Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

தமிழ் புத்தாண்டு - 2013 - விருச்சிக ராசி பலன்கள்?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

 
தமிழ் புத்தாண்டு - 2013 -விருச்சிக ராசி பலன்கள் (14.4.13 முதல் 13.4.14 வரை)
எதிலும் முன் யோசனையுடன் செயல்பட வேண்டிய கால கட்டத்தில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் சிரம பலன்களைத் தர உள்ளனர். ராசிக்கு ஆறாம் இடத்தில் கேது வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும் வகையில் உள்ளார். 

ரிஷபத்தில் அனுகூலமாக உள்ள குரு, மே28ல், அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஏழரைச்சனியின் பிடியிலும் இருக்கிறீர்கள். இதனால் நீங்கள் எந்த செயலிலும் முன்யோசனையுடன் ஈடுபட வேண்டும்.நீங்கள் நேர்மையாக நடந்து, உள்ளதையே பேசினாலும் கூட மற்றவர்கள் பார்வையில் அது தவறாகத்தான் தெரியும். 

எனவே இடம், பொருள் அறிந்து பேசுங்கள். தம்பி, தங்கைகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்குரிய அறிகுறி தெரிகிறது.வீடு, வாகன வகையில் கிடைக்கிற வசதி திருப்திகரமாக இருக்கும். தாயின் அன்பு, ஆசி கிடைத்து மனதிற்கு ஆறுதலாக இருக்கும். புத்திரர்களைக் கண்டிப்பதாக இருந்தாலும் சரி...சில விஷயங்களில் ஊக்கப்படுத்தினாலும் சரி... நிதான அணுகுமுறை வேண்டும். 

உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதால் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.கடன்கள் நிர்ப்பந்தம் தரும். புதிய கடன் பெற்று இவற்றை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிரிகளால் ஏற்படும் தொல்லையை சமயோசிதமாக சமாளிப்பீர்கள்.

கணவன், மனைவி குடும்பத்தின் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு சகிப்புத்தன்மை, தியாக குணத்துடன் செயல்படுவர். நண்பர்களுக்கு உதவுவதிலும் அவர்களிடம் உதவி பெறுவதிலும் ஒரு அளவைக் கடைபிடிப்பது நல்லது.

 மூத்த சகோதரர்கள் இயன்ற உதவி,ஆலோசனை வழங்குவர். வெளியூர் பயணங்கள் தேவையில்லாமல் செல்ல வேண்டாம். பணம், நேரத்தை மிச்சப்படுத்த உள்ளூரில் இருந்தபடியே சமாளிக்கப் பாருங்கள். சுயதொழில் துவங்க முயற்சிப்பவர்கள் உரிய காலம் வரும் வரை காத்திருப்பது நல்லது. 

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில், இப்போது இருக்கிற அனுகூலத்தன்மைகளை பாதுகாத்துக் கொண்டாலே போதுமானது. விரிவாக்கப்பணி முதலியவற்றை வருங்காலங்களில் பார்த்துக் கொள்ளலாம். ஆயினும், திட்டமிட்ட வளர்ச்சியை உருவாக்க அக்கறையுடன் செயல்படுவீர்கள். உற்பத்தி, தரம் சிறந்து புதிய ஒப்பந்தங்களை பெற்றுத்தரும். நிர்வாகத்தை எளிதாக நடத்த சில மாற்றங்களை செய்வீர்கள். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்ற தாராள செலவு செய்ய வேண்டி வரும். சிலர் தொழில்சார்ந்த சங்கங்கள், அமைப்புகளில் இருக்கும் பதவியை உதற வேண்டிய நிலை ஏற்படும். 

வியாபாரிகள்: வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கினால் மட்டுமே இருக்கிற விற்பனையைத் தக்க வைக்க முடியும். அபிவிருத்தி பணிகளை நிறைவேற்ற எதிர்பார்த்த பணம் ஓரளவு கிடைக்கும். சந்தையில் அதிகரிக்கும் போட்டியை சமாளிக்க இனிய பேச்சு, எளிய அணுகுமுறை என இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சரக்கு குடோன்களில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிகளை மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும்.சக பணியாளர்களுடன், விட்டுக்கொடுத்து செல்வதால் மட்டுமே குளறுபடி இல்லாமல் நன்மை பெற இயலும். சலுகைகள் பெறுவதிலும், பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவர்களும் உயரதிகாரிகளிடம் நிதானமாக முயற்சித்தால் மட்டுமே நினைத்தது நடக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு தாறுமாறாக அதிகரிக்கும். இதனால், பணியில் குளறுபடி ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு இடம் தராமல், அதிகநேரம் பணிபுரிந்தாவது பிரச்னைகளைத் தவிர்க்க முயற்சியுங்கள். தேவையில்லாமல் நிர்வாகத்தின் கண்டிப்பை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் வரலாம். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். குடும்பப் பெண்கள் அத்தியாவசிய செலவுகளில் சிக்கனம் பின்பற்ற வேண்டியிருக்கும். சிலருக்கு ஆபரணம் வாங்க யோகம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் அமையும். ஓரளவு லாபம் கிடைக்கும்.

மாணவர்கள்: ஞாபகத்திறன் குறையும். கூடுதல் முயற்சியும் தகுந்த பயிற்சி முறைகளும் பின்பற்றுவது அவசியம். படிப்புக்கான பணவசதி எதிர்பார்த்தபடி கிடைக்கும். சக மாணவர்களின் உதவியும் உண்டு. பெற்றோரின் ஆலோசனை, வழிகாட்டுதலை மதித்து நடந்துகொள்வதால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். படித்து முடித்து வேலை வாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு ஓரளவு அனுகூலம் உண்டு.

அரசியல்வாதிகள்: சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்க நண்பர்கள் உதவுவர். உங்களின் அரசியல் பணிக்கு உதவுவதில் புத்திரர் ஓரளவு உதவுவர். 

விவசாயிகள்: இடுபொருட்கள், பணவசதி கிடைப்பதில் தாமத சூழ்நிலை இருக்கும். கூடுதல் முயற்சியினால் நிலைமையைச் சமாளித்து உற்பத்தி அளவை சுமாரான நிலைக்கு கொண்டு வருவீர்கள். கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைத்து முக்கிய செலவுகளுக்கு பயன்படும். நிலம் தொடர்பான சிரமம் இருந்தால் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை சிக்கன பணச்செலவில் நடத்துவது நல்லது.

செல்ல வேண்டிய கோயில்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் உடல்நலமும் பணவரவும் சீராகும்

பரிகார பாடல்: காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 comments:

கருத்துரையிடுக