Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
கணவரை இழக்கும் கிரக நிலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணவரை இழக்கும் கிரக நிலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 நவம்பர், 2011

இளமையில் கணவரை இழக்கும் கிரக நிலைகள் . ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்    

ஜோதிட சாஸ்திரத்தில் ஞானம் பெற்ற பல ரிஷிகள் பல்வேறு கிரக அமைப்புகளின் விதிமுறைகளை நமக்கு அளித்துள்ளனர். ஜாதக அலங்காரத்தில் இளமையில் விதவையாகும் நிலைக்கான கிரகஅமைப்புகள் கூறப்பட்டு இருக்கிறது. 

ஒருஜாதகர்அல்லது ஜாதகி இளமையில் துணைவரை அல்லது துணைவியை இழக்கும் நிலையை ஜைமினி மகரிஷி அருளிய ஜோதிட சாஸ்திர விதி .
இங்கே பல ஜாதகங்களில் ஒத்து போவதை நாம் காண முடிகிறது. 


அது தான் உப பதா லக்னமாகும். இந்த உப பதா லக்னம் மூலம், இளைமையில் விதவையாகும் நிலையையும், அல்லது வாழ்க்கை துணைவரை  அல்லது துணைவியை பிரிந்து  வாழும் சூழ் நிலையையும் நாம் அறியலாம் .

ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் உப பதா லக்னத்தை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம் .  உதாரணத்திற்க்கு ஒருவருடைய ஜாதகத்தில் அவருடைய லக்னம் சிம்மம் என்று வைத்து கொள்வோம் . 

இந்த சிம்ம லக்னத்துக்கு பன்னிரெண்டாம் வீடு கடக ராசியாகும். இந்த கடக ராசிக்கு அதிபதி சந்திரன் அந்த ஜாதகரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 4 ம் வீடான விருச்சிக ராசியில் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். 

12 ம் வீட்டிலிருந்து எண்ணிவர 12 ம் வீட்டுக்கு அதிபதியான சந்திரன் இருக்கும் விருச்சிக ராசி 5 ம் வீடாக வரும் . இந்த விருச்சிக ராசியிலிருந்து 5 ம் வீடான தனுசு ராசியே உப பதா லக்னமாகும். இதே போல்தான் மற்ற ஜாதகங்களுக்கும் உப பதா லக்னத்தை கண்டுகொள்ளவேண்டும். 

 இந்த உப பதா லக்னத்திற்கு  1 - 2 - 7 -இல் நீசம் பெற்ற கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் துணைவரை இளமை காலத்தில் இழக்கும் நிலை ஏற்படும .

 உப பதா லக்னத்திற்கு 1 - 2 -7 - ல் சனி ராகு  , கேது போன்ற பாவிகள் இருந்தாலும். அல்லது பார்த்தாலும் இளமையில் கணவரை இழக்கும் நிலையும் அல்லது பிரிந்து வாழும் சூழ்நிலையும்ஏற்படும்


உதாரணம் திருமதி சோனியா காந்தியின் ஜாதகம்
திருமதி சோனியா காந்தியின் ஜாதகம் கடக லக்னமாகும். இந்த கடக லக்னத்தில் சனி வக்கிரம் அடைந்துள்ளார் . லக்னத்துக்கு 2 ம்  இடம் லக்னத்துக்கு 3 ம் இடத்தில கிரகங்கள் இல்லை . 

லக்னத்துக்கு 4 ம் இடமான துலாம் ராசியில் குருவும் சுக்ரனும் . 5 ம் இடத்தில சூரியன் புதன் கேது. 6 ம் இடத்தில் செவ்வாய். லக்னத்துக்கு 7 8 9 ம் இடங்களில் கிரகங்கள் இல்லை. 10 ம் இடமான ரிஷபத்தில் ராகு. 11 ம்  இடமான மிதுனத்தில் சந்திரன்.   போன்ற கிரக நிலைகள் இவரது ஜாதகத்தில் உள்ளது. 


இவருடைய ஜாதகத்தில் உப பதா லக்னம் மேஷம் . அதற்க்கு 2 ல் ராகு ராகுவிற்கு வக்கிரம் பெற்ற சனியின் 3 வது  பார்வை கிடைத்து இருக்கிறது. 

உப பதா லக்னத்திற்கு 7  ல் ரிஷப  ராசியில் பகை கிரகமான குருவும் சுக்ரனும் . இருக்கிறார்கள். இரண்டு பகை கிரகங்கள் ராசி கட்டத்தில்ஒன்றாக  இருந்தால் அந்த கிரகங்கள் ஏட்டிக்கு போட்டியான பலன்களையே கொடுக்கும். லக்னத்திற்கு 1 - 2 -7 - ம் பாதிக்க பட்டதால் இளமையில் விதவையாகும் நிலை ஏற்பட்டது .   

7 ம் அதிபதி வக்கிரம் பெற்று லக்னத்தில் இருந்து 7 ம் பாவத்தை  பார்த்ததால் அந்த பாவ பலனக்கு பாதகம்  வந்தது. வக்கிரம் பெற்ற கிரகம் பார்க்கும் இடம் பாதிக்க படும் என்பதும் இருக்கும் இடத்தின் பலனும் பதிக்கப்படும் என்பதும் விதியாகும்.    

மேலும் இவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு ஏழாம் பாவமான தனுசு ராசியில் செவ்வாய் இருப்பதும் இவரது திருமண வாழ்க்கைக்கு தோஷத்தை ஏற்படுத்திவிட்டது.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>