Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 20 அக்டோபர், 2012

நவராத்திரி முதல் ஐந்து நாட்கள் அம்பாளை வணங்கும் முறை . ஆன்மீக ஜோதிடர் ஆர் ராவணன் BSC

நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை!!

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
நவராத்திரியின் முதல் நாளில் (அக்.16ல்) அம்பாளுக்கு "மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள். "அசரம் என்றால் "அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
நாளைய நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ

                                    நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!
அம்பிகையை நாளை(அக்.17ல்) மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி . அந்த சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன் னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.
நாளைய நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை
பாட வேண்டிய பாடல்:
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

                        நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாளில் (அக்.18ல்) அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.
இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.
நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.
பாட வேண்டிய பாடல்:
என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

                                     நவராத்திரி நான்காம் நாள்: வழிபடும் முறை!
நாளை (அக்.19ல்) அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். அருளாளரான குமர குருபரர் மீனாட்சி அம்மன் சந்நிதியில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றம் செய்தார். இதில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்பது வயது வரையுள்ள பாலபருவ விளையாட்டு பாடல்கள் நூறு உள்ளன. அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண் குழந்தைளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி மகிழ்வர். இதனை "ஊசல் பருவம் என்பர். அதுபோல, நவராத்திரியின் நான்காம் நாளான நாளை, மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை சேயாக மாறி ஊஞ்சலில் ஆடுவதை நாளை காண்போமா!
நாளைய நைவேத்யம்: புளியோதரை
தூவ வேண்டிய மலர்கள்: செந்தாமரை, ரோஜா
பாட வேண்டிய பாடல்:
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே!
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்!
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே!
உத்தமி பைரவி ஆடுகவே!
வழிபடும் எங்கள் வாழ்வினிலே
வழித்துணையாய் வந்து ஆடுகவே!


                            நவராத்திரி ஐந்தாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?
க்.20ல் அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழிபட்டால் செல்வவளம் பெருகும். நாளை மதுரை மீனாட்சியம்மன் "மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். மலையத்துவஜ பாண்டியனும், அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திரபாக்கியம் இல்லாமல் வருந்தினார். அந்தணர்களை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். யாகத்தின் பயனாக உமையவளே யாகத்தீயில் தோன்றினாள். அவளுக்கு தடாதகை என பெயர் சூட்டினர். அவளது கண்கள் மீன் போல் இருந்ததால், மீனாட்சி எனப்பட்டாள். அவளுக்கு வில்பயிற்சி, வாள்பயிற்சி, குதிரையேற்றம் தந்து இளவரசியாக்கினார். அவள் அஷ்டதிக்குகளும் நடுங்கும்படியாகப் போருக்குப் புறப்பட்டாள். மீனாட்சியின் வீரத்தைக் கண்டு மன்னர்கள் அஞ்சினர். எல்லாரையும் வென்றபிறகு, ஈசன் ஆளும் கயிலாயமலையையும் பிடிக்கச் சென்றாள். தேவியின் பராக்கிரமத்தைக் கண்ட நந்தியம்பெருமான் பயந்துபோய் சிவபெருமானை துணைக்கு அழைத்தார். அஷ்டதிக்குகளையும் வென்ற உமையவள், ஈசனைக் கண்டதுமே பெண்மைக்கே உரிய நாணம் கொண்டாள். வீரத்தால் உலகை வென்ற அம்பிகை, நாணத்தால் உலகாளும் ஈசனை வென்றாள். நாமும் அனைத்து செயல்களிலும் வெற்றிவாகை சூடி முதலிடம் பிடிக்க அம்பாளை வணங்கி வருவோம். நாளைய நைவேத்யம்: கல்கண்டு சாதம்
தூவ வேண்டிய மலர்: பிச்சிப்பூ

பாட வேண்டிய பாடல்:
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே!
ஆலவாய் ÷க்ஷத்ர ஒளியே உமையே!
வருவினை தீர்க்கும் ஜெகத்ஜனனி நீயே!
வைகைத் தலைவியே சரணம் தாயே!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.




        
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்