாக இருக்காது. தந்தையிடமும், அவரின் உறவினர்களிடமும், பல மனக்கசப்புகள் ஏற்படும். அதுபோல, பணியில் உள்ள மேலதிகாரிகளிடமும் நல்ல புரிதல் இருக்காது. தன்னுடைய உரிமைகளை இவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர்தான் பெறமுடியும். எதிர்பாராத நேரத்தில், வாழ்க்கையில் அப்போதைய நிலையிலிருந்து பல சறுக்கல்கள் உண்டாகும். மற்ற கிரக நிலைகள் உதவுமானால், இவர்கள் தங்களின் 36-வது வயதுக்கு பின்னர் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை பார்ப்பார்கள்.

10-வது வகை கால சர்ப்ப தோஷம் கடக் கால சர்ப்ப தோஷம் என்றழைக்கப்படுகிறது. இது ராகு, ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 10-ஆம் வீட்டில் அமர்ந்து, கேது -ஆம் வீட்டிலிருந்தால் ஏற்படுகிறது.

இந்த வகை சர்ப்ப தோஷத்தால் தாய் வழி உறவு நிலைகள் கடுமையாக பாதிக்கப்படும். தாயுடனும், தாயை சேர்ந்த உறவினர்களிடனும், நல்ல உறவு இருக்காது.

அத்துடன் பணியிடத்தில் தொல்லைகள், குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற எதிர்மறை நிகழ்வுகளால் இவர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள்.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், முயற்சியிலும், குடும்ப உறுப்பினர்களின் குறுக்கீடு அதிகமாக இருக்கும். அதனால் மன நிம்மதி இழக்க கூடிய சூழல் உருவாகும். இவர்கள் தன் குடும்பத்தை பிரிந்து தொலைவில் அல்லது வெளிநாட்டில் வசித்தால் இந்த தொல்லைகளை பெருமளவில் தவிர்க்கலாம்.

மற்ற கிரகங்கள் உதவினால் இவர்கள் 42-வயதிற்கு பின் நற்பலன்களை பெறுவார்கள்.

விஷக்தா கால சர்ப்ப தோஷம் என்பது கால சர்ப்ப தோஷத்தில் 11-வது வகைப்படும்.


இந்த தோஷம், ஒரு ஜாதகத்தில் ராகு 11-ஆம் இடத்தில் இருந்து, கேது 5-ஆம் வீட்டில் அமர்ந்தால் உண்டாகிறது. இவர்களுக்கு வருமானம் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். குழந்தைகளால் திடீர் செலவுகள் ஏற்படலாம். எந்த நிலையிலும் இவர்கள் யூக அடிப்படையில் செயல்படும் Share Trading என்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.அப்படி செய்தால், பொருளாதார இழப்புகள் கடுமையாக இருக்கும்.

இவர்களின் 48-வயதிற்கு பின் மற்ற கிரகங்கள் உதவினால், பொருளாதார நிலை சீர்படும்.

கால சர்ப்ப தோஷத்தின் 12-வது வகை சேஷ நாக கால சர்ப்ப தோஷமாகும்.

இது, ராகு ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 12-ஆம் வீட்டில் அமர்ந்து கேது 6-ஆம் வீட்டில் இருந்தால் உண்டாகிறது. இந்த வகை தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வில் திருப்தி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எவ்வளவு செய்தாலும் இவர்களை திருப்தி படுத்தவே முடியாது. வாழ்வில் பல மறைமுக எதிரிகள் இவர்களுக்கு இருப்பார்கள். பொதுவாக இவர்களுக்கு அரசியலில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். மற்ற கிரக நிலைகள் உதவினால், இவர்களின் 54-வது வயதிற்கு பின் அரசியலில் நல்ல பதவிகளை அடைவார்கள்.

கால சர்ப்ப தோஷம், ஒரு ஜாதகத்தில் உள்ள மற்ற நல்ல யோகங்கள் பலன்களை குறைக்கும் என பொதுவாக நம்மப்படுகிறது. ஆனால், சக்திவாய்ந்த ராஜயோகங்கள் ஒரு ஜாதகத்தில் இருந்தால், அவை கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் கேடு பலன்களை வெகுவாக குறைத்துவிடும்.

கால சர்ப்ப தோஷம் உள்ள ஒரு ஜாதகத்தை ஆராயும்போது, அந்த ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக அம்சங்களையும், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் நன்கு கவனிக்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தை, மற்ற கிரகங்களை சரியாக ஆராயாமல், அந்த ஜாதகருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளதாலேயே, அந்த தோஷத்திற்குரிய பொதுப்பலன்கள் கிடைக்கும் என கூற முடியாது.

உதாரணத்திற்கு, ராகு ஒரு ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் இருந்து, கேது 1-ஆம் வீட்டில் இருந்து, அந்த ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்குமானால், அந்த ஜாதகருக்கு திருமண வாழ்க்கை நல்ல முறையில் அமையாது என்பது பொதுப்பலன்.

ஆனால், 7-ஆம் இடத்து அதிபதியோ, அல்லது சுக்கிரனோ, அந்த ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு திருமண வாழ்வு நன்றாகவே இருக்கும்.

கால சர்ப்ப தோஷத்தால், எந்த விதிவிலக்குகளும் இல்லாமல் ஒரு ஜாதகம் இருந்தால், அந்த ஜாதகருக்கு வாழ்க்கை முழுவதும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

திடீரென்று உச்சத்திற்கு போகும் வாழ்க்கை, அந்த உயர் நிலையிலிருந்து ஒரே நாளில் அதள பாதாளத்திற்கும் செல்லும். ஆகையால் இந்த தோஷம் உள்ளவர்களுக்கு நன்மை, தீமை இவை இரண்டும் நிரந்தரமில்லை.

கால சர்ப்ப தோஷம் குறித்து நாம் பெரிதும் அச்சப்படத் தேவையில்லை.

உலகின் மிகப்பெரிய வெற்றியாளர்கள், கால சர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி நம் கற்பனைக் கெட்டாத உயரத்தை தொட்டுள்ளனர்.


உதாரணத்திற்கு, மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, சச்சின் டெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் ஜனாதிபதி Dr.ராதாகிருஷ்ணன், திருபாய் அம்பானி, லதா மங்கேஷ்கர் என இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டாலும் வெற்றியின் உச்சத்தை தொட்டவர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும்.

வாழ்வில் உன்னத நிலையை அடைந்த ஆத்மாக்கள், ஞானிகள் பலர் இந்த தோஷத்துடன் பிறந்துள்ளனர்.

வாழ்க்கையில் பல பாடங்களை கற்றும் தரும் இந்த கால சர்ப்ப தோஷம்.

நமக்கு இயற்கை அன்னை அளித்த பரிசு. இந்த தோஷத்தால் ஏற்படும் பல்வேறு அனுபவங்களால் நம் தினசரி வாழ்க்கை மட்டுமல்லாமல் நம் ஆத்துமாவும் நன்கு பண்படுகிறது.

இது நம் ஆத்துமாவின் பரிணாம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

நமக்கு வாழ்க்கையில் பல நல்ல படங்களை போதிப்பதால் இந்த தோஷம் நமக்கு ஒரு வரப்பிரசாதமே.

கால சர்ப்ப தோஷத்தால், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாதிரியான அனுபவங்கள் ஏற்படும். ஆனால், இந்த தோஷத்தினால் ஏற்படும் சில பொதுப் பலன்களையும் பார்க்கலாம்.

விதிவிலக்குகள் இல்லாமல் இருக்கும் கால சர்ப்ப தோஷத்தால், நாம் எடுக்கும் காரியங்கள் பல தடங்களை சந்திக்கும்.

நாமும், செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களை நேரத்தோடு செய்யாமல், தள்ளிபோட்டுக் கொண்டே வரும் மன நிலையில் இருப்போம்.

காலத்தே பயிர் செய் என்பது இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சற்றும் பொருந்தாது.

இவர்கள் அமைதில்லாமல் இருப்பார்கள். மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும்.

தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். பலர் கூடியுள்ள சபையில், தாழ்வு மனப்பான்மையால், எப்போதும் ஒதுங்கியே இருப்பார்கள்.

இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்ட பலர் , **ஏதேனும் ஒரு நாள்பட்ட தீராத நோயால் அவதிப்படுவார்கள்.

கல்வி, வேலை, தொழில் என வாழ்வில் அனைத்து நிலைகளிலும், பல தடைகளை சந்திப்பார்கள்.

ஒரு ஜான் ஏறினால், ஒரு முழம் சறுக்கும் என்பது இவர்களுக்கு முழுதும் பொருந்தும்.

மனதில் எப்போதும் கலக்கமும், இனம்புரியாத பயமும் இருக்கும்.

திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. மறைமுக எதிரிகள், தன் சொத்துக்கள் களவு போவது, நம்பிக்கை துரோகம் போன்றவைகளால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடும்.

பொதுவாக, இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன் குடும்பத்திடமிருந்தோ, உறவினரிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ அல்லது சக பணியாளர்களிடமிருந்து எதற்கும் ஒத்துழைப்பு கிடைக்காது.

தனக்கு வேண்டியதை தன்னந்தனியாகவே பல போராட்டத்திற்குப் பின் இவர்கள் அடைவார்கள்.

அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படுவதால், இவர்களின் ஆயுள் காலமும் சற்று குறைவாகவே இருக்கும்.

சிலர் செய்யாத குற்றத்திற்கு சிறை செல்லவும் நேரிடும்.

கோச்சார ரீதியாக, சில கிரக மாற்றங்களின்போது இவர்கள் பெரிய விபத்துகளை சந்திக்கவும் கூடும்.


பொதுவாக கால சர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தொடக்க வாழ்க்கை ஏழ்மை நிலைமையில் இருக்கும்.

ஆனால், சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வந்தாலும், வாழ்வில் உச்ச நிலையை பலர் தொட்டுள்ளனர்.

தொழில் பெரிய அளவு நஷ்டம். ஒரே நாளில் அதிகாரம் பறிபோவது, வாழ்க்கை துணையின் பிரிவு, வேலையின்மை, செல்வத்தை மொத்தமாக இழப்பது என இந்த தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

கால சர்ப்ப தோஷத்தால், ஒரு ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் என பார்க்கலாம்.

இந்த தோஷத்தால், ராகு, மற்றும் கேது இருக்கும் பாவங்கள் கெட்டுவிடும்.

சுபகிரங்கள், இந்த இரு நிழல் கிரகங்களோடு சேர்ந்திருந்தால், அவை வலிமையிழந்து நன்மை செய்ய முடியாமல் போகும்.

ஒரு ஜாதகத்தில் அசுப கிரகங்களான சூரியன் மற்றும் சனீஸ்வரனோடு, ராகு, கேது கிரகங்கள் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர், அவர் வாழ்வில் ஒரு முடிவே இல்லாத பல இன்னல்களுக்கு உள்ளவார்.

இதன் பாதிப்பு ராகு அல்லது கேதுவின் தசாபுத்தி காலங்களில் மிக அதிகளவில் இருக்கும்.

கால சர்ப்ப தோஷம் உள்ள ஒரு ஜாதகத்தில் ராகு, மற்றும் கேது அசுப கிரகங்களான சனி, செவ்வாய், சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 1 , 5 மற்றும் 9 -ஆம் பாவங்களில் இருந்தால், அந்த தோஷத்தினால் உண்டாகும் தீய பலன்கள் மிக அதிகளவில் இருக்கும்.

இந்த அமைப்பு ஒருவரை அவரின் வாழ்வின் உச்சத்திற்கு அழைத்து செல்லலாம். ஆனால், ஒரே நாளில் அதள பாதாளத்திற்கு இந்த கிரக நிலை தள்ளிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த தோஷம் இருக்கும் நிலையில், சுப கிரகங்களான சுக்கிரன் அல்லது குருபகவானின் பார்வை, ராகு, மற்றும் கேது கிரகங்களின் மேல் பட்டால், இந்த தோஷத்தின் பாதிப்பு பெருமளவு குறையும்.

யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ போன்ற கிரகங்கள் ஒரு ஜாதகத்தின் ராகு, கேது வின் பிடியில் சிக்காமல் வெளியில் இருந்தால், கால சர்ப்ப தோஷத்தின் எதிர்மறை விளைவுகள் பல மடங்கு குறைந்துவிடும்.

இந்த தோஷம் உள்ள ஜாதகத்தில் ராகுவுடன் செவ்வாய் 9-ஆம் இடத்தில் இணைந்திருந்தால், சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத பெரும் குற்றம் செய்யும் நிலை, தற்கொலை, கொலை, அல்லது மிகப்பெரிய விபத்து என வாழ்வில் சில அசாதாரண நிலைகளை சந்திக்க வேண்டி வரலாம்.

ராகுவும், சனீஸ்வரனும் இணைந்திருந்தால், அவர்கள் இருக்கும் வீட்டின் எதிர்வீட்டில் நற்குணங்கள் அனைத்தையும் அழித்துவிடுவார்கள்.

ராகு, கேது பெயர்ச்சியின் போது ராகு கோச்சாரத்தில் சுக்கிரன் மற்றும் குருபகவானோடு இணைந்தால் அந்த கால கட்டத்தில் கால சர்ப்ப தோஷத்தின் பாதிப்புகள் முற்றிலும் இருக்காது.

இந்த தோஷம் இருந்தால், கோச்சார ரீதியாக கேது பெயர்ச்சியாகும் போது, அந்த வீட்டின் நற்குணங்களையெல்லாம் கேது மறைத்துவிடும்.

லக்னாதிபதி, ஒரு ஜாதகத்தின் ராகு, கேதுவின் பிடியிலிருந்து வெளியே இருந்தால், அந்த ஜாதகருக்கு, கால சர்ப்ப தோஷத்தின் பாதிப்புகள் சற்றும் இருக்காது.

ராகு, 3 அல்லது 6 -ஆம் இடத்தில் இருந்து அவை மேஷம், ரிஷபம் அல்லது கடக ராசியாக இருந்தால், கால சர்ப்ப தோஷத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது உண்மையில் ஒரு யோகமாகும்.

இந்த தோஷ நிலையில், ராகு, சனி அல்லது சூரியனுடன் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பத்தாம் வீட்டையோ, அல்லது பத்தாம் வீட்டின் அதிபதியையோ பார்த்தாலோ, அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் எந்த வேலையிலும் இல்லாமல் இருப்பார்.

இல்லாவிட்டால், எந்த வேலைக்கு சென்றாலும், ஒரு சில மாதங்களுக்கு மேல் தொடரமாட்டார்கள்.

இந்த கிரக அமைப்பு ஒரு ஜாதகத்தில் 7-ஆம் பாவத்தில் ஏற்பட்டால் அவரின் திருமண வாழ்வு நிலைக்காது. அந்த ஜாதகர் எத்தனை திருமணங்கள் செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடியும்.

ராகுவும், செவ்வாயும், கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தில் 3 -ஆம் வீட்டில் சேர்ந்திருந்தால், அடிக்கடி விபத்துகளும் அதனால் உடல் உறுப்பு இழப்புகளும் ஏற்படும்.

கால சர்ப்ப தோஷம் உள்ள நிலையில், ராகு, செவ்வாய் மற்றும் சனீஸ்வரன் லக்கினத்தில் இருந்தால், அந்த ஜாதகர் மிக ஆயுத்தானவர். எந்த கொடூர செயல்களையும் செய்ய அவர் அஞ்ச மாட்டார்.


கால சர்ப்ப தோஷம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், நாடுகளுக்கும் பொருந்தும். உதாரணத்திற்க்கு சுதந்திர இந்தியா உருவான நேரம், கால சர்ப்ப தோஷ காலம்தான்.

இந்த தோஷம் நடைபெறும் போது உருவான நாடுகள், வறுமை, லஞ்சம், ஊழல், எல்லைதாண்டிய பயங்கரவாதம், சுயநலமிக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன ்றவைகளால் பாதிக்கப்படும்.

வரும் வருடங்களில் எப்போது கால சர்ப்ப தோஷம் ஏற்படும் நிலை உள்ள கிரக நிலைகள் குறித்து சொல்கிறேன். அப்போது குழந்தை பிறப்பதை தவிர்த்தால், அவர்கள் கால சர்ப்ப தோஷத்திலிருந்து தப்பிப்பார்கள்.

2020- ஆம் ஆண்டு March 23-ஆம் தேதி முதல் May 26-ஆம் தேதி வரை

2021- ஆம் ஆண்டு January 4-ஆம் தேதி முதல் February 20-ஆம் தேதி வரை

2022- ஆம் ஆண்டு January 16-ஆம் தேதி முதல் April 10-ஆம் தேதி வரை

2026 - ஆம் ஆண்டு April 10-ஆம் தேதி முதல் July 04-ஆம் தேதி வரை

2035- ஆம் ஆண்டு July 20-ஆம் தேதி முதல் August 03-ஆம் தேதி வரை

2038 - ஆம் ஆண்டு August 6-ஆம் தேதி முதல் December 4-ஆம் தேதி வரை

2039- ஆம் ஆண்டு September 8-ஆம் தேதி முதல் 2039 November 17-ஆம் தேதி வரை

2040- ஆம் ஆண்டு June 15-ஆம் தேதி முதல் 2040 October 12-ஆம் தேதி வரை

2041- ஆம் ஆண்டு June 30-ஆம் தேதி முதல் 2041 July 8-ஆம் தேதி வரை

2042- ஆம் ஆண்டு November 29-ஆம் தேதி முதல் 2043 March 12-ஆம் தேதி வரை

2043- ஆம் ஆண்டு December 24-ஆம் தேதி முதல் 2044 January 7-ஆம் தேதி வரை

2044- ஆம் ஆண்டு October 22-ஆம் தேதி முதல் 2045 January 20-ஆம் தேதி வரை

இப்போது கூறிய காலகட்டங்களில் குழந்தை பிறப்பதை தவிர்த்தால், அவர்கள் கால சர்ப்ப தோஷத்திலிருந்து தப்பிப்பார்கள்.

கால சர்ப்ப தோஷம் என்பது முற்றிலும் தீமைகள் மட்டுமே உள்ளது என்பதல்ல. அதனால் சில நல்ல செயல்களும் நடக்கும். உதாரணத்திற்க்கு, இந்த தோஷம் ஒருவரின் வாழ்வில் அடைய வேண்டிய லட்சியங்களுக்காக மிக கடுமையாக உழைக்க வைக்கும். உதாரணத்திற்க்கு, காந்தியடிகளோ, ரஜினிகாந்தோ அல்லது சச்சின் டெண்டுல்கரோ கடுமையாக உழைக்காமல் உச்ச நிலையை அடையவில்லை.

இந்த தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள், ஆன்மிகத்தில் நன்கு பண்பட்டிருப்பார்கள். அவர்களின் ஆன்மிக வழியை பலர் பின்பற்றுவார்கள்.

கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் எதிர்மறை பலன்களை முடிந்த வரை தவிர்க்கஉதவும் பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

முதலில், கால சர்ப்ப தோஷ பரிகார பூஜை. இந்த பூஜையை, சக்திவாய்ந்த நாகஸ்தலங்களான ஸ்ரீகாளஹஸ்தி, ராமேஸ்வரம், திருநாகேஸ்வரம் போன்ற ஊர்களில் உள்ள சிவாலங்களில் செய்யலாம்.

பண்டைய சிவாலயங்களில், சிவனுக்கு ருத்ர அபிஷேகம் செய்யலாம்.

இந்த ருத்ர அபிஷேகம் செய்வதால் உண்டாகும் அளவிட முடியாத நன்மைகளை இன்னொரு வீடியோவில் விரிவாக கூறுகிறேன்.

வீட்டில் துளசி செடியை வைத்து, அதற்கு தினசரி விளக்கேற்றி வழிபட்டால், கால சர்ப்ப தோஷ பாதிப்புகளை பெருமளவில் தவிர்க்கலாம்.


எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் சர்ப்ப சுக்த ஸ்லோகத்தை படிக்கலாம்.

மனதில் எப்போதும், ஓம் நம சிவாய என்ற மாத்திரம் ஒலித்துக்கொண்டேயிருந்தால் உங்கள் வாழ்வில் கால சர்ப்ப தோஷம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

நாக பஞ்சமி அன்று முழு விரதம் இருப்பதும், நாகத்துடன் கூடிய மோதிரத்தை அணிவதும், நாக சர்ப்ப தோஷத்திற்கு ஒரு நல்ல பரிகாரம்.

நன்கு மந்திர உருவேற்றப்பட்ட கால சர்ப்ப யோக யந்திரத்தை, உங்கள் வீட்டிலும் மற்றும் பணியிடத்தில் வைப்பதும் ஒரு நல்ல தீர்வு.

இந்த யந்திரம் ஒரு அரண் போல் நின்று நம் வாழ்க்கையில் நாக தோஷத்தால் ஏற்படும் அனைத்து தீய பலன்களிலிருந்தும் நம்மை முழுவதும் காப்பாற்றும்.

மஹாமிருத்யுன்ஜெய மந்திரத்தை ஒரு நாளில் முடிந்த போதெல்லாம், உச்சரிப்பதோ, அல்லது கேட்பதோ நாக தோஷங்களிலிருந்து நாம் தப்பிக்க ஒரு எளியவழி.


அத்துடன் ராகு-கேது ஜெபத்தையும் நல்ல அனுபவமுள்ள ஆச்சார்யர்களை கொண்டு உங்கள் வீட்டில் செய்தால் கால சர்ப்ப தோஷத்தால், யோகமான பல நன்மைகள் ஏற்படும்.

தினமும் பறவைகளுக்கு உணவளிப்பதை கட்டாயமாக செய்யவும்

உங்களுடைய காலச்சென்ற பெற்றோர்களுக்கு கண்டிப்பாக தவறாமல், வருடம் முறை திவசம் செய்து வறிய நிலையில் உள்ளவர்களுக்கு பொருளுதவி செய்யவும்.

உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தால், நாக சர்ப்ப தோஷம் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து தீய சக்திகளிலிருந்தும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் குல தெய்வம் ஒரு அரண் போல நின்று பாதுகாக்கும்.

                                                

                              அம்மன் ஜோதிட நிலையம்

அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம்  கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு  2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 comments:

கருத்துரையிடுக