ஓம் சிவ சக்தி
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 2- 4- 7- 8- 12- போன்ற இடங்களில் செவ்வாய் பகவான் இருப்பது இரண்டே கால் பங்கு செவ்வாய் தோஷமாகும்
செவ்வாய் பகவான் சந்திரனுக்கு 2- 4- 7- 8- 12- ல் இருப்பது ஒன்றே கால் பங்கு செவ்வாய் தோஷம் இருப்பதை குறிக்கும்.
செவ்வாய் பகவான் சுக்கிரனுக்கு 2- 4- 7- 8- 12- ல் இருந்தாலும் ஒன்றே கால் பங்கு செவ்வாய் தோஷம் இருப்பதை குறிக்கும் நிலையை குறிப்பதாகும்.
ஆண் பெண் ஜாதகங்களில் செவ்வாய் தோஷத்தை கணக்கிட்டு பெண் ஜாதகத்தில் ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷத்தை விட கால் பங்கு முதல் அரை பங்கு வரை கூடுதலாக இருப்பது செவ்வாய் தோஷம் அந்த அளவுக்கு பாதிப்பை தராது .
செவ்வாய் பகவான் லக்னத்திற்கு 2 ம் இடத்தில் இருப்பது அந்த இரண்டாம் இடம் 7 ம் பாவத்திற்கு எட்டாம் பாவமாக அமைவதால் கணவர் அல்லது மனைவிக்கு ஆபத்தை தரும் . பணகஷ்டம் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும் .
லக்னத்திற்கு நான்காம் பாவம் என்பது சுகத்தை தரும் இடமாகும் இந்த நான்காம் இடத்தில் செவ்வாய் இருப்பது சுகத்தை கெடுத்துவிடும் . அதனால் குடும்பத்தில் சுகம் பெற இயலாத நிலை ஏற்படும்.
லக்னத்திற்கு ஏழாம் பாவம் என்பது வாழ்க்கையில் ஏற்படும் ஒப்பந்தம் , மனைவி இருவரது மனநிலையும் ஒற்றுமையாக அமைவது , விட்டு கொடுத்து போகும் தன்மையை தருவது , உடல் நிலை, மன நிலை, ஒழுக்கம் இவைகளை தரும் பாவமாகும் , இதில் பாவகிரகமான செவ்வாய் இருப்பது அந்த பாவபலன் பாதிக்க படும் சூழ் நிலையை குறிப்பதாகும்
லக்னத்திற்கு எட்டாம் பாவம் என்பது ஆயுளை குறிக்கும் இடமாகும். பெண்களுக்கு கணவனின் ஆயுள் பலத்தை , அறியக்கூடிய பாவமாகும். அதாவது மாங்கல்ய ஸ்தானமாகும். இந்த இடத்தில் செவ்வாய் இருப்பது . தீமையான பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
அடுத்து லக்னத்துக்கு பன்னிரெண்டாம் இடம் என்பது தாம்பத்திய உறவு , படுக்கை சுகம், குறிக்கும் இடமாகும். இந்த இடத்தில் இயற்கையில் பாவியான செவ்வாய் பகவான் இருப்பது அந்த பாவ பலன் பாதிக்கபடும் சூழ்நிலையை குறிப்பதாகும்.
மேலே கண்ட லக்னத்திற்கு 2- 4- 7- 8- 12- போன்ற இடங்களில் செவ்வாய் இறந்து செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தினாலும் இந்த இடங்களை சுப கிரகங்கள் பார்த்தாலும் , சுப கிரகங்கள் இந்த இடத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்தாது.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.