Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 24 நவம்பர், 2024

இன்று நவம்பர் 24 - 2024 - ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி  24 - 11 - 2024
சுக்ரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் கூட்டு எண் 16
கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  39
குரு கிரகத்தின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை  - இன்று ஞாயிற்று கிழமை 

இன்று  24  - 11 - 2024 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 39 . இந்த எண்ணிற்கு ஆதிக்கம் வகிக்கும் கிரகம் குரு  இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :

3 9   ஹீப்ரு பிரமிடு எண் 

7 5 4

3 4 1 3

9 3 1 9 3

2 7 5 5 4 8

6 5 2 3 2 2 6

2 4 1 1 2 0 2 4  பிறந்த தேதி 

மூன்று என்ற குருவும் ஒன்பது என்ற செவ்வாயும் இணைந்த இந்த எண் சிம்ம ராசியில் செவ்வாயின் ஆதிக்க எண்ணாகும் . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண்ணை பற்றி குதிரை சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற படத்துடன் சித்தரிக்கபட்டுள்ளது . "  

தெய்வ கருணை என மந்திர நூல் இந்த எண்ணை கூறுகின்றது  குருவும் - செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்த 39 ம் எண் . புகழ் - பதவி வாகன வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் போன்றவற்றை தரும் . 


சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த எண் பெற்று கொடுக்கும் . 

செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த எண்ணின் விசேஷமாகும் . 

தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . 

பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி - இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு . 


பொருந்தாத பிறந்த தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த 39 ம் எண்ணில் பெயர் இருந்தால் ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . 

குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த எண்ணிற்கு உண்டு 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . 

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C  G  L  S  B  K  R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி  24. அசுர குருவான சுக்ரனின் ஆதிக்க எண்ணாகும் . பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 39 . தேவ குருவான குருவின் ஆதிக்க எண்ணாகும் . பிறந்த தேதியில் அசுர குருவும் தேவ குருவும் இணைந்திருக்கும் பொழுது  குழந்தையின் ஜாதகத்தில் கிரக பலத்தை ஆராய்ந்து கவனமுடன்  குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டவேண்டும் . 

இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 39 .இந்த  எண்ணுக்குரிய கிரகம் குரு . குரு பகவானை குழந்தையின் ஜாதகத்தில்  6 8 12 போன்ற இடங்களில் இருந்தாலும் மகர ராசியில் இருந்தாலும் அந்த கிரகம் குழந்தைக்கு தோஷத்தை ஏற்படுத்தும் . 

இந்த கிரக தோஷத்தை போக்க  குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 


 இன்று நவம்பர் 24 ல் பிறந்தவர்கள் :


அருந்ததி ராய் - இந்திய எழுத்தாளர் - பிறப்பு . 24 - 11 - 1961 


இயன் போத்தம் - இங்கிலாந்து அணியின் முந்நாளைய கிரிக்கெட் வீரர் . பிறப்பு 24 - 11 - 1955 


சக்கரி டைலர் - அமெரிக்காவின் 12 வது அதிபர் . பிறப்பு 24 - 11 - 1784 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக