Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 5 ஜனவரி, 2012

பிரதோஷ வழி பாட்டினால் உண்டாகும் பலன்களை சொல்ல முடியுமா? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த சமயத்தில் பல பொருட்கள் வெளிவந்தன. அதில் ஆலகால விழமும் வெளிப்பட்டது. அந்த விஷத்தை கண்டு தேவர்கள் அஞ்சி ஓடினார்கள். அப்பொழுது  தேவர்கள் சிவனிடம் முறையிட சிவ பெருமான் ஆலகால விஷத்தை எடுத்து உண்டார். அப்பொழுது சக்தி சிவனது கழுத்தை பிடித்து  கொள்ள விஷமானது  சிவனது கழுத்தில் நின்று விட்டது. அதனால் சிவனது கழுத்து நீல நிறமானது. எனவே சிவனுக்கு  நீல கண்டர்  என்ற பெயர் வந்தது. பின்னர்தேவர்களின்  வேண்டுகோளின்படி  சிவபெருமான் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நடனமாடினார் .இவ்வாறு  சிவபெருமான் நடனமாடிய காலம் ஒரு சனிக்கிழமை  மாலை பொழுதாகும். அதுவே பிரதோஷ காலமாகும்.எனவே பிரதோஷ காலம் புண்ணிய காலமாக கருதப்படுகிறது. இந்த பிரதோஷ காலத்தில் தவறுகள் நடைபெற  வாய்ப்புண்டு  எனவே பிரதோஷ காலத்தில்  இறை வழிபாடு செய்யவேண்டும்..அதிலும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷமானது. 
சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்திய நாள் சனிக்கிழமை. சனியும் திரயோதசி திதியும் சேர்ந்து வரும் ஒரு நாளில் ஆனந்த  தாண்டவம் ஆடினார். எனவே இது  மகா  பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது . இந்த மகா பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று வழி பட்டால் ஐந்து வருடம் சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும். 
அடுத்ததடுத்து இரண்டு சனி பிரதோஷங்களை  அனுசரித்தால்  அர்த்த நாரி பிரதோஷம் என்று கூறுவார்கள். சிவனும்  சக்தியும் இரண்டற கலந்து   அர்த்த நாரீசுவரராக இருப்பதால் பிரிந்த தம்பதிகள் ஒன்று  சேர்வார்கள். திருமண தடைகள் விலகி திருமணம் கை கூடும். இழந்த செல்வம் திரும்ப கிடைக்கும்.பிரதோஷ நாளன்று கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வந்தால் ஸ்கந்த பிரதோஷம் என்பார்கள். இந்த பிரதோஷத்தில் வணங்கினால் சிவசதியுடன் முருகனின் அருளும் கிடைக்கும்.
Share this article :

0 comments:

கருத்துரையிடுக