Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

தமிழ் புத்தாண்டு - 2013 - மகர ராசி பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC


தமிழ் புத்தாண்டு - 2013 - மகர ராசி பலன்கள் (14.4.13 முதல் 13.4.14 வரை)

சகோதரன் சகோதரி உறவு வகையில் மன சங்கடத்தை உண்டாக்கும் கால கட்டத்தில் இருக்கும் மகர ராசி அன்பர்களே இந்த புத்தாண்டில் பிரதான கிரகங்களில் கேது, ராசிக்கு நான்காம் இடத்திலும் சனி, ராகு ராசிக்கு பத்தாம் இடத்திலும் அசுப பலன்களைத் தரும் விதத்தில் அமர்வு பெற்றுள்ளனர். 

மே27 வரை குருபகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து நற்பலனைத் தருகிறார். அதன்பிறகு ராசிக்கு ஆறாம் இடமான மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த மாறுபட்ட இட அமர்வினால் சில சிரம பலன்களைச் சந்திக்க நேரிடும். பூர்வ புண்ணிய பலன்களே உங்களை இந்த சமயத்தில் காப்பாற்றும்.வாக்கு ஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்க்கறார்.

 இதனால் பேச்சில் நிதானமும் விவேகமும் பின்பற்றுவீர்கள். புகழ் தேடுவதில் இருந்த ஆர்வம் குறையும். தம்பி, தங்கைகளிடம் சுமாரான உறவே இருக்கும். வீடு, வாகனத்தில் நம்பகக் குறைவான எவருக்கும் இடம் தரவேண்டாம். தாய்வழி உறவினர் உங்கள் சிரமங்களை குறைக்க ஓரளவு உதவுவர். புத்திரர்கள் ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் கொள்வர்.

 உங்களின் பணவசதிக்கேற்ப அவர்களின் தேவையை நிறைவேற்றி மகிழ்ச்சி, பெருமிதம் அடைவீர்கள்.இஷ்டதெய்வ வழிபாட்டை சிறப்பாக நடத்துவீர்கள். குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்காக சொத்தின்பேரில் கடன் பெறுகிற கிரகநிலை உள்ளது. உடல்நலம் பேண, அவ்வப்போது மருத்துவச்செலவு தவிர்க்க முடியாது.வாழ்க்கைத் துணையுடன் எதிர்பாராத வகையில் சிரம சூழ்நிலைகளை சந்திப்பர். 

இருப்பினும் ஒற்றுமையுடனும், மன உறுதியுடனும் சமாளிப்பீர்கள். கடந்த காலங்களில் உங்களால் பலன் பெற்ற நண்பர், உறவினர், விசுவாசம் காட்டி, கஷ்ட சமயங்களில் உதவிகரமாக நடந்து கொள்வர். வெளியூர் பயணம் நன்மையும் அனுகூல பலன்களையும் பெற்றுத்தரும்.

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் நியாய தர்மம் பின்பற்றினால் தான் நற்பெயரை பாதுகாத்துக் கொள்ள முடியும். சுமாரான உற்பத்தி இலக்கை அடைவதற்குள்ளாகவே, போதும் போதுமென்ற நிலை உண்டாகி விடும். கடும் முயற்சியே தொழிலைக் காப்பாற்றி லாபத்தைத் தரும். நிர்வாகச் செலவுக்கு அதிக பணம் தேவைப்படும். பணியாளர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கி உற்பத்தியை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் கையிருப்பைக் கரைக்கும். சக தொழில் சார்ந்த எவருக்கும் தகுதிக்கு மீறிய அளவில் பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும்.

வியாபாரிகள்: விற்பனையைப் பெருக்க கடும் முயற்சி தேவைப்படும். இருப்பைக் காலி செய்ய லாபத்தை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சக வியாபாரிகளிடம் சுமூக நட்பு கொள்வீர்கள். கூட்டாக வியாபாரம் நடத்துபவர்கள் வரவு, செலவு விபரங்களை வெளிப்படையாக மேற்கொள்வதால் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கை வளரும். தெரிந்தவர்கள் வற்புறுத்துகிறார்களே என்பதற்காக, அனுபவம் இல்லாத வியாபாரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் குளறுபடிகளை எதிர்கொள்கிற நிலைமை இருக்கும். துறை சார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்று பணிபுரிவதால் நிலைமை சீராகும். சிலர் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவர். பணியிடமாற்றம் ஏற்படலாம். வங்கி பணியில் உள்ளவர்கள் சட்டதிட்டங்களை மதித்தும், பணவிஷயத்தில் கவனமாக இருப்பதும் பிரச்னைகளைத் தவிர்க்கும். சக பணியாளர்கள் உதவுவர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை சரிவர பின்பற்றுவதால் குளறுபடி, ஒழுங்கு நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் அதிகம் எதிர்பார்க்க முடியாது. குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை சிக்கன முறையில் மேற்கொள்வர். தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே உற்பத்தி, விற்பனையில் உள்ள அனுகூலத்தன்மை பாதுகாத்துக் கொள்ள இயலும்.

மாணவர்கள்: வெளியிடங்களில் சுற்றுவதில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால், தேர்ச்சி குறையும். படிப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே சீரான தரதேர்ச்சி பெற இயலும். படிப்புக்குரிய பணம் கிடைப்பதில் தாமதம் ஆகும் என்பதால், சிக்கனமாக செலவு செய்வது நல்லது. சக மாணவர்கள் தம்மால் இயன்ற அளவில் உதவி வழங்குவர். படித்து முடித்து வேலை வாய்ப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு பணி கிடைக்கும். பெற்றோரின் சூழ்நிலைகளை உணர்ந்து செயல்பட்டு அவர்கள் மனதில் உங்கள் மீதான நம்பிக்கையை வளர்ப்பீர்கள்.

அரசியல்வாதிகள்: சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாக்க போராட வேண்டியிருக்கும். ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதமாகும். அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெறுவதில் குறுக்கீடு உருவாகி சஞ்சலம் கொள்வீர்கள். சமரச பேச்சுக்களில் கலந்துகொள்வதை தவிர்க்கவும். எதிரிகளிடம் இருந்து விலகுவதால் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம். 

விவசாயிகள்: விவசாயப் பணிகளை நிறைவேற்ற அதிக அளவில் பணம் தேவைப்படும். சுமாரான மகசூல் கிடைத்து சந்தையில் ஓரளவு விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம், குடும்பத்தின் முக்கிய செலவுகளை மேற்கொள்ள உதவும். சொத்து, ஆவணத்தின் பேரில் பணம் கடன் பெறுபவர்கள் நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது.

செல்ல வேண்டிய கோயில்: திருச்செந்தூர் முருகன் கோயில்
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் விலக புதிய வழி பிறக்கும்.

பரிகார பாடல்: வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே!
செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 comments:

கருத்துரையிடுக