ஜாதகரின் பிறந்த நேரத்தில் மற்றும் இடத்தில் சந்திரன் கடந்து செல்லும் திதி க்கு உரியவாறு சூன்ய தோஷ ராசிகள் அமைகின்றன.
எந்தெந்த திதிக்கு, சூன்ய தோஷ ராசிகள் எவை என்பதைப் பார்ப்போம்.
எண் - திதி - ராசிகள்
1 பிரதமை - துலாம், மகரம்
2 துவிதியை - தனுசு, மீனம்
3 திரிதியை - சிம்மம், மகரம்
4 சதுர்த்தி - ரிஷபம், கும்பம்
5 பஞ்சமி - மிதுனம், கன்னி
6 சஷ்டி - மேஷம், சிம்மம்
7 சப்தமி - கடகம், தனுசு
8 அஷ்டமி - மிதுனம், கன்னி
9 நவமி - சிம்மம், விருச்சிகம்
10 தசமி - சிம்மம், விருச்சிகம்
11 ஏகாதசி - தனுசு, மீனம்
12 துவாதசி - துலாம், மகரம்
13 திரயோதசி - ரிஷபம், சிம்மம்
14 சதுர்த்தசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு எவ்வித திதி சூன்யமும் இல்லை, தோஷமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திதி சூன்யம் பெறும் ராசிகளில் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.
ஜாதக பலன்கள் பார்க்கும் பொழுது திதி சூன்ய ராசிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சூன்ய ராசிகளில் உள்ள கிரகங்கள் பொதுவாக நற்பலன்களை வழங்குவது இல்லை.
மேலே குறிப்பிட்ட அட்டவணை பார்த்தபின் சதூர்த்தசி யில் பிறந்த ஜாதகத்தில் 4 ராசிகள் சூன்யமாக உள்ளது என்று கவலைப்பட தேவை இல்லை.
இதற்கான விதிவிலக்குகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
அறிவியல் ரீதியாக துல்லியமாக தசா - புத்தி காலங்களில் பலன்கள் கணிக்க முதன்மை கட்டத்துடன் வர்க்க கட்டங்கள் உபயோகிப்பது எளிதாக இருக்கும்.
ஒவ்வொரு வர்க்க கட்டங்களிலும் இலக்கினம் மற்றும் 9 கிரகங்களும் முதன்மை கட்டத்தில் இருந்து மாறு பட்ட ராசிகளில் அமையப் பெறும்.
சூன்ய ராசிகள் அனைத்து கட்டங்களுக்கும் பொதுவானது.
கீழே உள்ள, அனைவருக்கும் தெரிந்த, கணக்கு சமன்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும்.
( + ) × ( + ) = ( + )
( + ) × ( - ) = ( - )
( - ) × ( + ) = ( - )
( - ) × ( - ) = ( + )
இரண்டு நேர்மறை எண்களை பெருக்கிவருவது, நேர்மறை எண்.
ஒரு நேர்மறை எண்ணுடன் இன்னொரு எதிர்மறை எண் பெருக்கி வருவது, எதிர்மறை எண்.
இரண்டு எதிர்மறை எண்களை பெருக்கி வருவது, நேர்மறை எண்.
விதிவிலக்குகள் ::
சூன்ய ராசியில் இருக்கும் வக்கிரம் பெற்ற கிரகம் நன்மை செய்யும்.
சூன்ய ராசியில் இருக்கும் நீச்சம் அடைந்த கிரகம் நன்மை செய்யும்.
இலக்கினத்திற்கு மறைவு ஸ்த்தானமான 3, 6, 8, 12 ம் இடங்களில் உள்ள சூன்ய ராசிகள் நன்மை பயக்கும்.
இந்த விதிவிலக்குகள் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் பிறந்தவர்களுக்கு கிடையாது.
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக