Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 26 ஜனவரி, 2013

நியூமராலஜிபடி பெயர் மாற்றம் பெயர் திருத்தம் செய்வது விபரீதமான பலன்களை தருமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


நிச்சயமாக . நியூமராலஜிபடி ஒரு நபரின் பெயரி அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்வதற்கும் அதிர்ஷ்டகரமான முறையில் பெயரை மாற்றம் செய்வதற்கும் அதற்கான வழி முறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு மிகவும் கவனமாக கையாளவேண்டும் .

ஒரு நபரின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண்  பிறந்த தேதியின் சூட்சும எண். இந்த நான்கு எண்ணிற்கும் நட்பான எண்ணாக பலன் தரக்கூடிய எண்ணாக அமையுமாறு அந்த நபரின் பெயரின் கூட்டு எண் அமைந்தால்தான் அந்த நபருக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் நடக்கும்.

ஏனோ தானோ என்று மற்றவர்களுக்கு செய்து கொடுக்கும் பெயர் மாற்றம் பெயர் திருத்தம் விபரீதமான பலன்களையும் விபரீதமான முடிவையும் கொடுத்து விடும். அதிக பட்ச கெடுதல் பலனாக மரண பயத்தையும் , ஏன்  மரணத்தையே கொடுத்து விடும்.

இதற்க்கு உதாரணமாக சரித்திர புகழ் பெற்ற மாவீரன் நெப்போலியனை எடுத்து கொள்ளலாம் . உலக சரித்திர வரலாற்றில் நீங்காத புகழ் பெற்றவர்கள் இரண்டு பேர் , ஒருவன்  மகா அலெக்ஸாண்டர் , மற்றொருவன் மாவீரன் நெப்போலியன் .



மாவீரன் நெப்போலியன் நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  15 ஆம் தேதி, கோர்சிக்காவில் உள்ள அசாக்சியோ என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தான். இவனது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவன் இரண்டாமவன். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு செனோவாக் குடியரசால் பிரான்சுக்கு வழங்கப்பட்டது.

மாவீரன்  நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.

கோர்சிக்காவில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 

1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான்.

 தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.

நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  15 ஆம் தேதி, பிறந்துள்ளான்  (15- 8- 1769 )

இவனது பிறந்த தேதியின் கூட்டு எண் 15 = 1+ 5= 6 .

 இந்த 6 ம்  எண் என்பது சுகரனின் ஆதிக்க எண் . 

பிறந்த தேதியின் கூட்டு எண் 15+ 8+ 1769= 37. 

இந்த 37 ம்  எண்  சூரியனின் ஆதிக்க எண்ணாகும் . 

பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 42 ஆகும். 

இந்த 42 =( 4+ 2= 6 ம்)  எண்  என்பது சுக்ரனின் ஆதிக்க எண்ணாகும் .

நெப்போலியன் முழுபெயரான நெப்போலியன் போனாபர்ட் (NEPOLEON BUNAPARTE ) என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை   86 = (8+ 6+ 15= 1+ 5= 6. ) 

இந்த 86 ம் எண என்பது புதனின்  ஆதிக்க எண்ணாகும். 

இந்த புதனின்  ஆதிக்க எண்ணான 86 எண் 

நெப்போலியனின் பிறந்த தேதியின்  எண. 

பிறந்த தேதியின் கூட்டு எண் .

 பிறந்த தேதியின் பிரமிடு எண்  

ஆகிய மூன்று எண்களுக்கு ஒன்றுக்கு ஒன்று நட்பான எண்ணாக அமைந்து அதற்க்கு பலன் தரக்கூடிய வகையில்  பிரெஞ்ச் சாம்ராஜ்யத்தின் மாபெரும் வீரனாகவும் ராஜதந்திரியாகவும் புத்திசாலித்தனமாக ஆட்சி பீடத்தில் அமர்ந்து உலக நாடுகளை தன்வசபடுத்தி  அவனது வாழ்நாளில் நல்ல பலன்களை அளித்தது . 

மாவீரன் நெப்போலியன் தன் வாழ்வின் பிற்பகுதியில் NEPOLEON BOUNAPARTE என்ற  தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக NEPOLEON BONAPARTE என மாற்றிகொண்டான்.

இவ்வாறு மாற்றி கொண்ட பெயரின் மொத்த கூட்டு தொகை 80 . இது சனி பகவானின் ஆதிக்க எண்ணாகும் .

சாதரணமாக ஒரு தனி மைந்தனின் பெயரில் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம எண் பெயரில் வந்தாலே பலவித சோதனைகளுக்கு ஆளாக நேரிடும். 

அதுவும் 80 ம் எண்  என்பது சனி பகவானின் ஆதிக்க சக்தியை அதிக்க படுத்தும் எண்ணாக வந்து நெப்போலியனின் பிறந்த தேதியின் கூட்டு எண்ணான 37 எண்ணிற்கு பகையான எண்ணாக அமைந்து விட்டது. 

அப்பொழுதே அவனது சோதனை காலம் ஆரம்பமாகி விட்டது.
  
1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. 

இத்தோல்வியிலிருந்து நெப்போலியனால் மீளமுடியவில்லை. 

அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன.

1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. 

ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான்.

மாவீரன் நெப்போலியன் இழந்த அரசை  கைப்பற்றினாலும் கூட அவனது வாழ்வின் கடைசி மரண அத்தியாத்தை  அவன் மாற்றி கொண்ட தனது பெயரான NEPOLEON BONAPARTE என்ற சனி பகவானின் ஆதிக்கத்தில் வரும் இந்த 80 ம நிர்ணயித்து விட்டது. 

இந்த 80 ம் எண்  தனுசு ராசியில் வரும் எண்ணாகும் . இந்த தனுசு ராசியில் வரும் எண்களில் 73 74 75 76 77 78 79 எண்களும் அடங்கும் .

இந்த 80 ம்  எண்ணை மாவீரன் நெப்போலியனின் லக்னமாக கொண்டால் தனுசு ராசியில் இருந்து அவனது ஆயுளையும் மரணத்தை குறிக்ககூடிய இடமாக வருவது கடக ராசியாகும் . இந்த கடக ராசி என்பது நீர் ராசியாகும்.

அப்படியானால் மாவீரன் நெப்போலியனின் மரணம் நீரோடு சம்பந்தப்பட்ட பொருள்  , நீரோடு சம்பந்தப்பட்ட பெயர். நீரோடு சம்பந்தப்பட்ட நபர் , நீரோடு சம்பந்தப்பட்ட இடம் இவற்றில் ஏதாவது ஒன்று சம்பந்த பட்டிருக்கவேண்டும். 

ஆம் அவனது மரணத்துக்கு தேதி குறிக்க பட்ட இடம்  தண்ணீர் என்று பொருள் தரக்கூடிய ஆங்கில சொல்லான வாட்டர்லூ என்ற இடம். 

ஆம் . அதுதான் நெப்போலியனின் கடைசி யுத்தமான வாட்டர்லூ யுத்தம் . ஆம் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். 

நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. 

ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் 

நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.

ஆதலால் இந்த கட்டுரையை படிக்கும் அன்பான எமது இணைய தள வாசகர்கள் உங்களது பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் மிகவும்  கவனமான முறையிலும் மிகவும் எச்சரிக்கையான முறையிலும் உங்களது பெயரை அதிர்ஷ்ட முறையிலும் பயன் தரக்கூடிய வகையிலும் திருத்தம் செய்து வாழ்க்கையில் நல்ல பலன்களை அடையுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.












Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்