Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 24 ஏப்ரல், 2024

8 ம் எண் என்றாலே பயந்து ஒதுக்குவது ஏன் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியார் - ஆர். இராவணன் BSC


ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களில் நியூமராலஜியில் எட்டாம் எண்ணை குறிக்கும் கிரகமாக சனி பகவான் திகழ்கிறார்.  

பொதுவாக இந்த எட்டாம் எண் பெயரில் வந்தால் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாகவே கருதப்படுகிறது.  எட்டாம் எண்ணை கண்டால் கெட்டது சனி என்று பயப்படுகிறார்கள். 

சீரோ என்ற மேதையும் இந்த எண்ணை கண்டு பயப்ப்படும்படியே  கூறி இருக்கிறார். வரலாற்று பக்கங்களை புரட்டினால் இந்த எண்ணை பற்றி பல விந்தையான விஷயங்களும் இருக்கின்றன

கிரேக்கர்கள் இந்த எட்டாம் எண்ணை நீதியின் எண் என்றும் அழைக்கிறார்கள். மிக பழங்காலத்தில் இருந்தே எட்டாம் எண்ணை ஒரு விதியின் அடையாளமாக கருதி வந்துளார்கள். இந்த எட்டாம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஒருவித கழ்டமான சூழ்நிலைகளை அனுபவித்து முன்னேற்றமான வாழ்க்கை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது.

ஒரு சிலருடைய பெயரின் மொத்த கூட்டு எண்ணாக இந்த எட்டாம் எண்ணை பெற்றவர்கள் வீடு சொத்து சுகம் நிலபுலன்களோடு கூடிய சுப யோகமான வாழ்க்கை அனுபவித்து  கொண்டிருக்கின்றனர் . காரணம் அந்த நபரின் பெயரில் பெற்றுள்ள எட்டாம் எண்ணுக்குரிய கிரகமான சனி பகவான் அந்த நபரின் ஜாதகரின் ஜாதகத்திற்கு யோகமா தரக்கூடிய ஒரு அமைப்பை பெற்றிருந்தாலும் , அல்லது ஒரு செழிப்பான ஸ்தானத்தில் அமைந்திருந்தாலும் அந்த நபருக்கு இந்த எட்டாம் எண்  அவருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். 

மேற்கண்ட அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் அந்த நபர் சகல வசதி வாய்ப்புகளை பெற்றிருந்தாலும் அந்த ஜாதகர் எதையோ பறிகொடுத்து போல தனிமையை விரும்புவராகவும் , சோகத்தின் அடையாளத்தை பிரதி பலிக்ககூடிய ஒரு வித முக பாவனைகளை பெற்றிருப்பதோடு , தன்னுடைய மரணத்தின் முடிவை தானே தேடி கொள்ளும் சூழ்நிலைக்கு இவர்கள் சென்று விடுவார்கள். 

மேலும் இந்த 8ம் எண்ணை பெயரின் கூட்டு எண்ணாக வருவதை விரும்பாததற்கு மற்றும் ஒரு ஜோதிட ரீதியான காரணம், இந்த 8 ம் எண்ணுக்குரிய கிரகமாகிய சனி பகவானை , மந்தன் கூனன் முடவன் என்றும் அழைப்பார்கள். 

மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு ராசி கட்டத்திலிருந்து மற்றொரு ராசிகட்டதிற்கு சென்று பலன் அளிக்க  இந்த 8 ம் எண்ணுக்குரிய சனி பகவான் மட்டுமே  அதிகப்படியான நாட்களைஎடுத்து கொள்கிறார். 

அதனால் ஒரு தனி மனிதனின் பெயரின் மொத்த கூட்டு எண் 8 ம் எண்ணாக வரும்பொழுது வாழ்க்கையில் ஒரு தனி மனிதன் அனுபவிக்கும் பலன்களும் மிகவும் மந்தமாகவே இருக்கும் என்பது பலருடைய அனுபவ ரீதியான கருத்தாகும். 

ஆகவே எந்த எட்டாம்காரர்கள் சோகத்தின் சொந்த காரர்களாகவே கருத படுகிறார்கள். வாழ்க்கையில் அனுபவிக்க கூடிய கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் தடையகள் நோய்கள் போன்ற நன்மைக்கு மாறான நிகழ்ச்சிக்கு இந்த எட்டாம் எண்ணுக்குரிய சனி பகவானே காரணமாகிறார் என்றாலும் மேலே சொன்ன கருத்துக்கள் பலருடைய அனுபவ ரீதியான கருத்துக்கள் என்று நான் சொல்லி இருந்தாலும்  என்னுடைய ஜோதிட ஆராய்ச்சி பார்வையோடு நோக்கும்பொழுது வாழ்க்கையில் அனுபவிக்க கூடிய சோகம் துக்கம் துயரம் துன்பம் தடைகள்  நோய்கள் அனைத்தையும் குறிக்ககூடிய ஆங்கில சொல்லான SAD  என்ற வார்த்தையின் மொத்த கூட்டு எண் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வருவதை நன்கு கவனிக்கவும்.

S = 3
A = 1
D = 4
-----------------
       8
--------------------

எடு என்ற வேர் சொல்லிலிருந்து வந்த இந்த எட்டு என்ற சொல் எதனையும் முயன்று செய்து இடர்களை வென்று லட்சியத்தையும் கடுமையான உழைப்பையும் குறிக்கும் இந்த 8 ம் எண்

தாதுக்கள் 8

திக்குகள் 8

திருமாலுக்குரிய மந்திரங்கள் 8 (ஓம் நமோ நாராயணாய)

கஜங்கள் 8

லட்சுமிகள் எண்மர் 

மங்கலங்கள் 8 

திக்கு பாலகர்கள் 8

அஷ்டவசுக்கள் 8

சிவ சொருபம் 8 (பவன் , சர்வன், ஈசானன், பகவதி, பீடன், ருத்ரன், உக்ரன், மஹத்)

போன்றவை இந்த எட்டாம் எண்ணுக்குரிய சிறப்புகள் என்றாலும் 

இந்த எட்டாம் எண் பெயரில் வந்தால் மிகவும் துரதிர்ஷ்டம் , வாய்ந்த செயல்களே வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பவை மற்றவர்களுடைய கருத்துகள் என்றாலும் என்னுடைய ஜோதிடஅனுபவத்தில் இந்த எட்டாம் எண் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாக கருதபடுவது எதனால் என்று எனது  ஆராய்ச்சி பார்வையோடு நோக்கும்பொழுது ஒரு உண்மை புலப்படுகிறது.

உதாரணத்திற்கு ஜோதிடத்தில் செவ்வாய் பகவானை குறிக்ககூடிய 9 ம் எண்ணை  எடுத்து கொள்ளுங்கள் 

1x 9 = 9

2x 9= 18= 1+8 = 9 

3x 9= 27= 2+7= 9

4x 9= 36= 3+6= 9

இந்த மகா சக்தி வாய்ந்த எண்ணை எந்த எண்ணினால் பெருக்க படும்பொழுதும் பெருக்கி வரும் மூல மதிப்பு மாறுவதில்லை . 

அதேபோல் நவ கிரகங்களில் சுப கிரகமான சுக்ரனை குறிக்கும் ஆதிக்க எண்ணான 6 ம் எண்ணை  எடுத்து கொள்வோம் .

1x 6= 6

2x 6=12 1+2= 3

3x 6= 18 1+8= 9

4x 6= 24= 2+4=6

இப்படியாக இந்த 6 ம் எண்ணின் மூல மதிப்புகள் ஏறியும் இறங்கியும் வருவதை காணலாம் 

இதே போல் மற்ற எண்களான 2 3 4 5 7 போன்ற எண்ணின் மூல மதிப்புகளையும் நாம் ஆராயும்பொழுது அந்த எண்களின் மதிப்புகள் ஏற்ற ஏற்ற இறக்கத்தோடு மாறி மாறி வந்தாலும் 8 ம் எண்ணின் மூல மதிப்புகளை நன்கு உற்று நோக்குங்கள் 

1x 8= 8

2x 8= 16= 1+6= 7

3x 8= 24= 2+4=6

4x 8= 32= 3+2= 5

5x 8=40= 4+0= 4

6x 8=48= 4+8=12=1+2=3

7x 8= 56= 5+6= 5+6= 1+1= 2

இப்படியாக இந்த எட்டாம் எண்ணை பெருக்கும்பொழுது கூட்டு தொகையின் மதிப்புகள் 8 7 6 5 4 3 2 படிப்படியாக குறைவதை கவனியுங்கள் 

இப்படி குறைந்து கொண்டே வரும் அமைப்பால் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முயர்ற்சிகளும்  மகிழ்ச்சியான பலன்களும் படிப்படியாக குறைந்து கொண்டே போகும் என்பது என்னுடைய ஜோதிட ஆராய்ச்சியின் மூலம் நான் கண்ட உண்மையாகும்.

ஆதலால் உங்களுடைய ஜாதகம், பிறந்த தேதி, பிறந்த தேதியின் பிரமிடு எண் பிறந்த தேதியின் சூட்சும எண் , போன்றவற்றிற்கு தகுந்தார்க்கு போலும் உங்களுடைய பெயரை அதிர்ஷ்டமான முறையில் அமைத்து , வாழ்க்கையில் நல்ல பலன்களை, பெற்று அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் 


                                         


                           அம்மன் ஜோதிட நிலையம்

அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம்  கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு  2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்