ஓம் நம சிவாய
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
மேலும் இந்த 9ம் எண்ணுக்குரிய கிரகமான செவ்வாய் பகவான் போலீஸ் ராணுவம் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் செய்யும் கிரகமாகும். வினோத் என்ற பெயரை கொண்ட நபரும் வினோத் என்ற பெயரின் கூட்டு எண்ணிக்கை 9 க வரும் நபரும் போலிஸ் , ராணுவம் போன்ற , துறைகளில் பெயரில் VIN NO வருவதால் இந்த துறைகளில் இவர் வெற்றி காண முடியாது .
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
தோல்வியே இல்லாத வாழ்க்கை ஒரு மனிதனுக்கு அமைந்து விட்டால் அது அவனுடைய ஜாதகப்படி பூர்வ ஜென்ம ஸ்தானம் சிறப்பாக அமைந்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் ஒரு மனிதனுடைய செழிப்பான வாழ்க்கைக்கு அவனுடைய ஜெனன ஜாதக அமைப்பு ஒரு காரணம் என்றாலும் அவனுடைய பெயரின் கூட்டு எண்களும் , அந்த பெயரின் உள்ளே ஒளிந்திருக்கும் நன்மை தரக்கூடிய ஒலி அலைகளும் ஒரு காரணமாகிறது
ஒரு மனிதனின் ஜாதக அமைப்பு அவன் பெயரின் கூட்டு எண்கள் அந்த பெயரின் கூட்டு எண்களுக்கு உரிய கிரகம் அவனுடைய ஜாதகத்தில் செழிப்பான இடத்தில இருப்பது போன்ற சிறப்பான அம்சங்கள் அவனுக்கு அமைந்து விட்டால் அவன் ஆயுள் முழுதும் ராஜயோக வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவன் என்றே சொல்ல வேண்டும்.
இது ஒரு பக்கம் என்றாலும் ஒரு மனிதனின் பெயரில் நன்மை தரக்கூடிய உச்சரிப்பு அலைகளும் அவனை வாழ்க்கையின் அனைத்து வித வெற்றி பாதைகளுக்கும் அழைத்து செல்கிறது
வெற்றி என்று நாம் சொல்லும்பொழுது பல வகையில் நாம் பொருள் கொள்ளலாம்.
குடும்ப வாழ்க்கையில் வெற்றி , அதாவது குடும்பத்துக்கு செய்யவேண்டிய அனைத்து கடமைகளையும் சரி வர செய்து கடைசி கால கட்டத்தில் கூட நிம்மதியான வாழ்க்கை வாழ்வது.
திருமண வாழ்க்கையில் வெற்றி , அதாவது நல்ல குணமான அழகான மனைவி அமைய பெற்று திருமண வாழ்க்கையில் பூரண திருப்தி அடைவது
நிரந்தமான வேலை வாய்ப்பு அமையும் விதத்தில் வெற்றி.அதாவது நிரந்தமான வேலை வாய்ப்பு ஒருவனுக்கு அமைந்து அதன் மூலம் சந்தோஷமான வாழ்க்கையை அமைத்து கொள்வது
பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவது அதாவது காசு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறைவு இல்லாமல் பொருளாதார வளத்துடன் கூடிய வாழ்க்கை ஒருவனுக்கு அமைவது
வியாபாரம் சம்பந்தப்பட்ட துறையில் வெற்றி பெறுவது அதாவது தான் செய்யும் வியாபாரத்தில் நஷ்டம் அடையும் சூழ் நிலையே இல்லாமல் இருந்து அதிகப்படியான லாபத்தை அடையும் சூழ்நிலை .
இன்னும் பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்.
மேலே சொன்ன அமசங்களும் வெற்றி வாய்ப்புகளுடன் அமைய ஒரு மனிதனின் பெயர் அமைப்பும் ஒரு காரண மாகிறது
ஒரு தனி மனிதனின் பெயரில் NO என்ற ஒரு சொல் வருமானால் அது அந்த மனிதனின் அனைத்து வகையான முன்னேற்றம் சந்தோஷம் மகிழ்ச்சி போன்றவைகளில் தோல்வியையே ஏற்படுத்தி கொடுக்கும் .
உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ் இனத்தின் ஒரு பெயராக , VINOTH VINOTHINI , VINOBA , VINOTHKUMAR , VINOTH KANNAN , இதே போன்று VINO என்ற சொல் வரும் அமைப்பின் பெயரை கொண்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்
மேலே சொன்ன பெயர்களின் உச்சரிப்பு அலைகள் மற்றவர் விரும்பும் படியான உச்சரிப்பு அலைகளை பெற்றிருந்தாலும் இந்த பெயரில் ஒளிந்து இருக்கும் NO என்ற சொல் நன்மைக்கு மாறான பலன்களை அனைத்து வகையிலும் கொடுக்க கூடியது.
இந்த பெயர்களை கூர்ந்து நோக்கினால் VIN NO என்ற சொல் WIN NO என்ற உச்சரிப்பை பெற்று வருகிறது . அதாவது வெற்றியே இல்லை என்று பொருள் தருகிறது.
அதாவது மேலே கண்ட பெயர்களில் WIN NO வெற்றி இல்லை என்ற பொருள் கொண்ட வார்த்தை வருகிறது என்றால் இந்த VINOTH VINOTHINI , VINOBA , VINOTHKUMAR , VINOTH KANNAN என்ற பெயரை கொண்ட நபர்களுக்கு நபர்களுக்கு எதில் வெற்றி இல்லை , எந்த துறையில் வெற்றி இல்லை , வாழ்க்கையில் அவர் அனுபவிக்கும் எந்த சூழ்நிலையில் வெற்றியே இல்லாமல் போகும் என்பதை கூறுகிறேன் .
மேலே கண்ட பெயர்களில் வினோத் (VINOTH ) என்ற பெயரை எடுத்து கொள்வோம். இனிஷியலோடு சேர்த்து இந்த P. VINOTH என்ற பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை ( P.VINOTH= 8 6 1 7 4 5 = 36 = 9 )9 ம் எண்ணாக வருகிறது என்று வைத்து கொள்வோம் . அதாவது இந்த 9ம் எண் செவ்வாயின் ஆதிக்க எண்ணாகும் .
இந்த செவ்வாய் பகவானை (9 ம் எண்ணை ) சகோதரக்காரன் ,என்றும் , வீட்டு மனைகாரன் என்றும் அழைக்கபடுகிறார் .மேலும் போலிஸ் , ராணுவம் போன்ற துறைகளை ஆதிக்கம் செய்யும் கிரகமாகவும் கருதபடுகிறார்.
இந்த பெயரில் VIN NO (WIN NO என்ற உச்சரிப்பை தரும் சொல் ) என்று வந்து பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 9 என்று செவ்வாயின் ஆதிக்க எண்ணாக வருவதால் இந்த VINOTH என்ற பெயரை உடைய நபருக்கு சகோதரன் சகோதரி வகையில் ஒரு திருப்தி கரமான உறவு நிலை இருக்காது .
இவர்களது உறவு வகையில் எந்த ஒரு ஆதாயத்தையும் எதிர் பார்க்க முடியாது இவருக்கு சாதகமான எந்த ஒரு பலனையும் அவர்களிடத்திலிருந்து எதிர் பார்க்க முடியாது . சுருக்கமாக சகோதரன் சகோதரி உறவு வகையில் இவர் வெற்றி காண முடியாது .
மேலும் அதாவது வீடு மனை போன்ற சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவருக்கு அதிர்ஷ்டம் கிடையாது . வீட்டில் இவருக்கு நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். வீட்டை விட்டு விலகியே இருக்கும் சூழ் நிலையும் ஏற்படும்
மேலும் இந்த 9ம் எண்ணுக்குரிய கிரகமான செவ்வாய் பகவான் போலீஸ் ராணுவம் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் செய்யும் கிரகமாகும். வினோத் என்ற பெயரை கொண்ட நபரும் வினோத் என்ற பெயரின் கூட்டு எண்ணிக்கை 9 க வரும் நபரும் போலிஸ் , ராணுவம் போன்ற , துறைகளில் பெயரில் VIN NO வருவதால் இந்த துறைகளில் இவர் வெற்றி காண முடியாது .
மேலும் மற்றும் ஒரு பெயரில் VIN NO என்று வந்து அவர் பெயரின் மொத்த கூட்டு தொகை 6 என்று வருவதாக வைத்து கொள்வோம். (உதாரண பெயர் . N .VINOTH இந்த பெயரின் மொத்த கூட்டு தொகை 6 6 1 5 7 4 5 = 33 = 6 ). இந்த ஆறாம் 6 எண் சுகரனின் ஆதிக்க எண்ணாகும் .
இந்த 6 ம் எண்ணை களத்திர காரன் என்று கூறுவார்கள் , அதாவது மனைவியை குறிக்கும் கிரகமாகும் .
பெயரில் VIN NO என்று வந்து பெயரின் மொத்த கூட்டு தொகை 6 க வருவதால் இந்த எண்ணை பெயரில் கொண்ட நபருக்கும் இவரின் மனைவிக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும்.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படும். மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிந்திருக்கும் நிலையையும் ,ஏன் மனைவியை இழக்கும் சூழ்நிலை கூட ஏற்படும். மேலும் மனைவி வழி உறவினர்கள் இவருக்கு எந்த வகையிலும் ஒத்து போக மாட்டார்கள் .
இதையே நாம் மனைவி வழியில் எந்த வித வெற்றியும் இல்லை என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். மேலும் இந்த 6 ம் எண்ணுக்குரிய சுக்ரன் காமத்துக்கு அதிபதியான கிரகமாகும்.
பெயரில் VIN NO என்று வந்து பெயரின் மொத்த கூட்டு எண் 6 க வரும் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி காண முடியாது. அதாவது தாம்பத்திய வாழ்க்கையில் இவர் வெற்றி காண முடியாது. இந்த ஒரு காரணத்தால் கூட இவரின் குடும்பத்தில் மன கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரிவினை உண்டாகலாம்.
மேலும் VIN NO என்று பெயரில் வந்து பெயரின் மொத்த கூட்டு எண் . 1 என்று வருவதாக வைத்து கொள்வோம். இந்த 1 ம் எண் என்பது சூரியனின் ஆதிக்க எண்ணாகும் .
இந்த சூரியன் ஆரோக்கியமான உடல் நலம் , தகப்பன் ,தகப்பன் வழி உறவு வகை , அரசியல் , அரசாங்க சம்பந்தப்பட்ட துறை, போன்றவைகளை ஆதிக்கம் செய்யும் கிரகமாகும். பெயரில் VIN NO என்று வந்து பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 1 வரும் நபர் மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த திருப்தியான பலனையும் இவர் எதிபார்க்க முடியாது.
அதேபோல் பெயரில் VIN NO என்று வந்து பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 3 என்று வருவதாக கொண்டால் இந்த 3 எண் குரு பகவானை குறிக்கும் கிரகமாகும். இந்த மூன்றாம் எண் தனகாரன் என்று கூறுவார்கள்.
புத்திர காரன் என்றும் கூறுவார்கள். பெயரில் VIN NO என்று வந்து பெயரின் மொத்த கூட்டு தொகை 3 க வரும் நபருக்கு பொருளாதார வகையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் .
அதாவது கையில் காசு பணம் என்பதை பார்ப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகலாம் . அதாவது பொருளாதார வகையில் மிகவும் பின் தங்கி அதில் அவர் வெற்றி காண முடியாது.
மேலும் இந்த 3 எண்ணை புத்திரகாரன் என்று சொல்லி இருக்கிறேன் . அதனால் .இவருக்கு அமையும் அல்லது அமைந்திருக்கும் வாரிசுகள் விஷயத்தில் தீராத கவலை இருந்து கொண்டே இருக்கும்.
பெயரில் VIN NO என்று வந்து அந்த அந்த பெயரின் கூட்டு எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் உள்ள பலன்களை இன்னும் பல உதாரணங்கள் மூலம் சொல்லி கொண்டே போகலாம்.
ஆதலால் உங்களுக்கு பிறக்கும் குழந்தையாய் இருந்தாலும் சரி , பிறந்திருக்கும் குழந்தையாய் இருந்தாலும் சரி உங்களின் செல்ல குழந்தைகளுக்கு அதிஷ்ட கரமான முறையில் பெயரை அமைத்தும், பெயரில் VIN NO என்ற சொல் வராமல் உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்தும் சந்தோஷமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







