ஓம் சிவ சக்தி
ஜோதிட சாஸ்திரம் கடலை போன்றது . இதில் நீந்தி கரையை காண்பது என்பது இயலாத ஒன்று. இதில் மூழ்கி முத்து எடுப்பதை போன்று ஜோதிட ரீதியான சிந்தனையோடு ஒவ்வொரு பொருளையும் , ஒவ்வொரு செயலையும் , உற்று நோக்கி கவனிக்கும்பொழுது அனுபவ ரீதியாக புதுப்புது உண்மைகள் நமக்கு புலப்படும். தினமும் செய்தி தாள்களை புரட்டி பார்க்கும்பொழுது கள்ளகாதல் காரணமாக கணவன் மனைவியை கொல்லுவதும் , மனைவி திட்டமிட்டு கணவனை கொல்லும் செய்திகளும் தினசரி பத்திரிக்கைகளில் வருவதை நாம் கண் கூடாக காண முடிகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் மறைமுகமாக இவள் கற்பு தவருவாள் , இந்த ஜாதகனுக்கு அந்நிய பெண்களின் தொடர்பு இருக்கும் , இவள் தாம்பத்திய உறவில் திருப்தி அடைய மாட்டாள் .
இவனுக்கு காம உணர்வு அதிகமாக இருக்கும். என்று காமத்தோடு தொடர்புடைய நிகழ்வுகள் மறைமுகமாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அனுபவ ரீதியாக இந்த முறையற்ற உறவு முறையில் கணவனின் கையால் மனைவியும் , மனைவியின் தூண்டுதலினால் கணவனின் உயிர் பறிபோவதற்கும் உண்டான கிரக நிலைகளை ஜோதிட சாஸ்திரத்தின் மூலமாக அனுபவ ரீதியாக ஒரு சில ஜாதக அமைப்பை கொண்டு நாம் அறிந்து கொள்ளலாம்.
எந்த ஒரு ஆண் ஜாதகமானாலும் சரி பெண் ஜாதகமானாலும் சரி லக்னத்துக்கு எட்டாம் இடம் என்பது ஒருவரின் ஆயுளை குறிக்கும் இடமாகும். இந்த ஆயுளுக்கு ஆயுள் ஸ்தானம் எட்டாம் இடத்திலிருந்து எண்ணிவர எட்டுக்கு எட்டாம் இடமாகிய மூன்றாம் இடம் வரும். இந்த மூன்றாம் இடம் என்பது லக்னத்திலிருந்து எண்ண வருகின்ற மூன்றாம் இடமாகும். உன்னுடைய ஆயுளுக்கு ஆயுள் அதிகமாக இருக்கிறதா என்பதை மிக துல்லியமாக காட்டும் இடம்தான் இந்த மூன்றாம் இடம்.
அதேபோல் ஜாதகத்தில் விரய ஸ்தானம் என்ற ஸ்தானம் இருக்கிறது . பன்னிரெண்டாம் இடம் என்பது ஒவ்வொருவருக்கும் உண்டாகும் விரயங்களை குறிப்பிடும் இடமாகும். அப்படி பார்க்கையில் லக்னத்துக்கு எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கு விரய ஸ்தானமாக லக்னத்துக்கு ஏழாம் இடம் வரும். இந்த ஏழாம் இடம் என்பது மனைவியை குறிக்கும் இடமாகும். மற்றொரு ஆயுள் ஸ்தானமான மூன்றாம் இடத்துக்கு விரய ஸ்தானமாக லக்னத்துக்கு இரண்டாம் இடம் வரும் . இந்த ஏழாம் இடமும் , இரண்டாம் இடமும் ஒருவருடைய ஆயுள்(மரணம் எப்படி ஏற்படும் ) எப்படி விரயமாகும் என்பதை உணர்த்தும் இடமாகும். ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியை குறிக்க கூடிய லக்னத்துக்கு ஏழாம் இடத்து அதிபதியும் , மனைவிக்கு காரகம் வகிக்கும் சுக்ரனும் , ஆயுள் ஸ்தானத்துக்கு விரய ஸ்தானம் என்று சொல்ல கூடிய ஏழாம் , இரண்டாம் வீட்டில் இருந்தாலோ , அல்லது இந்த வீட்டுக்கு அதிபதியான கிரகத்தோடு தொடர்பு பெற்று காணப்பட்டாலோ அந்த ஜாதகனின் ஆயுளின் முடிவிற்கு அவனுடைய மனைவியும் ஒரு முக்கிய காரணமாக அமைவாள்.
அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்துக்கு அதிபதியும் பெண்ணின் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் கிரகமாகிய செவ்வாயும் ஆயுள் ஸ்தானத்துக்கு விரய ஸ்தானமாகிய லக்னத்துக்கு 2 - ம் இடம் , லக்னத்துக்கு 7 - ம் இடத்தில் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் அல்லது இந்த வீட்டு அதிபதிகளுடன் தொடர்பு பெற்று கானபட்டாலும் அந்த ஜாதகியின் ஆயுள் முடிவதற்கு காரணம் அவளது கணவனும் ஒரு காரணமாவான் . இந்த நிகழ்வுகள் அந்தந்த ஜாதகத்தில் லக்னாதிபதியும் பலமில்லாமல் நீசம் , மறைவு ஸ்தானம் , கடும் பகை வீடு போன்ற நிலைகளில் இருந்தால் இந்த அபசகுனமான கெட்ட நிகழ்வுகள் நடக்கும்.
லக்னாதிபதி பலமுடன் உச்சம் - திரிகோணம் - ஆட்சி - பெற்று இருந்தால் அந்த ஜாதகனை யாராலும் அசைக்க முடியாது.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் ஒரு ஆணின் ஜாதகத்தில் இருந்து சுக்ரனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகி இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இவர்களுடன் சேர்ந்து ராகு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கு பெண்களின் தொடர்பு அதிகமாக இருக்கும். இந்த கிரக அமைப்புகளும் இருந்து லக்னத்துக்கு 2 - 7 - ம் வீடு , அல்லது இந்த வீட்டு அதிபதிகளுக்கு சுக்ரன் தொடர்பு பெற்று காணப்படும் கிரக அமைப்புகளும் ஒருவனுடைய ஜாதகத்தில் இருக்குமானால் அவனுடைய ஆயுளின் கோரமான முடிவிற்கு அவனுடைய மனைவியின் பங்கு அதிகமாக இருக்கும்.
அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஒரு லக்னத்துக்கு நான்காம் இடம் என்பது அவளுடைய கற்பை குறிக்கும் இடமாகும். இந்த இடத்துக்கோ அல்லது வீட்டு அதிபதியான கிரகதுக்கோ சுப கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருந்து பாவ கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்து , லக்னத்துக்கு 2 - 7- ம் வீட்டுக்கும் , அல்லது இந்த வீட்டு அதிபதிகளுக்கு ஏழாம் அதிபதி , செவ்வாய் இவர்களின் தொடர்பு ஏதாவது ஒரு வகையில் அமையுமானால் அந்த பெண்ணின் கணவன் அவளுடைய கற்பின் மீது சந்தேகப்பட்டு அவளுடைய மரணத்திற்கு அவன் முக்கிய காரணமாக அமைவான்.
அன்பான வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 comments:
கருத்துரையிடுக