Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

டைட்டானிக் கப்பலின் சோக முடிவும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

                                                                  தாயே பூமாதேவி 


உலகின் முதல் சொகுசு கப்பல் டைட்டானிக் என்ற கப்பல் எந்த ஒரு இயற்கை சீற்றத்தினாலும் பாதிக்கபடாது, கடவுளால் கூட இந்த கப்பலை எதுவும் செய்து விட முடியாது என்று கருதப்பட்ட அந்த கப்பல் கடலில் பெரும் பனிப்பாறையில் மோதி பெரும் விபத்துக்கு  உள்ளாகி ஏப்ரல் 15 2012 அன்றோடு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது உலகத்தையே சோகத்துக்கு உள்ளாக்கி கப்பலில் பயணம் செய்த 1514 உயிர்களை பலி வாங்கிய இந்த கப்பல் எப்படி விபத்துக்கு உள்ளானது என்பது பற்றி பல கேள்வி குறிகள் உலக மக்களிடையே எழுந்தது. 


கப்பலை உருவாக்கிய தொழில் நுட்ப வல்லுனர்கள் மத்தியில் இந்த டைடானிக் கப்பல் கவிழ்ந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது . பலதரப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி கப்பலின் தரத்தை சோதித்து பார்த்த பிறகு இந்த கப்பல் எந்த ஒரு விபத்துக்கும் ஆளாகாது என்று உத்திரவாதம் அளிக்கப்பட்ட பிறகே இந்த சொகுசு கப்பல் தனது ஆடம்பரமான பயணத்தை தொடங்கியது. ஆனால் விதியின் விளையாட்டு காரணமாக இந்த கப்பல் தனது  சோகமான முடிவை தேடிகொண்டது.


எதனால் என பல ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான கருத்துகளை சொல்லிக்கொண்டுதான் உள்ளார்கள் . ஆனால் இந்த டைட்டானிக் கப்பல் விபத்துக்கு உள்ளானதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்  என்பதை ஜோதிட ரீதியாக    ஆராய்ச்சி செய்ய தொடங்கினேன் . ஆராய்ச்சியின் முடிவில்  அந்த கப்பலின் பெயர் அமைப்பும் அந்த கப்பலின் கட்டுமான பனி தொடங்கிய தேதியும், அந்த கப்பல் தனது பயணத்தை தொடங்கிய தேதியும்  மோசமான விளைவுகளையும் , மரணத்தையும் தரக்கூடிய தேதியின் கூட்டு எண்களாக அமைந்ததே அந்த கப்பலின் சோக முடிவுக்கு ஒரு காரணம் என் எனது ஜோதிட ஆராய்ச்சி பார்வையில் தெரிந்தது .  அந்த ஜோதிட விளக்கத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் .  



நியுமராலஜி  படி  அதாவது எண் கணித ஜோதிடப்படி TITANIC என்ற கப்பல் பெயரின் மொத்த கூட்டு எண் 19 என்றுதானே வருகிறது. இந்த 19 எண்ணிற்கு சிறப்பான பலன்கள் தானே சொல்ல பட்டிருக்கிறது. இந்த கப்பல் விபத்திற்கு டைட்டானிக்  என்ற பெயர் எப்படி காரணமாக முடியும் என்ற ஒரு விதமான சந்தேகம் அனைவருக்கும் எழும் .  ஆனால் இந்த கப்பலின் பெயர் டைட்டானிக் என்றுதான் அனைவருக்கும் தெரியும். 


ஆனால் இந்த கப்பலின் முழு பெயர் RMS TITANIC . இந்த நியூமராலஜி படி இதன் கூட்டு எண்  28 . இந்த இருபத்தி எட்டாம் எண் மனித சக்திக்கு அப்பாலுள்ள எண்ணாகும். இந்த எண் ஜனன மரண அடிப்படையை உணர்த்தும் எண்ணாகவும் கருதப்படுகிறது. இந்த 28 ம் எண் ராசி கட்டத்தில் நீர் ராசியான கடக ராசியில் வரும் எண்ணாக   வருவதால் என்னவோ கடலுக்கு மத்தியில் பெரும் கூட்டு மரணத்தை இந்த 28 ம் எண் நிகழ்த்தி காட்டி இருக்கிறது.  


இந்த இருபத்தி எட்டாம் எண் ஒரு மனிதனின் பெயரின் கூட்டு எண்ணாக வரும்பொழுது பெரிய அந்தஸ்து பணம் பதவி ஆகியவற்றை தந்து பிற்பகுதியில் அனைத்தையும் பிடுங்கிகொள்ளும் தன்மையை கொள்ளும் தன்மையை கொண்டது இந்த எண் என்றாலும் டைட்டானிக் கப்பல் விஷயத்திலும் ஆரம்பத்தில் ஒரு மகிழ்ச்சியான சூழ் நிலையை கொடுத்து பின் அந்த  மகிழ்ச்சிக்கு முற்று புள்ளி வைத்து மரணத்தையே அந்த கப்பலுக்கு பரிசாக தந்து விட்டது .

மேலும் இந்த டைட்டானிக் கப்பலின் இந்த சோக முடிவுக்கு அந்த கப்பலின் பெயரின் நியூமரலாஜி கூட்டு எண் ஒரு பக்கம் என்றாலும் RMS TITANIC என்ற பெயரின் பிரமிடு கூட்டு எண்ணான 38 ம் எண்.

3  8     -    ஹீப்ரு பிரமிடு எண் 
4  8   9 
2  2   6   3 
2  9   2   4  8 
8  3   6   5  8  9 
9  8   4   2  3 5   4 
4  5   3   1  1 2   3  1
6  7   7   5  5 5   6  6  4
2  4   3  4  1 4   1   5  1  3
R  M  S  T  I  T  A  N  I  C   (  RMS டைட்டானிக்  ) 


அந்த கப்பலின் விபத்துக்கு மற்றொரு காரணமாக அமைந்து விட்டது . இந்த 38 ம் எண் ஒரு நபரின் பெயரில் வரும்பொழுது படிப்படியாக செல்வமும் புகழும் அதிகரிக்கும் . ஆனால் எதிர்பாராத ஆபத்துக்களும் உண்டாகும். வாழ்க்கையின் முடிவும் எதிர்பாராத வகையில் சம்பவமாகவே இருக்கும் என்று சொல்லப்பட்ட பலனுகேற்ப   கப்பல் கவிழ்ந்து 1514 உயிர்களை பலி வாங்கிய  சோக முடிவும் யாருமே எதிர்பாராத ஒரு திடுக்கிடும் சம்பவமாகவே நிகழ்ந்தது .


ந்த ஒரு செயலை தொடங்கி அந்த செயல் கடைசி வரை நிலையான நல்ல பலனை தர அந்த செயல் ஆரம்பிக்கும் தேதி , அந்த தேதியின் கூட்டு எண் அந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அனைத்துமே சிறப்பாக அமைந்து விட்டால் அந்த செயல் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்சிகளும் சிறப்பாகவே நல்ல பலனாகவே அமையும் .

அந்த வகையில் இந்த டைடானிக் கப்பலின் கட்டுமான பணி ஆரம்பிக்கபட்ட நாள்  31- 3- 1909  ஆகும் . இந்த 31ம் எண்ணிற்கு பலன்கள் எதிர்பாராத நிகழ்ச்சி களாலும் திடீர் முடிவுகளாலும் பாதிக்க படலாம் என்று நியூமரலாஜியில் (எண் கணித சோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது ) 

இந்த 31 ம்  எண் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாகும் . அரசனை போல் வாழ்வு உண்டாகும் .ஆனால் எதையும் அனுபவிக்க முடியாமல் விதி சதி செய்யும், இதற்க்கு உதாரணம் உலகத்தையே தன் வசதிற்கு கொண்டு வந்த மாவீரன் அலெக்சாண்டர் பெயரை எடுத்து கொள்வோம். ALEXANDER இந்த பெயரின் கூட்டு எண் 31 ஆக அமைந்து இருந்தது , ஆனால் உலகத்தையே தன் வசப்படுத்தி தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டர் எதையும் சரியாக ஆண்டு அனுபவிக்காமல்  தன்னுடைய 31 வயதில் இறந்தான் என்று  தெரிந்து கொள்வதன் மூலம் இந்த எண்ணின் குணத்தை நாம் தெரிந்து கொள்ளலாம் . 

அதேபோல் இந்த தேதியின் கூட்டு எண்ணை  மிகவும் கவனத்துடன் நாம் பார்த்தால் விபரீதம் புரியும் இந்த தேதியின் மொத்த கூட்டு எண்  26 ஆக வருகிறது . இந்த கப்பலின் கட்டுமான பணி தொடங்கியபோதே இந்த கப்பல் எப்படியும் விபத்துக்கு உள்ளாக போகிறது என்பதை இந்த 26 ம் எண்  சுட்டி காட்டுகிறது . விபத்து என்ற அர்த்தத்தை கொடுக்கும் ACCIDENT என்ற சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை இந்த 26 ம்  எண்ணில் வரும் என்பதை உங்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன் . 

                         
A C C I D E N T :

A =  1 
C =  3
C =  3
I =   1
D =  4
E =   5
N =  5
T =   4 
________ 
       26
________ 

  
மேலும் இந்த 26 எண்ணுக்கு  எண் கணித ஜோதிடத்தில் இந்த எண்ணிற்கு சிறப்பான பலன்களே கிடையாது . மிகவும் பழமையான நூல்களில் சகலமும் பிரளயத்தில் மூழ்குவது பற்றி இந்த 26 ம் எண்ணிற்கு பலன்களாக சொல்லப்பட்டுள்ளது .

அதே போல் இந்த கப்பலின் கட்டுமான பணி  தொடங்கிய தேதி 31 - 3 - 1909 இதன் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 38


3 8       -   ஹீப்ரு பிரமிடு எண் 
2  1  7   
7  4   6   1 
8  8   5   1  9 
4  4   4   1  9  9
3  1   3   1  9  0  9


கப்பலின் கட்டுமான பணி தொடங்கிய தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 38 ஆகவும் RMS TITANIC ன்ற கப்பல் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் 38 ஆக வருவதை பார்க்கும்பொழுது இந்த கப்பலின் அழிவு அதன் கட்டுமான பணி ஆரம்பிக்கும்பொழுதே தீர்மானிக்கப்பட்டு விட்டது . 


இந்த விபரீத எண்கள்  கப்பலின் விபத்துக்கு வித்திட்டது என்றாலும் . இந்த ஆடம்பரமான கப்பல் தனது ஆடம்பரமான பயணத்தை 10- 4- 1912 அன்று தொடங்கியது . ஒரு மனிதனின் பெயரில் பெயரின் பிரமிடு கூட்டு எண் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்  ஆதிக்கத்தில் வந்தால் அவனுக்கு ஆயுளில் குறைபாடு உண்டாகும் என்ற விளக்கத்தை  நடிகர் முரளியின் மரணத்திற்கு அவரின் பெயர் அமைப்பே காரணம் என்ற தலைப்பை உடைய என்னுடைய ஜோதிட கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளேன். இந்த கப்பல் தனது பயணத்தை தொடங்கிய தேதியின் பிரமிடு கூட்டு என் 71 ஆக சனி  பகவானின் ஆதிக்க எண்ணில் வந்ததால் அந்த கப்பலுக்கு ஆயுள் குறைவை ஏற்படுத்தி அதன்  அழிவுக்கு வழி செய்துவிட்டது .  

7  1    =  8   -   ஹீப்ரு பிரமிடு எண் 
2  5  5 
5  6  8  6 
5  9  6  2 4 
1  4  5  1  1  3 
1  0  4  1  9  1  2 


ஆக இந்த டைட்டானிக்  சம்பந்தப்பட்ட அனைத்து எண்களும் தீமை தரக்கூடிய எண்களின் ஆதிக்கத்தில் அமைந்ததே அந்த கப்பலின் சோக முடிவுக்கும் அந்த கப்பலில் பயணம் அவரின் உயிரும் காரணம் என்று  இந்த ஜோதிட கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு உணர்த்த விரும்பிகிறேன் .   

ஆதலால் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும்   நன்மை தீமை அனைத்தையும் தீர்மானிப்பது உங்களின் பெயரின் கூட்டு எண்களும் உங்களின் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும்   ஒரு காரணமாக அமையலாம் என்பதை நினைவில் கொண்டு உங்களின் பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்துக்கொண்டு  நலமுடன் வாழ நான் வணங்கும் சிவபெருமானை பிரார்த்தனை செய்கிறேன். 

                                              



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக