Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 28 மார்ச், 2014

வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது - ஜாதகப்படி அவரவர் ராசிக்கு ஏற்றவாறு இடம் அமையுமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                           ஓம் சிவசக்தி 

அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 

ஜோதிட சாஸ்திரப்படி ஒ‌வ்வொரு ரா‌சி‌க்கார‌ர்களு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் ‌வீடு அ‌ல்லது ‌நில‌ம் அமையு‌ம். அதாவது செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் செம்ம‌ண் பூமியாய் பார்த்து வாங்க வேண்டும். செம்மண் கலப்பு இருந்தால் கூட போதும்.

சுக்கிரனின் ஆதிக்க ராசிக்காரர்களான ரிஷபம், துலாம் ரா‌சி‌க்கார‌ர்க‌ள் கொஞ்சம் மணல் கட்டு உள்ள பகுதியை வாங்கலாம். மிதுனம், கன்னி - பழுப்பு நிற, பாறைகள் கலந்த மண் பகுதியில் சிறப்படைவர். பாறை ‌நில‌ம் எ‌ன்றா‌ல் பாறைக‌ள் பழமையான உதிர்ந்த நிலையில் காண‌ப்படு‌ம் ‌நில‌ங்களை வாங்கலாம்.

குருவின் ஆதிக்க ராசியான தனுசு, மீனம் ரா‌சி‌யின‌ர் மணலும் மணல் சார்ந்த இடங்களையு‌ம், மகரம், கும்பம் களி மண் கலப்பு சார்ந்த இடங்களையு‌ம் வா‌ங்குவது ‌சிற‌ப்பு.

அதாவது, மேஷ ராசி‌க்கா‌ர்க‌ள் வா‌ங்கு‌ம் ‌வீ‌ட்டி‌ன் அருகே ‌மி‌ன்சார‌த் துறை அலுவலக‌ம், தீயணைப்பு அலுவலகம், அரசு அலுவலகம் இரு‌ப்பது நல்லது அ‌ல்ல‌து அ‌வ்வாறு அமையு‌ம்.

சுக்கிரனின் ஆதிக்க ராசியான ரிஷப ராசி எ‌ன்றாலே அது நந்தி. எனவே ‌ரிஷப ரா‌சி‌க்கார‌ர்க‌ள் பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்க‌ள் அரு‌கி‌ல் அமைய‌ப்பெ‌று‌ம் ‌வீ‌ட்டை வாங்கினால் சிறப்பாக அமையும்.

சூரியனின் சிம்ம ராசிக்கு அரசு அலுவலகங்களுக்கு பக்கத்தில், எம்.எல்.ஏ. வீட்டு பக்கத்தில், அமைச்சர் வீட்டு பக்கத்தில், பெரிய பதவி வகிப்பவர்களின் வீட்டின் அருகில் வீடு அமையும். ஏதாவது ஒரு அரசு அலுவலகம் அருகில் இருக்கும். அதாவது ரேஷன் கடைக்கு பக்கத்திலாவது வீடு அமையலாம்.

புதனுடைய கன்னி ராசிக்கு கல்வி நிறுவனங்களுக்கு பக்கத்தில், டீச்சர் டிரெயினிங் நிறுவனம் போன்ற பயிற்சி நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் வீடு அமையும். துலாம் ராசிக்காரர்களுக்கு ஏதாவது ஒரு கடை பக்கத்தில் வீடு அமையும். அதாவது வர்த்தக நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பர்.



செவ்வாயின் விருச்சிக ராசிக்கு போலிஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம் போன்றவை இருக்கும் இடத்தில் வீடு அமையும். இன்னும் சொல்லப்போனால் டிடக்டிவ் ஏஜென்சிக்கு பக்கத்தில், காவல்துறை அதிகாரி வீட்டின் பக்கத்திலாவது இவர்கள் குடியிருப்பார்கள். விருச்சிக ராசி பூமிக்காரகன் வீடு என்பதால் ஜமீன்தார் வீட்டு பக்கத்து வீட்டில் இவர்கள் குடி‌யிரு‌க்கு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ண்டு.

குருபகவானின் தனுசு ராசிக்காரர்களின் வீட்டின் ஒரு பக்கத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியும், மறு பக்கத்தில் ரெளடியும் இருப்பார்கள். ஒரு பக்கம் பெரிய நல்ல தலைவரும், மறு பக்கம் கெட்டவர்களும் இருப்பர். டாஸ்மார்க் கடைக்கு பக்கத்தில் கூட தனுசு ராசிக்கு வீடு கிடைக்கும். மேலும், ராணுவத் தளபதி அல்லது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் வீட்டிற்கு அருகிலும் இவர்கள் குடியிருப்பார்கள்.

சனிபகவானின் ராசியான மகரத்திற்கும், கும்பத்திற்கு டாஸ்மார்க் கடைக்குப் பக்கத்தில் வீடு அமையும், அதிலும் கும்பத்திற்கு டாஸ்மார்க் கடைக்கு பக்கத்தில் ‌வீடு அமையும் வாய்ப்பு அதிகம்.

மேலும், இந்த ராசிக்காரர்கள் எந்த மதமோ அந்த மதத்திற்கு எதிரான மதத்தினர் அதிகமாக குழுமியிருக்கும் இடத்தில் தான் இவர்களுக்கு வீடு அமையும்.

சனிபகவானின் கும்ப ராசிக்காரர்களுக்கு இரும்புக் கடை பக்கத்தில், தானியங்கள் அடுக்கி வைக்கும் இடம், கிடங்கு அருகில் வீடு அமையும். எப்போதும் லாரி வந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டும் இறக்கிக் கொண்டும், எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் இடமாக அது இருக்கும்.

மேலும் கும்பத்திற்கு வாசனைகள் நிறைந்த பகுதியில் வீடு அமையும். அதாவது மீன் மார்க்கெட், பூக்கடைக்கு அருகிலும் கிடைக்கும்.

குருவின் வீடான மீன ராசிக்காரர்களின் பக்கத்து வீட்டில் ஆன்மீக ஞானிகளோ அல்லது வேதர்கள், பூசாரிகளோ இருப்பார்கள். மேலும், ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலத்துக்கு அருகே அவர்கள் வீடு அமையும்.

ஆனால் இது அவரவர் தசாபுத்திகளின் அடிப்படையில் வித்தியாசப்படும்.

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நீச்சம் அடையும்போது, அவர்களுக்குரிய கிரகம் பலவீனமான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அவர்களுக்குரிய இடத்தில் வீடு அமையாமல் எதிர்மறையான சூழ்நிலையில் வீடு அமையும்.

எனவே இது பொதுவான அமைப்புதான். அவர்களின் கிரக தசாபுத்திகளுக்கு ஏற்ப மாறுபடும்.

சுக்கிர தசை நடப்பவர்கள் நிழல் சாலையில் ரம்மியமான வீட்டில் வசிப்பார்கள். ராகு திசை நடப்பவர்கள் அதே நிழல் சாலையில் கரடுமுரடான இடத்தில் வசிப்பார்கள். தசாபுத்திக்கு ஏற்றவாரும் நிலை இருக்கும். கிரகங்கள் தங்களுடைய கதிர்வீச்சுகளை அவர்கள் மீது திணிக்கும். அ‌ந்த ‌கிரக‌த்‌தி‌ற்கு‌ரிய இட‌த்‌தி‌ற்கு ந‌‌ம்மை இழு‌த்து‌ச் செ‌ல்லு‌ம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்