Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
அரசு வேலை கிரக நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு வேலை கிரக நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 நவம்பர், 2011

அரசு வேலை கிரக நிலை

0 comments
லக்னத்துக்கு பத்தாமிடத்தில் சூரியன் நின்றால் அரசுவேலை , அரசாங்கத்தோடு தொடர்புடைய துறையோ, அல்லது அரசாங்கத்தின் மூலமாகவோ, ஏதோஒரு வகையில் அவருக்கு ஜீவனம் வரும் என்பது ஜோதிட விதி. ஆனால் என்னுடைய ஜோதிட அனுபவத்தில் பத்தாம் இடத்தில சூரியனை பெற்றவர்கள் ஒரு நிலையான தொழில் அமையாமல் கஷ்டப்படுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. இதற்கு காரணம் பத்தாமிடத்தில் உள்ள சூரியனுக்கு பாதகாதிபதியின் பார்வையோ, அல்லது சனியின் பார்வையோ, அல்லது, துர் ஸ்தான  அதிபதிகளின் பார்வையோ இருந்தால் அரசாங்கத்தோடு தொடர்புடைய எந்த துறையோடும் , அவர்கள் நிலைத்திருக்க முடியாது. 
மேலும் பத்தாம் இடத்தில சூரியன் இருப்பவர் ஒருவர் மாவட்ட ஆட்சியாளராக உள்ளார். அதே பத்தாம் இடத்தில சூரியன் உள்ளவர் ஒருவர் அரசு துறை அலுவகத்தில் பியூனாக உள்ளார். இரண்டு பேருக்குமே சூரியன் பத்தில் இருக்கும்பொழுது  இருவரும் வகிக்கும் பதவி   மேன்மையான நிலையை கொண்ட பதவியாக இருக்க வேண்டுமே. என்ன அப்படி இல்லை என்ற கேள்வி எழுகிறது. பத்தாமிடத்தில் சூரியன் இருந்தும் இந்த ராஜ யோகத்தில் மாறுதல் ஏற்படுவது ஏன்.
 இந்த ராஜ யோகத்தை பெற கொடுப்பினை வேண்டும்.  கொடுப்பினை ஒருவருக்க இருக்க பூர்வ, புண்ணியம் இருக்க வேண்டும். பூர்வ புண்ணியம் கிட்ட லக்னம் முதல் எண்ணப்படும் ஐந்தாம் வீடு செழித்து இருக்க வேண்டும். அதற்க்கு ஐந்துக்கு  உடையவன் பூர்ண பலம் பெற்றிருக்க வேண்டும். 
எங்கே நாம் செய்த  புண்ணியம் சேமித்து வைக்கப்படுகிறதோ அங்கிருந்துதானே தேவைக்கு ஏற்ப எடுக்க வேண்டும். 
இதிலிருந்து ஒருவருக்கு பத்தாம் இடத்தில சூரியன் இருந்தாலும்  அவர் பார்க்கும் உத்தியோகத்தில்ஒருமேன்மையான நிலையை அடைய லக்னத்திற்கு ஐந்தாம் இடம் ,ஐந்தாம் இடத்து  அதிபதி   செழிப்புடன் இருக்கவேண்டும் என தெரிகிறது.   
Continue reading >>