- ஒருவருடைய ஜெனன ஜாதகத்தின் ராசிகட்டத்தை கொண்டு அவர் படித்து அவர்டைய அவருடைய தொழில் எந்த துறையில் அமையும் என்பதை கணித்து சொல்லலாம் . அப்படி பார்க்கையில் எந்த ஒரு ஜாதகமாக இருந்தாலும் அவருடைய தொழில் மருத்துவ துறையில் அமைய கேது பகவான் வழி வகுக்கிறார் இந்த கேது பகவானை மருத்துவ கிரகம் என்றும் கூறுவர்.
- ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் ராசி கட்டம் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு உறுப்பையும் குறிக்கிறது. இதில் லக்னத்துக்கு இரண்டாம் இடமும் , பன்னிரெண்டாம் இடமும் மனித உடலில் கண்களை குறிக்கும் இடங்களாகும்.
- அதேபோல் சூரியனும் சந்திரனும் கண்களை குறிக்கும் கிரகங்களாகும். அப்படி பார்க்கையில் மருத்துவ துறையில் கண் மருத்துவர் ஆகும் யோகத்திற்கு முக்கியமாக கவனத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள், கேது பகவான் சூரியன் சந்திரன் . லக்னத்துக்கு இரண்டாம் இடம், இரண்டாம் இடத்து அதிபதி , லக்னத்துக்கு பன்னிரெண்டாம் இடம் , அந்த இடத்து அதிபதி , லக்னத்துக்கு பத்தாம் இடம் பத்தாம் இடத்து அதிபதி , இவர்களை கவனிக்க வேண்டும்.
- கீழ் கண்ட கிரக நிலைகள் ஒருவரை மருத்துவ துறையில் கண் மருத்துவர் ஆக்குவதற்கு வழி வகுக்கும். .
- லக்னத்தில் கேது அமைந்திருக்க வேண்டும்.
- லக்னாதிபதியோடு கேது பகவான் சம்பந்தம் பெற்றிருக்கவேண்டும்..
- பத்தாம் இடத்திலோ , பத்தாம் இடத்து அதிபதி கேது பகவான் சம்பந்த பட்டிருக்க வேண்டும்.
- சூரியன் சந்திரன் இவர்களில் ஒருவரோ அல்லது இரண்டு பெரும் இணைந்தோ பத்தாம் இடம் அல்லது பத்தாம் இடத்து அதிபதி உடனோ தொடர்பு பெற்று இருக்க வேண்டும்..
- இத்தகைய கிரக அமைய பெற்று இருந்தால் கூட முக்கியமாக லக்னாதிபதி மறைவு ஸ்தானங்கள் ஆன ஆறு எட்டு பனிரெண்டு போன்ற மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்.
- இப்படி மேலே கண்ட கிரக நிலைகள் ஒருவரை மருத்துவ துறையில் இவர் ஒரு சிறந்த கண் மருத்துவர் என்ற பெயரை பெற்று தரும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







ஐயா கடகலக்னத்தில் குரு(ஆயில்யம்)+கேது(பூசம்),
பதிலளிநீக்கு5ல் சந்திரன்(அனுஷம்),
6ல் சூரியன் (உத்ராடம்)+புதன் (மூலம்),
7ல் சனி(உத்ராடம்)+ராகு (உத்ராடம்)+சுக்ரன் (திருவோணம்)
11ல் செவ்வாய்(கிருத்திகை)
இந்த மேற்கூறிய அமைப்பிற்கு கண்மருத்துவம் படித்து அதில் வெற்றிகரமாக பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா என கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்