Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ராகு காலம் கெடுதல் செய்யுமா?அனுபவ ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

   ஓம் சிவ சக்தி
ராகு காலத்தில் போகாதே போகாதேன்னு தலைக்கு தலை அடிச்சுகிட்டேனே கேட்டியா? இப்படி காரியத்தை கெடுத்திக்கிட்டு வந்து நிக்கறியே என்று பலர் புலம்புவதை அனுபவ ரீதியாக நாம் பார்த்திருப்போம்.

திங்ககிழமை ஏழரை ஒன்பது ராகு காலம் . ஒன்பது மணிக்கு மேலே வரனை அழைச்சுகிட்டு வருகிறேன் , ஏன் என்றால் நாம் செய்ய போவது நல்ல காரியம் கால நேரம் பார்த்து செய்யணும் பாருங்க என்று பேச்சு  வார்த்தை நடத்துவார் , ஒரு கல்யாண தரகர் .

எம்.எல்.ஏவை பார்த்து காலேஜுக்கு சீட் வாங்கணும் ராகு காலத்துக்கு முன்னேயே புறப்பட்டாகனுமே , என்று ஒரு  சில முக்கியமான விஷயத்துக்கு எல்லாம் கால நேரம் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.

ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை உள்ள சிலரோ, ராகு காலத்தில்  வெளியில் தலை காட்டுவதே  கிடையாது . ஏன் இப்படி ராகு காலம் என்றால் இவ்வளவு பயம் ? ராகு காலத்தில் போன காரியம் உருப்படாது செய்த காரியம் சரிபடாது. இப்படி ஒரு நம்பிக்கை நம்மவர்களிடையே அழுத்தமாக வேரூன்றி விட்டது . இந்த நம்பிக்கை சரிதானா?

ராகு காலம் நிறைய பேர் கொண்டிருக்கும்  அபிபிராயத்தை நீக்கவே இந்த சிறு ஜோதிட கட்டுரையை நீங்கள் அனைவரும் படிக்கும்படி வேண்டுகிறேன்.
ராகு கிரகம் ஓர்  கிரகம்தான் . ஆனால் ராகு எல்லோருக்கும் கெடுதல் செய்கிறது? அதுவே ஜாதக ரீதியாக சுப பலன் தரக்கூடிய விதத்தில் அமைந்து ராஜ யோக பலனை வாரி வழங்குவதும் உண்டல்லவா?

அதே போல்  சுப கிரகமான்  சுக்கிரன் கூட கெடுதலான ஆதிபத்தியம் ஏற்பதாலோ  தீய ஸ்தானங்களில்  அமர்ந்தோ வறுமையை கொடுத்து நடுத்தெருவில் நிறுத்துவதும் உண்டு. என்பதை ஜோதிடம் தெரிந்தவர்கள் அறிவார்கள் .

எனவே இயற்கையில் சுப கிரகமானாலும் அசுப கிரகமானாலும் அது நன்மைகளை செய்யுமா?என்பதை ஜாதக மூலம் தான் நிர்ணயிக்க வேண்டி இருக்கிறது .

இந்த நிலையில் ராகு காலம் எல்லோருக்கும் கெடுதல் செய்யும் என்பது எப்படி சரியாக இருக்க முடியும் ?

இரவில்  செய்தாலும் அரவில் செய்யாதே பழமொழி எல்லாம் பொது கருத்தாக தான் எடுத்து கொள்ள  வேண்டுமே தவிர தனிப்பட்ட  முறையில் எல்லோருக்கும் பொருந்துவதாக எடுத்து கொள்ள முடியாது . அனுபவமும் இதைதான்  சொல்கிறது.

ஞாயிற்று கிழமை  நான்கு முப்பது முதல் ஆறு மணி -  திங்ககிழமை காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரையிலும் செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணி  முதல் நான்கு முப்பது வரையிலும் - புதன் கிழமை நன் பகல் பன்னிரண்டு மணி முதல் ஒன்று முப்பது வரையிலும் வியாழக்கிழமை பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரையிலும்  வெள்ளி கிழமை காலம் ஒன்று முப்பது முதல் பன்னிரெண்டு மணி வரையிலும் சனி கிழமை காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரையிலும் ராகு காலம் ஆகும். இதை எல்லா பஞ்சாங்களிலும் காலண்டர்களிலும் பார்த்து  கொள்ளலாம் .

ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம் ஆட்சி செய்கிறது.

இந்த ராகு காலம் யாருக்கு நன்மை தரும் என்பதை பார்ப்போம்.

பன்னிரண்டு ராசிகளில் விருச்சிக ராசி கீட ராசி என்றும்-  நச்சு ராசி-  என்றும்  அழைக்கபடுகிறது இது விஷ ராசி ஆனதால் விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கும் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கும் விஷக்கடி கூட அவ்வளவாக பாதிப்பதில்லை என்பதை அனுபவ ரீதியாக அறிகிறோம். விருச்சிக ராசி கேதுவின் உச்ச  ,ராகுவின் நீச்ச வீடென்றும் வழங்கபடுவது உண்டு. இந்த விருச்சிக லக்னத்தை ஜென்ம லக்னமாக கொண்டவர்களுக்கு ராகு காலம் கெடுதல் செய்வதில்லை.

விருச்சிக ராசி எனும்பொழுது அதில் விசாக நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் நீங்கலாக கடைசி நான்காம் பாதமும் அனுஷ நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், கேட்டை நட்சத்திரத்தின் நான்கு பாதங்கும் அடங்கி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் தீங்கு விளைவிப்பதில்லை .

அத்துடன் திருவாதிரை - சுவாதி - சதயம் - ஆகிய நட்சத்திர காரர்களுக்கும் ராகு காலம் நல்ல காலமேயாகும்.

சூரியன் கார்த்திகை மாதம் முழுவதும் விருச்சிக ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே விருச்சிக மாதம் என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் நன்மையே செய்கிறது.

இவை மட்டுமல்லாமல் ராகு காலம் நன்மையை தருவதற்கு உரிய வேறு சில கிரக அமைப்புகளும் உள்ளன. ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் ராகு இரண்டு நான்கு ஆறு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய ஸ்தானங்களிலும் பகை ராசிகளில் அமைந்து இருந்தாலும் சூரியனுடனோ சந்திரனுடனோ சம்பந்த பட்டிருந்தாலும் ராகு காலத்தால் அனுகூலமில்லை. இவர்கள் மட்டும் ராகு காலத்தில் தன் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

ஆனால் ராகு லக்கினம் 3- 5 - 9 - 10 - 11- ஆகிய ஸ்தானங்களிலோ மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ராசிகளிலோ காலத்தில் நன்மை உண்டும். மேற்கண்ட விதத்தில் ராகு அமைந்து ராகு தசை நடந்தாலும் ராகு புத்தி ராகு அந்தரம் போன்றவை நடைபெற்றாலும் சிறப்பான நற்பலன்களையே பெறலாம்.

ராகு காலத்தில் தீமை பெறுவதாக  அமைப்பு மேற்கண்டபடி ராகுவின் அனுகூலம்  பெற்றவர்களால் வெற்றியடைய இடமுண்டு , எப்படி என்கிறீர்களா? ராகு காலத்தில் ராகுவின் அனுகூலம் பெற்றவர்களின் உதவியை நாடி அவர்களின் உதவியை கொண்டு ,ஒரு செயலில் ஈடுபட்டாலோ அவர்களுடன் சேர்ந்து சென்றாலோ கேடு பலன்கள் குறைந்து நலம் விளைவதை அனுபவத்தில் அறியலாம்.

ஆகவே மேலே சொல்லப்பட்ட விதத்தில் லக்னம் ராசி நட்சத்திரம் கிரக நிலைகள் அமைய பெற்றவர்கள் ராகு காலத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை . ராகு காலத்தில் அவர்களுக்கு கெடு பலன்கள் கொஞ்சமும் இல்லை என்பதுடன் மற்ற காலங்களை விட விசேஷமான நற்பலன்களை அளிக்கும் என்பதால் ராகு காலத்திலே எந்த வித நன் முயற்சிகளிலும்  ஈடுபட்டு பிரமாத வெற்றியை அடையலாம். 
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்