Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 டிசம்பர், 2014

2015 - துலாம் ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் - ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன்

0 comments
                    

எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட் டாமல் தன்னுடைய கருத்துகளைக்கூட சிந்தித்து வெளிப்படுத்தும் துலா ராசி நேயர்களே! உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இந்த வருடம் ஏழரைச் சனியில் பாதச்சனி (குடும்பச் சனி) தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கோளான குரு பகவானும் முற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. 

உங்கள் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகன் என்பதால், பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவானும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையத்தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். 

நீங்கள் நினைத்தபடி அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தை அடையமுடியும்.

குடும்பம், பொருளாதாரம்

2015 - இந்த வருடம் முழுவதும் சனி பகவான் குடும்ப ஸ்தானத்திலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சற்று பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும், குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று அதிகரித்தாலும் ஊதிய உயர்வும் கிட்டும். கடன் களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் உள்ள
உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலமென்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும் என்றாலும் வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் லாப ஸ்தானத்திற்குச் செல்ல உள்ளார். இக்காலங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். ஊதிய உயர்வுகளும் தாராளமாக இருக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரம்

சொந்தமாக தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களையே அடையமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும் ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே போட்டிகளை சமாளித்து அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் ஓரளவுக்கு உங்களது பிரச்சினைகள் குறைந்து வெற்றிப் படியை எட்டிவிடுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.

பெண்களுக்கு

2015-  இந்த ஆண்டும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் உறவுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம்போன்ற மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன் சுமைகளும் குறையும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. சிலருக்கு அசையாச் சொத்துகளை வாங்கிச்சேர்க்கும் யோகமும் உண்டு.

கொடுக்கல்- வாங்கல்

2015- இந்த
ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடருவதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது என்றாலும் ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல் துறையில் உள்ள
அரசியல்வாதிகள் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி வாக்கு ஸ்தானத்தி லிருப்பதால் உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப் பின் வெளியூர், வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும் மகசூல் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெறமுடியாமல் போகுமென்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக்கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்தமுடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும் குருப் பெயர்ச்சிக்குப்பின் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் பத்திரிகைகளில் வீண் வதந்திகள் ஏற்படும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வி பயிலும் மாணவ -மாணவிகள்  ஆண்டின் தொடக்கத்தில் கட்டாயம் படிப்பில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். கூடாதார் நட்பை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப்பின் கல்வியில் தானாகவே ஈடுபாடு ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி உங்களுக்கே கிட்டும்.

2015 - துலாம் ராசி-ஆங்கில மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் நல்ல லாபம் காணமுடியும். சனி பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-01-2015 பகல் 11.47 மணி முதல் 03-01-2015 இரவு 07.24 மணி வரை; மற்றும் 28-01-2015 மாலை 05.12 மணி முதல் 31-01-2015 பகல் 01.17 மணி வரை.

பிப்ரவரி

குடும்ப ஸ்தானமான 2-ல் சனியும் சுக ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பென்றாலும் 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவுக்கு லாபம் கிட்டும். புதிய முயற்சிகளிலும் சாதகப் பலன் அமையும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-02-2015 இரவு 11.46 மணி முதல் 27-02-2015 காலை 07.01 மணி வரை.

மார்ச்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். துர்க்கை யம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 24-03-2015 காலை 08.35 மணி முதல் 26-03-2015 மதியம் 02.15 மணி வரை.

ஏப்ரல்

ராசிக்கு 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதாலும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதாலும் செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தையும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபங்களை அடையமுடியும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 20-04-2015 மாலை 06.54 மணி முதல் 22-04-2015 இரவு 11.10 மணி வரை.

மே

கிரக நிலைகள் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதால் சிறுசிறு நற்பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதிலும் கவனம் தேவை. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றாலும் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவதால் வீண் பிரச்சினைகளும் குறையும். பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 18-05-2015அதிகாலை 04.52 மணி முதல் 20-05-2015 காலை 08.50 மணி வரை.

ஜூன்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். பணவரவுகளில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவமானப்பட நேரிடும். தொழில், வியாபாரத்திலும் வீண் விரயங்களும், கூட்டாளிகளிடையே பிரச்சினைகளும் உண்டாகும். சஷ்டி விரதம், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 14-06-2015 மதியம் 01.04 மணி முதல் 16-06-2015 மாலை 05.42 மணி வரை.

ஜூலை

இம்மாதம் வரும் 5-ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால் பணம் பல வழிகளில் தேடிவரும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். பண வரவு களிலிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். அசையாச் சொத்து வாங்கும் யோகமும் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானமுடன் செயல்பட்டால் நற்பலன்களை அடையலாம். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 11-07-2015 இரவு 07.18 மணி முதல் 13-07-2015 இரவு 12.56 மணி வரை.

ஆகஸ்ட்

லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் லாபம் பெருகும். மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தொழில், வியாபாரரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் அமைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தாராள தனவரவுகளும் உண்டாவதோடு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பொருளாதாரம் உயர் வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 07-08-2015 இரவு 12.41 மணி முதல் 10-08-2015 காலை 06.42 மணி வரை.

செப்டம்பர்

செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எதிலும் ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. குடும்பச் சூழலும் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். எடுக்கும் காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். தொழில், வியாபாரமும் தடையின்றி நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 04-09-2015 காலை 07.02 மணி முதல் 06-09-2015 மதியம் 12.17 மணி வரை.

அக்டோபர்

ஏழரைச் சனி தொடர்ந்தாலும் 11-ல் செவ்வாய், குரு இருப்பதால் எதையும் சாதிக்கமுடியும். தொழில், வியாபாரரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். திருமண சுப காரியங்களும் கைகூடும். பிரதோஷ கால விரதமிருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-10-2015 மதியம் 03.39 மணி முதல் 03-10-2015 இரவு 07.14 மணி வரை; மற்றும் 29-10-2015 அதிகாலை 02.14 மணி முதல் 31-10-2015 காலை 04.21 மணி வரை.

நவம்பர்

ஏழரைச் சனி தொடர்வதும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும் வீண் அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும் அமைப்பென்றாலும் 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியுடன் இருக்கமுடியும். வேலைப் பளு சற்று கூடும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 25-11-2015 மதியம் 01.04 மணி முதல் 27-11-2015 மதியம் 02.50 மணி வரை.

டிசம்பர்

லாப ஸ்தானத்தில் குருவும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலையானது மிகச்சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எதிரிகளை வெல்லக்கூடிய வலிமையும், குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பும் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-12-2015 இரவு 10.04 மணி முதல் 24-12-2015 இரவு 12.46 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 7, 8; நிறம்- வெள்ளை, பச்சை; கிழமை – வெள்ளி, புதன்; திசை – தென்கிழக்கு; கல் – வைரம்; தெய்வம் – லட்சுமி.

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தொடர்ந்து ஆஞ்சநேயரை வழிபடுவது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது. 05-07-2015 வரை குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். சர்ப கிரகமான ராகு 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328

Continue reading >>

சனி, 27 டிசம்பர், 2014

2015 - மிதுன ராசி புத்தாண்டு பலன்கள் - ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

ஓம் நம சிவாய 

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
பார்த்த உடனேயே பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய பேச்சாற்றலும் தெய்வ பக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உற்றார்- உறவினர்களின் உபசரணை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியத்தையும் பெறுவர். 

உங்களுடைய பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் யாவும் லாபம் தரும். எதிரிகள்கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிபல பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும்.

பாம்பு கிரகம் என்று சொல்லகூடிய ராகு ஜென்ம ராசிக்கு 4-லும், கேது 10-லும் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயத்தில் கவனமுடனிருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது.

உடல் ஆரோக்கியம்:
ஆரோக்யமான உடல் அமைப்பு இந்த கால கட்டங்களில் உங்களுக்கு உண்டு . எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் தங்குதடையின்றிச் செயல்பட்டு நல்ல அனுகூலத்தைப் பெறுவீர்கள். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். இதுவரை நீண்ட நாட்களாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை மேற் கொண்டிருப்பவர்களுக்கும் உடல்ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக் குறையும். உற்றார்- உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைவதால் பிரிந்தவர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். உடல் நிலையும் மனநிலையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்.

குடும்பம், பொருளாதார நிலை:
2015 - இந்த வருடம் முழுவதும் குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறை வேறும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சிறப்பான புத்திர பாக்கி யமும் அமையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும். 

உங்களுக்கு பண வரவுகள் தாராளமாக அமைவதால் வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் அமையும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வரும் ஜூலை 5-ஆம் தேதி குரு 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்:

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, கௌரவமான உயர்பதவிகள், பலரை வழிநடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ள முடியும். செய்யும் பணி யாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். 

செய்யும் தொழில் நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயரும்.

தொழில், வியாபாரம்:
சொந்தமாக தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவருவதால் லாபமும் பெருகும்.

கன்னியர்களுக்கு :
உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடிவந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பண வரவுகளும் தாராளமாக அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் போன்றவை சிறப்பாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவியும் அமையும். ஊதிய உயர்வு கிட்டும்.

கொடுக்கல்- வாங்கல்:
2015 - இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன காரகன் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சிறப்பான லாபம் அமையும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும், குரு மாற்றத்திற்குப் பின் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பதும், பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. வீண் வம்பு வழக்கு ஏற்பட்டாலும் எதையும் எதிர் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:
அரசியல் சம்பந்தப்பட்ட துறையினருக்கும் , அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக இருக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். மக்களின் ஆதரவால் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.

விவசாயிகளுக்கு:
விவசாயம் செய்யும் விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும்.

கலைஞர்களுக்கு:
கலை துறையில் கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் ஆண்டாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தாராள தனவரவுகளும் உண்டாவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்குப் பஞ்சம் இருக்காது. ஆடம்பர கார், பங்களா போன்றவை வாங்கும் யோகம் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். நடித்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

மாணவ- மாணவியருக்கு:

கல்வி பயிலும் அனைவருக்கும் கல்வியில் சிறப்பான மேன்மை அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தரும். நல்ல நட்பும் மூலம் நற்பலனை அடைவீர்கள். விளை யாட்டு போட்டிகளிலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கமே வீசும்.

2015 - மிதுன ராசி மாத பலன்கள்:

ஜனவரி

உங்களின் ஜென்ம ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆராக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் உயர்வுகளைப் பெறமுடியும். கடன்கள் நிவர்த்தியாகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-01-2015 காலை 08.57 மணி முதல் 22-01-2015 காலை 08.49 மணி வரை.

பிப்ரவரி
ஜென்ம ராசிக்கு 2-ல் குருவும் 6-ல் சனியும் சஞ்சரிப்பது அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும் அமைப்பாகும். உங்களுக்கு கைநிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் கிட்டும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கூடும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். சிவ வழிபாடு, பிரதோஷ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 16-02-2015 இரவு 08.05மணி முதல் 18-02-2015 இரவு 07.57 மணி வரை.

மார்ச்
ராசிப்படி 6-ல் சனியும் 10-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக லாபங்களை அடையமுடியும். பண வரவுகள் சரளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகிட்டும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளால் லாபம் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிரிபார்த்துக் காத்திருந்த இடமாற்றங்கள் தடையின்றிக் கிடைக்கும் கடன்கள் படிப்படியாகக் குறையும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 16-03-2015 காலை 05.47 மணி முதல் 18-03-2015 காலை 06.58 மணி வரை.

ஏப்ரல்
ராசிக்கு 6-ல் சனி, 10, 11-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் அமையும். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் உத்தியோகஸ்தர்களுக்கு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 12-04-2015 பகல் 12.57 மணி முதல் 14-04-2015 பகல் 03.52 மணி வரை.

மே

தன ஸ்தானமான 2-ல் குருவும் லாப ஸ்தானமான 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் சிறப்பான வரன்கள் தேடிவரும். தொழில், வியாபாரத்திலும் லாபம் பல மடங்கு பெருகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 09-05-2015 மாலை 06.30 மணி முதல் 11-05-2015 இரவு 10.18 மணி வரை.

ஜூன்

ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலும், 12-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் 2-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்கநேரிடும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய லாபம் தடையின்றிக் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-06-2015 இரவு 12.18 மணி முதல் 08-06-2015 அதிகாலை 03.40 வரை.

ஜூலை

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது உடல் ஆராக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமென்றாலும் தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். 5-ஆம் தேதி முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 03-07-2015 காலை 07.52 மணி முதல் 05-07-2015 காலை 10.00 மணி வரை. மற்றும் 30-07-2015 மாலை 05.19 மணி முதல் 01-08-2015 மாலை 06.30 மணி வரை.

ஆகஸ்ட்
ராசிக்கு 3-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விஷயங்களிலும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமெடுப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டினை எடுக்கவே எதிர்நீச்சல் போடவேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 27-08-2015 அதிகாலை 03.36 மணிமுதல் 29-08-2015 அதிகாலை 04.11 மணிவரை.

செப்டம்பர்

ராசிக்கு 3-ல் சூரியனும், 5-ஆம் தேதி முதல் 6-ல் சனியும், மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். பண வரவுகளிலிருந்த பிரச்சினைகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றதை அடையமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தொழில், வியாபாரமும் முன்னேற்ற நிலையில் நடைபெறும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 23-09-2015 மதியம் 01.05 மணி முதல் 25-09-2015 மதியம் 03.35 மணி வரை.

அக்டோபர்

ஜாதகப்படி முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாயும் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனியும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சேமிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 20-10-2015 இரவு 08.32 மணி முதல் 22-10-2015 இரவு 12.48 மணி வரை.

நவம்பர்

ராசிக்கு 3-ல் செவ்வாயும் 6-ஆம் வீட்டில் சனியும் சஞ்சாரம் செய்வதும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் எதிலும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் மேன்மைகள் ஏற்படுவதால் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் சாதகப் பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-11-2015 அதிகாலை 02.11 மணி முதல் 19-11-2015 காலை 07.33 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வதால் விரோதம் பாராட்டியவர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகளும் தாராளமாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்களும் கிட்டும். முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 14-12-2015 காலை 07.54 மணி முதல் 16-12-2015 பகல் 12.54 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5, 6, 8; நிறம் – பச்சை, வெள்ளை; கிழமை – புதன், வெள்ளி; கல் – மரகதம்; திசை – வடக்கு; தெய்வம் – விஷ்ணு.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015 முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணா மூர்த்தியை வழிபாடுசெய்வது, கொண்டக்கடலை மாலை, மற்றும் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, மஞ்சள்நிறப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது. 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328

Continue reading >>