Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 22 பிப்ரவரி, 2025

செய்வினை பில்லி சூனியம் ஏவல் உங்கள் வீட்டில் இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர்.இராவணன் BSC

0 கருத்துகள்

                          

நம் வீட்டில் செய்வினைக் கொளாறு, ஏவல், பில்லி, சூனியம் போன்ற பிராச்சனைகள் இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் எல்லா வழிகளிலும் கெட்டு, அழிந்து போகவேண்டும் என்பதற்காக வேறு நபர்களால் செய்வினை, பில்லி, சூனியம் போன்றவைகள் செய்யப்படுகின்றன

இதுபோன்ற செய்வினைகள் செய்யப்பட்டால், அந்த குறிப்பிட்ட நபருக்கோ, அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ சிறியது முதல் பெரிய தீங்கு வரை ஏற்படக்கூடும்.

நம் வீட்டில் எந்த வகை செய்வினைக் கோளாறுகள் இருக்கின்றன என்பதை சில அறிகுறிகள் மூலமே உணர முடியும்

நிலை வாசல் நிலை வாசல் கதவில், வீட்டின் குடும்பத் தலைவருக்கு கட்டை விரல் அடிக்கடி அடிபட நேர்ந்தால், அதன் மூலம் குல தெய்வம் உங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல முற்படுகிறது என்கிறார்கள் ஜோதிடர்கள். குல தெய்வத்தின் அனுக்கிரகம் உள்ள இடம் நிலை வாசல். நிலை வாசல் அமையும் இடம் நமக்கு கெடுதல் எதுவும் நிகழாத வகையில் வாஸ்து முறைப்படி அமைக்கப்படுவதே வழக்கம்.


குலதெய்வம் தரும் சமிக்ஞை நிலை வாசல் படி, கதவில் குடும்பத் தலைவருக்கு கட்டை விரலில் காயம் பட நேர்ந்தால், அதன் மூலம் நமக்கு ஏற்படும் கெடுதலில் இருந்து காத்துக்கொள்ள குல தெய்வம் தரும் சமிக்ஞை  

அடிக்கடி ஏற்பட்டால், செய்வினைகளுக்கு எதிராக குல தெய்வம் வீட்டைக் காத்துக் கொண்டிருக்கிறது என அர்த்தம். ஜோதிடர்களை அணுகி உரிய முறையில் பரிகாரம் செய்து செய்வினையை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பல்லி, காகம் முன்னோர்களின் நம்பிக்கையின்படி பல்லி, காகம் இரண்டுமே இறை சக்தி மிக்கவை. பல்லிகளின் சத்தம், காகம் கரைவது ஆகியவையும் ஜோதிடத்தில் முக்கியமான அறிகுறிகளாக கருதப்படுகின்றன. நம் வீட்டில் பல்லி நடமாட்டமே இல்லை என்றால் அந்த வீட்டில் கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்தி இருப்பதாக அர்த்தம். அதேபோல, வீட்டுப் பக்கம் காகமே வராமல் இருப்பதும் சில அபசகுணம் எனக் கூறப்படுகிறது.

செடி பட்டுப்போகும் 

வீடுகளில் அதுவரை செழிப்பாக வளர்ந்து வந்த துளசிச்செடி, வேப்பஞ்செடி திடீரென பட்டுப்போகுதலும், தீய சகுனங்களுக்கான அறிகுறி என்கிறார்கள். நீங்கள் கவனித்துப் பார்த்தால், அந்தச் செடி பட்டுப்போனதில் இருந்து, வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்கத் தொடங்கியிருக்கும். ஆசையாக வளர்க்கும் செடி திடீரென பட்டுப்போவது இதுபோன்ற ஏவல், பில்லி, சூனியத்தின் அறிகுறி.

செல்லப் பிராணிகள் 

திடீரென நம் வீட்டில் பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உயிரிழக்கும். சில நேரங்களில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம். நமக்கு இருக்கும் செய்வினைக் கோளாறுகள், வளர்ப்புப் பிராணிகளை தாக்கும் என்ற நம்பிக்கை ஜோதிடத்தில் உண்டு. குடும்ப உறுப்பினர் பெரிய விபத்தில் இருந்து தப்பி, வளர்ப்புப் பிராணி பலியாகும் சூழல்களும் ஏற்படும். வளர்ப்புப் பிராணி உயிரிழப்பது கெட்ட சகுனம் தான், செய்வினைக் கோளாறு இருக்கிறதா எனச் சோதிக்க வேண்டும்
கோவிலுக்கு செல்ல தடை 

சில நேரங்களில், நாம் மாதக் கணக்காக குல தெய்வம் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டு வந்து வந்தும், சில தடங்கல்களால் போக முடியாத நிலை ஏற்படும். திட்டமிட்டிருக்கும் நேரத்தில் வேறு ஏதாவது தடை வந்து செல்ல முடியாமல் போகும். இப்படி அடிக்கடி ஏற்பட்டு குல தெய்வம் கோவிலுக்குச் செல்வது தாமதமாவதற்கு செய்வினைக் கோளாறு காரணமாக இருக்கலாம் 

தீய சக்தி ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு திடீரென கடும் உடல் சோர்வு ஏற்படும். முகம் பொலிவிழந்து பசி ஏற்படாமல் உடல் நலம் குன்றிப்போகும். மாத்திரை, மருந்துகள் எடுத்தாலும் முன்னேற்றம் இருக்காது. இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் அவர்களின் உடலில் கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருப்பதாக அர்த்தம்.

கனவு கனவில் வரும் நிகழ்வுகளும் நம் வீட்டில் செய்வினைக் கோளாறு இருக்கிறதா என்பதை உணர்த்தும். உங்கள் கனவில் வீட்டு நிலை வாசலிலோ, வீட்டிற்குள்ளோ காளை மாடு வருவது போல கனவு வந்தாலும் செய்வினைக் கோளாறு இருப்பதாக அர்த்தம். சாம்பிராணி வாசமற்றுப் போவதும் நம் வீட்டில் ஏதோ தீய சதியின் ஆதிக்கம் இருப்பதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது.

என்ன செய்யவேண்டும் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனமுருகி வேண்டி பிரார்த்தனைகள் செய்வது பலன் தரும். கோவிலில் எலுமிச்சை வைத்து அபிஷேகம் செய்து அதனை வீட்டு நிலை வாசலுக்கு மேலே கட்டித் தொங்கவிடலாம். இதன்மூலம், தீய சக்திகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும் 

பரிகாரம் அப்படியும் பிரச்சனை தீரவில்லை என்றால், யோசிக்கலாமல் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குல தெய்வம் கோவிலுக்குச் சென்று, அந்த முறைப்படி பொங்கல் வைத்தோ, பூஜை செய்தோ வேண்டி வந்தால் தீய சக்திகள் ஆவியாகப் பறந்து நிம்மதி கிடைக்கும், நம்பிக்கைக்குரிய ஜோதிடர்களை நாடி பரிகாரம் செய்தாலும் உடனடி பலன் கிடைக்கும் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்ஸ் அப் எண் 
9384372941
7604917240

Continue reading >>

செவ்வாய் தோஷம் எதனால் ஏற்படுகிறது ? செவ்வாய் தோஷம் என்பது எதுவரை ? செவ்வாய் தோஷத்தை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்

                                   

பிறக்கும்போது ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

பூர்வ ஜன்ம வினைகளும், பாவங்களும் தோஷங்களாக மாறுகின்றன என்கின்றன ஞானநூல்கள். 

அந்த வகையில் பூர்வ ஜன்மத்தில் பெற்றோரை சரியாகக் கவனிக்காதவர், முதிய வயதில் அவர்களை முறையாகப் பராமரிக்காதவர்களுக்கு , மறுஜன்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவர் என்கின்றன  ஜோதிட நூல்கள். 

அதேபோல், சகோதர- சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும் போதும், ஒரு நிலத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும், அந்த நபரை பூமிகாரகனான செவ்வாயின் கோபம் செவ்வாய்  தோஷமாக தாக்குகிறது.

பிறக்கும்போது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். இதை சந்திரன் இருக்கும் இடத்திலிருந்தும் சுக்கிரன் இருக்கும் இடத்திலிருந்தும் பார்க்கவேண்டும் . இந்த மூன்று நிலைகளிலும்  செவ்வாய் இருந்தால்தோஷம்  கடுமையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் .  


2-ல் செவ்வாய் இருப்பது 

தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாக திகழ்வது இரண்டாவது இடம். இதில் செவ்வாய் இருப்பது வாழ்க்கை துணைவருக்கு ஆபத்தை தரும் பணக்கஷ்டம் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும் . 


4-ல் செவ்வாய் இருப்பது 


கணவனின்  தொழில் தாயின் உறவு நிலையில் பாதிப்பு . தாயின் உடல் நலம் இவைகளில்  . பாதிப்பை ஏற்படுத்தும் . 


7-ல் செவ்வாய் இருப்பது 


வாழ்க்கைத் துணையுடன் ஏட்டிக்குப் போட்டியாகவே பேசிக் கொண்டிருப்பார். இவர்களுக்கு, 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகக்காரர்களையே மணம் செய்து வைப்பது நல்லது. இவர்கள் வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்ப்பது நல்லது.


8-ல் செவ்வாய் இருப்பது 


ஆயுளில் குறையை ஏற்படுத்தும் . 


12-ல் செவ்வாய் இருப்பது 


நிம்மதியான தூக்கம் இருக்காது. தாம்பத்ய சுகத் தை பாதிக்கும் . 


செவ்வாய் தோஷ நிலைகளில் விதிவிலக்கு உண்டா?


ஜாதகத்தில் மேற்சொன்ன இடங்களில் செவ்வாய் இருக்கிறார் என்று மேலோட்டமாகப் பார்த்துவிட்டு முடிவுக்கு வரக்கூடாது. மற்ற கிரகங்களில் நிலைகளையும் கவனிக்கவேண்டும்.


செவ்வாய் தோஷம் சில தருணங்களில் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.


செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பது தான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்சனைகள்  எழாது.


அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள நிலம் உடன் பிறப்புகள் சம்பந்தப்பட்ட  விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.


முடிந்தவரையிலும் ரத்த தானம் செய்யுங்கள். இப்படி ரத்த தானம் செய்வது செவ்வாய் தோஷ கெட்ட பலன்களை 99 குறைத்து விடும் விபத்தில் சிக்கியவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.


பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகள் பெற்றோரின் மனத்தாங்கலுக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செவ்வாயை வீட்டு மனைக்காரன் என்பார்கள் . முதன் முதலாக வாங்கும் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டப்பட்ட கட்டடமாக வாங்குவது சிறப்பு.


ஊர்க் காவல் முதல் போலீஸ் ராணுவம் வரையிலும் காவல் பணியை ஆட்டுவிப்பது செவ்வாய்தான். எனவே, ராணுவம், போலீஸ் என காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும், உதவி செய்வதும் செவ்வாய்  தோஷ வீரியத்தை குறைக்கும் பரிகாரங்களாகும் . 


ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாற்றி வழிபடுவது செவ்வாய் தோஷ வீரியத்தை குறைக்கும் மேலான பரிகாரமாகும் . ..


வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள். அதற்க்கு தினமும் தண்ணீர் ஊற்றுங்கள் 


எல்லாவற்றுக்கும் மேலாக அனுதினமும் முருகப்பெருமானை வழிபட, அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்க்கை வளமுறும் . 


செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செம்பு மோதிரம் அணிந்துகொள்வது செவ்வாய் தோஷம் வீரியம் குறைந்து நல்ல பலன்கள் உண்டாகும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்ஸ் அப் எண் 
9384372941
7604917240

Continue reading >>
0 கருத்துகள்

 




Continue reading >>
0 கருத்துகள்

 











Continue reading >>

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய அதிர்ஷ்டமான திருமண தேதியை தேர்ந்தெடுங்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்

                         

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அனைத்து வித பொருத்தங்களும் இருந்து  பெரியவர்கள் முடிவு செய்து நடத்தி வைக்கும் திருமணங்கள் கூட எதாவது ஒரு காரணத்தால்   தடை பட்டு போவதும் - சகல விதமான திருமண பொருத்தங்கள் இருந்தும் அந்த தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் - பிரிவினை - விவாகரத்து - குழந்தை பாக்கியம் இல்லாமை - கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு- போன்ற நிகழ்வுகள் நடப்பதை  நாம் கண் கூடாக காண்கிறோம் . 

ஜோதிடர்கள் இந்த நாள் திருமணத்திற்கு ஏற்ற நாள் என்று ஒரு சில தேதிகளை தேர்வு செய்து இந்த தேதியில் திருமணத்தை நடத்துங்கள் என்று சொல்லி விடுவார்கள். 

அப்படி அந்த தேதியில் அந்த திருமணம் நடந்து இருந்தாலும் கூட  வாழ்க்கையில் பிரகாசமான குடும்ப சூழ்நிலைகள் அமையாமல் கஷ்டப்படுவதை காண்கிறோம் . 

பொதுவாக திருமண தேதிகள்  4 - 7 - 8-  இந்த தேதிகளிலும் அந்த தேதிகளின் கூட்டு எண்கள் 4 - 7 - 8 - ம் எண்கள் வரும் நாட்களிலும் திருமணம் செய்யகூடாது என்பது நியுமராலஜி பார்க்கும் ஜோதிடர்களின் கருத்தாகும் .


ராகுவை குறிக்க கூடிய 
 4 ம் எண்ணும் - கேதுவை குறிக்க கூடிய   7 ம் எண்ணும் கருநாகம் - செந்நாகம் - என்று அழைக்கபடுகிறது . புராண காலத்தில் 4 என்ற ராகுவும் - 7 என்ற கேதுவும் தேவர்கள் பாற்கடலை கடைந்தபொழுது அதில் உண்டான அமிர்தத்தை திருட்டு தனமாக பருக தேவர்களால் தலை துண்டிக்கப்பட்டவர்கள் ஆதலால் இந்த இரு எண்களும் தோஷம் கொண்ட எண்களாக கருதபடுகிறது .

ஆகவே  4- ம் எண்ணும் - 7 ம் - ம் எண்ணும்  வரும் நாட்களில் திருமணத்தை நடத்தி வைத்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது . 

அடுத்து 8 ம் எண் . இது  சனி பகவானின் ஆதிக்க எண்ணாகும் . கைக்கு எட்டாத ஒரு பொருளை எட்டி பிடித்து கடைசியில் அந்த பொருளே கிடைக்காமல் போக செய்வதுதான் இந்த எட்டாம் எண்ணின் குணம் .வாழ்க்கையில்  கடைசி வரை போராடி கொண்டே இருக்கும் பலனை தருவதுதான் இந்த 8 ம் எண்

ஆதலால் இந்த எண்ணின் ஆதிக்க  தேதியில் திருமணம் நடந்தால் அவர்களின் குடும்ப வாழ்க்கை பிரகாசம் அடைவதில்லை . ஒரு சில எண் கணித ஜோதிடர்கள் 2 ம் எண் வரும் தேதியில் திருமணத்தை தவிர்த்து விட வேண்டும் என்பது அவர்களின் கருத்து.காரணம் 2 ம் எண்ணை குறிக்க கூடிய சந்திரன் 15 நாள் வளர் பிறை ஆவதும் - 15 நாள் தேய்பிறை ஆவதும் - போல அவர்களின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாக அமையும் என்பதால்தான் .
திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஆணோ பெண்ணோ அல்லது இருவருமோ வளர்பிறையில் பிறந்து இருந்தால் 2 ம் ஆதிக்க தேதியில் (அதாவது 2 - 11 - 20 -தேதிகளிலும் - கூட்டு எண் 2 க வரும் நாள்களிலும் ) திருமணம் செய்து கொண்டால் அவர்களின் திருமண வாழ்க்கை பௌர்ணமி போல் பிரகாசமாக நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் . இதில் 29 ம் தேதியை தவிர்த்து விடவேண்டும் . 

காரணம் 2 ம் எண்ணை குறிக்க கூடிய சந்திரன் மனத்தை ஆள்பவன். 9 ம் எண்ணை குறிக்க கூடிய செவ்வாய் ஆக்ரோஷ எண்ணத்தை கொண்டவன் . இந்த 29 ம் தேதியில் திருமணம் செய்தால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டு பிரிவினை ஏற்படலாம். 
உலகமே வியக்கும் வண்ணம் நடந்த இளவரசி டயானா - இளவரசர் சார்லஸ் இருவருக்கும்  திருமணம் நடந்தது    29 - 7 - 1981  அன்றுதான் . 

ஆனால் இந்த தம்பதியர்களின் சந்தோஷமான திருமண வாழ்க்கை 15 ஆண்டுகள் மட்டுமே நீடித்து விவாகரத்தில் முடிந்தது . 2 ம் எண்ணை குறிக்க கூடிய சந்திரன் வீட்டில் 9 - ம்  எண்ணை குறிக்க கூடிய செவ்வாய் நீசம் அடைந்து பலன் தராமல் போவதும் . 9 - ம்  எண்ணை குறிக்ககூடிய செவ்வாயின் வீட்டில் 2 ம் - எண்ணை சந்திரன் நீசம் அடைந்து பலன் தராமல் போவதும் ஜோதிடம் அறிந்தவர்கள் அறிவார்கள். 

ஆதலால் இந்த 29 ம் தேதியில் திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை சிறக்காமல் போகும்.   

அதேபோல் திருமண தேதி - திருமண தேதியின் கூட்டு எண்  இரண்டும் சிறப்பாக அமைந்திருந்தும் திருமண வாழ்க்கை சிறக்காமல் போவதும் உண்டு. இதற்க்கு காரணம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட திருமண தேதியின் ஹீப்ரு எண் நன்றாக அமையா விட்டாலும் பிரச்சனைதான் . என்னுடைய ஜோதிட அனுபவத்தில் திருமண தேதி - திருமண தேதியின் கூட்டு எண் - இரண்டும் அதிர்ஷ்டமான எண்ணில் அமைந்து திருமணம் செய்து கொண்ட தம்பதியர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒத்து வராத காரணத்தால் விவாகரத்து வரை சென்று விட்டார்கள் . 

அவர்களின் திருமண தேதிகளை அலசி ஆராய்ந்த பொழுது திருமண தேதியின் ஹீப்ரு எண் 26  ஆகும். DIVERCE என்ற சொல்லின் மொத்த கூட்டு தொகை 26 என்று வருகிறதே? அப்புறம் விவாகரத்து நடக்காமல் நல்ல பலன்களா? நடக்கும் . 

மேலும் ஒரு தம்பதியரின் திருமணம் செய்து கொண்ட திருமண தேதி - திருமண தேதியின் கூட்டு எண் - சிறப்பாக அமைத்திருந்தும் - கணவன் மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்கிறார்கள். 

அவர்கள் திருமணம் செய்து கொண்ட தேதியின் ஹீப்ரு எண்ணை ஆராய்ந்த பொழுது அவர்கள் திருமணம் செய்து கொண்ட  தேதியின் ஹீப்ரு எண் 13. 

FAIL அதாவது தோல்வி என்ற சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை 13 க தானே வருகிறது அதனால் அவர்களின் திருமண வாழ்க்கையும் தோல்வியில் முடிந்து விட்டது .
அதேபோல் திருமண தேதியில் 18 ம் தேதி மிகவும் வாழ்க்கையில் மிகவும் மோசமான பலன்களை தரக்கூடிய ஒரு தேதியாகும். பாரத போர் 18 நாட்கள் நடைபெற்றதும் - சிலுவையில் ரத்தம் சிந்தி இறந்த CHRIST (கிறிஸ்து ) என்ற பெயரின் கூட்டு எண்ணிக்கை 18 க வருவதும் . 

இன்றும் கலவர பூமியாக ரத்த பூமியாக விளங்கும் இந்தியாவின்  KASHMIR (காஷ்மீர் மாநிலம் ) என்ற பெயரின் கூட்டு எண்ணிக்கை 18 வருவதும் . இன கலவர பூமியாக இருந்து உயிருக்கு உத்திரவாதம் தரமுடியாமல் திகிலுடன் வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கும் நாடான   SRILANKA (இலங்கை )   என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை 18 க வருவதை நாம் காணும்பொழுது இந்த 18 ம் தேதியில் திருமணம் செய்து கொண்டால் அந்த தம்பதியர்களின் வாழ்க்கையே கலவர பூமிதான் .


ஜோதிட ரீதியாக அனைத்து ஒரு ஆணுக்கும் - பெண்ணுக்கும் அனைத்து வித பொருத்தங்களும் இருந்து கோடி கணக்கில் - லட்ச கணக்கில் செலவு செய்து வைக்கும் திருமணங்கள் கூட பிரகாசிக்க முடியாமல் போவதும் உண்டு. இதற்க்கு காரணம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட திருமண தேதி - திருமண தேதியின் கூட்டு எண் - முக்கியமாக திருமண தேதியின் ஹீப்ரு எண் இவைகள் கெட்ட பலனை தரும் கிரகங்களின் ஆதிக்க எண்ணில் அமைந்து இருந்தால் அவர்களின் குடும்ப வாழ்க்கையே சூன்யம்தான் .

திருமண வாழ்க்கை சிறபபாகவும் சந்தோஷமாகவும் அமைய நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருமண தேதியில்தான் இருக்கிறது . அதிர்ஷ்ட திருமண தேதியை தேர்ந்தெடுத்து ஆனந்தமயமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்ஸ் அப் எண் 
9384372941
7604917240
Continue reading >>