Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
2014 - ரிஷப ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2014 - ரிஷப ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 டிசம்பர், 2013

2014 - ரிஷப ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் - ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC

0 comments
                                            
அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்  

 2014 - ரிஷப ராசியின் - ஆங்கில புது வருட பொதுப்பலன்கள்

இந்த வருட ஆங்கிலப் புதுவருடம் 2014- உங்கள் ரிஷப ராசிக்கு 5-ஆவது லக்னம் கன்னியிலும், 8-ஆவது ராசி தனுசு ராசியிலும் பிறக்கிறது. ரிஷப ராசிக்கு 8-வது ராசி என்பதால் இந்த வருடம் உங்களுடைய ஆரோக்கியம், தேக சௌக்கியத்துக்கு சில கெடுதல்களை ஏற்படுத்தினாலும், வருட ராசிநாதன் குரு 2-ல் இருந்து 8-ஆம் இடம் தனுசு ராசியைப் பார்ப்பதால் தோஷம் விலகும். மேலும் ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதி சனி உச்சம் பெற்று அவரும், 6-ல் உள்ள ராகுவும் தனுசு ராசியைப் பார்ப்பதால், 8-ஆம் இடத்துக் கெடுதல்கள் உங்களை அணுகாது. அதுமட்டுமல்ல; 7, 12-க்குடைய செவ்வாயும் வருட லக்னமான கன்னியில் (5-ல்) நின்று 8-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு கேடு கெடுதியில்லை.

மற்றொரு விஷயம் என்னவென்றால் 8-ஆம் இடம் என்பது அகௌரவம், அபகீர்த்தி, விபத்து, பீடை, விசனம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம் என்பதால், ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு எதிரிகளால் இடையூறுகளும் பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்யும். உங்கள் வளர்ச்சியிலும் செல்வாக்கிலும் சாதனையிலும் பொறாமை கொண்டவர்கள் புழுதிவாரித் தூற்றினாலும், உங்கள் பெருமையும் திறமையும் புகழும் எந்த வகையிலும் குறையாது; பாதிக்காது! "திட்டத்திட்ட திண்டுக்கல் - வைய வைய வைரக்கல்' என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்! கரிக்கட்டைக்கு பட்டை தீட்டமாட்டார்கள். நீங்கள் வைரம். அதனால் வைரத்துக்குத்தான் பட்டை தீட்டுவார்கள். அதனால் போட்டியாளர்களின் பொறாமைப் பேச்சுக்கள் உங்களுக்கு பட்டை தீட்டுவதாக கருதிக்கொண்டால் ஜொலிப்பீர்கள்- கேரட் மதிப்பு கூடிவிடும்! தங்கத்தை மெருகு கொடுக்க தணலில்போட்டு வாட்டுவது போல எண்ணிக்கொள்ளுங்கள்!

இந்த வருட ஆங்கில புது வருடம் 2014- எண் கணிதப்படி 7- கேதுவின் எண். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருந்தாலும் மகரச் சுக்கிரனுக்கு 4-ல் இருக்கிறார். ராசிநாதன் சுக்கிரன் 9-ல் இருக்க 9-க்குடைய சனி ராசிக்கு 6-ல் இருக்க சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை. 6-ஆம் இடம் தொழில் ஸ்தானமாகிய 10-ஆம் இடத்துக்கு பாக்கியஸ்தானம். எனவே உங்களுடைய தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் முன்னேற்றமும் வெற்றியும் லாபமும் இந்த வருடத்தில் அற்புதமாக இருக்கும்.

ஆயுள் காரகன் சனி, யோககாரன் ராகு- ஆன்மீக காரகன் கேது சம்பந்தப்பட்டதால், படித்து முடித்து வேலை தேடும் வாலிபர்கள் குவைத்- அரபு நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்கு நாடுகளுக்கும் நைஜீரியா, அமெரிக்கா போன்ற மேலைநாடுகளுக்கும் போய் வேலை பார்க்கலாம். வாய்ப்புகள் தேடிவரும். வருவதைப் பயன்படுத்திக் கொள்ளவும். ஏற்கெனவே வெளிநாடுகளில் வேலைபார்ப்போருக்கு இந்தப் புதுவருடம் கூடுதல் சம்பளம் - அதிக நன்மைகள்- பலன்களை உண்டாக்கும். சிலர் வெளிநாட்டிலேயே வேறு இடங்களுக்கு மாறலாம்.

4-ஆம் இடத்துக்கு (சிம்மத்துக்கு) திரிகோணத்தில் (5-ல்) தனுசு ராசியில் சூரியன், புதன், சந்திரன் சேர்க்கையாகவும், குரு, செவ்வாய், சனி, ராகு பார்வையும் கிடைப்பதால் கடன் வாங்கி வீடு, மனை, பிளாட் வாங்கலாம். டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகமும் உண்டு. படிக்கும் மாணவர்களுக்கு 2014-ல் மேற்படிப்பு, பட்டம் வாங்கும் யோகமும்- தடையில்லாத கல்வியும் உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் நோயற்ற வாழ்வும் தேக ஆரோக்கியமும் உண்டு. வாயும் வயிறுமாக இருக்கும் பெண்கள் "தாய் வேறு சேய் வேறு' என்று சுகப்பிரசவம்- மக்கட் பேறு அடையலாம்.

வர கூடிய 2014 - வருடத் தொடக்கத்தில் 2-ல் உள்ள குரு ஜூன் மாதம் 13-ஆம் தேதி 3-ல் கடகத்தில் உச்சம் அடைவார். குருவுக்கு 3-ஆம் இடம் சுமாரான இடம் தான் என்றாலும், ரிஷப ராசிக்கு 8, 11-க்குடைய குரு தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று 7-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் திருமணமாகவேண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணத் தடை விலகி நல்ல மனைவி- நல்ல கணவன் அமைவார். திருமணமாகி ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல் பிரிந்து வாழும் தம்பதிகளும், இக்காலகட்டத்தில் ஒன்றுசேர்ந்து நன்று வாழலாம். இன்றுபோல் என்றும் இன்பம் துய்க்கலாம்.

அழகான - புத்திசாலியான நல்ல கணவன் அமைய பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், நல்ல மனைவி அமைய ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்துகொள்வது அவசியம். அதேபோல பிரிந்து வாழும் தம்பதிகள் இணைந்து வாழ பதிகமன ஹோமமும், சதிகமன ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம்.

லக்னத்துக்கு பாக்கிய ஸ்தானமான  9-ஆம் இடத்தை குரு பார்ப்பதன் பலனாக தகப்பனார் அல்லது பாட்டனார் வகையில் பூர்வீகச் சொத்துப்பிரச்சினைகள் இருந்தால் கடக குருப்பெயர்ச்சிக்கு பிறகு பிரச்சினைகள் எல்லாம் சுமுகமாகத் தீர்ந்து அனுபவத்துக்கு வரும். ராஜபாளையத்திலிருந்து தென்காசி பாதையில் வாசுதேவநல்லூருக்கு பக்கத்தில் தாருகாபுரம் என்ற ஊர் உள்ளது. அங்கு தலைவன்கோட்டை ஜமீனுக்குப் பாத்தியதைப்பட்ட மத்தியஸ்தநாதர் கோவில் இருக்கிறது. மிகப்பழமையான சிவன்கோவில். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. சிவனைச் சுற்றிவரும் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி நவகிரங்களோடு காட்சியளிக்கிறார். இப்படி நவகிரக தட்சிணாமூர்த்தி இங்கும் உண்டு; தஞ்சைமாவட்டம் கும்பகோணம் பக்கமும் உண்டு. நவகிரக தோஷம் இருந்தால் மாறிவிடும். சென்னையிலிருந்து ஆந்திரா போகும் பாதையில் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழி சுருட்டப்பள்ளி என்ற ஊரில் சிவன்கோவிலில் தாம்பத்திய தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. தட்சிணாமூர்த்தி மடியில் அம்பாளை வைத்திருப்பதுபோல விசேஷ விக்கிரகம். இவரை வழிபட்டால் குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் மறைந்துவிடும்.

சந்திரனின்சொந்த வீடான கடகம் 3-ஆம் இடம். அங்கு உச்சம் பெறும் குரு உங்களுக்கு மனோதைரியத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும், உற்றார். உறவினர்கள், உடன்பிறப்புகளின் உதவியையும் ஆதரவையும் தருவார்.

சகோதர ஸ்தானமும் லாப ஸ்தானமுமான 11-ஆம் இடத்தை குருபார்ப்பதால், எதிர்பாராத வெற்றி, லாபம், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரி வகையில் நன்மை உண்டாகும். சிலர் எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு- விளையாட்டாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் காலி மனையை குறைந்த விலைக்கு வாங்கிப்போட்டிருப்பார்கள். அன்று அதை வாங்கும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் "வேஸ்ட்' என்று விமர்சனம் செய்தார்கள். இப்போது அதையொட்டி நான்கு வழிப்பாதை (பைபாஸ் ரோடு) வரப்போவதால், அந்த இடத்தின் மதிப்பும் மவுசும் கூடிவிடும். அதனால் உங்கள் இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கவும் அல்லது ரெஸ்ட்டாரண்ட் கட்டவும் திட்டமிட்டு உங்களை அணுகலாம். ஒன்றுக்கு பத்துமடங்கு வாங்கிய விலைக்குமேல் அதை "ஆஃபர்' செய்யலாம். அதனால் நல்ல லாபம் கிடைக்கலாம். அல்லது அந்தத் திட்டத்தை நீங்களே நிறைவேற்ற முயற்சிக்கலாம்.

இந்த வருடம் 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி வருகிறது. ஜூன் மாதம் 21-ஆம் தேதி ராகு -கேது பெயர்ச்சியும் வருகிறது. கடந்த ஒன்றரை வருடகாலமாக துலா ராசியில் இருந்த ராகு- இப்போது கன்னி ராசிக்கும், மேஷத்தில் இருந்த கேது மீன ராசிக்கும் மாறுவார்கள்.

சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு 5-ல் ராகு- 11-ல் கேது இருப்பது ஒரு திருப்புமுனைதான். உங்கள் மனதில் அரித்துக்கொண்டிருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். 5-ஆம் இடம் பிள்ளைகள் ஸ்தானம். பிள்ளைகள் வகையில் திருமணம், வாரிசு, தொழில் உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற நல்ல காரியங்கள் எல்லாம் தடைப்பட்டு தாமதப்பட்டு கலங்கிய பெற்றோர்களுக்கு, சுபமங்கள சேதிகள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதேபோல பிள்ளைகளுக்குள் "ஈகோ' உணர்வும், நீயா நானா என்ற போட்டி இருந்த நிலையும் மாறி சுமுகத் தீர்வு ஏற்படும். இதெல்லாம் கடகத்துக்கு குருமாறியதும் நடக்கும். கடக உச்ச குரு 9-ஆம் இடத்தில் உள்ள கேதுவை பார்ப்பதால் அந்த பலன் ராகுவுக்கும் சேரும்.

மேலும்  ராகு தசை, கேது தசை அல்லது அவரவர் புக்தி நடந்தாலும் அனுகூலமான பலன்களை எதிர்ப்பார்க்கலாம். ராகு- கேது பெயர்ச்சிக்கு காளஹஸ்தி, தென்காளஹஸ்தி எனப்படும் உத்தமபாளையம், கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடம், காரைக்குடி நாகநாதர் கோவில், நயினார் கோவில்- ஆகிய இடங்கள் சென்று வழிபடலாம்.
2014 - வருட மாத பலன்கள்

ஜனவரி

சுக்கிரன் மகரம், தனுசுவில் வக்ரகதியாக சஞ்சாரம். சாதக பாதகங்களும், ஏற்ற இறக்கங்களும் உள்ள மாதம். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கு எந்த குறையும் இருக்காது. போட்டி, பொறாமைகளும், எதிர்ப்பு இடையூறுகளும் தணிந்துவிடும். விரோதிகளும் பணிந்துவிடுவர். நீண்டநாள் முயற்சி கனிந்து வரும். வெற்றி தேவதை மாலை அணிவித்து வரவேற்கும். தேக ஆரோக்கியத் தில் மட்டும் தீவிர கவனம் தேவைப்படும். கூடியவரை புதிய திட்டங்களையும் புதிய முயற்சிகளையும் தள்ளிப் போடவும். அல்லது வேகமில்லாமல் நிதானமாகச் செயல்படவும். (குரு வக்ரம்).

பிப்ரவரி

இந்த மாதம் உங்களுக்கு தொழில் முயற்சிகளில் ஆர்வமும் வேகமும் உண்டாகும். உங்கள் வேகத்துக்கேற்ற வகையில் பயனும் பலனும் உண்டாகும். குறுகிய காலத்திட்டங்களில் இறங்கி நிறைய சம்பாதிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவீர்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் சம்பாத்தியம் இருக்கும். முறைகேடான வழிகளில் இறங்கமாட்டீர்கள். அதர்ம வழியில் வரும் செல்வம் எப்போதும் ஆபத்தைத்தான் உண்டாக்கும். அதனால் அதைத் தவிர்க்கவும். இந்த மாதமும் குருவின் வக்ரகதி தொடருகிறது. நிதானம் தேவை.

மார்ச்

மிதுனத்தில் உள்ள குரு மூன்று மாதத்துக்குமேல் வக்ரமாக இருக்கிறார். அதனால் உங்களுக்கு பொருளாதாரத்தில் சிக்கலும் பற்றாக்குறையும் நெருக்கடியும் காணப்படலாம். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றுவதிலும் கஷ்டமாகத் தெரியலாம். ஆகவே யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல், ஆகட்டும் பார்க்கலாம் என்ற காமராஜர் பாலிஸியைக் கடைப்பிடித்தால், கௌரவத்துக்கும் புகழுக்கும் கேடுவராது! இந்த மாதம் 12-ஆம் தேதி குரு வக்ரநிவர்த்தி அடைவதால் சொல்லும் செயலும் அற்புதமாக இருக்கும். செய்வதைத்தான் சொல்லுவீர்கள்; சொல்லுவதைத்தான் செய்வீர்கள். குருவின் வக்ரநிவர்த்திக்கு குச்சனூர் வடகுரு ஸ்தலம் சென்று வழிபடலாம்.

ஏப்ரல்

இந்த மாத மத்தியில் தமிழ்ப் புதுவருடம் ஜயவருடம் பிறக்கிறது. 14-4-2014 திங்கள்கிழமை காலை 6.12 மணி அளவில் தமிழ் வருடப் பிறப்பு மேஷ லக்னம், அஸ்த நட்சத்திரம், கன்னி லக்னம், தமிழ்ப் புதுவருடப் பிறப்பு உங்களுக்குமிக அனுகூலமாகவே அமைகிறது. தொழில் முன்னேற்றம், வேலையில் உயர்வு, சம்பாத்தியம், சேமிப்பு கூடுதல்! உங்கள் ராசிக்கு 12-ஆவது லக்னத்திலும், 5-ஆவது ராசியிலும் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் உண்டாகும். நீண்டகாலக் கனவுகள் கைகூடும். திட்டங்கள் வெற்றியடையும். அவரவர் விருப்பப்படி இஷ்ட தெய்வ ஆலயங்கள் சென்று வழிபடவும். தஞ்சாவூர்- ஒரத்தநாடு வழி பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வர சுவாமியை வழிபடலாம். சூரியன்- சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம்.

மே

இந்தமாத முற்பகுதியில் சிறுசிறு பிரச்சினைகளும் குழப்பமும் ஏற்பட்டாலும், உங்களுடைய பிரார்த்தனையும் தெய்வ வழிபாடும் உங்களைக் காப்பாற்றும். பிச்சைக்காரனில் இருந்து கோடீசுவரன் வரை யார்தான் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். எல்லாருக்குமே பிரச்சினைதான். முற்றும் துறந்த முனிவர்களுக்கும் பிரச்சினை! காவியணிந்த சன்யாசிகளுக்கும் பிரச்சினை. ஆனால் எல்லாப் பிரச்சினையும் இல்லாமல் காத்து அருளக்கூடியவர் கடவுள் ஒருவரே! மற்றபடி உறவோ சொந்தமோ அதிகாரிகளோ பதவியோ பணமோ நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு தராது. இறைவன் ஒருவனே நமது தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடியவன்.

ஜூன்

இம்மாதம் இரண்டு கிரகப்பெயர்ச்சி! 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. 2-ல் உள்ள குரு 3-ல் கடகத்தில் உச்சமாவார். 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கப் போவதால் திருமணத்தடை விலகும். நல்ல மணவாழ்வு அமையும். வாரிசு யோகமும் உருவாகும். பூர்வ புண்ணிய பாக்கியம் பெருகும்! தொழில், லாபம், பதவி முன்னேற்றமும் உண்டாகும். அடுத்து 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. ரிஷப ராசிக்கு ராகு- கேது மாறும் இரண்டு இடங்களும் அற்புதமான இடங்கள். உங்கள் கனவுகள் நனவாகும். திட்டங்கள் வெற்றியடையும். எண்ணங்கள் ஈடேறும். தேடியவை கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்கு குரு ஸ்தலமும், ராகு- கேது பெயர்ச்சிக்கு ராகு ஸ்தலமும் சென்று வழிபடவும். 

ஜூலை

தேவைக்கேற்ற அளவு பண வரவு இருந்தாலும், அதற்குமேல் தேவைகளும் கூடிவிடும். அதனால் பற்றாக்குறையை சமாளிக்க அறிந்தவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கும் அவசியமும் உண்டாகும். மகள்- மாப்பிள்ளை வகையில் அல்லது மகன்- மருமகள் வகையில் மகிழ்ச்சியும் சுபச்செலவுகளும் உண்டாகும். அவர்களின் புதுமுயற்சி பட்ஜெட்டுகளில் ஏற்படும் பற்றாக்குறையைச் சரிக்கட்ட உங்கள் உதவியை நாடலாம். நீங்களும் மனமுவந்து உதவிசெய்யலாம். உங்கள் வசம் கையிருப்பு ரொக்கம் இல்லாவிட்டாலும் நகைகளை வைத்தோ ஜாமீன் பொறுப்பேற்று கடன் வாங்கியோ உதவி செய்வீர்கள். தங்க நகை என்பது எப்போதும் தங்கும் நகையல்ல- அடகு வைக்கப் பயன்படப் பங்குபெறும் நகைதான்.

ஆகஸ்டு

இந்த மாதம் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் உங்களை முற்றுகையிடும். உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் மற்றவர்களுக்கோ வைத்தியச் சிகிச்சை செலவுகள் ஏற்படலாம். சகோதர உறவுகளில் சில வருத்தமூட்டும் சம்பவங்கள் இடம்பெறும். குடும்பத்தில் பெரியவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போக மாட்டான் என்பது விதி. சொந்த பந்தங்களில், உறவு முறையில், நீரடித்து நீர் விலகாது என்பதை உணர்ந்து செயல்பட்டால் பகையில்லை- பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை. எது எப்படியிருந்தாலும் பொருளாதாரம் நிறைவாக இருப்பதால் எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம். 

செப்டம்பர்

இம்மாதம் சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சாரம். மாதக்கடைசியில் கன்னியில் நீசம்! பொருளாதாரம் வரவு- செலவு திருப்திகரமாக இருக்கும். நிலபுலங்களால் ஆதாயம் எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்ட்டேட் தொழில் சிறப்பாக அமையும். நல்ல திருப்பங்கள் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் சில முக்கிய உதவிகளும் ஆதரவுகளும் உண்டாகும். ராஜாங்க காரியங்களிலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் கைகொடுக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கும்பகோணம் குடவாசல் வழி- சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டால் வரவேண்டிய பணம் வசூலாகும். ஆலயத்தொடர்புக்கு: நாகசுப்பிரமணியம், செல்: 94872 92481.

அக்டோபர்

இந்த மாதம்  புதுமுயற்சிகளில் ஈடுபடாமல் மாமூல் பணிகளில் முழுமையான கவனம் செலுத்தலாம். எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானமாக, கருத்தாகச் செயல்பட்டால் சிறு நஷ்டம்கூட வராமல் பாதுகாக்கப்படலாம். லாபம் வந்தாலும் வராவிட்டாலும் நஷ்டம் வராமல் இருப்பதே வியாபாரம்! அரசியல்வாதிகளுக்கு இது ஆகாத மாதம். கலைத்துறையினருக்கு கணிப்பு மேலோங்கும் மாதம். பணியாளர்களுக்கு இனிமையான மாதம். மனைவியின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள்.

நவம்பர்

இந்த மாதம் குருவின் சஞ்சாரம் மிகவும் அனுகூலமாக கைகொடுத்து உதவும். சிலர் "ஈகோ' உணர்வாலும் அல்லது அனுசரிப்புத் தன்மை இல்லாததாலும் உங்கள் அருமை பெருமையை உணர்ந்து உங்களைத் தேடிவந்து உறவு கொண்டாடலாம். நீங்களும் நடந்த நிகழ்ச்சிகளை மறந்து கடந்த காலத்தை மனதில் வைத்துக்கொள்ளாமல் பெருந்தன்மையோடு   நேசக்கரம் நீட்டி ஏற்றுக்கொள்ளலாம். தொழிலதிபர்களும் வியாபாரிகளும் உற்சாகமாகச் செயல்பட்டு உன்னதமான லாபங்களை சேமிக்கலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு எதிர்பார்க்கலாம்.

டிசம்பர்

இந்த மாதம் சனிப்பெயர்ச்சி. துலாச் சனி- விருச்சிக ராசிக்கு மாறுவார். சனிப்பெயர்ச்சி அடுத்துள்ள இரண்டரை வருடமும் உங்களுக்கு அனுகூலமாகவே அமையும். குருவின் சாரத்தில் (விசாகத்தில்) சனி இருப்பதாலும் கடக குருவின் பார்வையைப் பெறுவதாலும் ஏழாமிடத்துச் சனி உங்களுக்கு நல்ல பலனையே தரும். பொதுவாக டிசம்பரில் பிற்பகுதி 15 நாள்கள் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி இவற்றால் பெரிய மாறுதல்கள் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. வழக்கம்போல எல்லாம் நடக்கும். ஜாதக தசாபுக்திகளை பொறுத்துத்தான் நல்லதோ கெட்டதோ நடக்கும். இருந்தாலும் சனிப்ரீதியாகவும் குருப்ரீதியாகவும் குச்சனூர் சென்று வரலாம். திருநள்ளாறு போகலாம். ஆலங்குடி போகலாம்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

2014-ஆம் வருடம் மைத்ர தாரையில் (நட்பு தாரையில்) 8-ஆவது நட்சத்திரத்தில் பிறப்பதால், உங்களுக்கு தைரியமும், நண்பர்களின் உதவியும், மனைவி, மக்கள், குடும்பச் சூழ்நிலையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சகோதர சகாயம் ஏற்படும். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று ஞாயிறன்று வழிபடவும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:

2014-ஆம் ஆண்டு ரோகிணிக்கு 16-ஆவது நட்சத்திரம். (மூலம்) 7-ஆவது வதை தாரையில் பிறப்பதாலும், ரிஷப ராசிக்கு 8-ஆவது ராசியில் வருடம் பிறப்பதாலும் இந்த வருடம் உங்களுக்கு சோதனை ஆண்டாக இருக்கலாம். சில கௌரவப் பிரச்சினைகளை சந்திக்கக் கூடும். காரியத்தடை, தாமதம், ஏமாற்றங்களைத் தவிர்க்க பிரதோஷ வழிபாடு அவசியம். சிவகங்கையில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சந்திரன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற சசிவர்ண ஈசுவார் கோவிலில் திங்கள்கிழமை வழிபடலாம்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அது மிருகசீரிடத்துக்கு 15-ஆவது நட்சத்திரம். 6-ஆவது ஸாதக தாரை- சுபதாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு எல்லாம் சாதகமாகவும் அனுகூலமாகவும் அமையும். மேலும் சந்திரனுக்கு 7-ல் குரு நிற்பதால் கெஜகேசரி யோகம். ஆகவே சத்ரு, போட்டி, பொறாமை எல்லாம் விலகியோடிவிடும். பகையாளிகள் எல்லாம் பயந்து ஒதுங்கிவிடுவார்கள். அல்லது சரணடைந்து சமாதானமாகி விடுவார்கள். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முத்துக்குமார சுவாமியை வழிபட சத்துரு ஜெயம் உண்டாகும். 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Continue reading >>