இன்று பிலவ வருடம் ஐப்பசி 24 ஆம் தேதி நவம்பர் 10,2021 புதன் கிழமை சஷ்டி திதி காலை 08.25 மணி வரை அதன் பின் சப்தமி திதி மறுநாள் காலை 06.50 மணிவரை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 03.41மணி வரை அதன் பின் திருவோணம். சந்திரன் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் மனதிற்குள் ரொமான்ஸ் நினைவுகள் அதிகரிக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். இன்று இனிமையான நாள். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.
சிம்மம்
ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். காதல், மணவாழ்க்கை இன்றைக்கு உற்சாகமாக இருக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் அமையும். அலுவலகத்தில் இன்றைக்கு உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்கவும்.செய்யும் பணியில் பிறரின் இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படும்.
கன்னி
ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். காதல் வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் உதவி கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும்.
துலாம்
ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரநிலை சூப்பராக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் கேது இருந்தாலும் கலகலப்பான மனநிலையில் இருப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தல் கவனமும் தெளிவும் தேவை. பயணங்களைத் தவிர்த்து விடவும்.
விருச்சிகம்
ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளதால் செய்யும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். காதல் நினைவுகளும், பேச்சுக்களும் உங்களின் துணையை உற்சாகப்படுத்தும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். உடல் நலம் உற்சாகமாகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் பணி பாராட்டத்தக்க வகையில் இருக்கும்.
தனுசு
ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் உடல் நலம் சீராக இருக்கும். செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். அதே நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் நலம் சீராக இருக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
மகரம்
ராசிக்குள் இன்று சந்திரன் பயணம் செய்வதால் உடல்நலம் நன்றாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். அம்மாவின் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும்.
கும்பம்
ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். புதுவித உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். பண வரவு நன்றாக இருக்கும். உங்களின் காதல் வாழ்க்கையும் மணவாழ்க்கை நன்றாக இருக்கும். மனைவியிடம் காதலோடு பேசுவீர்கள். திருமண வாழ்வின் உச்சக்கட்ட மகிழ்ச்சியை அடைவீர்கள்.
மீனம்
![]() | ||||
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
கருத்துரையிடுக