Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 20 மே, 2012

குரு பெயர்ச்சி 2012 - விருச்சிக ராசி பலன்கள்- ஜோதிடர் ஆர் ராவணன் BSC

  • விருச்சிகம் - விசாகம் 4, அனுஷம், கேட்டை
  • வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 
  • குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.   
  • உலக நிகழ்வுகளை அறிவதில் ஆர்வமுள்ள விருச்சிகராசி அன்பர்களே!
  • குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான ரிஷபத்தில் மிகுந்த அனுகூலமாக உள்ளார். ஏழரைச் சனியின் ஆரம்பக்கட்டத்தில் சில சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கும் நீங்கள், இந்த சமயத்தில் அவற்றில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த செயல் சுணக்கம் மாறி சுறுசுறுப்பு பெறுவீர்கள். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் ஆதாய பணவரவு உண்டு. 7ம் பார்வை ராசியில் பதிவதால் மனத்துணிவு, தெளிவான சிந்தனைத்திறன் ஏற்படும்.
  • 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு. புத்திரர்கள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர். படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிலும் கவுரவமான நிலையை அடைவர். பூர்வசொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரிசெய்வீர்கள். சந்திரனுக்கு ஏழில் குரு அமர்ந்து கெஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்க பாடுபடுவர். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும்.
  • தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், நிதி, கல்வி நிறுவனம், மருத்துவமனை நடத்துவோர், காகிதம், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், பட்டாசு, மின்சார, மின்னணு சாதனங்கள், தோல் தொழிலில் உள்ளவர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் தாராள லாபம் உண்டு. தொழிலதிபர் சங்கங்களில் பதவி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.
  • வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, அரிசி, எண்ணெய், பட்டாசு, மருந்து, தீப்பெட்டி, கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மினரல் வாட்டர் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி லாபம் உயரும். வியாபார சங்கங்களில் சிலருக்கு கவுரவமான பதவி வரும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட அதிக லாபமும் முந்தைய பாக்கி வசூலாவதுமான நற்பலன் நடக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி பணிகளை செவ்வனே நிறைவேற்றுவீர்கள்.
  • பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக நடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள்.
  • பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப்பெறுவர். குடும்பசெலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர். உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும் 
  • மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர், மேனேஜ்மென்ட், வணிகம், கலை, ஜர்னலிசம், தொழில்நுட்ப மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலை மாணவர்களுக்கும் படிப்பு சிறப்பாக இருக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர். படிப்பை முடித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • அரசியல்வாதிகள்: கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்துசேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் வியந்து
போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும்.புத்திரர்களால் அரசியலில் உதவி உண்டு.
  • விவசாயிகள்: விவசாயப்பணி சிறந்து அபரிமிதமான மகசூல்வரும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு.கூடுதல் நிலம் வாங்க அனுகூலம் உண்டு.
  • பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் தொழில் சிறந்து சமூக அந்தஸ்து உயரும்.
  • செல்ல வேண்டிய தலம்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்.
  • வக்ர கால பலன்
  • 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் உங்கள் செயல்திறனில் சற்று சரிவு ஏற்படும். விலகிச் சென்ற உறவினர் விரும்பி வந்து நட்பு கொள்வர். இயன்ற அளவில் சமூகப்பணியிலும் ஈடுபடுவீர்கள். பணவரவு அதிகம் பெற புதிய வழி ஏற்படும். குடும்பத்தில் நடத்த வேண்டிய சுபநிகழ்ச்சி சீரும், சிறப்புமாக நிறைவேறும். புதிய வீடு, வாகனம் விரும்பியபடி வாங்குவீர்கள். உடல் நலம் நல்லவிதமாக இருக்கும். புத்திரர்களின் செயல்திறன் வளரும். புகழ்பெறும் வகையிலான செயல்களைச் செய்வீர்கள். எதிரிகள் உங்கள் வளர்ச்சி கண்டு விலகி ஓடுவர். தொழில், வியாபாரத்தில் வளம் சிறந்து அதிக அளவு லாபத்தை பெற்றுத் தரும். பணியில் உள்ளவர்கள் உயர்பதவி, பொறுப்பு எளிதில் கிடைக்கப் பெறுவர். பயணங்களின் போது பாதுகாப்பு நடைமுறையில் கவனம் வேண்டும். 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்