Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 8 செப்டம்பர், 2025

மண் மனை பொன் பொருளை இழக்க வைக்கும் பெயரின் ஆபத்தான ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன்

                                

பெயரின் நியூமராலஜி எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  22 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது 

சந்திரனின் இரண்டு ஆதிக்க எண்களும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் புதனின் வீடான மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

ராகுவின் ஆதிக்கத்தில் மிக்க அற்புதம் வாய்ந்த எண்ணாகும் . அதிக சக்தி வாய்ந்தது . இரண்டு சந்திரனின் ஆதிக்க எண்ணை பெற்று ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்துவதால் சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை ஏற்படுத்துகிறது . 

விஷ்ணு பிரம்மா இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப்பெற்ற திருவடிகளையுடைய பதவியை கொடுக்கும் எண் என மந்திர நூலில் காணப்படுகிறது . வாழ்க்கையில் அனைத்துவித சுகத்தை அனுபவிக்கும் சூழ்நிலையையும் பதவியையும் கனவு காணும் மனிதன் போன்ற எகிப்திய பிரமிடு சித்திரங்கள் இந்த 22 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

ராகுவை போல கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதும் உண்டு. பரம ஏழ்மை நிலையில் உள்ளவரும் கூட பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் பெயர் கொண்டவர்களும் உண்டு . எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களும் இவர்களே . லாகிரி வஸ்துக்கள் போதை பொருள்கள் போக சுகங்கள் இவைகளில் தீவிரமான ஈடுபாடுகள் உண்டாகும் . 

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை மறந்து மயக்க உணர்ச்சிகளுக்காக மண் மனை பூமி பொருள்களையெல்லாம் இழக்க கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் . துர் மந்திரங்களால் சூழப்பட்டு அவர்களின் சொல் படி கேட்கவில்லை என்றாலும் துன்பமான சூழ்நிலைகளில் மாட்டி கொள்வார்கள் . சுயநலக்காரர்கள் சிலரால் அவர்களின் சுகத்துக்காக இவர்களை பலிக்கடாவாக ஆக்கி விடுவதும் உண்டு . 

வளமான வாழ்க்கை பாதையை நோக்கி செல்லும் இவர்கள் செல்வம் நல் வாழ்க்கைதுணை வாகனம் ஆன்மீகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள் . உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் நட்பு எந்த கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை அனைத்தும் இந்த எண் காரர்கள் பெற்றிருப்பார்கள் . 

கடவுள் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்கள் சிலரும் உண்டு . ஆன்மீக நாட்டம் இல்லாதவர்கள் சிலரும் இந்த எண்ணில் உண்டு . ஹீப்ரு மொழியில் 22 எழுத்துக்களே உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளவும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 க வருபவர்களும் - பிறந்த தேதியின்  கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களும் பெயர் எண் 22 அமைந்தாலும்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 19 - 37 - 46 - 73 - 82 - 91- இதில் ஒன்று வருமாறு அமைந்தாலும் மேன்மை நிச்சயம் . 

பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து  சூட்டினால் அதிஷ்ட தீபம் அணையாமல் இருக்கும் . 


அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

 பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 



ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328
Share this article :

0 comments:

கருத்துரையிடுக