Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 11 மார்ச், 2012

குல தெய்வம் தெரியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும்? ஜோதிடர் ஆர் ராவணன்


                                      பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

                           அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்

பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை  முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம்.

சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.
சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.
குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம்.

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.
குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை,  இந்தியாவில் தமிழகத்தில் கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்கை கோயிலுக்கு செல்ல வேண்டும்.  ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாரம்.     




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்