Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

மரணம் உங்களை நெருங்குகிறதா? இல்லையா? தெரிந்து கொள்ளுங்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC




                                                             ஓம் சிவ சக்தி





மரணம் இந்த வார்த்தையை கேட்டாலே அனைவருக்கும் அச்சமே .
ஒரு மனிதனுக்கு வரக்கூடிய கடைசி கால மரணம் இயற்கையான அமையலாம் அல்லது   இயற்கைக்கு மாறான மரணமாகவும் அமையலாம்.
அல்லது எதிரியின் கைகளால் கூட உங்களுக்கு மரணம் ஏற்படலாம்

இந்த அமைப்புகளை  அவரவரின் ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை கொண்டு தெரிந்து கொள்ளலாம் .

ஒருவருக்கு தீர்க்கமான ஆயுளை அளிப்பவர் சனி பகவான். அதேபோல் லக்னத்துக்கு எட்டாம் இடம் லக்னத்துக்கு மூன்றாம் இடம் ஒருவரின் ஆயுளை குறிக்கும் இடமாகும்.

சனிபகவான் லக்னத்துக்கு மூன்றாம் இடம் மூன்றாம் இடத்து அதிபதி லக்னத்துக்கு எட்டாம் இடம் எட்டாம் இடத்து அதிபதி இவர்கள் செழிப்புடன் காணப்பட்டால் இந்த ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம் என சொல்லலாம் .

ஆனால் தீர்க்கமான ஆயுளை தரக்கூடிய கிரக அமைப்புகள் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தும் ஒரு சிலருக்கு அவர்களின் ஆயுள் காலம் விபத்து மூலமாகவோ, எதிரிகள் மூலமாகவோ அல்லது காரணம் கண்டு பிடிக்க முடியாத ஏதாவது ஒரு சூழ நிலையின் காரணமாகவோ அவர்களின் ஆயுள் அற்ப ஆயுளாக முடிந்து விடுகிறது

என்ன காரணம் அவரின் ஜெனன ஜாதகத்தில் அவரின் ஆயுள் பாகம் சிறப்பாக உள்ளதே அப்படியானால் அவர் 100 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டுமே?
இப்படி திடீர் என்று அற்ப ஆயுளிலே இறந்து விட்டாரே ? அப்படி என்றாலே ஜோதிடம் என்பது பொய்யா ? என பல கேள்வி கணைகளை  தொடுக்க வேண்டியுள்ளது  .

ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி அவரின் ஆயுள் சிறப்பான முறையில் அமைந்திருந்தாலும் அவரின் ஆயுள் அற்ப ஆயுளாக அமைவதற்கு அந்த நபரின் பெயர் அமைப்பும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது .

ஒருவருடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் வந்தாலும் அந்த பெயரின் பிரமிடு கூட்டு எண்  சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வரவே கூடாது.

அப்படி அமைந்து விட்டால் அந்த 8 ம் எண் அவரின் ஆயுளில் குறையை  உண்டாக்கி அவரின் மரணம்  யாருமே எதிர் பார்க்காத ஒரு திடீர் மரணமாகவே அமையும்.

இதற்க்கு உதாரண பெயர்களாக என்னுடைய ஜோதிட அனுபவத்தில் எனக்கு தெரிந்த நபர்களின் பெயர் அமைப்புகளை உதாரணமாக கொடுத்து விளக்கம் கொடுத்தாலும் ஒரு சில பிரபலங்களின் பெயர் அமைப்புகளை காட்டி விளக்கம் கொடுக்கும்பொழுது உங்களுக்கு எளிதில் விளங்கும்.

அப்படி உதாரண பெயர் அமைப்பாக  படையப்பா படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக நடித்த சௌந்தர்யாவை யாரும் மறந்திருக்க முடியாது .
ஆனால் அவர் இப்பொழுது உயிரோடு இல்லை . ஒரு விமான விபத்தில் அவரின் ஆயுள் யாருமே எதிர்பார்க்காத ஒரு திடீர் மரணமாகவே அமைந்து விட்டது.
அவரின் பெயர் அமைப்பை இப்பொழுது காண்போம் .

7   1   =   7 + 1 = 8
6   1  9  
7   8    2    7
1   6    2    9    7
2    8    7    4    5    2
5    6    2    5    8    6   5
1    4    2    9    5    3     3   2
3    7    6    5    4    1    2   1    1  =   30
S   O   U   N   D   A   R   Y   A

நியுமரலாஜி படி நடிகை சௌந்தர்யாவின் பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை   SOUNDARYA  =  3 + 7 + 6 + 5 + 4 + 1 + 2 + 1 + 1 = 30 ) என்ற குருவின் ஆதிக்க எண்ணான முப்பதாம் எண் வரும். இந்த 30 ம்  ஓரளவுக்கு சுமாரான நல்ல  பலன்களை தரக்கூடிய எண்ணாக இருந்தாலும் இவர் பெயரின் பிரமிடு கூட்டு எண்  சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வந்ததால் அவரின் மரணம் மிக இளம் வயதிலேயே  யாருமே எதிர்பார்க்காத  ஒரு திடீர் அமைந்து விட்டது.

அதே போல் நடிகர் முரளியை யாராலும்   மறந்திருக்க முடியாது . இதயம் புதுவசந்தம், கீதாஞ்சலி போன்ற ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயனாக நடித்து புகழ் பெற்றவர். அனால் இவர் இப்பொழுது உயிருடன் இல்லை. இவரின் மரணம் அனைவராலும் ஏற்று கொள்ள முடியாத யாராலும் நம்ப முடியாத ஒரு திடீர் மரணமாகவே அமைந்து விட்டது . 

அதுவும் நடுத்தரமான இளம் வயதில் அவர் இறக்கும் சூழ் நிலை ஏற்பட்டது . காரணம் என்ன? அவரின் பெயர் அமைப்பை இப்பொழுது காண்போம். 

2   6  
2   9   6
9   2   7   8  
1   8   3  4   4  
4   6  2  1   3  1       
M   U  R  A  L I  =  17

நியுமராலஜி படி நடிகர் முரளியின் பெயரின் பெயரின் மொத்த  கூட்டு எண்ணிக்கை 17 = 8 என்று சனி பகவானின் ஆதிக்க எழுத்தில் வந்துள்ளது . ஒரு நபரின் பெயரின் பிரமிடு கூட்டு எண் சனி பகவானின் ஆதிக்க  எண்ணான 8 ம் எண்ணில் வந்தால் அவருக்கு ஆயுள் குறைவு என்று சொல்லி இருக்கிறேன். 

ஆனால் நடிகர் முரளியின் பெயரின் கூட்டு எண் 17 = 8 என்றும் பெயரின் பிரமிடு கூட்டு எண் 26 = 8 எனவும் பெயரின் கூட்டு எண் பிரமிடு எண் இரண்டுமே சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 எண்ணில் வந்துள்ளதால் அவரின் காரணம் தெரியாத திடீர் மரணத்துக்கு இந்த எண்களும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது .

எதோ ஒரு சில பிரபலங்களின் பெயரை மட்டும் உதாரண பெயர்களாக காட்டி இவர்களின் மரணத்துக்கு இவர்களின் பெயரின் பிரமிடு எண்களாக வந்துள்ள 8 ம் எண்தான்   காரணம் என்று ஓரளவுக்கு ஜோதிடம் தெரிந்த யார் வேண்டுமானாலும் சொல்லலாமே என்று மனதுக்குள் நினைத்து கொண்டாலும் இரண்டாம் உலகப்போரில் அணு குண்டு வீச்சினால் பல லட்சம் மக்களை பலி கொண்டு அந்த சோக சுவடுகளை வரலாற்று நிகழ்வுகளில் இருந்து நீக்க முடியாத சோக சம்பவத்தை அனுபவித்த நாடு ஜப்பான் . அந்த ஜப்பான் நாட்டின் பெயர் அமைப்பை பாருங்கள் 

2    6 =  8
2    9   6
2    9   9   6
1    1   8   1   5    = 16
J   A   P   A  N 

நியுமராலாஜி படி ஜப்பான் என்ற பெயரின் மொத்த கூட்டு எண் 16 = 7 என்று வந்தாலும் JAPAN என்ற பெயரின் பிரமிடு கூட்டு எண் 26 = 8 என்று சனிபகவானின் ஆதிக்க எண்ணில் வந்துள்ளதை கவனிக்கவும்.

பெயரின் பிரமிடு எண் 8 ம் எண்ணாக வரவே கூடாது என்று பல உதாரண பெயர்களை சுட்டி காட்டினாலும் இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சினால் பல லட்ச கணக்கான உயிர்களை பலி வாங்கிய ஜப்பான் நாட்டின் பெயரின் மூலம் பெயரின் பிரமிடு எண்ணாக வரும் 8 ம் எண்ணின் கோரமான முடிவை தரும் குணாதிசயத்தை தெரிந்து கொண்டு உங்களுக்கு பிறந்திருக்கும் செல்ல குழந்தைகளுக்கும் சரி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சரி உங்கள் உறவினர்களுக்கும் சரி உங்கள் நிறுவனத்திற்கும் சரி பெயரின் பிரமிடு எண்ணாக இந்த 8 ம் எண் வராமல் பார்த்து கொண்டு உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் வைத்துக்கொண்டும் உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்து கொண்டும் பயமில்லாத வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



















Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்