Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 25 நவம்பர், 2011

திருமணமே ஆகாத கிரக நிலை உண்டா?

ஒவ்வொரு  மனிதனும் எந்தெந்த கால கட்டங்களில் எதை செய்ய வேண்டுமோ  அந்த காரியங்களை சரியான கால கட்டங்களில் செய்தால்தான் அவனை  சமூகம் ஒரு அந்தஸ்து உள்ள மனிதனாக பார்க்கிறது. அந்த வகையில் திருமண வயதை ஒரு நபர் எட்டும் பொழுது அதற்குரிய கால கட்டங்களில் அவர் திருமணம் செய்தால்தான் அவருக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. ஒரு சில பேருக்கு திருமண பேச்சை எடுத்தாலே அவருக்கு அதில் விருப்பமே இல்லாமல் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல்  காலத்தை கழித்து விடுவார்கள். திருமணமே நடக்காத கிரகநிலை கொண்ட அமைப்புகளை  இப்பொழு பார்க்கலாம்.  

உப பதா லக்னம் ஜைமினி மகரிஷியின்  திருமண வாழ்க்கையை குறிக்கும் லக்னமாகும். பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து பன்னிரண்டாம் அதிபதி இருக்கும் இடம் வரை எண்ணி, எண்ணிவந்த  எண்ணை பன்னிரண்டாம் அதிபதி இருக்கும் இடத்தில இருந்து எண்ண வரும் ராசியே உபபதா லக்னமாகும். உபபதா லக்னம், அதற்க்கு இரண்டாம் பாவம், உபபதா லக்னத்திற்கு ஏழாம் பாவம், இவற்றோடு பாவ கிரகங்கள் சம்பந்தப்ப்படுமானால் கடைசிவரை திருமணமே நடைபெறாத சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துவிடும். 

உதாரண ஜாதகம்

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஜாதகம்.    

ரிஷப லக்னம். விருச்சிகராசியில் இவர் பிறந்துளார். லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில சுக்ரன்,சந்திரன், புதன்,மூவரும். மூன்றாம் இடத்தில குருவும், சூரியனும். லக்னத்துக்கு நான்காம் இடத்தில கேது. லக்னத்துக்கு ஆறாம் இடத்தில செவ்வாய்.லக்னத்துக்கு பத்தாம் இடத்தில ராகுவும் இல்ல கிரக அமைப்பாகும்.  
இதில் உப பதா லக்னம் காணும் முறை.  

பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து பன்னிரண்டாம் பாவாதிபதி புதன் ரிஷபத்தில் இருக்கும் இடம் வரை எண்ணி  எண்ணி வந்த ராசி 3 . ரிஷபத்தில் இருந்து 3  ஆவதாக எண்ண வரும் ராசி மகரம்  இதில் மகர ராசியே உபபதா லக்னமாகும். உபபதா லகன்த்தில் கேது, உபபதா லக்னத்திற்கு ஏழாம் இடத்தில ராகு, அதற்க்கு இரண்டாம் பாவத்தை சனி பார்க்கின்றார். உப பதா லக்னம் ஒன்று, இரண்டு, ஏழு, இம் மூன்றும் சனி ராகு, கேதுவால்  , பாதிக்கப்படுவதால் திருமணமே செய்து கொள்ள முடியாத சூழ்நிலையை இந்த கிரக அமைப்புகள் உருவாக்கி கொடுத்து இருக்கிறது.  
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்