Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 9 நவம்பர், 2021

கந்த சஷ்டி விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC


கந்த சஷ்டி விரதம் பெருமைக்குரியது. சஷ்டி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டியில் ஏற்பட்டதே சூரசம்ஹாரம். இன்றைய தினம் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்திற்கு முருகனின் கை வேலாயுதமே பெருமை சேர்த்தது. வேலினால் சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான்.

சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்று பொருள். ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். இந்த ஆறு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி நாளான இன்று ஒரு பொழுதாவது விரதம்

இன்றைய தினம் முருகனை தரிசனம் செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும் துன்பங்கள் துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை


சஷ்டி விரத மகிமை 

நீண்ட நெடுங்காலமாக ஒரு பெண்மணிக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவள் பல தெய்வங்களை வணங்கினாள். பூஜை செய்தாள். பலன் ஒன்றும் இல்லை. ஒருநாள் சித்தர் ஒருவர் கோயிலுக்கு வந்தார். அந்தப் பெண் அவரிடம் தன் குறையைச் சொன்னாள். "குடம் பிடித்தான், சட்டி கொள்!'' என்றார் சித்தர். சித்தர்கள் சூட்சுமமாகப் பேசுவார்கள். 

அப்பெண் படிப்பறிவில்லாதவள். குடம் பிடித்தானையும், சட்டி கொள்வானையும் எங்கு போய்க்காண்பாள்? சித்தர் சொன்னதன் பொருள் அவளுக்கு புரியவில்லை. குழம்பித் தவித்தாள். மாம்பழக் கவிராயர் என்ற புலவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அப்பெண் அவரிடம் சென்று, ஐயா, குடம் பிடித்தான், சட்டி கொள் என்று ஒரு சித்தர் சொன்னார். அதன் பொருள் என்ன?'' என்று கேட்டாள். 

அதற்குப் புலவர், குடம் என்பதைக் குக்குடம் என்று பொருள் கொள்ள வேண்டும். குக்குடம் என்றால் சேவல் என்று பெயர். அந்தச் சேவலைக் கொடியில் வைத்திருப்பவன் சேவற்கொடியோன். அவன் யாரென்று உனக்குத் தெரியுமா, அம்மா?'' என்று கேட்டார். "தெரியும் ஐயா. அவர்தான் முருகக்கடவுள்'' "ஆம். சட்டி என்பது "கந்த சஷ்டி' என்று பொருள். அந்த முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் உனக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும் என்பதையே அந்தச் சித்தர் சொல்லியிருக்கிறார். அப்படியே செய்து வா!'' என்றார் புலவர்.


அப்பெண் "அப்படியே செய்கிறேன்' என்று கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றாள். கந்த சஷ்டி விரதம் இருந்ததன் பலனாக அழகன் முருகனைப் போலவே ஆண் மகனைப் பெற்றெடுத்தால் அந்த பெண்.

சூரபத்மனை சம்ஹாரம் செய்த முருகன் கந்த சஷ்டி விரதம் பெருமைக்குரியதாகச் சொல்லப்படுகிறது. சஷ்டியில் ஏற்பட்டதே சூரசம்ஹாரம். சூரசம்ஹாரத்திற்கு முருகனின் கை வேலாயுதமே பெருமை சேர்த்தது. வேலினால் சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான். 

முருகப்பெருமானின் கை வேலானது ஒளியுடைய வீரவாகுவின் தோள்களிலே அமர்ந்து, பின் அங்கிருந்து மேலே மேலே உயர்ந்து, அழகாக இடமாகவும், வலமாகவும் சென்று வாயு வேகம் கொண்ட சூரபன்மனின் மார்பைப் பிளந்த வேலானது அடியார்களின் மனத் துன்பத்தை ஒழிக்கும். அந்தக் கிரௌஞ்ச மலையைத் துளைத்துப் பிளக்கும். 

இன்பக்கொடியைப் போன்ற, முருகனுக்கு வேல் தந்த அன்னை பார்வதி தேவியின் முன் சென்று நிலைபெறும் என்று அற்புதமாக பாடியுள்ளார் ஒரு புலவர். ஆறுநாட்கள் நிகழ்ந்த போரில் இறுதி நாள் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப் பெருமானின் கையில் இருந்த வேல், சூரபத்மனைச் சம்ஹாரம் செய்து பெருமை சேர்த்தது.


செவ்வாய்கிழமை சூரசம்ஹாரம் 

செவ்வாய்கிழமையான இன்றைய தினம் கந்த சஷ்டி வருவது சிறப்பு. இன்றைய தினம் மௌன விரதம் அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பகலில் உறங்காமல் கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் படித்து கந்தபுராணம் படிக்க வேண்டும்.

இன்றைய தினம் மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சூரசம்ஹாரத்தை முடிந்த பிறகு முருகப்பெருமான வணங்கி நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய பின்னர் உங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். 

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6ஆம் திருநாளான இன்று நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருகிறார். பின்னர் கோவில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் நேரில் தரிசனம் செய்ய அனுமதியில்லை நேரலையில் சூரசம்ஹாரத்தைக் கண்டு தரிசனம் செய்யலாம்.

திருக்கல்யாணம் 

நாளைய தினம் பிற்பகல் 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 

தொடர்ந்து இரவு சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், சுவாமியை தரிசிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328








Share this article :

0 comments:

கருத்துரையிடுக