வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
(வரும் 2.12.2012 ஞாயிறு, காலை 10.36 மணிக்கு, ராகு விருச்சிகத்தில்
இருந்து துலாமிற்கும், கேது ரிஷபத்தில் இருந்து மேஷத்திற்கும்
பெயர்ச்சியாகின்றனர். இவர்கள் 21.6.2014 வரை இந்த ராசிகளில் செயல்படுவர்.)
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் ராவுகும், பன்னிரெண்டாம் இடத்தில் கேதுவும்
இடம்பெற்று உள்ளனர். ராகுவின் அமர்வு நல்ல பலன்களையும் கேதுவின் அமர்வு
சில படிப்பினைகளையும் பெற்றுத்தரும். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே
அஷ்டம, வீடு, வாகன ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே
தனம், தொழில் ஸ்தானங்களில் பதிகிறது. ராகுவின் அமர்வு சிறப்பாக உள்ளதால்
செயல்பாடுகளில் உற்சாகம் ஏற்படும். கடந்த காலத்தில் இருந்து வந்த
ஆடம்பரசிந்தனை மறையும். குடும்பத்தினருக்கு உங்கள் மீதான நம்பிக்கை
அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும் விதத்தில் செயல்பட்டு வருவீர்கள்.
வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகமுண்டு. தாய்வழி
உறவினர்களிடம் இணக்கம் கூடும். பூர்வ சொத்துக்களில் கிடைக் கும் வருமானம்
உயரும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னோடியாகத் திகழ்வதைக் கண்டு
பெருமை அடைவீர்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து
குடும்பத்திற்கு பெருமை சேர்த்திடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி
நிறைந்திருக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். தொழில் சார்ந்த
வகையில் புதிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி தகுந்த வளர்ச்சியும், நல்ல
ஆதாயமும் பெறுவீர்கள்.
தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் தங்கள் தொழிலாளர்களின்
ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவர். உற்பத்தி, தரம் அதிகரிக்கும். புதிய
ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று அமோக லாபம் காண்பர். தொழிலில் குறுக்கிடும்
சிரமங்கள் அடியோடு விலகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று வளர்ச்சிக்கு
வழிவகுப்பர். அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும்.
வியாபாரிகள்: வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம்
ஆதரவைப் பெற்று ஆதாயத்தைப் பெருக்குவர். சகவியாபாரிகளின் மத்தியில்
நன்மதிப்பு உண்டாகும். கனிவான அணுகுமுறையைப் பின்பற்றுவதால், விலகிச்சென்ற
வாடிக்கையாளர்கள் கூட தற்போது உங்களைத் தேடிவருவர். புதிய கிளை நிறுவும்
எண்ணம் நிறைவேறும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள்
பணியிடத்தில் அனுகூலமான சூழ்நிலை அமையப் பெறுவர். சகபணியாளர்களின்
ஒத்துழைப்பால் பணியிலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பதவி உயர்வும், விரும்பிய
இடமாற்றமும் கிடைக்கும். அவ்வப்போது பணிச்சுமையைச் சந்தித்தாலும்
வருமானத்திற்கு குறைவிருக்காது.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் பணியில்
ஈடுபடுவர். திறமையுடன் பணி யாற்றிபணியிலக்கை எளிதில் நிறைவேற்றுவர்.
சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு. எதிர்பார்த்த சலுகைகள்
படிப்படியாகக் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பும், குடும்பச்
செலவுக்குத் தேவையான பணவரவும் கிடைக்கப் பெறுவர். சுய தொழில் புரியும்
பெண்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர்.
மாணவர்கள்: மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர்.
கல்விச்
செலவுக்கான பணம் சீராகக் கிடைக்கும். நண்பர்களுடன் பயனுள்ள பொழுதுபோக்கில்
ஈடுபட்டு மகிழ்வர். பெற்றோர் ஆசிரியர் மத்தியில் நற்பெயர் காண்பர்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி
அவர்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வர். பதவி, பொறுப்பை
விரும்புபவர்களுக்கு தலைமையின் ஆதரவால் கவுரவமான பதவி கிடைக்கும்.
விவசாயிகள்: அதிக பணவரவு தரும் மாற்றுப் பயிர்களை
விளைவித்து மகசூலைப் பெருக்குவர். விளைபொருள் தேக்கமின்றி விரைவில்
விற்பனையாகும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் அதிகமாகும். புதிதாக நிலம்
வாங்கும் யோகமும் உண்டு.
பரிகாரப் பாடல்:
மாலே! நெடியானே! கண்ணனே! விண்ணவர்க்கு
மேலா! வியன்துழாய்க் கண்ணியனே!- மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே! என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு.
பரிகாரம்: விஷ்ணுவை வழிபடுவதால் வருமானம் உயரும்.
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த
உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத
பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா?
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







