ஓம் சிவ சக்தி
மேலும் ஒவ்வொரு கலையிலும் உட்பிரிவுகள் உள்ளன. உதாரணமாக டைரக்டர் என்றால் அதிலேயும் பலர் உண்டு. நடிப்பு டைரக்டர் , பாடல் டைரக்டர் , டான்ஸ் மாஸ்டர் . இப்படியாக சொல்லலாம் .
கலைஞர்கள் என்றால் தலைசிறந்த நடிகர் முதல் எக்ஸ்ட்ரா வரைக்கும் கலைஞர்கள் தாம்.
படம் எடுப்பவர். மேக்கப்மேன் , மற்றும் ஸ்டுடியோ நிர்வாகிகள் பலரும் கலைஞர்களே. பாடுபவர்கள் சங்கீத மேதைகள் போன்றவர்களும் கலைஞர்களே.
பாடலாசிரியர்கள் கதாசிரியர்கள் வசன கர்த்தாக்கள் எழுத்தாளர்க சிற்ப வேலைகாரர்கள் நகை வேலை செய்பவர்கள் ஆகிய அனைவரும் கலைஞர்களே.
இவைகளில் ஏதாவது ஒரு கலைகளில் வல்லவராக வேண்டுமானால் புதன் ஜாதகத்தில் நல்லபடி அமைந்திருக்க வேண்டும்.
புதன் நல்லபடி இருக்க வேண்டுமென்றால் தனித்து ஆட்சி உச்சம் கேந்திர திரிகோணங்கள் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது ஜீவனாதிபதி யாராக இருந்தாலும் புதன் அம்சம் பெற்றிருக்க வேண்டும். அல்லது புதனுடைய நாடியிலாவது சஞ்சரிக்க வேண்டும். அல்லது சந்திரன் தனித்து ஆட்சி உச்சம் கேந்திர திரிகோணம் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய சந்திரனை சுபகிரகங்கள் சேர்ந்தோ , பார்த்தோ இருக்க வேண்டும். பாவ கிரகங்கள் பாராமல் இருக்க வேண்டும்.
அல்லது ராசி மண்டலத்தில் எல்லா கலைகளையும் குறிப்பிடும் மகர ராசியில் வளர் பிறை சந்திரன் இடம் பெற்று குரு சுக்கிரன் சேர்ந்தாலும் , பார்த்தாலும் கலைஞர்கள்தான்.
அதேபோல் சுக்கிரன் மீன ராசியில் உச்சமுடன் இருக்க , புதன் நீசம் அடைந்திருந்தாலும் நீச்ச பங்கமேற்படுவதால் கலைஞர் ஆகலாம்.
அல்லது ரிஷப மிதுன கன்னி துலாம் மகர கும்பம் மீன ராசி ஒன்றில் புதன் சுக்கிரன் சேர்ந்து இருந்தாலும் கலைஞர் ஆகலாம்.
அல்லது மேலே சொன்ன கிரகங்கள் ஏழாம் இடத்தை பார்த்தாலும் அவர்கள் ஈடுபட்டிருக்கும் துறைகளில் கலைஞர் ஆகலாம்.
அதேபோல் சங்கீத கலையில் பிரசித்தி பெற வேண்டுமானால் லக்னத்துக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானமும் கண்ட ஸ்தானமும் அதாவது மூன்றாம் இடமும் நல்லபடி அமைய வேண்டும்.
பாவ கிரகங்களில் வலுபெற்ற சனி பகவான் இருக்கிறாரே! சங்கீத கலைக்கும் உயிரூட்டுபவரும் அவர்தான்.
இந்த சனி பகவான் கெட்டு விட்டால் சங்கீத பயிற்சி அளிக்கலாம். .ஆனால் ஜாதகர் பாடமுடியாது. ஆலாபனை செய்யும் சுருதியுடன் கலந்து பாடவும் மூச்சு சரியாக அமைய அமைய வேண்டும். அந்த மூச்சுக்கு காரகம் சனிபகவான் அதலால் அவர் நல்லபடியாக அமையவேண்டும் , சனியுடன் சுக்கிரன் தொடர்பு கொண்டால் நாட்டியமும் நன்றாக ஆட முடியும்.
புதனோடு சனிபகவானின் தொடர்பு புராதன கலைகளில் ஈடுபாடு ஏற்படும். கலை கற்பதும் தேர்ச்சி பெறுவதும் ஒரு பக்கம் என்றாலும் தலை சிறந்த கலைஞர்களுக்கு மார்க்கெட் இருப்பதில்லையே ஏன் ? அதிர்ஷ்டமில்லையா ? வேறென்ன காரணம்.
அரை குறைகளெல்லாம் பிரமாதமான புகழோடும் பொருளோடும் சொகுசான வாழ்க்கை வாழும்பொழுது அனைத்து திறமைகளும் கொண்ட மேதைகள் பொருளாதாரத்தில் பிரகாசிக்க முடிவதில்லையே ஏன்? என்ற கேள்வி எழும். அது அவர்கள் செய்த பூர்வ புண்ணியம் என்று சொல்லலாம்.
கலைகளை வழங்கும் அதே கிரகங்கள் பொருளை வழங்காமல் போவதெப்படி.? என்ற கேள்வி எழலாம். எவ்வளவு கலைமாமனியாலும் பணம் சம்பாதிக்க தன லாபாதிபதி கருணை புரியாவிட்டால் தான் பெற்ற கலையின் கூலி வறுமைதான் என்று சொல்லலாம்.
புராதன கலையை கலையை வளர்க்க சனி புதன் என்று சொன்னாலும் இவர்கள் லாபஸ்தானம் என்று சொல்லகூடிய பதினோராம் இடத்தில் இருந்துவிட்டால் அவர்கள் பெற்றிருக்கும் கலையின் மூலம் நிறைய பொருள் ஈட்டலாம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 9384372941
0 comments:
கருத்துரையிடுக