Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 28 டிசம்பர், 2011

2012 புத்தாண்டு விருச்சிக ராசி பலன்கள்

0 comments
விருச்சிகம்
விசாகம் 4  ஆம் பாதம், அனுஷம்,  கேட்டை நட்சத்திரங்களில் பிறந்த விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு
ஜனவரி
மாத ஆரம்பமே சுறுசுறுப்பாகவும் உற்சாகம் நிறைந்தும் காணப்படும்.கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். வழக்கு விவகாரங்கள்,வியாஜ்ஜியம் இவற்றில் சாதகமான பலன் கள் உண்டாகும். உள்ளபடி கூறினால்உங்களுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் காத்திருக்கிறது. ஆனால் ஒன்று, அதிகசெலவு ஆவதைத் தவிர்க்க முடியாது. உடல்நலக் குறைவு ஏதும் ஏற்படாது.சிற்றின்பக் கேளிக்கைகளுக்கு குறைவே இல்லை. கணவன்- மனைவி உறவு இனிமையாகஇருக்கும். பெண்களின் பொருட்டு ஒருசில செலவினங்களை ஏற்க வேண்டி இருக்கும்.
பிப்ரவரி
குழந்தைகளின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். அவர் களின் கல்விவளர்ச்சியும் குறைவின்றிக் காணப்படும். பணவரவு பரவாயில்லை. ஒருசில பழையகடன்களை இப்போது பைசல் செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாகஇருக்கும். வீடு, நிலம் போன்றவை பிரச்சனைகளிலிருந்து சமாளிக்கப்படும். ஒருசிலர் புதியதாக நிலம் வாங்கவோ அல்லது பழைய நிலத்தை அபிவி ருத்தி செய்யவோமுடியும். விவசாயிகளுக்கு அனேக சலுகைகளும் உதவியும் கிடைக்கும். வண்டிவாகனம் வைத்திருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். சிலருக்குரிப்பேர் செலவு ஏற்படலாம்.
மார்ச்
வாழ்க்கையின் தலையாய பிரச்சினைகளில் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம்.ஒரு சிலருக்கு சுபகாரிய நிகழ்ச்சிகளும் அளவுக்கு மீறிய செலவுகளும்உண்டாவதில் வியப்பில்லை. சுய கவுரவம், மரியாதை, புகழ் இவற்றை நிலைநாட்டஅக்கறை செலுத்துவீர்கள். சிலருக்கு வெளியூர் வேலையும் அல்லது கடல் கடந்துவெளிநாட்டு வேலையும் ஏற்படலாம். உறவினர்களின் போக்குவரத்தால் தங்களுக்குதிருப்திகரமான நிலைமை இருப்பி னும், அவர்களால் சிறு செலவினங்களும் உண்டு.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று கடினப் போக்கு தென்பட்டாலும், நல்லபெயரும் புகழும் பாதிக்காது.
ஏப்ரல்
வியாபாரிகளுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக அமைகிறது. ஏஜென்ஸி மற்றும்காண்ட்ராக்டர்களுக்கு பழைய வேலைகளை முடிப்பதில் சிறிது கெடுபிடிஇருக்கும். லைசென்ஸ், பெர்மிட் போன்றவை சிறிது அலைச்சலின் பேரில்கிடைக்கும். கலைஞர்களுக்கு இது நல்ல திருப்பமான மாதமாக அமையும்.தொழிலாளர்களுக்கும் நன்மை மிகுந்து காணப்படும். தொழில் லாபமும் ஏற்படும்.வீடு, நிலம் இவற்றில் சற்று பிரச்சினைகள் காணப்படும். அதைக்கஷ்டப்பட்டுத்தான் சமாளிக்க வேண்டும். மேலும் பாகப்பிரிவினை ஏற்படவாய்ப்புண்டு. அப்போது சற்று கவனமுடன் செயல்பட வேண்டும்.
மே
இதுவரை நீங்கள் செய்யாத ஒரு புதிய முயற்சியில் இறங்குவதோடு அதில்வெற்றியும் காணலாம். மனோ தைரியத் துடன் செயல்படவும். வெற்றி வாய்ப்புஉங்கள் பக்கம். பண விவகாரங்கள் நன்றாக அமையும். கேட்ட இடத்தில் கடன்கிடைக்க நிச்சயம் வழியும் வகையும் உண்டு. உங்கள் தாய்மாமன் பொருட்டு சிலசெலவுகள் செய்ய நேரும். சிலர் புதிய கட்டிடம் வாங்கவோ அல்லது பழையகட்டிடத்தைப் புதுப்பிக்கும் பணி களிலோ ஈடுபடலாம். நண்பர்களால் நன்மையும்அதேசமயம் சலிப்பும் உண்டாகும். கருத்து வேற்றுமைக்கு இடம் கொடுக்கவேண்டாம்.
ஜூன்
பணவரவு- பொருள் வரவு நன்றாக இருக்கும். மன மகிழ்ச் சிக்கும் குறைவில்லை.நீங்கள் அடையும் வெற்றிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் கடுமையாகப்பாடுபடுவீர்கள். அதன் மூலம் புகழப்படுவீர்கள். மேலும் சகோதர சகோதரிகள்மூலமாக அனேக உதவிகளைப் பெறுவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை உண்டு.குடும்பத்தில் சில மனச்சங்கடமான நிகழ்வுகள் நடைபெறும். அதைச் சமாளிக்கவேண்டும். விவசாயிகளுக்கு நல்ல வளமான சூழ்நிலை உள்ளது. விவசாயத்தின்பொருட்டு கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும். கடன் கேட்ட இடத்தில்கிடைக்கும்.
ஜூலை
மாத ஆரம்பத்தில் சற்று தேக்கநிலை காணப்பட்டு பிற்பகுதி யில் மிகவும்சுறுசுறுப்பைத் தரும். உடல்நலம் பரவாயில்லை. பண வரவுகட்டுக்கடங்கியுள்ளது. கடன்காரர்களின் தொல்லை சிறிது பாதிக்கும்.மனக்கஷ்டத்தைக் கொடுக்கும். உங்களுக்கு வர வேண்டிய பாக்கிகளில் ஏதேனும்ஒன்று வசூல் ஆகும். அதை வைத்து நெருக்கடியான கடன் சூழ்நிலை ஒன்றுஅடைபடும். வீட்டை விரிவுபடுத்த முயற்சிப்பவர்களுக்கு நல்ல தருணமாகஅமையும். வீட்டை விற்க நேரிடுபவர்கள் நிதானமாகச் செயல் படவும்.குழந்தைகளின் உடல்நலன் நல்லபடியாக அமையும்.
ஆகஸ்ட்
குழந்தைகளின் கல்வியில் முற்போக்கான நிலைமை தெரியும். அவர்களின்சந்தோஷத்திற்காக எங்காவது ஓரிரு நாட்கள் சிறு சுற்றுலா சென்று வரலாம்.வழக்கு விவகாரங்களில் சற்று முன்னேற்றம் காணப்படும். இருந்தும்இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுநல்ல மாதமாக அமையும். நல்ல பல அனுகூலங்களைச் சந்திப்பீர்கள். சகஊழியர்களிடம் இதுவரை இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி நல்ல ஒற்றுமைஏற்படும். வியாபாரிகளுக்கு சுமாராக வியாபாரம் இயங்கும். லாபமுமில்லாமல்நட்டமுமில்லாமல் மிதமான போக்கில் போய்க் கொண்டிருக்கும்.
செப்டம்பர்
மனநலத்துடன் உடல்நலமும் நல்லபடியாக அமையும். எதி லும் சற்று அதிகமாகவேமுயற்சிகள் தேவைப்படும். கடின உழைப் புக்குப் பிறகே உங்களுக்கு சாதகமானபலன்கள் அமையும். மாத ஆரம்பத்தில் சிறிதளவு பணவரவு இருக்கும்.பிற்பகுதியில் எதிர் பாராத வகையில் கடன் சுமை அதிகமாகலாம். சற்று நிதானத்துடன் பொறுமையாக யோசித்துச் செயல்பட வேண்டும். பூர்வீகச் சொத்துசம்பந்தமாக வரும் பிரச்சினைகளை சற்று செலவு செய்து தான் சமாளிக்கவேண்டியது வரும். குழந்தைகளின் உடல்நலம் பொருட்டு சிறிது செலவினம்காணப்படும்.
அக்டோபர்
சில வீண் விரயங்களைச் சந்திக்க நேரும். கணவன்-மனை விக்குள் ஒருசிலகருத்து வேற்றுமைகள் தென்படும். இறுதியில் சகஜ நிலைக்கு மாறிவிடும். சிறுசிறு சலசலப்புகள் தான் அவை. மனைவி வழி உறவினர்கள் மூலம் சில உதவிகள்கிடைக்கும். மனைவியும் தாய்வீடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.நண்பர்களின் அன்பும் ஆதரவும் பெருகும். ஒரு சில நண்பர்களின் உதவி கொண்டுதங்களின் தலையாய பிரச்சினைகளைத் தீர்க்கும் சூழ் நிலை உருவாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இடப்பெயர்ச்சியும் பதவிஉயர்வும் கிடைக்கும். வங்கிகடன் மூலம் புது வாகனம் வாங்குதல் அல்லது வீடுபழுது பார்க்கும் நிலை ஏற்படும்.
நவம்பர்
எந்த ஒரு நிகழ்ச்சியும் உங்களை பாதிக்காததுபோல் தோற்ற மளிக்கக் கூடியமாதமாக இருக்கும். பணவரவு பரவாயில்லை. தங்களின் பழைய கடன்கள் சிலவற்றைஅடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படும். கணவன்- மனைவி உறவு சகஜமாக,சந்தோஷமாக, இனிமையாக இருக்கும். மனைவியின் ஆடம்பரப் பொருட்களுக்காகவும் மனமகிழ்ச்சிக்காகவும் நீங்கள் செலவு செய்ய நேரிடும். தொலைதூரப் பயணங்களால்அலைச்சலும் திரிச் சலும் ஏற்படும். அதைத் தவிர்ப்பது நல்லது. தாயாரின்உடல்நிலை சற்று பாதிக்கப்படும். அதன்மூலம் மருத்துவச் செலவும் ஏற்படும்.
டிசம்பர்
தொழிலாளர்களுக்கு மிக நல்ல திருப்பமாக அமையும். இதுவரை உழைப்புக்கேற்றஊதியம் இல்லாமல் இருந்த நிலை மாறி ஊதியம் உங்களின் திருப்திக்கேற்றபடி-உழைப்புக்கேற்றபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லசாதகமான பலன்களே அமைகிறது. பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு, இதுவரை இழுபறியாக இருந்த பதவி உயர்வும் விரும்பியஇடப்பெயர்ச்சியும் ஏற்படும். வியாபாரிகளுக்கு இதுவரை நின்றிருந்த நிலுவைபாக்கிகள் வசூல் ஆகும். மேலும் புதிய வியாபார அணுகுமுறையும் உருவாகும்.எதிர்பார்த்த இனங் களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
Continue reading >>

அர்த்த நாரிஸ்வரர் தத்துவம் என்ன?ஜோதிடர் ராவணன் பதில்கள்

0 comments
சிவ பெருமான் கொண்டருளிய திருமேனிகளில் அர்த்த நாரிஸ்வரர் திருமேனியும் ஒன்று. அர்த்த நாரிஸ்வரர் திரு உருவத்தையே அம்மையப்பர் என்றும் , சிவசக்தி என்றும் கூறுவார்கள். இறைவன் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாக கொண்ட திருவுருவமே அர்த்த  நாரிஸ்வரர் திருவுருவம். அர்த்த நாரிஸ்வரர் என்பது அர்த்தம் + நாரி + ஈசுவரர் என அமையும்.  
சமஸ்கிருதத்தில் அர்த்தம் என்பதற்கு பாதி என்றும். நாரி என்பதற்கு பெண் என்றும் பொருள். அதாவது ஈஸ்வரன் தன்னுடைய திருவுருவத்தில் பாதி பெண் உருவம் கொண்டவர் என்பது பொருள். இத்திருவுருவம் இறைவனே உலகுக்கும் உலக உயிர்களுக்கும் தாயாகவும், தந்தையாகவும் அம்மையாகவும் அப்பனாகவும் சிவமாகவும் சக்தியாகவும் விளங்குகிறார் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது.
Continue reading >>

2012 ஆங்கில புத்தாண்டு துலாம் ராசி பலன்கள்

0 comments

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP  AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.

துலாம்
சித்திரை – 3 , 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் முதல் மூன்று பாதங்களில் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு
ஜனவரி
இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்தே காணப்படும். மாமியார்- மருமகள்சச்சரவுக்கிடையே நீங்கள் மாட்டிக்கொண்டு விழிப்பீர்கள். தாய் சொல்வதைக்கேட்பதா அல்லது மனைவி சொல் வதைக் கேட்பதா என்ற குழப்ப நிலை நிலவும்.இருவரது பேச்சிலும் நியாயம் தெரிந்தாலும் யார் பக்கம் பேசுவது என்றுநீங்கள் குழம்பு வீர்கள். வீட்டில் உள்ள பிரச்சினையால் வெளியில்தொழிலையும் சரிவர இயக்க முடியாமல் அவதிப்பட நேரிடும். கூட்டுக் குடித்தனம்இருப்பதா? அல்லது தனிக் குடித்தனம் போவதா என்ற கேள்விக்குறி யான நிலைஉருவாகும். தனியாகப் போவதற்கு வசதி வாய்ப்புகள் பற்றாத சூழ்நிலை.மொத்தத்தில் மௌனத்தை அதிகம் கடைப்பிடிப் பது நல்லது.
பிப்ரவரி
கடந்த மாத அனுபவம் ஒரு நல்ல திருப்பமாக இருக்கும். புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கலாம். அதற்கான வாய்ப்பும் சூழ்நிலையும் உருவாகும்.தொழிலுக்கான வெளியூர் பயணங்களும் நன்மை தரும். பொருளாதாரப்பற்றாக்குறையும் நீங்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் தேடி வரும்.கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, அந்நியோன்யம் அதிகரிக்கும். மாமியார்-மருமகள் இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மாறி ஒருமித்த கருத்துகள்தோன்றும். சேர்ந்து இருப்பதா அல்லது தனியாகச் செல்வதா என்ற குழப்பத்திற்குஒரு முடிவு பிறக்கும். “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதைக்கருத்தில் கொள்ளவும்.
மார்ச்
திருமணமாகியும் நல்லதொரு நிலையான வருமானம் இல்லையே என்றுபுலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இனி நல்ல காலம் தொடங்கும். தந்தையின்பொருளாதாரத்தையும் வருமானத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தஇளைஞர்களுக்கு, தனியாகத் தன் சொந்தக்காலில் நிற்கும் வாய்ப்புகள்உருவாகும். தனது சம்பாத்தியத்தில் இனி தாய்- தந்தையரை நல்ல முறையில்கவனித்துக் கொள்ளலாம். பூமி, வீடு, வாகன யோகம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் புதிய நண்பர் களின் கூட்டணி வெற்றியைத் தரும். பங்குதாரர்களைஅனுசரித்து நடந்துகொண்டால் கூட்டு முயற்சி நல்ல முறையில் முன்னேற்றம்தரும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும். மனமகிழ்ச்சி உண்டாகும்.
ஏப்ரல்
இளைய சகோதரர் வகையில் நல்லதொரு தகவல் கிடைக்கும். சகாய உதவிகளும்உண்டாகும். திருமணமாகாத இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் திருமண வாய்ப்புகூடிவரும். திருமணமான வர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.உடல்நலனில் ஆரோக்கியம் தென்படும். இதுவரை இருந்து வந்த இடைஞ்சல்களும்இன்னல்களும் மாறி மகிழ்ச்சியும் குதூகலமும் பிறக்கும். விக்ருதிவருடப்பிறப்பு நல்ல ஒரு இனிய புத்தாண்டாக அமையும். பிள்ளைகள் வகையில்நன்மையும் நன்மதிப்பும் உருவாகும். நின்றுபோன கட்டிட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தேறும்.
மே
அதிக செலவினங்களைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். எது அவசியம் மற்றும்அநாவசியம் என்று பிரித்து செலவு செய்வது நலம் மற்றவர்களின்முன்பகட்டுக்காகச் செய்யும் செலவுகளைத் தவிர்த்தல் நலம். ஒரு சிலர் தொலைதூரப்பயணங்களை மேற்கொள்வர். மற்றும் சிலர் அயல்நாடுகளுக்குப் போகவும்சந்தர்ப்பம் கிடைக்கும். எது நடப்பினும் சற்று திடச்சித்தத்துடன்பிரச்சினைகளை எதிர்நோக்கிச் செய்வது நல்லது. பணவரவு நல்ல முறையில்அமையும். கொடுக்கல்- வாங்கல் சற்று சுமாரான முறையில் இயங்கும்.உறவினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
ஜூன்
வீடு, நிலம் போன்றவை நல்ல முறையில் அமையும். சில பிரச்சி னைகளின் பொருட்டுஅலைச்சலும் அநாவசிய தொந்தரவுகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றிவாய்ப்பு உண்டு. வழக்கு, விவகாரங்களில் சற்று நிதானம் தேவை. விவகாரங்கள்கட்டுக்கடங்கிக் காணப்படுவதுபோல் இருந்தாலும் அது உண்மை அல்ல. வண்டி,வாகனம் வைத்திருப்போருக்கு அதன் பழுது பார்க்கும் செலவுகள் அதிகமாகவேகாணப்படும். புதிய வாகன முயற்சிகளை சற்று தள்ளிப் போட்டு, இருப்பதை வைத்துநிறைவு செய்வதே நலம். ஏஜென்ட் மற்றும் காண்ட்ராக்டர்களுக்கு முக்கியஒப்பந்தம் கையெழுத்தாகும்.
ஜூலை
கணவன்- மனைவி உறவு நன்றாக இருக்கும். கருத்து ஒற்றுமை காணப்படும்.மனைவியின் பொருட்டு உங்களின் பணம் செலவு ஆவது குறிப்பிடத்தக்கதாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது முன்னேற்றமான மாதமாக அமையும். இதுவரைவராத பதவி உயர்வு இப்போது வருவதற்கு வழியுண்டு. மேலதிகாரிகளிடம் சற்றுநல்ல விதமாக நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு மந்தமான நிலையும்வியாபாரத்தில் தேக்கமும் காணப்படுகிறது. சில நாட்களுக்கு இது நீடிக்கும்;நிரந்தரமல்ல. உறவினர் வகையில் சிறிது ஏமாற்றமும் செலவும் ஏற்படவாய்ப்புண்டு.
ஆகஸ்ட்
எதிர்காலத் திட்டங்கள் இனிமையாக ஆரம்பம் ஆகும் நேரமிது. கடின உழைப்புதேவை. நிச்சய வெற்றி உண்டு. உடல்நலம் நன்றாக உள்ளது. குடும்பத்தில் அதிகசெலவினங்கள் ஏற்பட்டாலும் அது சமாளிக்கும் வகையில் அமையும். ஒரு சிலருக்குஅந்தச் செலவு மருத் துவச் செலவாக அமையும். சிலருக்குத் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளின் செலவாக அமையும். யாருக்கு எந்தச் செலவு என்பதுஅவரவர் ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து நடைபெறும். வண்டி வாகன வகையில் சற்றுதிருப்திகரமான நிலை உள்ளது.
செப்டம்பர்
சுயமரியாதையும் கௌரவமும் நன்றாக உள்ளது. உங்களை இகழ்ந்தவர்கள்கூட உங்களைஇப்போது புகழ ஆரம்பிப்பார்கள். உங்கள் சொல்லுக்கு அதிக மதிப்பும்மரியாதையும் உண்டாகும். உங்க ளின் நீண்டகாலத் திட்டங்களும் வாழ்க்கைக்குத்தேவையான வசதி வாய்ப்புகளும் உருவாகத் தொடங்கும். உங்கள் கூடவே இருந்துஉங்க ளுக்கு ஜால்ரா அடித்தவர்களும், உங்களை குழியில் தள்ளப்பார்த்தவர்களும் இனி தானாகப் பிரிந்து சென்றுவிடுவர். பணவரவும் நல்லமுறையில் அமையும். கொடுக்கல்- வாங்கல், ஸ்பெகுலேஷன்துறை ஆகியவை சிறப்புடன்நடைபெறும்.
அக்டோபர்
மணமகிழ்ச்சியான வாரம். சிறு பயணங்களும் கேளிக்கை, பொழுதுபோக்குபோன்றவையும் மலிந்து கிடக்கும் மாதம். பெண் களிடத்தில் உங்களுக்கு அதிகமதிப்பு உண்டாகும். இருப்பினும் அவர் களிடத்தில் சற்று கவனமுடன் இருக்கவேண்டும். கடன் பிரச்சினைகள் குறைந்து கொண்டே வரும். நண்பர்களுக்காக சிலபிரச்சினைகளில் தலையிட்டு சிரமத்தின் பேரில் சமாளிக்கப்படும். நீங்கள்எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் தக்க சமயத்தில் உங்கள் கைக்கு வந்துசேரும். உறவினர்களின் மூலம் மனக்கஷ்டம் வரும். வீடு, நிலம் போன்றவற்றில்எந்தக் குறையும் வராது.
நவம்பர்
சகோதர சகோதரிகளால் நன்மையும் ஆதாயமும் உண்டு. அலுவல் நிமித்தமாக தொலைதூரப்பயண அலைச்சல்கள் உருவாகும். ஆயினும் அவை நல்ல பலன்களைத் தரும். வீடு,நிலம் போன்றவை நலனைத் தரும். வண்டி வாகனம் வைத்திருப்போர் பழைய வாகனத்தைமாற்றி புதிய வாகனத்தை வாங்கலாம். சிலர் கார் அல்லது வேனை வாங்கி டூரிஸ்ட்இயக்கத்திற்கு செயல்படுத்தலாம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்குமத்திமமான பலனைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். அதிக பொறுப்புகளும்வேலை பளுவும் காணப்படும். மேலதிகாரிகளிடம் சற்று ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவும்.
டிசம்பர்
இந்த மாதம் பணவரவு நன்றாக இருப்பதால், அதன் மூலம் ஏற்கெனவே இருந்து வந்தசிறுசிறு தொந்தரவுகளை நீக்கி விடலாம். போதுமான பணவசதியும் பெரியோர்களின்ஆதரவும், ஒத்துழைப்பும் நிச்சயம் உண்டு. சுயகௌரவமும் மரியாதையும்காப்பாற்றப்படும். பெண்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பணவிஷயமாகயாருக்கும் வாக்குறுதி ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்டாம். குடும்பத்தில்செலவுகள் காணப்பட்டாலும் அது அவசியமான செலவுகளாகத்தான் அமையும். பிள்ளைகள்வகையில் நன்மையும் ஏற்படும். அவர்களின் கல்வி நல்ல முறையில் அமையும்
Continue reading >>

2012 ஆங்கில புத்தாண்டு சிம்ம ராசி பலன்கள்

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 
 
சிம்மம்
மகம் , பூரம் , உத்திரம் முதல் பாதம் நட்சத்திரங்களில் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு …….
ஜனவரி
எல்லா விவகாரங்களும் வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கம் நன்றாகஇருக்கும். கொடுக்கல்- வாங்கல் நாணயத்தின் பேரில் நடக்கும். வசூலாகவேண்டிய பழைய கடன்களில் ஒன்று வசூல் ஆகும். உறவினர் கள் மூலம் உதவிகிடைக்கும் வாய்ப்புள்ளது. இளைய சகோதரர் மூலம் ஆதாயமுண்டு. பொருளாதாரம்நல்ல முறையில் அமையும். வியாபாரி களுக்கு லாபம் உண்டாகும். ஏஜெண்ட்மற்றும் காண்ட்ராக்டர் களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் விரைவில் வந்துசேரும்.
பிப்ரவரி
மனைவியின் உடல் நலத்தில் சற்று ஆரோக்கியக் குறைவு காணப்படும். தடைப்பட்டபயணங்கள் மீண்டும் தொடரும். பூர்வீகச் சொத்து வகையில் வழக்குவியாஜ்ஜியங்களில் வெற்றி காணப்படும். பாகப்பிரிவினை போன்றவை ஏற்படவும்வாய்ப்புண்டு. போட்டி, பந்தயங்கள் சுமாராக இருக்கும். பணவரவு திருப்திஅளிக்கக்கூடிய வகையில் இருக்கும். கேளிக்கைகள், பொழுதுபோக்குநிகழ்ச்சிகளில் அதிக நாட்டம் கொள்வீர்கள். குழந்தைகளின் உணவு விஷயத்தில்சற்று கவனம் தேவைப்படும். வீண் அலைச்சலும் செலவினங்களும் ஏற்படுவதைத்தவிர்க்க இயலாது.
மார்ச்
எதிலும் கடுமை, எதிலும் போட்டி என்னும் சுபாவத்தை சிறிதுமாற்றிக்கொள்ளவும். எல்லாம் நல்ல விதமாக நடக்கும். மாதத்தின் முற்பகுதிநன்றாக இருக்கும். பணவரவு ஓரளவு நன்றாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்நல்ல முறையில் திருப்தியாக அமைய வாய்ப் பில்லை. மாதப் பிற்பகுதியில்பணப்புழக்கம் சற்று சரளமாகக் காணப் படும். வண்டி, வாகனம் வாங்கிவிற்போருக்கு நல்ல லாபகரமான மாதமாக அமையும். வழக்கு விவகாரம் எதிர்பாராததிருப்பத்தைப் பெற்றாலும் முடிவு இழுபறியாக இருக்கும்.
ஏப்ரல்
பொதுவாக உங்கள் பெயரும் புகழும் ஓங்கும். நன்மதிப்பைப் பெற்றுத் தரக்கூடியமாதமாக இருக்கும். பணவரவு சுமாராக இருக்கும். பதவி உயர்வுஎதிர்பார்ப்பவர்களுக்கு சற்று தாமதமாகும். கடன் தொல்லை படிப்படியாகக்குறையும். வழக்கு விவகாரங்கள் எதிர்பாராத வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு நல்ல தகவல்கள்கிடைக்கும். உறவினர்களிடையே சகஜமான போக்கு காணப்படும். கூட்டுவியாபாரிகளுக்கு நல்ல கால கட்டமாகும். பழைய ஒப்பந்தங்கள் மட்டும் முடிவுபெறாமல் இழுபறி யாக இருக்கும்.
மே
கடந்த மாதத்தில் குறைந்து வந்த கடன் தொல்லை மீண்டும் தொடரும்.எதிர்ப்புகள் உள்ள மாதமாக நிகழும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும்.அடிக்கடி ஏற்படும் சிறுசிறு பயணங்கள் தவிர்க்க முடியாதவையாக அமையும்.தாயாரின் உடல் நலனில் சற்று கவனமும் அக்கறையும் தேவை. உறவினர்கள் மூலம்செலவும் அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். தாய்மாமன் வழிஉறவால் மனசஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. போட்டி, பந்தயத்தால் லாப மில்லை.வண்டி வாகனத்தால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகமும் பழையநண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
ஜூன்
மனஅமைதியைக் கெடுக்கும் அளவுக்கு அதிருப்தியைக் கொடுக் கும் தகவல்கள்கடிதங்கள் மூலம் வந்து சேரும். பொருளாதார நிலை சற்று சுமாராகவே உள்ளது.உறவினர்களின் சகஜப் போக்கில் சிறுசிறு மாறுதல்கள் தென்படும். உடல்நலக்குறைவால் மருத்துவச் செலவு ஏற்படும். தூர தேசப் பயணங்களைத் தவிர்ப்பதுநல்லது. வீடு, நிலம் போன்றவற்றால் திருப்தியற்ற சூழ்நிலை உருவாகலாம்.மாதப் பிற்பகுதி யில் கடன் மூலமாக ஒரு தொகை வந்து சேரும். எதிர்பாராதசெலவினங் கள் காணப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சற்று கவனமுடன்இருப்பது நலம்.
ஜூலை
உங்கள் பிரச்சினைகளைத் தவிர மற்றவர்களின் பிரச்சினைகளில் மிகத் தீவிரமாகஈடுபடுவீர்கள். காண்ட்ராக்டர்களுக்குப் பழைய ஒப்பந் தங்களால் சிறிதுதொல்லையுண்டு. வியாபாரிகளுக்கு சற்று சிரமமான சூழ்நிலையே உருவாகும்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல மாதமாக அமைகிறது. பணவரவு சற்றுசுமாராகவே காணப்படும். கொடுக்கல்- வாங்கல் நாணயத்தின் பேரில் நடைபெறும்.எதிர்பாராத தன லாபங்களும் உண்டு; சங்கடங்களும் உண்டு. பிறரால் நன்குபாராட்டப் பெறுவீர்கள். கௌரவம், புகழ் ஆகியவை மேன்மேலும் உயரும்.
ஆகஸ்ட்
தந்தையின் ஸ்திர சொத்துக்களால் தங்களுக்கு லாபமுண்டு. பாகப்பிரிவினை போன்றநிகழ்ச்சிகள் தங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் பெயரும் புகழும்நிலைநாட்டப்படும். பதவி உயர்வுக்கான வழிமுறைகள் தெரிகிறது. பணவரவு நல்லமுறையில் செயல்படும். பொருளாதாரப் பற்றாக்குறைக்கு இடமில்லை. வேலைக்காரர்களால் நன்மை உண்டு. வளர்ப்புப் பிராணிகளால் சிறுசிறு தொல் லைகள்ஏற்படும். கடன் தொல்லை குறைய ஆரம்பிக்கும். மனைவி வகையில் சில நன்மைகள்நடைபெறும். குழந்தைகளின் உடல்நலம் சற்று பாதிக்கப்படும்.
செப்டம்பர்
இழந்த பொருட்கள் அல்லது பணம் ஆகியவற்றை மீண்டும் பெறும் வாய்ப்புஉருவாகும். கடன் தொல்லைகளால் பாதிப்பு ஏற்ப டாது. பணப் புழக்கமும் சற்றுசுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங் கல் நாணயத்தின் பேரில் நடக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று சங்கடமான சூழ்நிலை உருவாகும். சகஊழியர்களிடம் ஜாக்கிர தையாகப் பழக வேண்டும். உங்களிடமே டீ வாங்கிக்குடித்துவிட்டு உங்களைப் பற்றியே மேலதிகாரிகளிடம் புகார் செய்பவர்களாகஇருப்பார்கள். மாதப் பிற்பகுதியில் வரும் பணவரவு திருப்தியளிக்கும்.
அக்டோபர்
அநாவசிய சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும். முடிந்த வரை சில்லறைவிஷயங்களுக்கு முக்கியத்துவம் தராமல் நடந்து கொள்வது நல்லது. வழக்குவிஷயங்களில் தீர்ப்பு தள்ளிப் போகும். பண விஷயங்களில் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். கடன் தொல்லை பாதிக்காது. குழந்தை மற்றும் மனைவியின்உடல்நிலையில் கவனம் தேவை. மனைவி வழியில் ஏற்படும் செலவினங்கள் தவிர்க்கமுடியாதவையாக அமையும். தாய்மாமன் உறவின் மூலம் நல்ல திருப்பம் தெரியும்.மாதப் பிற்பகுதியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
நவம்பர்
தங்களின் எல்லாவிதமான முயற்சிகளும் சில பல தடங்கல் களுடன் நடைபெறும்.கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பார்ட்னர் களால் தொல்லையுண்டு. சிறுபயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். தந்தையின் உடல் நலம்பாதிக்கக்கூடும். மருத்துவச் செலவால் பணவிரயம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. வண்டி, வாகனம், வீடு, நிலம் இவற்றால் சிறிது தொல்லையுண்டு. வேலைதொடர்பாக அலைச்சலும் மனவருத்தமும் ஏற்படும். சகோதரர் வகையில் உதவிகிடைக்கும். வெளியூர் வேலையாக இடமாற்றம் ஏற்படும்.
டிசம்பர்
பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். சிரமமாக இருந்த பணப் புழக்கம்சற்று அதிகரிக்கும். உங்கள் உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் விலகும். புதிய ஆடை, அணிகலன்கள் சேரும். பிள்ளைகளுக்கு நல்லஇடத்தில் வேலை அமையும். வெகுநாட்களாகப் போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்குகுடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவீர்கள். முன் கோபத்தைக் குறைத்துக்கொள்வதால் பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம்.
Continue reading >>

2012 ஆங்கில புத்தாண்டு கடக ராசி பலன்கள்

0 comments
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
கடகம்
புனர்பூசம் 4  ஆம் பாதம்,  பூசம்,  ஆயில்யம் நட்சத்திரங்களில் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு …….
ஜனவரி
கடந்த மாதத்தைவிட இந்த மாதம் தெளிவான சிந்தனைகள் உருவாகும். அரசியல் போக்கு ஆதாயம் தரலாம். அரசு வகை காரியங் களில் அனுகூலமுண்டாகும். விருந்து வேடிக்கையும் விருந்தினர் வருகையும் அதனால் செலவினங்களும் உண்டாகும். கடன் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டும். பகை கொண்டவர்கள் துயரப்பட்டு மீண்டும் உங்களிடம் உறவாட வருவார்கள். மறப்போம் மன்னிப்போம் பாலிசியில் ஏற்றுக்கொள்ளலாம்.
பிப்ரவரி
ஒவ்வொரு பிரச்சினையாக மாறி மாறி வந்தாலும், பாதிப்பும் பங்கம் ஏதும் வராத அளவில் உங்களுடைய காரியங்களும் தேவை களும் நடந்தேறும். கடன் தொடர்ந்து நீடித்தாலும் கடன்காரர்களின் கெடுபிடி குறையும். காது குத்து, கல்யாணப் பத்திரிகை கொடுப்பதற்குக் கடன்காரர் வருவார். ஆனால் நீங்கள் கடனைக் கேட்கத்தான் வருகிறார் என்று பதட்டம் அடைவீர்கள். வந்த பிறகு விஷயம் அறிந்து “நல்ல வேளை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். வந்தவருக்கு காபி கொடுத்து அனுப்பிவிடலாம்.
மார்ச்
எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் கட்டுசெட்டாக இருந் தாலும், உங்களையும் மீறி செலவுகளும் விரயங்களும் உண்டாகத்தான் செய்கிறது. இந்த மாதம் பட்ஜெட் வரவுக்கு மேல் போய்விட்டது. அதனால் நாளை முதல் வெறும் ரசம், துவையல் என்று வீட்டில் ஆர்டர் போட்டு செலவைச் சுருக்கும் நிலை. ஒன்று விருந்தினர்கள் வீட்டிற்கு வருகை தந்து கோழி எடு, கறி எடு என்று செலவு கூடிவிடும். அது இல்லாவிட்டால் எதிர்பாராத வைத்தியச் செலவு வந்துவிடும். அதனால் ஆகிற செலவு ஆகட்டும்; வயிராற சாப்பிட்டாவது நிம்மதியாக இருங்கள்.
ஏப்ரல்
உங்களுடைய கௌரவம், மதிப்பு, மரியாதைக்கு எந்தவித குறையும் வராது. இருந்தாலும் சுற்றுச் சூழ்நிலைகள் உங்களை சும்மா இருக்க விடாது. யார் வம்பு- தும்பும் வேண்டாம்; எந்தச் சிக்கலும் வேண்டாம் என்று சிவனே என்று ஒதுங்கி இருந்தாலும் வலிய வந்து உங்களை டென்ஷன் ஆக்குவார்கள். இல்லாததையும் பொல்லாத தையும் புறம் பேசி, கோள் சொல்லி உங்களைக் கோபத்திற்கு ஆளாக்கு வார்கள். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. விரயங் களும் செலவுகளும் இருந்தாலும் கடைசி நேரத்தில் அதை சமாளிக்க வழியும் கிடைக்கும்.
மே
உங்களுடைய காரியங்களிலும் செயல்களிலும் முயற்சிகளிலும் தடை ஏதுமில்லை. முன்னேற்றத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. கடந்த கால அனுபவங்கள் காலம் போதித்த பாடமாகக் கருத்தில் நின்று, எதிர்காலத்தை நடத்திச் செல்ல வழிவகுக்கும். எதிர்பார்க்கும் எல்லா இனங்களிலும் உங்களின் வெற்றியைப் பதிக்கலாம். தொழில் துறையிலும் வியாபாரத்திலும் இழந்த வாடிக்கையாளர்களையும் நஷ்டத்தையும் ஈடுசெய்து நன்மையை அடையலாம். இழந்த செல்வாக்கை, பதவியை மீண்டும் பெறலாம். பூமி, வாகனம் சம்பந்தப்பட்ட யோகத்தையும் அடையலாம்.
ஜூன்
தொழில், பொருளாதாரம் இரண்டிலும் பிரச்சினைக்கு இட மில்லை. நீங்கள் ஈடுபடும் எல்லாக் காரியங்களிலும், செய்முயற்சி களிலும் வெற்றி உண்டு; தோல்விக்கு இடமில்லை. சில நேரங்களில் உங்கள் வெற்றி உங்களுக்கு மயக்கத்தையும் போதையையும் ஊட்டி விடும். அதனால் மற்றவர்களை சட்டை செய்ய மாட்டீர்கள். அலட் சியப்படுத்துவீர்கள். அந்த எண்ணத்தை வளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது முன்னோர் கள் சொன்ன மூதுரை. யார் என்ன சொன்னாலும் சொல்லுகிறவர்களை எடை போட வேண்டாம். சொல்லும் வார்த்தையின் அர்த்தத்தை சீர் தூக்கிப் பாருங்கள்.
ஜூலை
வெளி வட்டாரப் பழக்கவழக்கம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் காப்பாற்றப்படும். வீட்டில் மதிப்பும் மரியாதையும் உருவாகும். எல்லாம் இருந்தும் அலைச்சலும் திரிச்சலும் குறைந்தபாடில்லை. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். யாரோ ஒருவர் மீதுள்ள கோபத்தை மற்றவர்கள்மேல் காண்பிக்கும்படியான சூழ்நிலை அமையும். அதை கண்ட்ரோல் பண்ணிக்கொள்வது நல்லது. எல்லாருக்கும் நல்லவராக நடப்பது கஷ்டம்தான். ஆனால் எல்லாருக்கும் கெட்டவராகப் பேர் எடுக்காமல் நடந்துகொள்ளலாம் அல்லவா!
ஆகஸ்ட்
ஒரு சிலரை நம்பி சில ஏமாற்றங்களைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக நம்பக் கூடாதவர்களை நம்பி சில நல்லவர்களைப் பிரிந்தாலும், மீண்டும் அந்த நல்லவர்களோடு தொடர்பு கொள்ள மனம் விரும்பினாலும் கௌரவம் தடுக்கிறது. மனிதனுக்கே உரிய “ஈகோ’ உங்களைத் தடுமாற வைக்கிறது. “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்’ என்று பெரிய வர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த மனத்திலே துளிர்க்கும் “ஈகோ’ வைக் களையெடுத்துவிட்டால் நலம் என்னும் பயிர் நன்மை என்னும் மகசூலைத் தரும்.
செப்டம்பர்
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை மிகுதியாக இருக்கும். வேலைக்கேற்ற கூலி கிடைப்பதில் திருப்தி இருக்காது. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, இடமாற்றம் விஷயமாக மற்றவர்களின் உதவிகளை நாட வேண்டியிருக்கும். தன் நிழல் தன்னுட னேதான் வரும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வைராக்கிய மாக இருக்கும் இடத்திலே செயல்படவும். வியாபாரம், விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். குடும்பத்தில் ஆடை, ஆபரணச் சேர்க்கை கூடி வரும். நாணயப் பிசகு ஏற்படாது. எல்லாரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.
அக்டோபர்
எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் உங்கள் நடவடிக்கைகளையும் ரகசியங்களையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டாம். மாணவ- மாணவியர் படிப்பில் ஆர்வமும் கவனமும் செலுத்த வேண்டியது அவசியம். மனதில் இதுவரை நிலவிய கற்பனை பயம், நம்பிக்கையின்மை எல்லாம் விலகியோடிவிடும். உற்சாகமும் பிறக்கும். கொடுக்கல்- வாங்கல் சீராக ஓடியடையும். பணத் தேக்கமோ தட்டுப்பாடோ இருக்காது. வியாபாரம் நன்றாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாகக் காணப்படும்.
நவம்பர்
குடும்பத்தில் உங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவோர் இல்லை. அதற்காகத் தாங்கள் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள் ளாமல், இறைவனை மனதில் நினைத்து, “எல்லாம் உன் செயல்’ என்று எப்பொழுதும்போல தங்கள் கடமைகளைச் செவ்வனே செயலாற் றுங்கள். உங்கள் வாழ்க்கை, தொழில் அமைப்பில் நல்லதொரு மாற்றம் நிகழும். காலம் என்பதைப் பெரியோர்கள் “சக்கரம்’ என்பார்கள். காலச் சக்கரம் மாறும்போது மேல்பகுதி அடிப் பாகத்துக்கும் கீழ்ப்பகுதி மேல் பாகத்துக்கும் மாறிவருவது போல, மனிதர்கள் நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்.
டிசம்பர்
இந்த மாதம் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியடையும் என்றா லும், சில குறுக்கீடுகளும் போட்டி, பொறாமைகளும் எதிர்ப்பு இடை யூறுகளும் ஏற்படத்தான் செய்யும். ஆனாலும் அவை ரோட்டின் குறுக்கே அமைந்த ஸ்பீடு பிரேக்கர்- வேகத்தடை மாதிரிதானே தவிர பயணத் தடையல்ல; முறிவு அல்ல. உங்கள் நம்பிக்கை, விடா முயற்சியைவிட தெய்வ பக்தி துணைக்கு வரும். நீண்டகாலமாக நிறை வேற்றாமலிருந்த தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி விடலாம்.
Continue reading >>

2012- ஆங்கில புத்தாண்டு ரிஷப ராசிபலன்கள்

0 comments

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
ரிஷபம்
அஸ்வினி,  பரணி , கார்த்திகை – முதல் பாதம் – நட்சத்திரங்களில் ரிஷப ராசியில் பிதந்தவர்களுக்கு…….
மற்றவர்களின் புகழ்ச்சிக்காகத் தன்னையே அர்ப்பணிக்கும் உங்களுக்கு கஷ்டமான பலன், நன்மையான பலன் என மாறி மாறி நடக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில் எதிர்பாராத செலவினங்கள் உங்களுக்கு வந்து கொண்டு இருக்கும். பொருளாதாரத்தில் நீங்கள் ஒரு கணக்குப் போட்டால் நடப்பது வேறு ஒரு கணக்காக எதிர்மாறாக அமையும். பொருளாதாரத்தில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் எந்த ஜாமீன் கையொழுத்தோ வாக்குறுதிகளோ எவ்விதமான விஷயத்திலும் போடாதீர்கள். எதிர்பாராத விதமாக பயணத்தின்போது விபத்துகளில் மாட்டிக் கொள்ளும் அபாயம் உள்ளது; கவனம் தேவை.
உடல்நிலையில் சற்று கவனம் தேவை. கலைத் துறையினருக்கு நல்லதொரு ஏற்றம் மிக்க காலம். விருதுகளும் பேரும் புகழும் வந்து சேரும். தொழில் வகையில் எதிர்பாராத புதிய கடன் ஏற்படும். வீடு, கட்டிடங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பது நலம். தாயார் உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்படும். பயப்படத் தேவையில்லை. குழந்தைகளின் உடல்நிலையிலும் சற்று கவனம் தேவை. திருமணமாகாத ஆண்- பெண் இருபாலருக்கும் திருமண நிச்சய ஏற்பாடுகள் ஆகும். பொருளாதார சூழ்நிலை கடந்த காலத்தைவிட சற்று ஏற்றம் தரும்.
தகப்பனார் வகையில் எதிர்பாராத உதவிகள் மற்றும் பணவரவு ஏற்படும். தெய்வீக அனுகூலம் ஏற்படும். புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் யோகமும் அமையும். கணவன்- மனைவி உறவில் நெருக்கமான சூழ்நிலை ஏற்படும். உங்கள் குழந்தைகளின் கல்வி நல்ல முறையில் செயல்படும். என்றாலும் தேர்வு நேரம் நெருங்குவதால் கடும் முயற்சி எடுத்துப் படித்தால் பாஸ் பண்ணுவதோடு நல்ல மதிப்பெண்களையும் பெறமுடியும். துடிப்புடன் செயல்பட்டால் வெற்றி உங்கள் கையில் வந்து சேரும். மூத்த சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
உங்களுக்கு எதிர்பாராத கவுரவத் தலைவர் பதவி தேடிவரும். புகழ், கீர்த்தியில் எந்தவித குறைபாடும் இல்லை. அரசாங்க வகையில் எதிர்பாராமல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும். வி.ஜ.பி.யின் தொடர்பு மூலம் அந்தப் பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்படும். அரசுப் பணியில் இருப்பவர்கள் மூத்த அதிகாரியின் கெடுபிடிக்கு உள்ளாவார்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகளும் அரசு வகையில் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. தொழில் வகையில் புதிய நண்பர்கள் மூலம் கூட்டு உடன்படிக்கை ஏற்படும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகளும் ஆதாயமும் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர், வாகன வகையில் தொழில் புரிவோருக்கு சற்று கவனம் தேவை. புதிய கடன்கள் தொழிலுக்காக ஏற்படும். அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு சரிவு ஏற்படும் காலம்! கவனமுடன் செய்லபட வேண்டும். உடல் நலத்தில் கவனம் தேவை. அகலக்கால் வைக்காமல் திட்டமிட்டு செலவு செய்யுங்கள். பணத்தை மூலதனமாக வைத்து தொழில் செய்வோருக்கு கவனம் தேவை. தங்க நகை வியாபாரம் செய்பவர்களுக்கு மிதமான ஏற்றம் காணப்படும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். ஸ்பெகுலேஷன் தொழில் செய்வோருக்கு ஏற்றம் காணப்படும்.
ஜூன்
பிறருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்து, நீங்கள் கஷ்டத்தில் மாட்டிக் கொள்வீர்கள். எனவே நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம்- யாருக்கும் வாக்குறுதியோ சத்தியமோ செய்யாதீர்கள். காற்றில் பறக்க விடும் காலம். மிகவும் கோபப்பட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காலமாகும். கவனமுடன் இருப்பது நலம். உங்கள் குழந்தையின் உடல்நலம் நன்றாக இருக்கும். புதிய குழந்தை பிறக்கும் அல்லது கரு உருவாகும்! நகை, ஆபரணம் வாங்கும் காலம். ஆனால் அந்த சமயம் புதிய கடன் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளில் ஒன்றை விற்கும் சூழ்நிலையும் உருவாகும்.
வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கைப்பிடித்தம் அல்லது நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளுக்கு திருமண நிச்சய ஏற்பாடுகள் நடைபெறும். தொழில் கஷ்டத்திற்கும் பிள்ளைகளின் திருமண ஏற்பாட்டிற்கும் மாமனார் வழியிலோ அல்லது வெளியில் கேட்ட இடத்திலோ பணவரவு கிடைக்கும். மூத்த சகோதரன், சகோதரி வகை உறவில் விரிசல் ஏற்படும். அவர்களுக்கு தொழில் வகைப் பிரச்சினைகள் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் மீண்டும் மிக கவனமுடன் இருப்பது நல்லது. அறுவை சிகிச்சை போன்ற கண்டங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் அமைப்பு உள்ளது.
ஆகஸ்ட்
இளைய சகோதரர் வகையில் நல்ல சுமூகமான உறவும் உதவியும் ஏற்படும். தங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் பாதிப்புகள் ஏற்படும்; கவனம் தேவை. கல்வியைப் பொறுத்தமட்டில் பாதிப்புகள் அவ்வளவாக இருக்காது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரியர்ஸ் எதுவும் வந்தால் அடுத்த செமஸ்டரில் சேர்த்து எழுதிப் பாஸ் பண்ணலாம். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடும் செல்லலாம். தொழில் துறையில் அகலக் கால் வைக்காமல் இருப்பது மிகவும் நல்லது. தெய்வ பலம் உங்களை வழிநடத்திச் செல்லும். அரசு வகையில் இருந்து வந்த பாதிப்புகள், தொந்தரவுகள் மாறி சுமூகமான நிலை உருவாகும்.
எந்த ஒரு விஷயத்திலும் புத்தி சாதுர்யமாகவும் வசீகரமாகவும் பேசினால் தங்கள் காரியங்களை சாதித்துவிடலாம் என்று நினைத்து சிலசமயம் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். இது உங்களின் புகழ், கவுரவத்தில் பெரிய பாதிப்புகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் உயிர் பாதுகாப்பு உண்டு. உடலில் அறுவை சிகிச்சை போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் பழகுவதில் கவனம் தேவை. அவமானம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
அரசு வகையில் பெரிய பாதிப்புகள் உண்டாகும். அரசிற்கு எதிராகச் செயல்படும் சூழலும் உண்டாகும். பொருளாதார பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது. பணத்தைப் பொறுத்த வரையில் தட்டுப்பாடின்றிப் புரளும். தொழில் வகையில் இடமாற்றம் உண்டாகும் அல்லது புதிய கூட்டுத்தொழில் முயற்சி உருவாகும். புதிய நிலம் வாங்குதல், வீடு, மனைகள் வாங்குதல் அல்லது வீடு கட்டும் சூழ்நிலை போன்றவை ஏற்படும். காண்ட்ராக்டர்களுக்கு வீடு கட்டி விற்பதில் நல்ல முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். தகப்பனார் உறவில் விரிசல் ஏற்பட்டு, சொத்து விவகாரமாக கோர்ட் கேஸ் வரை செல்லும்.
பிள்ளைகளின் வகையில் அதிருப்தியான சூழ்நிலை உருவாகும். அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றமும் பாதிப்பும் மாறி மாறி உருவாகும். கொஞ்சநாள் நன்றாக இருந்தால் கொஞ்சநாள் உடல்நலனில்லாமல் போகும். சந்திரனைப் போல் மாதத்தின் பாதிநாள் வளர்பிறையும் பாதி நாள் தேய்பிறையும் போல்! கணவன்- மனைவிக்கு இடையே உறவில் நெருக்கம் இருக்காது. சிறிய விஷயங்களுக்காக பிரச்சினைகள் உருவாகும். பாதிப்பு ஏற்படும். கணவன் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று நெருக்கடியான சூழ்நிலை உருவாகிறது.
தாயார் வழி உறவில் உதவியும் நன்மையும் உண்டாகும். மாமனார் உறவில் விரிசல் ஏற்படும். தாத்தா அல்லது பாட்டிக்கு கண்டம் ஏற்படும். சகோதர, சகோதரி வகையில் இருந்த உறவின் விரிசல் மாறி நல்லுறவு மலரும். பாசப்பிணைப்புகள் அதிகரிக்கும். தெய்வ பலம் குறைவாக உள்ளதால் அதை விருத்தி செய்ய அனுதினமும் இறைவனைத் துதிக்க வேண்டும். ஆண்- பெண் திருமணத்திற்காகக் காத்திருப்போருக்கு திருமண வாய்ப்புகள் கூடும். அரசுப் பணியைத் தவிர, மற்ற பணிகள், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் பெரிய பாதிப்பு ஏற்படாது. நிலம், வாகனம் மற்றும் புரோக்கர் தொழில் பார்ப்பவர்களுக்கு தொழில் சிறப்பாக அமையும். வெளிநாட்டுத் தொடர்புகளும் ஏற்படும்.
Continue reading >>

செவ்வாய், 27 டிசம்பர், 2011

ஆரோக்கியமான குழந்தை பிறக்க கிரக அமைப்புகள் உண்டா?ஜோதிடர் ஆர். ராவணன் பதில்கள்

0 comments

                                                   தாயே பூமாதேவி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்பார்கள் இதற்க்கு உண்மையான அர்த்தம். என்னவென்றால், ஊரான் பிள்ளையாகியாகிய உன் மனைவியை , கர்ப்ப காலத்தில் அவளுக்கு. நல்ல ஊட்ட மளிக்கும் உணவு வகைகளை, கொடுத்து , நன்றாக கவனித்து வந்தால் , வயிற்றில் இருக்கும் தன் பிள்ளை ( அதாவது அவன் பிள்ளை) தானாக வளரும்.  

ஒரு தாயின் வயிற்றில் ஒரு கரு உருவாவது முதல் அது வளர்ந்து ஒரு முழு வடிவத்தை   பெற்று ஒரு குழந்தையாக வளரும் வரை, அந்த குழந்தையின் ஒவ்வொரு உடல் உறுப்பின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு கிரகம் காரணமாகிறது. 

முதல் மாதம் : 

கரு உருவாகிய நிலை. அந்த மாதத்திற்கு உரிய கரு உருவாவதற்கான கிரகம் சுக்ரன்.  

இரண்டாவது  மாதம் :

சதை உருவாகும் நிலை அதற்க்கு உரிய கிரகம் செவ்வாய். 

மூன்றாவது மாதம்- 

உறுப்புகள் உருவாகும் நிலை. அதற்க்குரிய கிரகம் குரு .

நான்காவது  மாதம்

 எலும்புகள் உருவாகும் நிலை. அதற்க்குரிய கிரகம் சூரியன். 

ஐந்தாவது மாதம் 

தோல் உருவாகும் நிலை. அதற்குரிய கிரகம் சந்திரன்..

ஆறாவது  மாதம் 

 ரோமம் உருவாகும் நிலை . அதற்குரிய கிரகம் சனி. 

ஏழாவது  மாதம்.

மூளை , அதன் பாகம்,அறிவு உணர்வு  ஏற்படும்  நிலை. அதற்குரிய  கிரகம் புதன்

எட்டாவது  மாதம்- 

தொப்புள் கொடியின் மூலம் உணர்வுகொள்ளும் நிலை அதற்குரிய கிரகம் சுக்கிரன்..

ஒன்பதாவது மாதம் 

முழு உருப்பெருதல், முழு வளர்ச்சி அடைதல் , உணர்வு பெறுதல் அதற்குரிய கிரகம் சந்திரன்.

ஒன்பதாவதுமாதம் 

 குழந்தை பிறப்பது.அதற்குரிய கிரகம் சூரியன். 

அந்தந்த மாதங்களுக்குரிய கிரகம் பெண்களின் ஜாதகங்களில்(பிறந்த ஜாதகத்தில்) நல்ல நிலைமையில்  இருந்தால் குழந்தை, உடல் உறுப்பில் எவ்வித குறைபாடும்  இல்லாமல் ஆரோக்யத்துடன் பிறக்கும். அந்தந்த மாதங்களுக்குரிய கிரகங்கள் பெண்களின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால்( பிறந்த ஜாதகத்தில்) குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

எந்தெந்த கிரகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறதோ அந்தந்த கிரகங்களுக்கு பரிகாரம் செய்தால் பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலையில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி ஆகும் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



 
Continue reading >>

திங்கள், 26 டிசம்பர், 2011

அழகான மனைவி யாருக்கு அமைவாள்? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆன்மீக ஜோதிடர் ஆர். ராவணன் பதில்கள்

0 comments

                                                       தாயே பூமாதேவி
ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியை  குறிக்கும் கிரகமாக சுக்ரன் திகழ்கிறார். லக்னத்திற்கு ஏழாம் இடம் என்பது மனைவியை குறிக்கும் இடமாகும். 

அதேபோல் ரிஷபம் கடகம் விருச்சிகம் மகரம் மீனம் போன்ற ராசிகள் இரட்டைப்படை ராசிகளாகும்.(அதாவது இவை பெண் ராசிகள்). 

இனி அழகான மனைவி யாருக்கும் அமைவாள் என்பதை போன்ற கிரக அமைப்புகளை காண்போம் :


ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்ரனும் லக்னத்துக்கு ஏழுக்கு  உடையவனும் இந்த ரிஷபம் கடகம் விருச்சிகம் மகரம் மீனம் ராசிகளில் இருப்பது 

சுக்ரனும்  லக்னத்துக்கு ஏழுக்கு உடையவனும் செவ்வாயின் வீடுகளான மேஷம்  விருச்சிகம் போன்ற ராசிகளில் இருப்பது 

லக்னத்துக்கு  ஏழுக்கு உடையவன், சுக்ரனின் வீடுகளான ரிஷபம் துலாம் போன்ற ராசிகளில் இருப்பது 

போன்ற கிரக அமைப்புகள் ஒரு ஆணின் ஜாதகத்தில் இருந்தால் அழகான  மனைவி அமைவாள். 

                                           மேலும் ஒரு சிறப்பு அம்சம் :

சுப கிரகமான குரு பகவான் சுக்ரனையோ அல்லது ஏழுக்கு உடையவனையோ பார்த்தால் அவனுக்கு வரக்கூடிய மனைவி தேவதை மிகவும் அழகு உடையவளாய் இருப்பாள். 





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

குடிகார கணவன் திருந்தவும் - குடும்பத்தில் அமைதியும் - சந்தோஷமும் - நிலவவும் - மனைவிமார்கள் வீட்டில் செய்யவேண்டிய எளிய பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
 
பொதுவாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு அவர்களின் ஜாதக கிரக அமைப்புகள் ஒரு காரணமாகும் . 

கணவன் மனைவி இருவரின் ஜாதகத்திலும் தீமை தரக்கூடிய தசா புக்திகள் நடக்கும் பொழுது கணவன் மனைவி இடையே தினம் தினம் சண்டை  சச்சரவுகள் குடும்பத்தில் நிகழும் .  

கணவன் போதை பழக்கவழக்கத்துக்கு அடிமையாவதும் அன்னிய பெண்களிடம் தவறான பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி  கொள்ளும் சூழ்நிலையும் வேலைவெட்டிக்கு எதற்கும் போகாத சூழ்நிலையும் ஏற்படும் . 

மனைவி என்ன சொன்னாலும் கணவன் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அவர் போக்குக்கு செல்லும் கெட்ட சூழ்நிலையும் உண்டாகும் . 

இந்த நிலை மாறவும் குடும்பத்தில் அமைதி நிலவவும் சந்தோஷம் நிலவவும் மனைவி சொல் பேச்சை கணவன் கேட்கவும் வீட்டில் மனைவிமார்கள்  இந்த பரிகாரத்தை செய்யவும்  

ஒரு கட்டிலின் கீழே அல்லது கணவன் படுத்து உறங்கும் இடத்துக்கு அடியில் ஒரு வெல்லக்கட்டியை வைத்து  

ஓம் நமோ மகா, புருஷயட்ச பதேயே மமபத்மே வசம்  
குரு குரு  ஸ்வாஹா. 

இந்த மந்திரத்தை ஜெபித்து மறு நாள் கணவன் உணவில் கலந்து கொடுக்க  (இவரும் சாப்பிடலாம் )  மனைவியை விட்டு பிரியாமல் மனைவியே கதி என்று கிடப்பார். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும்  நிலவும்.



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

ஒரு ஜாமம் என்கிறார்களே இதற்க்கு விளக்கம் தர முடியுமா?ஜோதிடர் ராவணன் பதில்கள்

2 comments
ஒரு ஜாமம் என்பது 2  மணி 24 நிமிடங்களை கொண்டது. ஒரு நாள் என்பது பத்து ஜாமங்களை கொண்டது.  ஆறு நாழிகைகள் கொண்டது ஒரு ஜாமமாகும். அறுபது நாழிகைகள் கொண்டது பகல், இரவு கலந்த ஒரு முழு தினமாகும்.
Continue reading >>

நல்ல செயல்களை தொடங்க குறிப்பிட்ட கிழமைகளை தேர்தெடுப்பது என்? ஜோதிடர் ராவணன் பதில்கள்.

0 comments

ஒரு நல்ல செயலை தொடங்க ஒரு குறிப்பிட்ட கிழமையை தேர்ந்து எடுப்பதற்கு காரணங்கள் இருக்கிறது. 

கிழமைகளில் புதன் வியாழன் வெள்ளி போன்ற நாட்கள் இரண்டு கண்ணுள்ள நாட்களாகும்.

ஞாயிறு திங்கள் இவை ஒரு கண்ணுள்ள நாட்களாகும். 

அதனால் இந்த கிழமைகள் சிறப்பானவை அல்ல. 

செவ்வாய் சனி இந்த நாட்கள் குருட்டு நாட்கள் ஆகையால் இந்த நாட்களில் சுப காரியங்கள் செய்யகூடாது. 

புதன் வியாழன் வெள்ளி இந்த மூன்று நாட்களும் இரண்டு கண்ணுள்ள நாட்கள் ஆதலால் இந்த நாட்களில் எல்லா வித சுப காரியங்களையும் செய்யலாம்.




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

இறந்தவர்கள் ஆவி உருவில் வீட்டிற்கு வருவார்களா? ஜோதிடர் ராவணன் பதில்கள்.

0 comments

                                 பெரியாண்டவர் சாமி  தாயே பூமாதேவி
மனித லோகத்துக்கும் எமலோகத்துக்கும் இடையில் எண்பத்திஆறாயிரம் காதம் (பல நூறு மைல்களை கொண்டது ஒரு காதம்)   மைல் தூரமுடையது. எம தூதர்கள் மூவர் விதி முடிந்த ஜீவனை பாசத்தால் கட்டி இழுத்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்துக்கொண்டு யமலோகத்துக்கு சென்று எதர்மராஜனின் முன்பு நிறுத்துவார்கள். 

யமதர்மராஜனும் தூதர்களை பார்த்து  நல்லது இவனை மீண்டும் கொண்டுபோய் இவன் வீட்டில் விட்டுவிடுங்கள்.  12   நாள் கழித்த பிறகு மீண்டும் என் முன் நிறுத்துங்கள் என்று கட்டளை இடுவான் மீண்டும் அந்த ஜீவனை ஒரு நொடியில் அவன் வீடு முன்பு அவனை விட்டு விடுவார்கள் எனவே இறந்தவர்களை உடனே புதைக்கவோ எரிக்கவோ கூடாது.


மரித்த ஜீவன் மூன்று நாள் நீரிலும் மூன்று நாள் அக்னியிலும் மூன்று நாள் ஆகாயத்திலும்   ஒரு நாள் தனது தனது வீட்டிலும் ஆவி உருவில் வசிக்கும்.   எனவே இறந்தவர்களை திருப்தி படுத்தும் வகையில்  முதல் மூன்று  ஐந்தாவது, ஏழாவது ஒன்பதாவது பதினொன்றாவது நாளில் நவ சிரார்த்தம் செய்ய வேண்டும். பதினொன்றாவது நாளன்று பலகாரதோடு சோறு சமைத்து நாற்சந்தியில் கொட்டி விடவேண்டும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>