ஓம் சிவ சக்தி
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் தமிழர்களின் பண்பாடு. மனைவியை தவிர வேறு எந்த ஒரு பெண்ணையும் மனதளவில் கூட நினைத்து பார்க்க தயங்கும் , பயப்படும் ஆண் வர்க்கத்தார் இருக்கிறார் என்றால் அவர்களின் ஜாதக அமைப்பு ஒரு உத்தமமான ஜாதக அமைப்பு என்றே சொல்ல வேண்டும் இருப்பினும் ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி அவர் நல்ல ஒழுக்கம் உடையவர் பெண்கள் விஷயத்தில் தன மனைவியை தவிர வேறு ஒரு எந்த பெண்ணையும் மனதளவில் கூட நினைத்து பார்க்க மாட்டார் என்ற உத்தமமான கிரக அமைப்பு இருந்தாலும் கூட அந்த ஜாதகன் தன மனைவிக்கு துரோகம் செய்து விட்டு வழி தவறி செல்லும் சூழ்நிலைகளும் ஏற்படலாம்.
இதற்க்கு காரணம் அவர்களின் பெயர் அமைப்புகளும் ஒரு காரணமாகிறது.
அதோ போல் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு மூன்றாம் இடத்து அதிபதி , சுக்கிரன், செவ்வாய், இந்த கிரகங்கள் ஒன்றாக இணைந்து இருந்தாலும் , ஒன்றுக்கு ஒன்று பரிவர்த்தனை ஆகி இருந்தாலும் , (அதாவது ஒருவர் வீட்டில் ஒருவர் மாறி அமர்ந்திருப்பது ) அல்லது ஒன்றுக்கு ஒன்று தொடர்பு பெற்று காணப்பட்டாலும் அந்த ஜாதகனுக்கு காம உணர்ச்சி அதிகமாக இருக்கும் , மேலே சொன்ன கிரகங்களில் சுக்கிரனை குறிக்ககூடிய எழுத்து U , V . இந்த சுக்கிரனின் ஆதிக்க எண் 6 ம் எண்ணாகும் . அதேபோல் செவ்வாயை குறிக்க கூடிய எண் 9 ம் எண்ணாகும் .
எந்த ஒரு பெண்ணின் கணவனுடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் 2 6 9 4 இப்படியாக வருகிறதோ அந்த பெண்கள் தன் கணவனின் கற்பு விஷயத்தில் மிக கவனமாக அவரை கண்காணிக்க வேண்டும். மேலே சொன்ன பெயரின் கூட்டு எண்கள் சொல்லி இருக்க கூடிய 2 ம் எண் நவகிரகங்களில் சந்திரனை குறிக்க கூடிய குறிக்க கூடிய எண்ணாகும் . நவ கிரகங்களில் சந்திரன் மிக மிக அழகானவன். சந்திரனுக்கு மொத்தம் 27 மனைவிகள். சந்திரன் ஒரு மாபெரும் யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்து அதற்க்கு தேவாதி தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருந்தான். அதில் அனைத்து தேவர்களும் தன மனைவி மார்களுடன் கலந்து கொண்டனர்.
அதில் நவ குரு கிரகங்களில் குரு பகவான் தன மனைவி தாரையுடன் வந்திருந்தார். சந்திரனின் அழகில் மயங்கிய தாரை தன் கணவனை விட்டு விட்டு சந்திரனுடையே தங்கி அவனுடன் குடும்பம் நடத்தி வந்தாள் . பிறகு தேவர்களின் அறிவுரையின் பேரில் தன் கணவனுடன் ஒன்று சேர்ந்தாள் .
எந்த ஒரு பெண்ணின் கணவனுடைய பெயரின் ஆரம்ப எழுத்து சந்திரனின் ஆதிக்க
எழுத்தான B K R போன்றவற்றில் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண்கள்
சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 ம் எண்ணில் அமைந்திருந்தால் அந்த பெண்ணின்
கணவன் தன்னை அழகு படுத்தி கொள்வதில் அதிக அக்கறை எடுத்து கொள்வான்.
அதற்க்கு தகுந்தார் போல் அவனின் தோற்ற அமைப்பும் உருவ அமைப்பும் , மற்ற
பெண்களை கவரும் விதத்தில் அமைத்திருக்கும். சுருக்கமாக சொல்ல போனால்
பெண்களை கவரும் ஏதாவது ஒரு சிறப்பு அம்சம் அவனுக்கு அமைந்திருக்கும்.
மற்றவரை கவர்ந்திழுக்கும் இந்த அம்சம் பெண்கள் விஷயத்தில் கூட அந்த பெண்ணின் கணவன் வழிதவறி நடக்கும் சூழ் நிலை உண்டாகலாம்.
ஆதலால் எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவனின் பெயரின் கூட்டு எண்கள் சந்திரனுடைய ஆதிக்க எண்ணான 2 ம் எண்ணில் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்து சுக்கிரனின் ஆதிக்க எண்ணான 6 ம் எண் காமத்துக்கு அதிபதியான எண்ணாகும். இந்த காமத்துக்கு உரிய சுக்கிரனின் ஆதிக்க எழுத்துக்கள் U V ஆகும் . எந்த ஒரு பெண்ணின் கணவனின் பெயரின் ஆரம்ப எழுத்து சுக்ரனின் ஆதிக்க எழுத்தான U V ல் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண் சுக்ரனின் ஆதிக்க எண்ணான 6 எண்ணில் வருகிறதோ அந்த பெண்ணின் கணவனுக்கு மற்ற ஆண்களை விட காம உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். காமம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் வித்தியாசமான அணுகு முறைகளை கொண்டிருப்பான். இதனால் அந்த பெண்ணுக்கு தன கணவன் வெறுப்புணர்ச்சி கூட உண்டாகலாம். இந்த சூழ்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து உண்டாகும் சூழ் நிலையில் அந்த பெண்ணின் கணவன் வழி தவறி தவறான பாதைக்கு கூட செல்லலாம்.
அடுத்து செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண். காம உணர்வையும் , தைரியத்தையும் தரக்கூடிய எண்ணாகும் . மேலும் என்றும் இளமையை தரக்கூடிய , தோற்ற அமைப்பை கொடுக்க கூடிய எண்ணாகும் .ஒரு பெண்ணின் கணவனுடைய பெயரின் ஆரம்ப எழுத்து காம காரன் என்று சொல்ல கூடிய சுக்கிரனின் ஆதிக்க எழுத்தான U , V ல் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண் தைரியகாரன் என்று சொல்ல கூடிய செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணில் அமைந்திருக்குமானால் காமம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் எதற்கும் யோசனை செய்யாமல் தைரியத்துடன் செயல் பட்டு சிக்கலில் மாட்டி கொள்வான்.
அடுத்து ராகுவின் ஆதிக்க எண்ணான 4 எண்ணை எடுத்து கொள்வோம் .
இந்த 4 ம் எண்ணை குறிக்க கூடிய ராகு பகவானை போககாரன் என்று குறிப்பிடுவார்கள் .காமத்தை குறிக்ககூடிய SEX என்ற வார்த்தையின் மொத்த கூட்டு எண்ணிக்கை (SEX = 3 + 5+ 5= 13 = 1 + 3 = 4 என்ற ராகுவின் எண் வருவதை கவனிக்கும்பொழுது )வசதி வாய்ப்புகளுடன் கூடிய சூழ்நிலைகளில் போகத்தை அனுபவிக்க கூடிய எண்ணாக கருதலாம் , இந்த எண்ணை குறிக்க கூடிய D M T போன்ற எழுத்தை பெயரின் ஆரம்ப எழுத்தாக உடையவர்களுக்கும் , பெயரின் மொத்த கூட்டு எண் ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்ணில் பெயர் அமைந்தவருக்கும் , காம உணர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கும்.
மேலே சொல்ல பட்ட பெயரின் ஆரம்ப எழுத்துக்கள் U, V, B , K, R, D, M, T , போன்றவைகளும் பெயரின் கூட்டு எண்களான 6 2 9 4 இந்த எண்கள் எல்லாம் ஒரு பெண்ணின் கணவனின் பெயரில் சம்பந்தப்படும் பொழுது அந்த பெண்ணின் கணவனுக்கு பெண்கள் விஷயத்தில் அதிகமான ஆசைகள் இருக்கும் என்று சொன்னாலும் , அந்த கணவன் மனைவிக்கு துரோகம் செய்து விட்டு வேறு ஒரு பெண்ணின் தொடர்பை ஏற்படுத்தி கொள்வான என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் நவ கிரகங்களில் சனி பகவான் சோகம் சம்பவம் , சோரம் போவது , கீழ்த்தரமான எண்ணங்களை உருவாக்குவது , சமுதாய சட்ட திட்டங்களுக்கு மாறாக மீறி நடப்பது , பரத்தையரை விரும்புவது (கீழ்த்தரமான் செயல்களை செய்யும் பெண்கள் ) போன்ற நிகழ்வுகளுக்கு காரணமான கிரகமாகும். அந்த சனி பகவானை குறிக்கும் எண் 8 ம் எண்ணாகும் .மேலே சொன்ன பெயரின் ஆரம்ப எழுத்துக்கள் , பெயரின் கூட்டு எண்கள் , ஒரு நபரின் பெயரில் வந்து , அந்த பெயரிலோ , அந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 8 ம் வந்தாலும் அல்லது அந்த பெயரில் சனி பகவானின் ஆதிக்க எழுத்தான P என்ற எழுத்து சம்பந்தபட்டாலும் அந்த ஆண்மகன் தன மனைவிக்கு துரோகம் செய்து விட்டு வேறு ஒரு பெண்ணின் தொடர்பை ஏற்படுத்தி கொள்வான் .
உதாரண பெயரை காண்போம் .
MATHI ( மதி ) என்ற ஒரு ஆணின் பெயரை எடுத்து கொள்வோம். இந்த பெயரின் கூட்டு எண்களையும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களையும் காண்போம்.
6 2 = 6 + 2 = 8 இது சனி பகவானின் ஆதிக்க எண்ணாகும் .
1 5 6
5 5 9 6
4 1 4 5 1
M A T H I = 4 + 1 + 4 + 5 + 15 = 6
இந்த பெயரின் ஆரம்ப எழுத்து ராவின் ஆதிக்க எழுத்தான M ல் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை காமகாரன் என்று சொல்ல கூடிய சுக்ரனின் ஆதிக்க எழுத்தான 6 எண்ணில் வந்து , பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் வருவதை காணலாம்.இப்படியாக ஒரு நபரின் பெயரின் ஆரம்ப எழுத்தில் U, V, B , K, R, D, M, T, P போன்ற எழுத்துக்கள் சம்பந்தப்பட்டு , பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கையிலோ , பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களிலோ , 2 8 9.4 , போன்ற
எண்கள் வந்தால் அந்த நபருக்கு மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணின் தொடர்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில்
விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.










