Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 28 ஜூன், 2011

உயர்கல்வி யோகம் யாருக்கு அமையும் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments


பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை. மேலும், இவை கொடுக்கக் கொடுக்க குறையக் கூடியது. அழிவு இல்லாதது கல்விச் செல்வம். கொடுக்கக் கொடுக்க வளரக் கூடியது. கல்வி அறிவில்லாத ஒருவருக்கு கற்றுத் தருவதால் நமது கல்விச் செல்வம் மேலும் மேலும் வளரும். தொழில் மற்றும் வியாபாரம் மூலமாகத்தான் பொருள் செல்வத்தை ஈட்ட முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அப்படியல்ல.

கல்வியறிவு பெற்றவர்கள்தான் தங்களது கல்வித் திறமையால் பெரும் கோடீஸ்வரர்களாக விளங்குகிறார்கள். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மட்டுமல்லாமல் செழிப்பும் உண்டாகிறது.


கம்ப்யூட்டர் யுகத்தில் காமதேனு போல வாரிக் கொடுக்கக் கூடிய கல்வி யோகம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு கல்வி சரளமாக வரும். சிலருக்கு அதிக முயற்சி தேவைப்படும். சிலருக்கு படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது.

கல்வி பெற நமக்கு கிடைக்கிற வாய்ப்புகளும் கடும் உழைப்பு, விடாமுயற்சியும் கல்விச் செல்வத்தை நமக்கு வாரி வழங்குகிறது என்றாலும் ஜாதக அமைப்பிலும் இதற்கு பங்கு இருக்கிறது. ஒருவருடைய ஜாதக கட்டத்தை எடுத்துக் கொண்டால் அதில் லக்னம் என்று இருக்கும். இதுவே முதல் கட்டம். இந்த கட்டத்தில் இருந்துதான் ஒன்று, இரண்டு என்று எண்ணவேண்டும். இதில் லக்னம் மிக முக்கியமானது. அதற்கு உரிய கிரகம் எதுவோ அந்த கிரகமே லக்னாதிபதி. அதற்கடுத்து உயர்நிலை கல்வி வரை பேசக்கூடிய இடம் நான்காம் இடம்.

பட்டப்படிப்பு, மேல் படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கள் எல்லாம் ஒன்பதாம் இடத்தில் இருந்து முடிவு செய்யப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும், இந்த மூன்று இடங்களுக்குரிய கிரகமும்தான் நமக்கு கல்வி செல்வத்தை தருகின்றன. மேலும் வித்யாகாரகன் என்ற புதன் கிரகம் மிகவும் முக்கியமானது. அத்துடன் வியாழன் என்ற குருவின் பலமும் மிகவும் அவசியம். இந்த அடிப்படை அம்சங்கள் பலமாக இருந்தால் உயர் கல்வி யோகம் சிறப்பாக அமையும்.

பொதுவாக ஜாதக கட்டத்தில் நான்காம் வீட்டின் கிரகமும், ஒன்பதாம் வீட்டின் கிரகமும் நீச்சம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமலும் இருக்க வேண்டும்.


கல்வி பயிலும் காலகட்டத்தில் (16 முதல் 26 வயது வரை) நல்ல யோகமான திசைகள் நடப்பது மேலும் சிறப்பை தரும். கஷ்டமான அறிவியல், கணித பாடங்களைக்கூட எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

ஆராய்ச்சி துறையில் பட்டம் பெற, மாஸ்டர் டிகிரி பெற 1, 4, 9&ம் அதிபதிகள் பலம் பெற்று இருக்க வேண்டும். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பது வித்யா யோகம். இது உயர்ந்த கல்வியையும், அந்தஸ்தையும் அளிக்கும். மேஷ ராசியில் சூரியன், புதன் சேர்ந்து இருந்தால் ஆராய்ச்சி பட்டம் பெறும் யோகம் உண்டு. பத்தாம் இடத்தில் சூரியன், கேது, செவ்வாய் சேர்ந்து இருந்தால் மருத்துவ துறையில் சாதிக்கும் யோகம் ஏற்படும்.

புதன், சனி, செவ்வாய் கிரகங்கள் பலமாக இருந்தால் இன்ஜினியரிங் பிரிவில் யோகம் உண்டு. பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ராகு, சனி சேர்ந்து இருந்தால் டெக்னிக்கல் துறையில் படிப்பு அமையும். இரண்டாம் அதிபதியுடன் புதன், செவ்வாய் சேர்ந்து இருந்தால் பேச்சாற்றல் தேவைப்படக்கூடிய விரிவுரையாளர், விற்பனை பிரதிநிதி, அரசியல்துறை, வக்கீல் என சாதனை படைக்கலாம்.


பத்தாம் அதிபதியுடன் சூரியன் சேர்ந்தால் அரசு உத்யோகம் அமையும்.

பத்தாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி, குரு சேர்ந்தால் வங்கியில் உத்யோகம் அமையும். பத்தாம் அதிபதியுடன் புதன், செவ்வாய் சேர்வதால் கம்ப்யூட்டர் துறையில் சிறப்பு உண்டு. இந்த அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகும். இதை தவிர சில கிரக பார்வை, சேர்க்கை காரணமாக கல்வி யோகம் மிகவும் பிரகாசமடையும். சரஸ்வதி தேவியுடன் குரு, புதன் ஆகிய கிரங்களையும் வழிபட்டு வந்தால் கல்வியில் ஏற்றம் பெறலாம்.




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

மச்ச சாஸ்திரத்தின் மூலம் பலன்களை சொல்ல முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments


                                                              மச்ச சாஸ்திரம்

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர்.

ஆய கலைகள் 64 ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.


சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். 

பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.


                                          ஆண்களுக்கான மச்ச பலன்

புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் & தனயோகம்
வலது புருவம் & மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் & நண்பர்களால் உயர்வு

வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி

மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை

மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்

வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு

வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்

காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை

இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்

வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை

அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு


                                          பெண்களுக்கான மச்ச பலன்

நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்


நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை & பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்

வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

திங்கள், 27 ஜூன், 2011

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்

0 comments


அசுவினி
மனோதைரியம் உண்டாகும். உற்சாகமாக இருப்பீர்கள். தொழில்வளம் சிறந்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு தேவையான சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளின் கொட்டம் ஒடுங்கி சந்தோஷமான வாழ்க்கை அமையும். உடல்நிலை நன்றாக இருக்கும். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
பரணி
உங்கள் தொழில் வளர்ச்சி திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி ஆதாய பணவரவைத்தரும். புத்திரர்கள் படிப்பில் மிகச்சிறப்பாக விளங்குவர். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு சிறந்த பணி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெண்கள் கணவருடன் இணக்கமாக நடந்து குடும்ப பெருமையை உயர்த்துவர்.
கார்த்திகை 1ம் பாதம் (மேஷம்)
அனைத்து செயல்பாடுகளும் வெற்றியடையும். தொழில் மற்றும் பணி சிறப்பாக நடந்து கூடுதல் அந்தஸ்தை பெற்றுத்தரும். பணவரவு தாராளமாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் ஈடுபட விரும்பாத மனநிலை உண்டாகும். புத்திரர்கள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்துகொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்ட வகையில் நிறைவேறும். பெண்களுக்கு குடும்ப செலவுக்கு தேவையான பணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதம் (ரிஷபம்)
பேச்சிலும் செயலிலும் நிதானம் வேண்டும். தொழில் மற்றும் பணியில் மிகச்சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள். பணவரவு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவு ஏற்படும். வாழ்க்கைத்துணையின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் குடும்ப ஒற்றுமை பலம் பெறும். வீடு, வாகன வகையில் வளர்ச்சியும் அதன்மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். புத்திரர்களின் சேர்க்கை சகவாசத்தை அறிந்து அவர்களை நல்வழி நடத்துவது நல்லது. பெண்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.
ரோகிணி
எந்தச்செயலிலும் நிதானம் வேண்டும். தொழில், பணி சார்ந்த வகையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தேவையான அளவுக்கு இருந்தாலும் செலவுகளும் எல்லை மீறும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் ஒப்படைக்கக்கூடாது. வேலை இல்லாதவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு போதுமான அளவு பணவரவு இருக்கும்.
மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் (ரிஷபம்)
மனநிலையில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் தியானம் முதலிய பயிற்சிகளை எடுத்து மன ஒருமைப்பாட்டை வளர்த்துக்கொண்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம். தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெறுவதற்கு வாய்ப்புகள் வாசல் கதவைத்தட்டும். வரவும் செலவும் சமமாக இருக்கும். வீடு, வாகன வகையில் யோகமான பலன்கள் உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். சிலருக்கு அதிர்ஷ்டவசமாக பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சுபநிகழ்ச்சிகளை நடத்த நல்லவர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் கணவருடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மிருகசீரிஷம் 3, 4 பாதம் (மிதுனம்)
உங்கள் செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படலாம். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி அடைவீர்கள். இளைய சகோதரர்கள் உங்கள் வாழ்வு முன்னேற உதவி புரிவர். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
புத்திரர்கள் சிறப்பாக படிப்பதன் மூலமும் நல்ல பணிக்கு செல்வதன் மூலமும் மனம் மகிழ்ச்சியடையும். தொழில் மற்றும் பணியில் எவ்வித இடையூறும் இருக்காது. குடும்ப ஒற்றுமை சிறந்து சந்தோஷம் தழைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
திருவாதிரைபுதிய சிந்தனைகளை செயல்படுத்தி செயல்பாடுகளில் வெற்றி அடைவீர்கள். தொழில் மற்றும் பணியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டாலும் மனதிடத்துடன் வென்றுவிடுவீர்கள். பணவரவில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். கடன்களை அடைக்கும் ஆர்வம் மேலோங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு சமுதாய பணியை செய்யும் எண்ணம் உருவாகும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் (மிதுனம்)கடுமையான உழைப்பின் பேரிலேயே பணவரவை ஈட்ட முடியும். போட்டி மற்றும் பந்தயங்களில் ஈடுபட்டால் பணத்தை இழக்க நேரிடலாம். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை அடைய வாய்ப்பு உண்டு. எதிரிகள் சார்ந்த தொல்லை குறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். பெண்களுக்கு அன்றாட செலவுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் சிக்கனத்தை கடைபிடித்து சரிகட்டிவிடுவர்.
புனர்பூசம் 4ம் பாதம் (கடகம்)
அனைத்து செயல்களும் வெற்றிபெறும். பொன், பொருள் சேரும். தொழிலில் லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு தாராளமான சலுகைகள் உண்டு. புதிய பதவி பொறுப்பு சிலருக்கு கிடைக்கலாம். புத்திரர்களின் செயல்பாட்டின் வகையில் கவனம் செலுத்துவது நல்லது. கடன்களை அடைத்துவிடுவீர்கள். எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
பூசம்
உற்சாகத்துடன் செயல்பட்டு அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும். பணியாளர்களுக்கு ஆதாய பணவரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தவர் பாசத்துடன் நடந்துகொள்வர். பூர்வ சொத்து தொடர்பான மாற்றங்களை செய்ய நல்ல நேரம். புத்திரர்கள் மிகச்சிறப்பாக படிப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். அனைத்து வளங்களும் கிடைக்கும் நேரமாக இருக்கிறது. பெண்களுக்கு சிறப்பான பணவரவுடன் சுற்றுலா சென்றுவரவும் யோகம் உண்டு.
ஆயில்யம்திட்டமிட்ட நடவடிக்கைகளால் பலவிதத்திலும் முன்னேற்றம் பெறுவீர்கள். தொழிலில் வளர்ச்சியும் வருமானமும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கூடும். சகோதரர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புத்திரர்கள் சற்று மந்தமாக செயல்படலாம். அவர்களை ஊக்கப்படுத்தி படிப்பில் முன்னேறச் செய்வீர்கள். வாழ்வுக்கு தேவையான அனைத்து சவுகரியங்களும் கிடைக்கும் நேரம். கடன்களை அடைத்துவிடுவீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
மகம்
பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சிபெற வாய்ப்பு தேடிவரும். பணியாளர்களுக்கு ஓரளவு வருமானம் உண்டு. வீடு, வாகன வகையில் வசதி குறைவும் பராமரிப்பு செலவும் உண்டாகும். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து பெற்றோரை மகிழ்விப்பர். சில அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கும் நிலை வரலாம். மூத்த சகோதரரின் அறிவுரையை கேட்டு நடப்பதால் சில நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை. பெண்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் சிரமமின்றி இருக்கலாம்.
பூரம்
யாருக்காவது வாக்குறுதி தந்து அதை காப்பாற்ற இயலாமல் போகலாம். வேலைப்பளு அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற பணவரவை பெறுவீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சில சிரமங்கள் வரலாம் என்றாலும் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு சரிசெய்துவிடலாம். கொடுத்த கடனை திருப்பி கேட்கும்போது துணைக்கு ஒருவரை வைத்துக்கொள்வது நல்லது. திருமணமாகாத பெண் குழந்தைகளுக்கு சிறந்த வரன் அமையும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றாலும் சிக்கனமாக இருந்து சமாளித்து விடலாம்.
உத்திரம் 1ம் பாதம் (சிம்மம்)
பணவரவில் உள்ள சுணக்கத்தை அகற்றி குடும்பத்தின் முக்கிய தேவைகளை பூர்த்திசெய்துவிடலாம். தொழிலில் இருந்த தடை விலகி மறுமலர்ச்சி தரும் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பழக்க வழக்கங்கள் உதவும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களில் மிதவேகம் நல்லது. பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதம் (கன்னி)
செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே தொழில் மற்றும் பணியில் தற்போது இருக்கிற அனுகூலத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். பணவரவு ஓரளவு நன்றாகவே இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். தந்தைவழி உறவினர்கள் தகுந்த உதவி புரிவர். பெண்களுக்கு குழந்தைகளால் பிரச்னை வர வாய்ப்புண்டு.
அஸ்தம்மந்த நிலை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு வந்து விலகும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். வழக்கு, விவகாரங்கள் அவ்வளவு சாதகமாக இராது. சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். பெண்களுக்கு கணவரால் சில பிரச்னைகள் ஏற்படலாம்.
சித்திரை 1, 2ம் பாதங்கள் (கன்னி)
அதிர்ஷ்டவசமான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பூர்வசொத்தில் வளர்ச்சியும் உபரி வருமானமும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சுமாராகவே இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். புத்திரர்கள் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் காண்பர். வீடு, வாகன வகையில் நல்ல நிலையே இருக்கிறது. பெண்களுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சித்திரை 3, 4ம் பாதங்கள் (துலாம்)
தொழில் சார்ந்த வகையில் பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இருப்பினும் தொழிலில் வளர்ச்சியே உருவாகும். வரவுக்கு அதிகமான செலவு ஏற்படும்.
எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். தந்தை வழி உறவினர்களின் உதவி உண்டு. புத்திரர்களின் செயல்பாடுகள் பெருமை பெற்றுத்தரும். பெண்கள் வீட்டுச் செலவுக்கு தேவையான பணத்தை பெற்றாலும் ஆடம்பர எண்ணம் மேலோங்கும் என்பதால் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு.


சுவாதி
பிறரது யோசனையை கேட்காமல் நீங்களாகவே முடிவெடுத்து எந்த செயல்பாட்டையும் செய்வது நல்லது. தொழிலில் முன்னேற்றம் பெற வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு குறைவாகவே இருக்கும். பணியாளர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வீடு, வாகன வகøயில் தற்போது இருக்கும் நிலைமையை தக்கவைத்துக் கொண்டாலே போதுமானது. வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு குடும்ப செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள் (துலாம்)
உங்களின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாகும். தொழிலில் நேரம் தவறாமையை பின்பற்றுவதால் மட்டுமே லாபத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். பணி யாளர்களுக்கு அதிக சலுகையை எதிர்பார்க்க இயலாது. உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன வகையில் நற்பலன்கள் உண்டு. சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் செலவாகும். பெண்கள் விட்டுக்கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே குடும்ப ஒற்றுமையை பாதுகாக்க முடியும்.
விசாகம் 4ம் பாதம் (விருச்சிகம்)
உங்கள் செயல்பாடுகளில் உற்சாகம் பிறக்கும். பொன், பொருள் சேரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு. புத்திரர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கிறது. பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
அனுஷம்
உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழிலில் உயர்வும் தாராள பணவரவும் எளிதாக வந்துசேரும். உற்சாகமான மனநிலையுடன் இருப்பீர்கள். புத்திரர்களின் மந்தநிலையை மாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வு வளம்பெற உதவி செய்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். புதிய சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழலாம்.
கேட்டைதிட்டமிட்ட செயல்பாடுகளால் வாழ்வில் பலவகையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலில் வளர்ச்சியும் உபரி வருமானமும் கிடைக்கும். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கு வாய்ப்புண்டு. இளைய சகோதரர்கள் பல வகையிலும் உதவி செய்வர். பூர்வ சொத்தில் கிடைக்கும் வருமானத்தை உரிய வகையில் முதலீடு செய்து நன்மை அடைவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடந்தேறும். பெண்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
மூலம்
பலருடைய யோசனையையும் கேட்காமல் நீங்களே சுயமாக முடிவெடுத்து செயல்படுத்தும் செயல்கள் வெற்றியடையும். தொழில்ரீதியாக சில சிரமங்கள் ஏற்படும். பணவரவு சுமாராகவே இருக்கம். வீடு, வாகன வகையில் பாதுகாப்பு நடைமுறை அவசியம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செயல்படுங்கள். சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவேறினாலும் அதிக பணம் செலவாகிவிடும். புத்திரர்கள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.
பூராடம்
உங்கள் கருத்துகளை மதிக்காதவர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் சார்ந்த வகையில் குறுக்கீடு உண்டாகும். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் தற்போது இருக்கிற நிலையை பாதுகாத்தாலே போதும். புத்திரர்கள் பெருமைப்படும்படியான செயல்களை செய்வார்கள். மற்றவர்கள் மீது இரக்கப்பட்டு உங்களுடைய பணம் கரைந்து போகலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பெண்கள் கணவருடன் கருத்துவேறுபாடு கொள்வர்.
உத்திராடம் 1ம் பாதம் (தனுசு)
துணிவுடன் செயல்படுவதால் மட்டுமே செயல்பாடுகளில் வெற்றி பெற முடியும். வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலை தக்கவைத்துக் கொள்ள அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். லாபம் சுமாராகவே இருக்கும். பணியாளர்களுக்கு நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடல்நலத்தில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்களுடன் இதமுடன் நடந்துகொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே கவுரவப் பிரச்னை காரணமாக கருத்துவேறுபாடு வரலாம். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டியிருக்கும். பணவரவு சுமார்தான். பெண்களுக்கு ஆடம்பர எண்ணம் மேலோங்கும்.
உத்திராடம் 2, 3, 4ம் பாதம் (மகரம்)
உங்கள் வாழ்வில் ஏற்படும் வளர்ச்சி நிலை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் எதிர்பார்த்த அளவு இருக்கும். வீடு, வாகன வகையில் திருப்திகரமான பலன் உண்டு. புதிய வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உடல்நலம் சுமாராக இருக்கும். அரசு சார்ந்த வகையில் ஆதாய பலன் கிடைக்கும். புத்திரர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வர்.
திருவோணம்தாமதமின்றி செய்யும் பணிகளால் பெரும் முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். புத்திரர்களின் செயல்பாடுகள் குடும்பத்திற்கு பெருமை தேடித்தரும். உடல்நலத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
அவிட்டம் 1, 2ம் பாதங்கள் (மகரம்)
அனைத்து செயல்பாடுகளிலும் வெற்றி பெறுவீர்கள். தொழில்வளம் சிறப்பாக அமைந்து அபரிமிதமான லாபம் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு தாராளமான சலுகைகள் கிடைக்கும். வீடு, வாகன வகையில் வளர்ச்சிநிலை இருக்கிறது. புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உடல்நலத்தில் அதிக அக்கறை வேண்டும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் நிதானத்தை கடைபிடிக்கவும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள் (கும்பம்)
எந்தச் செயலையும் முன்யோசனையுடன் செய்வது நன்மை தரும். பணவரவு குறையும் என்பதால் அத்தியாவசிய செலவுகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். தொழிலில் பல குறுக்கீடுகள் வர வாய்ப்பு இருக்கிறது. பணியாளர்களுக்கு தடை, தாமதம் காரணமாக எரிச்சல் உணர்வு உண்டாகும். புத்திரர்களின் விருப்பத்தை அறிந்து உதவுவதால் அவர்களின் கல்வித்திறன் வளர்ச்சிபெறும். வீடு, வாகன வகையில் நம்பகத்தன்மை இல்லாதவர்களுக்கு இடம்தரக் கூடாது. கணவன் மனைவி ஒற்றுமை வளரும். பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாடும் நிலைமை வரும்.
சதயம்
உறவினரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் சில பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் நற்பெயருக்கு சிலர் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பர். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவு சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் அதிக சலுகையை எதிர்பார்க்க இயலாது. புத்திரர்கள் படிப்பில் சுமாராக இருப்பர். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் ஆன்மிக சுற்றுலா சென்றுவர வாய்ப்பு உண்டு.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் (கும்பம்)
யாருக்கு நல்லதை செய்தாலும் அவப்பெயரே வந்து சேரும். தொழிலில் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் பணவரவு சுமாராகவே இருக்கும். சேமிப்பு பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலைமை உண்டாகும். புத்திரர்களின் செயல்பாடு மந்தமடையும். பணியாளர்களுக்கு தேவையற்ற இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்ற நிலைமை களை சந்திக்கும் நேரமாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவர். பெண்களுக்கு உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை.
பூரட்டாதி 4ம் பாதம் (மீனம்)
மனதில் குழப்பமும் செயலில் தடுமாற்றமும் ஏற்படும். தொழிலில் தற்போது இருக்கிற அனுகூலத்தை பாதுகாத்துக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீடு, வாகன பராமரிப்பு வகையில் கடன் ஏற்படும். பணவரவு சுமாராகவே இருக்கும். உடல்நலத்தில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். வீடு, பணியிட மாற்றம் உண்டாகும். புத்திரர்கள் படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறுவர். பெண்கள் வீட்டுச்செலவுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
உத்திரட்டாதிதேவையற்ற எண்ணங்கள் மனதில் உலா வரும். தியானம் முதலிய பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொழிலில் பணவரவு ஓரளவு இருக்கும். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்துகொள்வர். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடல்நலம் சுமாராகவே இருக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டாருடன் பல பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உண்டு.
ரேவதி
தொழில் மற்றும் பணியில் வளர்ச்சிநிலை ஏற்படும். பணவரவு உங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் அளவில் இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சச்சரவு உருவாகி பின்னர் சரியாகும். சுபநிகழ்ச்சிகளை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டியிருக்கும். புத்திரர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். பெண்களுக்கு கடும் முயற்சியின் பேரிலேயே வீட்டு நிர்வாகத்தை நடத்த முடியும்.
Continue reading >>

மீன ராசியிலிருந்து மேஷத்திற்கு இடம் பெயர்ந்தார் குரு பகவான்

0 comments

ஆலங்குடி: மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு நேற்று நள்ளிரவில் இடம் பெயர்ந்தார் குரு பகவான்.

நேற்று குருப் பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இக்கோவிலில் நேற்று நள்ளிரவில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. காலையில் குரு பரிகார பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

நள்ளிரவு 12.48 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோயிலில் குருப் பெயர்ச்சியின் இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா வரும் 12-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெறும்.
Continue reading >>

நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்க ஆன்மீக ரீதியான வழி ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று பழமொழி உண்டு. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோளான புதன், சுட்டெரிக்கும் சூரியனுக்கு அருகில் இருப்பதாலேயே சாதரணமாக கண்களுக்கு புலப்படுவதில்லை. காலை அல்லது இரவின் தொடக்கத்தில் மட்டுமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

சோதிட சாஸ்திரத்தில் புதனை கல்வியின் நாயகன் என்று அழைக்கின்றனர். "மாதுல (மாமன்), கல்விக்காரகர்' என்று அழைக்கப்படும் புதன் உடலில் நரம்புக்கும், தோலுக்கும் அதிபதி. ஜாதகத்தில் இவரது பலம் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.  

வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை கை கூடும்.

திருவெண்காடு

நவக்கிரஹ ஸ்தலங்கள். புதன் கிரகத்திற்கான கோவில் இந்தியாவில் தமிழ்நாட்டில்  சீர்காழி அருகில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக - வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

இங்கு இறைவன் பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வராக எழுந்தருளியிருக்கிறார். காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்துள்ளனர்.

கல்வியில் சிறக்க

புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், கல்வி மற்றும் கலைகளில் குறைபாடு ஏற்படும். அக்குறைபாடு உடைய குழந்தைகளை திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசிக்க கூட்டிக்கொண்டு வந்து பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை..

படைப்புக் கடவுளான பிரம்மா இந்தத் தலத்தில்தான் அம்பிகையின் முன் தவமிருந்து ஞானம் பெற்றாராம் அதனால்தான் இங்குள்ள அம்பிகைக்கு பிரம்ம வித்தியாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது என்கின்றன தலபுராணங்கள். 

கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறத் திணறும் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் இறைவியை வணங்கச் செய்வது நன்மையளிக்கும்! இசைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் மேன்மை பெற வழிபட வேண்டிய ஸ்தலம் இது. உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம்

புதன் தசை நடப்பவர்கள்

புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். அதனால் பிரதி புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சுலபமான பரிகாரமாகும். புத பகவான் ஜனவசிய (வியாபார) பிரிவினைச் சேர்ந்தவர். 

அதனால் வியாபாரிகள் இவரின் அருளைப் பெற ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும். ​மேலும் இந்தியாவில் தமிழகத்தில் மதுரைக்கு  சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் வாக்கு வன்மையும், கல்வியில் மேன்மையும் உண்டாகும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

செவ்வாய், 21 ஜூன், 2011

சொந்தமான வீடு இல்லாத கிரக அமைப்பு? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் இடத்தை  கொண்டு அந்த ஜாதகருக்கு சொந்தமான வீடு மனை யோகம் உண்டா என்பதை பற்றி சொல்லலாம்

நான்காம் வீடு அல்லது நான்காம் வீட்டு அதிபதிக்கு ஆறு எட்டு பன்னிரண்டாம் வீடுகளில் இருந்தாலும் 

அல்லது நான்காம் வீட்டுக்கு அதிபதி ஆறு எட்டு பன்னிரெண்டாம் இடத்துக்கு உரிய கிரகங்களுடன்  தொடர்பு பெற்றிருந்தாலும் அந்த ஜாதகனுக்கு சொந்த வீடு கிடையாது .அந்த ஜாதகன் வாடகை வீட்டில் வசிப்பான்.

லக்னாதிபதி 6 -  12 போன்ற இடங்களில்  இருந்தாலும் வாடகை வீட்டில் வசிக்கும் சூழ் நிலை ஏற்படலாம்

பெரும்பாலும் எந்த லக்னமாக இருந்தாலும் நான்காம் இடத்தை சனி பார்த்தாலும் நான்காம் வீட்டு கிரகத்தோடு  சனி சம்பந்தம் பெற்று இருந்தாலும் நான்காம் இடத்தில்  சனி இருந்தாலும் பழைய வீடு அமையும்  

வீட்டு மனைக்காரன் என்று சொல்லகூடிய செவ்வாய் பகவான் நீசம் அடைந்து இருந்தாலும் அந்த ஜாதகனுக்கு சொந்த வீடு கிடையாது.

லக்னத்திற்கு நான்காம் இடத்தில ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள் இருந்தால் வாடகை வீட்டில் வசிக்கும் சூழ் நிலை ஏற்படும் .

நான்காம் வீட்டில் பாதகாதிபதி இருந்து , அந்த நான்காம் வீட்டுக்கு அதிபதி , லக்னாதிபதி இருவரும் பாதிக்கபட்டு இருந்தால்  அந்த ஜாதகன் குடியிருக்கும் வீட்டால் அவனுக்கு பாதகமான செயல்கள் நடைபெறலாம் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

புதன், 15 ஜூன், 2011

நாக தோஷம் என்றால் என்ன? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

                                                                     தாயே பூமாதேவி 

 

நாக தோஷம் என்பது கிராமப்புறங்களில் பிரசித்திபெற்றது. கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது போன்றவையும் எல்லாம் நாக தோஷத்தினால் ஏற்படுவது என்பது நம்பிக்கை.

ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம். ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள்காமாலை நோயுடன் பிறக்கின்றன. இதுவும் கிரகண பாதிப்புதான் காரணம்.

லக்னத்தில் ராகு இருந்து சந்திரனுடன் கேது சேர்ந்தால் குழந்தை நீலமாகப் பிறக்கும்.

ராகு - கேது சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் அதனை சர்ப தோஷம் என்று கூறுவார்கள். லக்னம், லக்னத்தில் இருந்து முதல் இரண்டு இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, லக்னாதிபதியை பாவ கிரகங்கள் பார்த்தாலோ பாலாதிர்ஷ்ட தோஷம் என்று கூறுவர். பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.

நாக தோஷம் வலுவாக இருக்கும் பிள்ளைகளுக்கு பாம்பு போலவே மச்சம் இருக்கும். தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன். அதற்கேற்ற பலன்களை அது கொடுக்கும்.

நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

செவ்வாய், 14 ஜூன், 2011

கஜ கேசரி யோகத்தால் நன்மைகள் உண்டா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
கஜகேசரி யோகம் தனி ஒருவரின் சாதகக் குறிப்பில் காணப்படும் நன்மைதரும் யோகமாகும். ஒருவரின் சாதகக் குறிப்பில் சந்திரன் நின்ற இராசியிலாயினும், அதற்கு 4, 7, 10 ஆகிய இடங்களில் வியாழன் இருந்தால் கஜ கேசரி யோகமாகும். 


இதன் பலன் வித்தியாவேகம், தருமத்தில் விருப்பம் என்பனவாகும். 1, 4, 7, 10 ஆகிய இடங்கள் சந்திரனுக்கும் வியாழனுக்கும் நன்மை பயக்கும் இடங்களாக இருந்தால் விசேட யோக பலன் உண்டாகும். இந்த யோக பலத்தினால் மற்றைய கிரகங்களிள் குரூர ஸ்தானங்களில் இருந்து செய்யுந் தோஷங்கள் நிவாரணமாகும்.

இதனை கீழ்  கண்ட ஜோதிட பாடல் விளக்குகிறது 

வருச்சி கேந்திரத்தில் மன்னவன் நிற்க
அரசன்தன் கேந்திரத்தில் அம்புலிதானும் நிற்க
விரவு மற்றிடத்தின் மற்றோர் மேவிய தோஷம்

ஒரு யானை ஒரு   சிங்கத்தை கண்டால் எவ்வாறு   அஞ்சி நடுங்குமோ போல் ஒருவருடைய  ஜாதகத்தில் எவ்வளவு கொடுமையான தோஷங்கள் இருந்தாலும்  கஜ கேசரி யோக அமைப்பு இருந்தால் அந்த ஜாதகருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>