ஓம் சிவ சக்தி
வாகன சுகம் எல்லோருக்கும் அமைவதில்லை . பல லட்சகணக்கான சொத்து பெற்றிருப்பவர்களுக்கும் வாகன சுகம் அமைவதில்லை.
அதே சமயம் மாத சம்பளத்தில் இருப்பவர்களுக்கும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் வாகன சுகம் கிடைத்து விடுகிறது.
அதே சமயம் மாத சம்பளத்தில் இருப்பவர்களுக்கும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் வாகன சுகம் கிடைத்து விடுகிறது.
வாகனம் என்றால் கார்தான் என்ற பொருள் அல்ல. காரில் ஆரம்பித்து சைக்கிள் வரைக்கும் வந்து நிற்கும்.
எந்த வாகனம் அமைய வேண்டுமானாலும் யோக காலமும் , தசா புத்தியும் அனுசரணையாக வர வேண்டும்.
சாதாரண குடும்பத்தில் ஒரு குழந்தைக்கும் வாகன யோகம் இருந்து பெரியவன் ஆனபின் அந்த யோகம் இல்லை என்றாலும் ஜாதகத்தில் வாகன யோகம் என்பது ஒரு கால கட்டத்தில் இல்லையென்றாலும் , மற்றொரு கால கட்டத்தில் கட்டாயம் அந்த ஜாதகனுக்கு வாகன யோகம் உண்டு.
வாகன யோகம் என்பது செல்வந்தர்களுக்கு மட்டும் அமையும் என்பதல்ல. யாருக்கும் அமையலாம்.
ஜாதகப்படி நான்காம் இடத்தை கொண்டுதான் வாகன யோகம் உண்டா? இல்லையா என்று சொல்வார்கள்.அங்கே சுப கிரகங்கள் இருந்தால் வாகன யோகம் உண்டு. பாபகிரகங்கள் இருந்தால் வாகன யோகம் இல்லை . இது ஜோதிடத்தில் உள்ள பொதுவான கருத்து .
நான்காம் இடத்தில் சுப , பாப கிரக சேர்க்கை பார்வை நான்காம் இடத்து அதிபதி வலு குன்றி காணபட்டாலும் , வாகன யோகம் கைகூடி வராது .
அதேபோல் நான்காம் இடத்தில பாபகிரகம் இருந்தும் சுபர் பார்வை இருந்தால் வாகன யோகம் ஏற்படுவதுண்டு.
நான்காம் இடத்தில் சூரியன்- புதன்- குரு- இருந்து ராகு- கேது -சனி- பார்வை இல்லாது இருக்குமானால் வாகன சேர்க்கை உண்டு.
நான்காம் இடத்தில கிரகம் இல்லாது இருந்து வளர்பிறை சந்திரன் குரு சுக்கிரன் பார்வை நான்காம் இடத்துக்கு இருந்தாலும் வாகன சேர்க்கை ஏற்படலாம்.
நான்காம் இடத்து அதிபதி சுப பாப எந்த கிரகமானாலும். நான்காம் இடத்திலேயே ஆட்சி பெற்றிருந்தால் வாகன சுகம் உண்டு.
நான்காம் இடத்து அதிபதி, நாலாம் இடத்துக்கு ஆறு எட்டு பனிரெண்டில் மறைந்திருந்தால் வாகன சுகம் இருப்பதில் குறை உண்டாகும். இந்த கருத்து ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுப்படையான கருத்து என்றாலும் இதை நாம் ஒத்துக்கொள்ளவில்லை காரணம் இது உண்மையாக இருக்குமானால் தொழில் ஸ்தானத்துக்கு அதிபதியான பத்தாம் இடத்து அதிபதி தொழில் ஸ்தானத்துக்கு எட்டாமிடம் பெற்று விட்டால் தொழிலே இல்லை என்று சொல்லலாம்.
தொழில் ஸ்தானத்துக்கு எட்டாமிடம் லக்னத்திலிருந்து ஐந்தாவது இடம் பெற்று திரிகோண ஸ்தானமாகையால் தொழில் விருத்தியை சொல்ல வேண்டும். அதுபோல வாகன ஸ்தான அதிபதி வாகன ஸ்தானத்துக்கு (நான்காம் இடத்துக்கு) ஆறாமிடம் போவதால் அந்த கிரகம் லக்னத்துக்கு ஒன்பதாவது திரிகோணம் என்பதால் வாகன சௌகரியம் ஏற்படலாம்.
மேஷம் -கடகம் -துலாம் -மகரம் -முதலிய சர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு நான்காம் இடத்து அதிபதி நான்காம் இடத்துக்கு எட்டாமிடத்தில் மறைந்தால் அது பாதக ஸ்தானம் ஆகையால் வாகன சுகம் ஏற்படாது.. உதாரணமாக கன்னியா லக்னத்துக்கு நான்காம் இடத்துக்கு அதிபதி குரு மீனத்தில் ஆட்சி பெற்றிருப்பதாக வைத்து கொள்வோம்.
நான்காம் இடத்துக்கு குரு இங்கே மறைந்திருக்கவில்லை . கன்னியா லக்னனதுக்கு நான்காம் வீட்டதிபதி குருபகவான் மீனத்தில் ஆட்சிபெற்று இருக்கிறார் என்றால் அந்த ஜாதகருக்கு வாகன சுகம் ஏற்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அவருக்கு வாகன சுகம் ஏற்படவில்லை ஏன் ?
உபய ராசியான ராசியான கன்னி லக்னத்தில் பிறந்ததால் வாகன அதிபதியான குரு , அந்த லக்னத்துக்கு பாதகாதிபதியாகி ஆட்சியாய் மீனத்தில் இருப்பதால் அந்த ஜாதகருக்கு கார் போன்ற வாகன வசதி ஏற்படுத்தி கொள்ள ஆசை இருந்தாலும் சித்திக்காது.
இத்தகைய கிரக அமைப்பு கொண்ட ஜாதகர்கள் டாக்சி -லாரி -பஸ் -ஆட்டோ, முதலியவற்றை கொண்டு ஜீவிக்க எண்ணுவதும் நஷ்டத்தை விலை கொடுத்து வாங்குவதாகவே இருக்கும்.
பண வசதி நிறைய பெற்றவர்களானாலும் இவ்வித கிரக அமைப்புகள்அவர்களின் ஜாதகத்தில் இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும்.
அடுத்து வாகனங்களால் ஏற்படும் இடையூறுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதை பற்றி பார்க்கும் பொழுது நான்காம் இடத்து அதிபதி ஆறு , எட்டு , பன்னிரெண்டாம் இடங்களில் நின்றாலும், அவர்களோடு சேர்ந்து எங்கு இருந்தாலும் வாகனத்தால் இடையூறுகள் ஏற்படும்.
விளக்கமாக சொல்ல வேண்டுமானால் நான்காம் இடத்து அதிபதி பன்னிரெண்டாம் இடத்து அதிபதியுடன் சேர்ந்திருந்தால் நஷ்டமும், எட்டாம் இடத்ததிபதியுடன் சேர்ந்திருந்தால் சிறு விபத்துகளும் , ஆறாம் இடத்ததிபதியுடன் சேர்ந்திருந்தால் அடிக்கடி பழுதடைவதுமாக இருக்கும்.
மேலும் வாகன ஸ்தான அதிபதி என்று சொல்ல கூடிய நான்காம் இடத்து அதிபதி , வாகன ஸ்தானத்துக்கு பாதக ஸ்தானம் பெறாமலும் பாதகாதிபதிகளை சேராமலும் , நான்காம் வீட்டுக்கு அதிபதியான கிரகத்தை ராகு- கேது- சனி - செவ்வாய்- சூரியன் பாராமளிருந்தால் வாகனத்தால் லாபம் ஏற்படும்.
வாகன ஸ்தானமான நான்காம் இடத்தில சனி- ராகு - கேது - முதலியவர்கலில் ஒருவர் இருந்தாலும் அல்லது நான்காம் இடத்தை சனி பகவான் பார்த்தாலும் , புதிய வாகனம் பெறுவது அரிதான விஷயமாகும்.
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள உங்கள் இல்லத்திற்கே வந்து மிக துல்லியமான ஜோதிட பலன்கள் சொல்லப்படும் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள உங்கள் இல்லத்திற்கே வந்து மிக துல்லியமான ஜோதிட பலன்கள் சொல்லப்படும் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில்
விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.









0 comments:
கருத்துரையிடுக