வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
காலத்தே பயிர் செய் என்பார்கள். அதாவது எது எதை எந்தெந்த காலகட்டத்தில் செய்ய வேண்டுமோ அதை அந்த கால கட்டத்தில் செய்து முடிக்க வேண்டும்.
விளக்கமாக சொல்ல வேண்டுமானால் படிக்க வேண்டிய கால கட்டத்தில் கல்வி பயில வேண்டும். சம்பாதிக்க வேண்டிய கால கட்டத்தில் சம்பாதிக்க வேண்டும் . அதே போல் திருமணம் செய்ய வேண்டிய ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் முடிக்க வேண்டும்.
ஒரு சிலர் திருமண வயதை எட்டியவுடன் ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முற்படும்பொழுது எனக்கு திருமணமே வேண்டாம் என்று கடைசிவரை அடம்பிடிப்பவர்களும் உண்டு.
அல்லது திருமண பேச்சை எடுத்தாலே அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். அதையும் மீறி ஒரு ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ திருமணம் செய்து வைக்கும்பொழுது ஒரு சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பது பிரிந்து விடுவார்கள்.
இப்படி கணவனோ மனைவியோ திருமணமான ஒரு சில மாதங்களிலேயே பிரிந்து கடைசிவரை இருவரும் ஒன்று சேராமலேயே இருப்பதற்கு என்ன காரணம் என்று ஒரு ஜோதிட ஆராய்ச்சி நோக்கோடு பார்க்கும்பொழுது அவர்களுடைய பெயர் அமைப்புகளும் , அந்த பெயரின் கூட்டு எண்களும் ஒரு காரணம் என்று தெரிகிறது.
பொதுவாகவே ஒரு பெயரின் மொத்த கூட்டு எண் 4 , 7 இப்படியாக வந்தால் அவருக்கு திருமண வாழ்க்கை பிரகாசமாக இருக்காது என்று சொல்லி இருக்கிறேன்.
திருமணமான ஒரு சில மாதங்களிலேயே வாழ்க்கை துணையுடன் வாழ பிடிக்காமல் கடைசிவரை நான் இப்படியே தனித்தே இருந்து காலத்தை ஒட்டி விடுகின்றேன் என்ற எண்ணம் ஒரு ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ வருமானால் அவர் திருமண வெறுப்புடையவர் என்றே சொல்ல வேண்டும்.
ஆங்கிலத்தில் திருமணத்தில் வெறுப்பு உடையவர்களை MISOGAMIST என்று அழைப்பார்கள். இந்த சொல்லை ஆங்கிலத்தில் எழுதி எண் கணித சோதிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை கொடுத்து மொத்தமாக கூட்டும்பொழுது 31 என்று ராகுவின் ஆதிக்க எண் வரும்.
ஏற்கனவே சொல்லியபடி 4 ம் எண்ணையும் 7 ம் எண்ணையும் பெயரில் கொண்டவர்களுக்கு திருமண வாழ்க்கை பிரகாசமாக இருக்காது என்று சொல்லி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இன்ப துன்ப சுக துக்கங்களை அனுபவித்த பின்னரே இவர்களுக்கு திருமண வாழ்க்கை பிரகாசம் இல்லாமல் போகும்.
ஆனால் பெயரின் கூட்டு எண் 31 க வந்தால் எந்த ஒரு இன்ப துன்ப சுக துக்கங்களை அனுபவிக்காமலேயே திருமணமான ஒரு சில மாதங்களிலேயே வாழ்க்கை துணைவரையோ அல்லது வாழ்க்கை துணைவியையோ ஒதுக்கி தள்ள கூடிய சூழ் நிலையை இந்த எண் உருவாக்கி கொடுத்து விடும்.
எனவே உங்களின் பெயரை அதிர்ஷடமான முறையில் அமைத்து , திருத்தம் செய்து சந்தோஷமுடன் வாழுங்கள்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







