Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 17 ஆகஸ்ட், 2024

ஜோதிடத்தில் கிரகங்களின் பார்வை வலிமைகள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர்- ஆர். இராவணன் BSC


கிரகங்களின் பார்வை அதன் ஒளியின் தன்மைகள் மற்றும் அதன் அளவீடுகள் இதை பற்றி சற்று விரிவாக காண்போம்.

நவகிரகங்களில் ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரகங்களுக்கு பார்வை உண்டு.இதில் சனி பகவானுக்கு 3.7.10ம் பார்வையும்.குரு பகவானுக்கு 5.7.9ம் பார்வையும்.செவ்வாய்க்கு 4.7.8ம் பார்வையும் உண்டு.சூரியன்.சந்திரன் புதன்.சுக்கிரன் இவர்களுக்கு 7ம் பார்வை

மட்டும் உண்டு.என்பது பொதுவான ஜோதிட விதி.

பொதுவாக ஒரு கிரகத்தின் பார்வை எந்த பாவகத்தை பார்வை செய்கிறது என்பதை அறிந்து அந்த பாவககம் மற்றும் அந்த பாவகத்தில் உள்ள கிரகம் போன்ற நிலைகளை வைத்து துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள முடியாது.

ஒவ்வொரு கிரகமும் ஜாதகத்தில் அமரும் ராசியை பொருத்தும் அல்லது அதன் வலிமையை பொருத்தும் அதன் பார்வையில் ஏற்ற தாழ்வு இருக்கும்.

இதை தெளிவாக தெரிந்து கொள்ள விரிவான விளக்கம் தேவைப்படுகிறது

விரிவாக தற்போது பார்ப்போம் .


சூரியன் 12 ராசிகளை சுற்றி வர 1ராசியில் 1மாதம் வீதம் 12ராசிகளை சுற்றி வர 1வருடம் ஆகும்.இதேபோல் சந்திரன் 1ராசியில் 2.1/2 நாள் வீதம் 12 ராசிகளை சுற்றி வர தோராயமாக 28 நாட்கள்.அடுத்து குரு பகவான் 1 ராசியில் 1வருடம் வீதம் 12.ராசிகளையும் சுற்றி வர 12 வருடம் ஆகும்.செவ்வாய் தோராயமாக 45 நாட்கள் வீதம் 12 ராசிகளை சுற்றி வர 18 மாதம் ஆகும்.இதில் புதன்.சுக்கிரன் இவர்கள் சூரியன் உடன் இனைந்தோ அல்லது சூரியனுக்கு முன் பின் ராசியில் சுற்றி வரும்.

கிரகங்களின் இந்த ஒரு சுற்றில் 12 ராசிகளிலும் ஒரே அளவீட்டில் பார்பது இல்லை.பார்வையின் அளவீட்டில் ஏற்றதாழ்வுகள் இருக்கும்.

பூமியில் விழும் ஒவ்வொரு கிரகத்தின் ஒளியின் அளவில் வேறுபாடு உள்ளது. அதேபோல் அமரும் நிலைகளை பொறுத்தும் ஒளியின் அளவீடுகள் வேறுபடும்.

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பொதுவான ஒரு அளவீடு உள்ளது அதை வரிசையை பார்த்து விட்டு பின்பு விரிவாக பார்வை மற்றும் ஒளியின் அளவீடுகளை காண்போம்.

பூமிக்கு சூரியன் ஒளி அளவு மற்ற கிரகங்களை விட அதிகமாக கிடைக்கும்.

இதற்கு ஒளி அளவு 30.அடுத்து சூரியனை விட குறைவாக சந்திரனின் ஒளி பூமிக்கு அதிகமாக கிடைக்கும் இதன் ஒளி அளவு 16.அடுத்து சந்திரனை விட குறைவாக நம் கண்ணுக்கு அதிகாலை பிரகாசமாக தெரியும் விடிவெள்ளி சுக்கிரன்ஒளி இதன் ஒளி அளவு 12. அடுத்து சுக்கிரனை விட குறைவாக குரு பகவான் ஒளி இதன் ஒளி அளவு 10. அடுத்து புதன் இதன் ஒளி அளவு 8. அடுத்து செவ்வாய் இதன்ஒளி அளவு 6 அடுத்து வெகு தொலைவில் உள்ள சனி பகவான் இதன் ஒளி அளவு 1.


இது பொதுவான ஒளி அளவு.தற்போது துல்லியமாக ஒவ்வொரு கிரகத்தின் பரவலான பார்வையின் அளவீடுகள் மற்றும் அமரும் 12ராசிகளில் உள்ள பார்வையின் அளவீடுகளின் வேறுபாடுகளையும் பார்ப்போம்

பூமி சூரியனின் சுற்று பாதையில் சூரியனுக்கு அருகில் சித்திரை மாதத்தில் இருப்பதால் சூரியன் உச்சம் என்ற நிலை ஏற்படுகிறது.இதேபோல ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு மாதங்களில் பூமிக்கு அருகில் உள்ள நிலைகளில் உச்சம் அடைகிறது.அதற்கு நேர் எதிர் ராசியில் பூமிக்கு தொலைவில்

உள்ள அமைப்பில் நீசம் அடைகிறது.

இதில் நமக்கு கிரகங்கள் அருகில் இருக்கும் போது ஒளி அளவு அதிகமாகவும்.தொலைவில் ஒளி அளவு குறைவாகவும் கிடைக்கும்.உதாரணமாக சூரியன் சித்திரை மாதம் மேஷராசியில் அதிக ஒளியும் ஐப்பசி மாதம் துலாம் ராசியில் ஒளி அளவு குறைவாகவும் கிடைக்கும்.இரண்டு ஒளி அளவிற்கும் வித்தியாசம் உள்ளது போல் பார்வையிலும் வித்தியாசம் ஏற்படும்.அதன் நிலைகளை தற்போது பார்ப்போம்.

முதலில் சூரியன் இதன் பொதுவான ஒளி அளவு 30.

சூரியன் உச்சம் பெற்று மேஷ ராசியில் இருந்து பார்க்கும் 7ம் பார்வை 7ம் இடத்திற்கு மட்டும் விழாமல் முன் பின் உள்ள கன்னி மற்றும் விருச்சக ராசிக்கும்


கிடைக்கும். (முழுமையான ஒளி அளவு உள்ள சந்திரனுக்கு அதியோக அமைப்பில் 6.7.8ம் பாவகத்திற்கு பார்வை கிடைப்பது போல்) துல்லியமான பார்வை சூரியன் நின்ற டிகிரிக்கு நேர் எதிரே் உள்ள 180 வது டிகிரிக்கு அதிக வலிமையுடன் கிடைக்கும்.டிகிரி விலக விலக ஒளியின் அளவீடுகள் குறையும்.

இதே போல் ஆட்சி பெற்ற அமைப்பில் உள்ள சூரியனின் ஒளி 7ம் பாவகத்திற்கும் பின் உள்ள மகர ராசியில் கடைசி 15 டிகிரியிலும்.முன் உள்ள மீன ராசியில் முதல் 15 டிகிரியிலும் கிடைக்கும்.

அடுத்து நட்பு வீட்டில் உள்ள சூரியனின் ஒளி அதன் 7ம் பாவகம் முழுவதும் கிடைக்கும்.பகை வீட்டில் உள்ள சூரியனின் ஒளி சூரியன் அமர்ந்த பாகைக்கு 180 வது டிகிரிக்கு முன் 12 பாகையும் பின் 12 பாகையிலும் விழும்.

நீச அமைப்பில் உள்ள சூரியனின் ஒளி முன் 8டிகிரியிலும் பின் 8டிகிரியிலும் விழும்.

மேலே உள்ள அமைப்பில் சூரிய ஒளியின் வலிமையை அளவீடு செய்து பார்வையின் வலிமையை நிர்ணயம் செய்யலாம்.

பொதுவாக சூரியனின் தாக்கம் சூரியனின் 6.7.8.ம் பாவகங்களுக்கு இருக்கும்.பூமிக்கு வெளி வட்டத்தில் உள்ள கிரகங்கள் சூரியனுக்கு 6.7.8.ல் வக்கிரம் அடைவதற்கு இதுவும் ஒருகாரணம்.அந்த கிரகங்கள் வக்கிரம் பெறும் அமைப்பில் சூரியனுக்கும் வெளிவட்ட கிரகங்களும் நடுவில் பூமி இருக்கும் பூமி தனது சுற்றுபாதையில் இவ்விரு கிரங்களுக்கு நடுவில் நகரும் போது உருவாகும் தோற்றமும் வக்கிரம் பெறும் அமைப்பிற்கு ஒரு காரணம்.


நான் மேல குறிப்பிட்ட உச்ச.நீச.ஆட்சி பகையில்.குறிப்பிட்ட டிகிரியில் சூரிய ஒளியின் அளவீட்டில் தாக்கம் ஏற்பட்டு சூரிய ஒளியின் வலிமை டிகிரிக்கு ஏற்ப இருக்கும்.

உதாரணமாக சூரியனும் குரு பகவானும் ஒருவரே ஒருவர் பார்ப்பது சிவராஜயோகம் .ஆனால் துல்லியமாக பார்க்கும் 180 டிகிரி பார்வையில் மிக உயர்ந்த அரசாளும் பதவியிலும் டிகிரி விலக விலக பதவியின் அளவீடுகள் குறைந்து கடைசி டிகிரி பகுதியில் கவுன்சிலர் பதிவி வரை அமையும்.(இந்த அமைப்பிற்கு மற்ற நிலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்).

அடுத்து சந்திரன் இதன் ஒளி அளவு 16.

சந்திரன் பௌர்ணமி அன்று தனது முழு ஒளி அளவையும் பூமிக்கு தரும்.பூமிக்கு மிக நெருங்கி இருப்பதால் சந்திரனுக்கு பௌர்ணமி அன்றே உச்சத்திற்கு நிகரான அமைப்பு தான்.இதில் சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசியில் சந்திரன் இருக்கும் போது நிகழும் பௌர்ணமி அன்று ஒளி அளவு மிக மிக அதிகமாக இருக்கும்.அன்று கார்த்திகை தீபம். அடுத்து சூரியனின் உச்ச ஒளியை பெற்று துலாமில் சந்திரன் இருக்கும் போது நிகழும் பௌர்ணமி அன்று சித்ரா பௌர்ணமி.இதுவும் அதற்கு அடுத்த ஒளி மிகுந்த பௌர்ணமி. இந்த அமைப்பில் சந்திரன் பார்வை 6.7.8ம் பாவகங்களுக்கு கிடைக்கும்.


அடுத்து மற்ற பௌர்ணமி மற்றும் ஒளி மிகுந்த சந்திரன் உள்ள நிலைகளில் சந்திரனுக்கு 6ம் பாவகத்தின் கடைசி 20 பாகை வரையிலும் 7ம் பாவகம் முழுவதும் 8ம் பாவகத்தின் முதல் 20 பாகை வரையிலும் கிடைக்கும்.

அதேபோல் இந்த அமைப்பில் சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்களிலும் சந்திரன் ஆதிக்கம் இருக்கும்.ஒளி அளவு குறைய குறைய பார்வை அளவீடுகளும் குறையும்.

அடுத்து சுக்கிரன் இதன் ஒளி அளவு 12.

சுக்கிரன் பூமிக்கு உள் வட்டத்தில் உள்ள சிறிய கிரகம் இதன் பார்வை பரவலாக கிடைக்காது.(ஒற்றைக்கண் பார்வை). உச்சம் பெற்று இருக்கும் நிலையில் 7ம் பாவகம் முழுவதும்.ஆட்சி பெற்ற அமைப்பில் அமரும் டிகிரிக்கு 180 டிகிரிக்கு முன் 12 டிகிரியிலும் பின் 12 டிகிரியிலும்.நட்பு வீட்டில் முன் 10 டிகிரியிலும் பின் 10 டிகிரியிலும் பகை வீட்டில் முன் பின் 8டிகிரியிலும்.நீச வீட்டில் முன் பின் 5டிகிரியிலும் ஒளி அளவு அதிகமாக கிடைக்கும்.

அடுத்து வெளி வட்டத்தில் உள்ள மிக பெரிய கிரகம் குரு பகவான்.இதன் ஒளி அளவு 10.உச்சம் பெற்ற அமைப்பில் குரு பகவான் 7ம் பாவகத்திற்கும் பின் உள்ள தனுசு ராசியின் கடைசி 15 பாகை வரையிலும் முன் உள்ள கும்ப ராசியில் முதல் 15 டிகிரி வரையிலும்.அதன் ஒளியை தருவார் .

ஆட்சி பெற்ற அமைப்பில் 7ம் பாவகத்திற்கும் 6ம் பாவகத்தின் கடைசி 5டிகிரி வரையிலும் 8ம் பாவகத்தின் முதல் 5டிகிரி வரையிலும் கிடைக்கும்.நட்பு நிலையில் 7ம் பாவகத்திற்கு முழுமையாகவும் பகை பெற்ற அமைப்பில் அமர்ந்து இருக்கும் டிகிரிக்கு நேர் 180 டிகிரிக்கு முன் பின் 12 டிகிரி வரையிலும் நீசம் பெற்ற அமைப்பில் முன் பின் 8டிகிரி வரையிலும் கிடைக்கும்.5.9ம் பார்வைகளையும் இதே முறையில் அறியலாம்


அடுத்து புதன் இதன் ஒளி அளவு 8.புதன் பூமியின் உள்வட்ட சிறிய கிரகம்.உச்ச அமைப்பில் இதன் பார்வை பாவகம் முழுவதும் கிடைக்கும்.ஆட்சி நிலையில் 180 டிகிரிக்கு முன் பின் 12 டிகிரி வரையிலும் நட்பு நிலையில் முன் பின் 10டிகிரி வரையிலும் பகை அமைப்பில் முன் பின் 8டிகிரி வரையிலும் நீசம் பெற்ற அமைப்பில் முன் பின் 5டிகிரி வரையிலும் அதன் ஒளி கிடைக்கும்.

அடுத்து செவ்வாய் இதன் ஒளி அளவு 6. இது பூமியின் வெளி வட்ட சிறிய கிரகம் இதன் பார்வை சற்று பரவலாக அதன் ஒளியின் அளவீடுகள் அடிப்படையில் இருக்கும்.உச்சம் பெற்ற பார்வை முழுமையான பாவகத்திற்கும் ஆட்சி பெற்ற செவ்வாய் பார்வை நேர் 90.

180. 210 டிகிரிக்கு முன் பின் 12 டிகிரி வரையிலும்.நட்பு நிலையில் முன் பின் 10

டிகிரி வரையிலும் பகை அமைப்பில் முன் பின் 8டிகிரி வரையிலும்.நீச அமைப்பில் முன் பின் 5டிகிரி வரையிலும் கிடைக்கும்.

அடுத்து கடைசியாக சனிபகவான் இதன் ஒளி அளவு 1.ஆனால் இது பூமியின் வெளி வட்டத்தில் உள்ள குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் இதன் ஒளி பரவலாகவும் அதன் ஒளியின் அளவீடுகள் அடிப்படையிலும் இருக்கும்.

உச்சம் பெற்ற சனி பகவான் ஒளி பார்க்கும் பாவகம் முழுவதும் கிடைக்கும்.

ஆட்சி பெற்ற சனி பகவான் ஒளி நேர்

60. 180. 270. டிகிரிக்கு முன் பின் 12 டிகிரி வரையிலும்.நட்பு நிலையில் முன் பின்

10 டிகிரி வரையிலும்.பகை அமைப்பில் முன் பின் 8டிகிரி வரையிலும்.நீசம் பெற்ற அமைப்பில் முன் பின் 5டிகிரி வரையிலும் கிடைக்கும்.


இதேபோல் கிரகங்கள் அமரும் டிகிரி மிக அவசியம் அதற்கு நேர் 180 டிகிரிக்கு துல்லியமான பார்வையும்.முன் பின் டிகிரியில் விலக விலக ஒளியின் அளவீடுகள் அல்லது கிரகங்களின் வலிமை குறையும்.

மேலே குறிப்பிட்ட அனைத்து விளக்கங்களும் கிரகங்களின் பார்வையில் உள்ள ஒளியின் அளவீடுகள் மட்டுமே.இதை துல்லியமாக தெரிந்து கொண்டு கிரகங்களின் பார்வை பலன்களை அறியலாம்.

கண்டிப்பாக நன்கு புரியும் புரியவில்லை என்றால் திரும்ப திரும்ப படியுங்கள் நன்கு புரியும்.

(ஜோதிடத்தில் பொதுவான விதிகள் தான் அதிகம்.ஒவ்வொரு பொதுவான விதிகளுக்கும் பல விதிவிலக்குகள் நான் மேல குறிப்பிட்டது போல் உள்ளது.அதை அறிந்து கொண்டால் ஜோதிடம் எளிதாக புரியும்)



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328 

Share this article :

0 comments:

கருத்துரையிடுக