இது ஜோதிட அறிவியல் எனும் மிக அகண்டு விரிந்த சாம்ராஜ்ஜியத்தில் வெறும் நுனிப்புல்லை மேய்ந்தவர்களின் கருத்து.
எட்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தாலே அல்ப ஆயுள் என்று கூறுவது முழுவதும் தவறு. அந்த 8-ஆம் இடம் எந்த ராசியில் உள்ளது, செவ்வாய்க்கு வேறு எந்த கிரஹங்களின் பார்வை உள்ளது, மற்றும் செவ்வாய் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளது போன்ற அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் ஒரு ஜாதகரின் ஆயுள் பற்றிய தீர்மானத்திற்கு நாம் வர முடியாது. ஜாதகத்தில்
8-ஆம் இடம் என்றாலே நமக்கு எல்லாருக்குமே ஒரு பயம். காலபுருஷ தத்துவத்தில் 8-ஆம் இடம் விருச்சிகம், அதன் அதிபதி செவ்வாய். அதனால் ஒரு ஜாதகத்தில் 8-ஆம் இடத்தில செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகரின் வாழ்நாள் குறித்த சந்தேகம் வருவது இயற்கையே.
பொதுவாக, 8-ஆம் இடத்தில் மற்ற பாபர்களின் பாதிப்பு இல்லாமல் செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருப்பது நன்மையையே தரும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் 8-ஆம் பாவத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஒரு வெறித்தனமான உத்வேகம் இருக்கும். செவ்வாய் இது போன்ற ஜாதகத்தில் பாதிப்படையாமல் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்வின் உச்ச நிலையை அடைவார். ஏராளமான சொத்துக்கள், அபரிமிதமான பண வரவு, ஆடை ஆபரணங்கள் என அவர் வாழ்வே ஒளிமயமானதாக இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய்ஆ த்மகாரகனாக இருந்தாலும், குரு பகவானோடு சேர்ந்திருந்தாலும், அவரின் பார்வை பட்டாலும், அல்லது அவரின் நட்சத்திர சாரத்தில் இருந்தாலும், செவ்வாயின் ஆட்சி வீடு 2-ஆம் இடமாக இருந்து (Eg: மீன லக்கினம்) அதன் பார்வை அதன் ஆட்சி வீடான மேஷத்தில் பட்டாலும், செவ்வாயின் பார்வை பெரும் இடங்களில் குரு பகவான் போன்ற சுபர்களின் பார்வை பட்டாலும், செவ்வாய் 8-ஆம் வீட்டில் இருக்கும் நிலையினால் அதிக அளவில் நன்மைகளே நடக்கும்.
ஒரு ஜாதகத்தை கணிக்கும் போது வெறும் மேலோட்டமாக கிரஹங்களின் நிலையை வைத்தே பலன் சொல்லுவது மிக தவறான செயலாகும். ஜோதிடத்தை ஒரு நம்பிக்கையூட்டும் கருவியாகவே பயன்படுத்தவேண்டும்
நம் வாழ்வில் சில நேரங்களில் தடுமாற்றங்கள் வரும்போது, ஜோதிடத்தின் உதவியுடன், நம் கர்ம பலன்களை உணர்ந்து அதற்கேற்றது போல் செயல்பட்டால் நம் சோகங்களை, துயரங்களை வருங்காலத்தில் வெற்றியளிக்கப்போகும் படிக்கட்டுகளாக மாற்றலாம்.
உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வரன் அமைய வேண்டுமா ? இன்றே உங்களின் ஜாதகம் பயோடேட்டா புகைப்படத்தை எங்களுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் . உங்களுக்கு பொருத்தமான வரனை உங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறோம் . கட்டணம் தேவை இல்லை
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
கருத்துரையிடுக