மகரம்
(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)
(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வமுடைய மகரராசி அன்பர்களே!
தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வமுடைய மகரராசி அன்பர்களே!
பிரதான கிரகங்களில் ராகு ஆண்டு முழுவதும் அபரிமிதமான நற்பலன்களை தருவார். குருவும் மே மாதம் பெயர்ச்சியாகி உங்கள் வாழ்வு சிறக்க உதவுவார். சனி, கேது கிரகங்களின் அமர்வு பலம் குறைந்த தன்மையில் உள்ளது. உங்கள் திட்டங்களை சமயோசித சிந்தனையுடன் செயல்படுத்துவீர்கள். தகுந்த வெற்றியும் கூடுதல் பணவரவும் கிடைக்கும். இனிய பேச்சு, நல்ல செயல்களால் சமூகத்தில் உயரிய அந்தஸ்து, மரியாதை பெறுவீர்கள். வீடு, வாகன வகையில் மே மாதம் வரை சிரமம் என்றாலும், குருபெயர்ச்சிக்கு பிறகு நிலைமை சீராகும். தாயின் உடல்நலம் சீராக இருக்க தகுந்த மருத்துவ சிகிச்சை உதவும். புத்திரர்கள் கவனக்குறைவான செயல்களால் சில சிரமங்களை எதிர்கொள்வர். அவர்களை கண்டிப்பதிலும் நல்வழி நடத்துவதிலும் இதமான அணுகுமுறையை பின்பற்றுவது நல்லது.
கடுமையாக உழைத்தால் பணவரவு என்கிற நிலைமை இருப்பதால் உடல்நலம் பாதிக்கலாம். உழைப்புக்கேற்ற ஓய்வே இச்சமயத்தில் பாதுகாப்பு தரும். கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் கட்டுப்பாடு அவசியம். கணவன், மனைவி குடும்ப நலன் பாதுகாக்க உதவுகிற மனப்பாங்குடன் செயல்படுவர். மகிழ்ச்சியும் மனநிறைவும் தொடரும். உங்களின் திறமையான செயல்களை பிறருக்கு உணர்த்த நண்பர்கள் இயன்ற அளவில் உதவுவர். மே மாதத்திற்கு பிறகு, குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். வெளியூர் பயணம் உங்களின் நோக்கங்களை நல்ல முறையில் பூர்த்தி செய்யும். மே மாதத்துக்கு பிறகு நட்சத்திரங்கள் ஒன்று கூடியது @பால் வாழ்க்கை ஜொலிக்கும்.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சாரமின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், தோல், காகிதம், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் தொழில் சார்ந்த வகையில் உருவாகிற சில குளறுபடிகளை மாற்று உபாயத்தினால் சரிசெய்வார்கள். இருப்பினும் கடும் உழைப்புள்ளவர்கள் திட்டமிட்ட வளர்ச்சி, ஓரளவு லாபம் பெறுவார்கள். நிர்வாக நடைமுறையில் சிறந்த மாற்றம் செய்வர். மே மாதத்துக்குப் பிறகு குரு ஐந்தாமிடம் வந்ததும், உற்பத்தியும் நல்ல லாபமும் எதிர்பார்க்கலாம். பணியாளர்கள் பொறுப்பாக செயல்படுவர்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால்பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், காகிதம், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திர வியாபாரிகள் மே வரை கடும் போட்டியையும், அதன்பிறகு சுமாரான போட்டியையும் சந்திப்பர். குருவின் நிலை சாதகமாக மாறப் போகிறது என்றாலும், சனியின் நிலையால் கஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. போட்டியை திறம்பட சமாளிப்பதால் மட்டுமே விற்பனை இலக்கை அடைய முடியும். சுமாரான லாபம் இருக்கும். நடைமுறை செலவு கூடும். கடன் வாங்குவதில் தகுந்த பரிசீலனை அவசியம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். நிர்வாகத்தின் கண்டிப்பை தவிர்க்க பொறுப்புடன் செயல்படுவது அவசியம். பணி சார்ந்த திறமையை மேலும் மேலும் வளர்ப்பதால் மட்டுமே இருக்கிற வேலைவாய்ப்பை தக்கவைக்க இயலும். வழக்கமான வருமானம் குறையாது என்றாலும், ஜீவனச்சனி காலம் என்பதால் வேலையில் கவனம் அவசியம். இருப்பினும், ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகை கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடியை எதிர்கொள்வர். நிர்வாகத்தின் கண்டிப்பு மனதைத் தளரச்செய்யும். குடும்பப் பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி, விற்பனை நடைமுறையை பாதுகாத்திடுவர். சராசரி பணவரவும் நிம்மதியான வாழ்க்கை முறையும் இருக்கும்.
மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், விவசாய மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் குறையும். மற்றவர்களுக்கு ஓரளவு மதிப்பெண் கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலை மாணவர்களுக்கும் இதே நிலை தான். ஆண்டிறுதி தேர்வுகள் மே மாதத்திற்குள் வரும் என்பதால் கவனமாகப் படியுங்கள். மே மாதத்துக்கு பிறகு குருவருளால் நிலைமை சீராகும். படிப்புச்செலவு அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களிடம் கூடுதல் நற்பெயர் பெறும் நோக்கத்துடன் செயல்படுவீர்கள். எதிரிகளால் வரும் தொல்லை உங்கள் அரசியல் பணியில் சிறு அளவிலான பின்னடைவை ஏற்படுத்தும். உங்களின் முக்கிய பணிகளுக்கு அதிக நம்பிக்கை உடையவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசு தொடர்பான காரியம் நிறைவேற தாமதமாகும். புத்திரர்களால் அரசியலில் லாபம் இல்லை.
விவசாயிகள்: பயிர் வளர்க்க அதிக பணம் தேவைப்படும். சுமாரான மகசூல், கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் இதே நிலையே. நில விவகாரங்களில் மிதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும்.
குருபெயர்ச்சி : ராசிக்கு 3,12 க்குஅதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் பணியில் மந்தநிலை, உடல்நலக்குறைவு, தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. எந்தச்செயலையும் பொறுமையுடன் அணுக வேண்டியிருக்கும். மே17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் 9,12,1 ஆகிய ஸ்தானங்களில் பதிகின்றன. ஆண்டின் பிற்பகுதியில் குருவால் நற்பலன் உண்டாகும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். பொருளாதார நிலை மேம்படும் விதத்தில் வருமானம் கூடும். ராசியில் குருவின் பார்வை விழுவதால் திருமணயோகம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவர் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல் படுவர். தொழிலை நவீனப்படுத்தும் முயற்சி வெற்றி பெறும்.
ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு பதினோராம் வீடான விருச்சிகத்தில் ராகு இருப்பதால், திடீர் வாய்ப்பால் வருமானம் அதிகரிக்கும். கல்வி, தொழில் முயற்சிக்காக வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. மே 17ல் ரிஷபகுருவால், ராகுவால் உண்டாகும் நன்மை மேலும் அதிகரிக்கும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு பத்தாம் வீடான துலாமிற்கு பிரவேசிக்கிறார். கேது ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அனுகூலமற்று இருக்கிறார். இதனால், அவ்வப்போது உடலில் அசவுகர்யம் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதகுணத்தால் கோபம் உண்டாகும். எதிரிகளால் தொல்லை ஏற்படவும் வாய்ப்புண்டு. குருவின் ரிஷப மாறுதலால், கேதுவின் கெடுபலன் பெருமளவில் குறையும். ஆண்டின் இறுதியில் கேது நான்காம் இடமான மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.
பரிகாரம் : லட்சுமிநரசிம்மரை வழிபடுவதால் தொழில் சிறந்து ஆதாய பணவரவு கிடைக்கும்.
0 comments:
கருத்துரையிடுக