Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
தமிழ் புத்தாண்டு - 2013 - கன்னி ராசி பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் புத்தாண்டு - 2013 - கன்னி ராசி பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஏப்ரல், 2013

தமிழ் புத்தாண்டு - 2013 - கன்னி ராசி பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments
 

தமிழ் புத்தாண்டு - 2013 -  கன்னி ராசி பலன்கள் (14.4.13 முதல் 13.4.14 வரை)
புதியவர்களின் நட்பால் புகழை அடைய போகும் கன்னி ராசி அன்பர்களே இந்த புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திலும் கேது எட்டாம் இடத்திலும் சிரமங்களைத் தரும் நிலையில் அமர்வு பெற்றுள்ளனர். 

குரு மே28 வரை பாக்ய ஸ்தானத்தில் இருந்து நல்ல பலன்களை தருகிறார். வாக்கு ஸ்தானத்தில் உள்ள ராகு, சனி, உங்கள் பேச்சில் கடினத்தன்மையை உருவாக்குவர். அவப்பெயர் வராத அளவிற்கு நடந்துகொள்வது நல்லது.குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் கொள்கிற அதிருப்தியினால் மன சஞ்சலம் அடைவீர்கள். 

வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளும் வாகன பயணத்தில் மிதவேகமும் பின்பற்றுவது நல்லது. தாயின் அன்பு, ஆசி பரிபூரணமாக கிடைத்து மனதுக்கு ஆறுதல் தரும். புத்திரர்கள் பணம், பொருள் கேட்டு தொந்தரவு செய்வர். இயன்ற அளவில் கொடுத்து சமாதானம் சொல்வதால் சுமூகமான நிலை இருக்கும்.

சொத்து ஆவணங்களை பிறர் பார்வையில் படாமல் பராமரிப்பதால் மட்டுமே சிரமம் வராமல் தவிர்க்கலாம். கடந்த நாட்களில் எதிரிகளாக நடந்தவர்கள் உங்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட முயற்சிப்பர். அவர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பதுடன்,நம்பகமானவர்களின் முன்னிலையில் பேச்சு நடத்தி தீர்வை உருவாக்குவது உத்தமம்.உடல் ஆரோக்கிய குறைபாடு குருபகவானின் நல்லருள் பார்வையால் சீராகி நன்மையைத் தரும். 

கணவன், மனைவி குடும்பநலன் கருதி சச்சரவு வராத அளவில் பொறுமையாக நடந்துகொள்வர். நண்பர்களுக்கு உதவுவதிலும் அவர்களிடம் உதவி பெறுவதிலும் நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். வெளியூர் பயணங்கள் மூலம், புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் மூலம் புகழும் கிடைக்க யோகமுண்டு.

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் குறுக்கீடுகள் வரலாம். உங்கள் நலம் விரும்புபவர்களின் ஆலோசனை பெற்று பொறுமையுடன் சரிசெய்வதால் வளர்ச்சியும் வருமானமும் கிடைக்கும். பாக்கிப்பணத்தை வசூலிக்க கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். உற்பத்தி இலக்கை திட்டமிட்ட அளவில் அடைய பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நிபந்தனைகளில் நடைமுறை மாற்றம் செய்வீர்கள். சிலர் சொந்த காரணங்களுக்காக தொழில் கூட்டமைப்பில் கலந்துகொள்வதை தவிர்ப்பர். அனுபவம் இல்லாத தொழிலில் கூட்டுசேர வரும் அழைப்புக்களை நிராகரிப்பதால் தேவையற்ற சிரமம் வராது.

வியாபாரிகள்: சந்தையில் போட்டி அதிகரிப்பதால் விற்பனையின் அளவு கொஞ்சம் குறையும். லாபத்தைக் குறைத்து சலுகை வழங்கினால் மட்டுமே சுமாரான விற்பனை அளவை அடையலாம். நவீன வரவுகளை அறிமுகப்படுத்துவதாலும் விற்பனையைத் தக்க வைக்கலாம். சரக்குகளுக்கு உரிய காப்பீடு செய்துகொள்வதால் பாதுகாப்பு கிடைக்கும். நம்பகமானவர்களை பணியமர்த்துவதால், பண நஷ்டம் உள்ளிட்ட சிரமங்கள் வராமல் தவிர்க்கலாம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சக பணியாளர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் சொன்னதை உயரதிகாரிகளிடம் திரித்துச் சொல்லி பிரச்னையைப் பெரிதாக்குவார்கள். பணியை யாரிடமும் ஒப்படைக்காமல், நீங்களே பொறுப்புடன் செய்வது நற்பலனைத்தரும். நிர்வாகத்திடம் பெறவேண்டிய சலுகைகளைக் கேட்பதில் நிதான அணுகுமுறை நல்லது. வாக்கு ஸ்தானத்தில் சனி, ராகு அமர்வு உள்ளதால் அனுபவம் இல்லாத பணிகளை தெரியும் என்று சொல்லி பொறுப்பேற்றால் பிரச்னை தான் வரும். இயந்திரம் சார்ந்த பணியில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடைமுறையை கவனமுடன் பின்பற்ற வேண்டும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத நிலை இருக்கும். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்ற எதிர்மறை பலன்களைப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது நல்லது. தாய்வீட்டு உதவி ஓரளவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் பின்னடவைச் சந்திப்பர். கடும் முயற்சி, உழைப்பினால் தொழிலை ஓரளவு தக்க வைக்கலாம். தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

மாணவர்கள்: படிப்பில் அதிக கவனம் கொள்வதால் மட்டுமே எதிர்பார்க்கும் மார்க் கிடைக்கும். சக மாணவர்களிடம் படிப்பு தவிர பிற விஷயம் குறித்து அளவுடன் பேசுவது நல்லது. படிப்புக்கான செலவில் முக்கிய தேவைகளுக்கு மட்டும் இடம்தருவது சிரமம் தவிர்க்க உதவும். வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்பவர்கள் கல்வித்திறனுக்கு ஏற்ற பணிகளை பெறுவதால் நல்ல அனுபவம் கிடைக்கும். பெற்றோரின்சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு அவர்களுக்கு பணக்கஷ்டம், மனக்கஷ்டத்தை கொடுப்பதைத் தவிர்ப்பதன் மூலம், கிரகங்களின் பிடியில் இருந்து விடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகள்: பிறர் நலன் கருதி உங்களின் சொல்லும் செயலும் அமைந்தாலும், பொறாமை குணம் கொண்ட சிலர் உங்களுக்க இடைஞ்சல் செய்வார்கள். பலவகைகளிலும் தாக்குதல் வரும் எனினும், சகிப்புத்தன்மையுடன் செயல்படுவதால் மட்டுமே அரசியலில் நிலைக்கலாம். முன்பு பெற்ற அந்தஸ்து, சலுகைகளை பாதுகாத்துக் கொள்ள போராட்டமாகவே இருக்கும். ஆதரவாளர்கள் உங்களின் நல்ல குணத்தை புரிந்து உதவிகரமாக செயல்படுவர். புத்திரர்கள் அரசியல்பணிக்கு தம்மால் இயன்ற அளவில் உதவுவர். 

விவசாயிகள்: பயிர் வளர்க்க செலவு அதிகரிக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் நடைமுறை செலவுகளை ஈடு கட்டி, மனதுக்கு ஆறுதல் தரும். நிலம் தொடர்பான பிரச்னை பெரிய அளவில் தொந்தரவு தராது.

செல்ல வேண்டிய கோயில்: சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில்
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு சீராகும்.

பரிகார பாடல்: வாழ்வு வரினும் மனைதோறும் இரந்துண்டு மாழ்கு பெருகும்
தாழ்வு வரினும் தமியேன் மறக்கும் தகுதியவோ
ஆழ்வுறும் சிந்தைப் புலவோர் பல்லோர் தொழும் ஆள்அரியும்
வீழ்வுறும் செம்பொன் திருமாது கண்ணருள் மென்மலரே!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>