லக்னத்துக்கு பத்தில் சூரியன் இருந்தால் தந்தைக்கும்
லக்னத்துக்கு நான்காம் இடத்தில சந்திரன் இருந்தால் தாய்க்கும்
ஆகாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு விதி இருக்கிறது.
இந்த இடங்களில் மேலே சொல்லப்பட்ட கிரகங்கள் இருந்தாலும்.
அந்த கிரகங்கள் நின்ற வீட்டுக்கு அதிபதியான கிரகங்கள்
நல்ல இடங்களான கேந்திரம் ,திரிகோணம் போன்ற நல்ல இடங்களில்
இருந்தாலும் , அல்லது அந்த வீட்டுக்கு அதிபதியான கிரகங்களை
சுப கிரகங்கள் பார்த்தாலும் தாய் தந்தையரை தோஷம் அணுகாது.
ஆனால் பகலில் பிறந்த ஜாதகருக்கு லக்னத்துக்கு பத்தாம் இடத்தில
சூரியன் இருந்தாலும் , இரவில் பிறந்த ஜாதகருக்கு லக்னத்துக்கு நான்காம்
இடத்தில சந்திரன் இருந்தாலும். தாய் தகப்பன் இருவருக்கும் தோஷத்தை
காட்டும்






