Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 3 மார்ச், 2014

ஹீப்ரு பிரமிடு நியுமராலஜி - நியுமராலஜி - இதில் பலன் தருவது எது ?

                                                        ஓம் சிவசக்தி  
ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டதுதான் நியுமராலஜி அதாவது எண் கணித ஜோதிடம் . இந்த நியுமராலஜி மேலை நாடுகளில் மிக பிரபலம் . ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள கிரகங்களை - சூரியன் - சந்திரன் - புதன் - சுக்கிரன் - குரு - சனி - என பெயரிட்டு அழைக்கின்றோம். ஆனால் நியுமராலஜியில் அந்தந்த கிரகங்களை எண்களை கொண்டு அழைக்கின்றோம். உதாரணத்திற்கு சூரியன் என்றால் 1. சந்திரன் என்றால் 2. புதன் என்றால் 5. சுக்கிரன் என்றால் 6. சனி என்றால் 8. குரு என்றால் 3. ராகு என்றால் 4. கேது என்றால் 7. இப்படியாக எண்களை கொண்டு அழைக்கின்றோம். 

இது இப்படி இருக்க நியுமராலஜி- ஹீப்ரு பிரமிடு நியுமராலஜி இரண்டும் ஒன்றுதான் . வெவ்வேறு அல்ல . சாதரணமாக நாம் பார்க்கும் தினசரி காலண்டரின் பின் பக்கம் . நியுமராலஜிக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்கள் கொடுக்கபட்டிருக்கும் . அந்த எண்களை கொண்டு நம்முடைய பெயருக்கு எந்த மாதிரியான ராசியான எண் வருகிறது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். இதே மாதிரியான கணக்கு தான் ஹீப்ரு நியுமராலஜிக்கும் வரும். 

இந்த ஹீப்ரு பிரமிடு கணக்கு எகிப்திய பிரமிடுகளை போல் செங்குத்தாக செல்லும் . ஒரு மனிதனுக்கு நியுமராலஜிப்படி பெயரின் கூட்டு எண் அதிர்ஷ்டமான எண்ணில் மட்டும் அமைந்தால் மட்டும் அவர்களுடைய வாழ்வில் ஏற்றம் காண முடியாது . ஹீப்ரு பிரமிடு நியுமராஜிப்படியும் அவர்களுடைய பெயரின் கூட்டு எண்ணிக்கை அதிர்ஷ்டகரமான எண்ணில் அமைய வேண்டும். நியுமராலஜிப்படி ஒருவரின் பெயர் அதிர்ஷ்டமான முறையில் அமைந்தும் அவர் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாமல் திணறுவார் . இதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால்  ஹீப்ரு பிரமிடு நியுமராலஜி படி அவர் பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை அதிர்ஷ்டம் இல்லாத தீய பலனை தரக்கூடிய எண்களில் அவரின் பெயர் அமைந்து இருக்கும் .

அதேபோல் நியுமராலஜிபடி ஒருவரின் பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை அதிர்ஷ்டம் இல்லாத தீமை தரக்கூடிய எண்களின் ஆதிக்கத்தில் அமைந்து இருக்கும் . ஆனால் அவர் ஏற்றமான வளமான வாழ்க்கையை அனுபவித்து கொண்டு இருப்பார். காரணம் அவர் பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை ஹீப்ரு பிரமிடு நியுமராலஜிபடி நன்மை தரக்கூடிய அதிர்ஷ்டகரமான எண்ணில் அமைந்து இருக்கும் .

 உதாரணத்திற்கு நியுமராலஜிபடி பெயரின் மொத்த கூட்டு எண்கள் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணில் அமைந்தும் - ஹீப்ரு பிரமிடு நியுமராலஜிபடி அவர் பெயர் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்ணில் அமைந்து வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு சில பிரபலங்களின் பெயரை இப்பொழுது ஆராய்வோம் . இந்தியாவில் தமிழ் நாட்டில் சினிமா துறையில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரை ஆராய்வோம்.

RAJINIKANTH - இந்த ரஜினிகாந்த் என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை 28 ம் எண்ணில் வரும். நியுமராலஜிப்படி இந்த 28 ம் மிகவும் துர் அதிர்ஷ்டமான எண்ணாகும் . 2 என்ற சந்திரன் வளர்தலும் - தேய்தலும் தன்மையை தருவதாலும் 8 என்ற சனி மிக பெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலைய பிரதிபலிப்பதால் சமச்சீர் நிலையை இந்த 28 ம் என் தருவதில்லை . கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - இந்த எண்ணுக்கு உண்டாகும் . கடன் கொடுத்தால் பணம் திரும்பாமல் போவதும் இந்த 28 ம் எண்ணுக்கு உண்டாகும். ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் போக செய்துவிடும் இந்த 28 ம் எண் . ஆனால் நியுமராலஜிப்படி இந்த 28 ம் எண்ணை பெயரில் பெற்ற ரஜினிகாந்த் அவர்களின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம்.

6   6      -  எண் என்பது ஹீப்ரு பிரமிடு சூட்சும எண் .
2   4  2
6  5  8  3
9  6  8  9 3
8  1  5 3 6 6
3  5  5 9 3 3 3
9  3  2 3 6 6 6 6
5  4  8 3 9 6 9 6  9
3  2  2 6 6 3 3 6  9 9
2 1  1 1 5 1 2  1  5  4  5
R A J I N I K A N T H = 28 என்பது நியுமராலஜி எண் .

இந்த 66 ம் எண் என்பது குரு பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் மிக அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . இந்த 66 ம் எண்ணை பற்றி எகிப்திய சித்திரங்களில் அரசாட்சி செய்யும் ராணியும் - தன லாபமும் என்ற வாசகத்துடன் சேர்ந்த சித்திரங்கள் காணப்படுகிறது . ஆச்சரியப்படும்படியான அற்புதமான நாவன்மை - பேச்சுத்திறன் - சங்கீத ஞானம் - அரசாங்கம் - அரசியல் துறைகளில் கௌரவத்தை கொடுக்கும் . சுக  சந்தோசம் - போக ஆனந்தம் - ஆடம்பர பொருட்களால் லாபம் போன்றவற்றை கொடுக்கும்.

6 என்ற சுக்கிரனும் 6 என்ற சுக்கிரனும் இணைந்து 66 என்று வந்து " மாளவ்யா யோகம் " ஏற்பட்டு மிகுந்த கலை பித்தர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . வாகனம் - நவ ரத்ன சேர்க்கை - பணம் சம்பந்தப்பட்ட துறைகள் போன்றவற்றில் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வந்தாலும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 3 க வந்தாலும் அவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 66 க வந்தால் புகழ் பெறுவார்கள் . இதில் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தேதியும் 3 ம் எண் ஆதிக்கத்தில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது . ஆதலால் இவர் பெயரின் கூட்டு எண் 28 என்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை தர இயலாத எண்ணில் அமைந்தாலும் இவர் பெயரின் பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்ணில் அமைந்து விட்டது .


இதேபோல் இந்தியாவில் தமிழ் திரை உலக பிரபல நடிகை சிம்ரனின் பெயரை எடுத்து கொண்டால் SIMRAN இந்த பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 16 . இந்த 16 எண் மிகவும் ஆபத்தான எண் . ராசி இல்லாத எண் . இரண்டாம்  உலக போரில் அணுகுண்டு வீச்சுக்கு உள்ளாகி பல லட்சம் உயிர்களை  பலி  கொடுத்த நாடு ஜப்பான் (JAPAN ) இந்த ஜப்பான் என்ற பெயரின் மொத்த கூட்டு  தொகை 16. இப்படி 16 ம் எண்ணை பெயரில் பெற்ற சிம்ரன் சினிமா துறையில் கொட்டி பறந்தார். காரணம் என்ன . இவரின் பெயர் நியுமராலஜிபடி 16 எண்ணில் அமைந்து இருந்தாலும் இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு  எண் . 42

4   2     =     இது ஹீப்ரு பிரமிடு சூட்சும எண் ..
2   2  9
9   2  9   9
4   5  6   3   6
3   1  4   2   1  5
S  I  M  R  A  N  =  16 இது நியுமராலஜி எண் . 

இந்த 42 ம் எண்ணின் பலன்கள் -  இந்த 42 ம் எண்ணிற்கு 12 ரத்தினமுள்ள கிரீடம் என்றும் - சகல வசியம் என்றும் மந்திர நூல்களில் உள்ளது . மேலும் ஜன வசியம் - கலை துறையில் மிக சிறந்த நிலை என்ற இந்த எண்ணிற்க்கான
பலன் என்பதால் சிம்ரன் சினிமா துறையில் பிரபலமாவதற்கு இந்த 42 ம் எண்ணும் ஒரு காரணமாகிவிட்டது .  இதே போல் பல எண்ணற்ற பெயர்களை ஆராய்ந்து பார்க்கும்பொழுது நியுமராலஜிப்படி பெயர் அதிர்ஷ்ட முறையில் அமைந்தும் அந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் துரதிர்ஷ்டமான எண்ணில் அமைந்து அவர்கள் வாழ்வில் துன்பபடுவதை காண முடிகிறது .

" ஒரு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் " சரியாக அமையாமல் நியுமராலஜிப்படி "பெயர் எண் " எண்  எவ்வளவு தான் சிறப்பாக அமைந்தாலும் கண்டிப்பாக நற்பலன்கள் நிகழ்வதில்லை . 

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல் ஒரு மனிதனின் பெயரில் பெயர் எண்ணும் - பெயரின் சூட்சும எண்ணும் இரண்டுமே சரியாக அமையும் பட்சத்தில் முழுமையான வெற்றிகரமான வாழ்வை அடைய முடியும் . 

ஒன்று சரியானதாகவும் - மற்றொன்று சரி இல்லாததாகவும் அமையும்பொழுது பாதி பலன்களே நடக்கும் . பிறந்த தேதிக்கும் - கூட்டு எண்ணுக்கும் பொருந்துகிற பெயர் எண்ணும் - பெயரின் சூட்சும எண்ணும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கின்றன .  நியுமராலஜிப்படி பல ஆயிரங்களை ஜோதிட கட்டணமாக கொடுத்து பெயரை அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்தும் எந்த விதமான நற்பலன்களும் நடக்க வில்லையே என்று மனக் கவலையொடு இருப்பவர்களுக்கு அதற்கான காரணம் என்னவென்று இப்பொழுது தெரிந்து இருக்கும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




 







Share this article :

1 கருத்துகள்:

  1. சார்,
    ரஜினிகாந்த், சிம்ரன் இவர்களின் பெயருக்கு நியூமராலஜி எண்கள் சரி. ஹீப்ரு எண் எப்படி திடீர் என ரஜினிக்கு 66 என்றும் சிம்ரனுக்கு 42 என்றும் வருகிறது.

    இந்த 66, மற்றும் 42 எப்படி
    வந்தது?

    பதிலளிநீக்கு

சமீபத்திய கருத்துகள்