Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 26 நவம்பர், 2011

ஜோதிடத்திற்கும் அரசமரத்திற்க்கும் தொடர்பு உண்டா?

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்ற பழமொழி சொல்வார்கள். அந்த பழமொழிக்கு உண்மையான விளக்கம், குழந்தை பாக்கியம்  இல்லாத பெண் ஒருவள் அரச மரத்தை சுற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்று yaaro  சொன்ன கருத்தைக்கேட்டு , கணவனிடம் ஒன்றாக இருப்பதை விட்டுவிட்டு அரச மரமே கதி என்று  அரசமரத்தையே  சுற்றிவந்தாள். கணவனிடம் ஒன்றாக இணைந்து இருந்தால்தானே குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுதான் இந்த பழமொழிக்கு உண்மையான விளக்கம். 

ஜாதகத்தில் புத்திரக்காரன் என்று சொல்லக்கூடிய குருவும். லக்னத்துக்கு ஐந்தாம் இடது அதிபதியும். பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது. 

 அரச மர  குழந்தை பாக்கியம். 

திருமணமாகி பல ஆண்டுகளாகி குழந்தை செல்வம் கிடைக்காத பெண்மணிகள்  சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து நல்லாடை உடுத்தி வேம்பும் அரசமரமும் உள்ள இடத்தை 108 முறை வலம்வந்தால் அங்கு கிடைக்கும் காற்றில் கலந்திருக்கும் கலந்திருக்கும் ஓசோன் என்ற மருத்துவ குணமுடைய சக்தி கர்ப்ப பையில் உள்ள கோளாறை நீக்கி விடுகிறது. மேலும் அரசமரம் வெளியிடும் காற்றில் செனட்டோனியம் என்ற வேதிப்பொருள் உள்ளதால் பெண்களின் கர்ப்ப பையில் உள்ள குறைகள் நீங்கி கரு முட்டை உற்பத்தியாகி கர்ப்பம் உண்டாவதற்கு வழி வகுக்கிறது.  
மருத்துவ பரிசோதனையில் அரச மரம் ஒரே நாளில் 1800 கிலோ கரியமில வாயுவை பெற்று 2400  கிலோ பிராண வாயுவை வெளியேற்றுகிறது என சொல்லப்படுகிறது.  இதன் வேர் பிரம்மனையும், நடுமரம் விஷ்ணுவையும், கிளை சிவபெருமானையும், குறிப்பதாகும். இதை வணங்கி வந்தால் , படைக்கும் கடவுளான பிரமாவையும், காக்கும் கடவுளான, விஷ்ணுவையும், அழிக்கும் கடவுளான சிவபெருமானையும், ஆக மும்மூர்த்திகளையும் வணங்குவதற்கு ஒப்பாகும் என்பதே இதன் பொருளாகும். எனவே அரச மரம் ஜோதிடத்தோடு தொடர்பு பெற்று குழந்தை பாக்கியம் பெறுவதற்கு , வழி செய்வதால் அரச மரத்திற்கும் , ஜோதிடத்திற்கும் தொடர்பு உண்டு என்று சொல்லலாம்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்