Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 20 டிசம்பர், 2011

இளமையில் கணவரை பிரிந்து வாழும் பெயர் அமைப்புகள் உள்ளதா?அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 
ஜோதிட சாஸ்திரத்தில் இல்லற வாழ்க்கை இனிமையாக சந்தோஷமாக அமைவதற்கான கிரக அமைப்புகள் சொல்லப்பட்டிருந்தாலும் அதற்க்கு மாறாக இல்லற வாழ்க்கை சிறக்காமல் போவதற்கான ஒரு சில சிலர் அமைப்புகளும்  பெயரின் கூட்டு எண்களும் உள்ளன.  

அத்தகைய வரிசையில்  பெயர் அமைப்புகள் என்று பார்க்கும்பொழுது மனோரமா, மனோரஞ்சிதம், மனோகரி போன்ற பெயர் அமைப்புகள் இல்லற வாழ்க்கையில்  பலபிரச்சனைகளை சந்திக்க வேண்டிய பெயர் அமைப்புகளாகும். 

இந்த பெயர் அமைப்புகளை  உற்று நோக்கும்பொழுது , MAN NO  என்று வருகிறது. இதற்க்கு பொருள் மனிதன் இல்லை, அதாவது மனிதன் என்பது ஆண்பாலை குறிக்கிறது. இல்லை என்பது நன்மைக்கு மாறான எதிர் சொல்லை குறிக்கிறது. இதனை நாம் இப்படியாக பொருள் சொல்ல வேண்டும். 

ஒரு பெண் திருமணத்திற்கு  பிறகு கணவனே கண் கண்ட தெய்வம் என்பதற்கு இணங்க திருமணமான ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கணவனே அவளின் அனைத்து தேவைகளுக்கும் முக்கிய மூல காரணமாகிறான்.. அந்த விதத்தில் பார்க்கும்பொழுது , ஒரு பெண்ணின் பெயரில் MAN என்ற ஆண்பாலை குறிக்கும் ஒரு சொல்லில் கணவனும் சம்பந்தப்படுகிறான். 

அந்த பெண்ணின் பெயரில் MAN என்ற சொல்லோடு NO என்ற நன்மைக்கு எதிர்மாறான சொல் வரும்பொழுது , அந்த பெண்ணின் வாழ்க்கையில் கணவனால் எந்த வித சந்தோஷத்தையோ, கணவனால் வாழ்க்கையில் எந்தவித லாபத்தையோ வாழ்க்கையில் எதிர்பார்க்கமுடியாத சூழ் நிலையையும். கணவனை இழந்து வாழும்  ஒரு சூழ்நிலையும் ,கணவனை  விட்டு பிரிந்து வாழும், சூழ்நிலையும் இந்த சொல்லின் உச்சரிப்புகள் உருவாக்கிவிடும். 

சுருக்கமாக சொன்னால் கணவன் இருந்தாலும் அவரால் வாழ்க்கையில் எந்த வித பலனையும் காணமுடியாது. ஆண்பாலை குறிக்கும் எந்த ஒரு ஆண் வர்க்கத்தாலும் வாழ்க்கையில் எந்தவித பலனையும் இவர்களால் அடையமுடியாது. தன்னுடைய சொந்தகாலில் நின்று உழைத்து முன்னேறி வாழ்க்கையை ஒட்டவேண்டிய சூழ் நிலை வரும். . ஆதலால் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த அபசகுனமான பொருளை தரக்கூடிய பெயர் உச்சரிப்புகளை உடைய பெயர் அமைப்புகளை சூட்ட  வேண்டாம். 

மேலே சொன்ன பெயர் உதாரண பெயர்கள் கணவரை  இளமையில் பிரிந்து வாழ்ந்து  பெயர் அமைப்புகள் என்றாலும் . ஒரு பெண்ணின் பெயரின் மொத்த கூட்டு எண்களும். இளமையில் இல்லற வாழ்க்கை சிறக்காமல் போவதை செய்து விடுகின்றன . 

ஒரு பெண் திருமணத்திற்கு  முன்பு தன்னுடைய தகப்பன் இனிஷியலையே போட்டு தன்னுடைய பெயரை எழுதுவாள். திருமண ஆன பின்பு கணவனுடைய இனிஷியலை போட்டு தன்னுடைய பெயரை எழுதும் ஒரு கட்டாயம் வரும்பொழுது  கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும் பெயரின் கூட்டு எண்ணிக்கைக்கான பலனே அப்பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை தீர்மானிக்கிறது. 

ஆதலால் எந்த ஒரு பெண்ணும் தகப்பனுடைய இனிஷியல் இல்லாமல் பெயரின் கூட்டு எண் 6 ,3 ( அதாவது 6 3 15 24 33  3 12 21 30 39 இப்படி இரண்டு எண்களையும் கூட்டும்பொழுது 6 அல்லது 3வருவது) 

இப்படியாக வரும்பொழுது அந்த பெண்கள் A  I  J  X  Y  போன்ற ஆரம்ப எழுத்தாக  உடைய ஆண்களை மணக்க வேண்டாம். காரணம் மேலே சொன்ன தகப்பனுடைய இனிஷியல் இல்லாமல் பெயரின் கூட்டு எண்கள் 6  3  இப்படியாக வரும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு A  I  J  X  Y போன்ற ஆரம்ப எழுத்தை உடைய கணவனுடைய இனிஷியலை  போட்டு பெயரை எழுதும்பொழுது பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 7 4  என்று வரும்பொழுது  இந்த  எண்ணிற்கு  அதிபதியான கிரகங்களான  கேது, ராகு, கிரகங்கள் இல்லற வாழ்க்கையை சிறக்க விடாமல் செய்து விடும்.

அதேபோல் கணவரின் ஆரம்ப எழுத்து  எந்த எழுத்தில் ஆரம்பித்தாலும்  கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதுபொழுது பெயரின் மொத்த கூட்டு எண் 18  29 , வராமல் இருப்பதும் நல்லது.காரணம் இந்த பதினெட்டு என்ற எண் சில மோசமான பலன்களை தரக்கூடியது , 1  ம் எண்ணான சூரியனும் 8 எண்ணான சனிபகவானும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் இரண்டும் பகையான கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று, மோசமான பலன்களை தரும் 

பாரத போர் 18 நாட்கள் நடைபெற்றது என்பதும் இந்தியாவின் தீவிரவாத செயல்கள் அடிக்கடி நடைபெறும் இடமும் ரத்த பூமியான  காஷ்மீர் KASHMIR இந்த பெயரின் கூட்டு எண் 18 .  கலவர பூமியாகி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை  காலம் காலமாக பறித்த ஸ்ரீலங்கா   SRILANKA இந்த பெயரின் கூட்டு எண் 18 என்று சொல்லக்கூடிய  இலங்கையும் பேரழிவு பூகம்பத்தை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான உயிரை பலி கொண்ட  இந்தியாவின் குஜராத் KUJARAT இந்த பெயரின் கூட்டு எண் 18  .  ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு இறந்த கிறிஸ்தவர்களின் புனித கடவுளான   கிறிஸ்து CHRIST  இந்த பெயரின் கூட்டு எண் 18 .  மேலே சொன்ன பெயர்கள் அனைத்தும் இந்த 18 ம் எண் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகவும் . 

இந்த அனைத்து பெயர்களிலும் கலவரம் ரத்தம், நிம்மதி இல்லாமை,சோகம் போன்ற  செயல்களை உடைய நிகழ்வுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் , இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளும் போராட்ட மயமாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதே போல் எண் 29 பெயரின் மொத்த  கூட்டு எண்ணாக வரவே கூடாது. ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டாம் எண்ணான சந்திரன் வீட்டில் ஒன்பதாம் எண்ணான செவ்வாய் நீச்சமடைவதும்  ஒன்பதாம் எண்ணான செவ்வாய் வீட்டில் இரண்டாம் எண்ணான சந்திரன் நீச்சமடைந்து எவ்வித பலனை கொடுக்காது என்பதை நினைவில் கொள்ளவும். 

மேலும் உடல் உடல்நலக்காரனும், மனத்தை ஆட்சி செய்யும் சந்திரனோடு  ஒன்பதாம் எண்ணான செவ்வாய் சேருவது, மனதில் கொடூரமான எண்ணங்களும், விபரீதமான செயல்களை செய்யத்தூண்டும்.   

எனவே மேலே கண்ட பெயர் அமைப்புகளை கொண்ட  பெண்களும்  மேலே சொன்ன பெயரின் கூட்டு எண்களை பெயரில் பெற்ற  பெண்களும்   கணவரை இழத்தல், கணவரை விட்டு பிரிந்து வாழ்தல், அல்லது மிகவும் சகிக்க முடியாத சூழ்நிலையில் கணவனோடு வாழ்க்கையை ஓட்டுதல் போன்ற சூழ் நிலைக்கு ஆளாக வாய்ப்புகள்அதிகம் . 

எனவே அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தும்.தீமை தரக்கூடிய எண்கள் பெயரின் கூட்டு எண்களாக அமையாமல்  நன்மைதரக்கூடிய, எண்களை . பெயரின் கூட்டு எண்களாக அமைத்து வாழ்க்கையில் நல்ல  பயன்களை அடைய வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்