Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
குருபெயர்ச்சி- 2013- மிதுன ராசி -பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருபெயர்ச்சி- 2013- மிதுன ராசி -பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 மே, 2013

குருபெயர்ச்சி- 2013- மிதுன ராசி -பலன்கள்- ஆன்மீக ஜோதிடர் ஆர் . ராவணன் BSC

0 comments

                                                         ஓம் சிவ சக்தி 


சாதுர்யமாகப் பேசி செயலாற்றும் மிதுனராசி அன்பர்களே!

ராசிக்கு 12ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் உங்கள் ராசிக்கே பெயர்ச்சியாகிறார். தன் பார்வை பலத்தால் 5,7,9 ஆகிய இடங்களுக்கு நன்மையளிப்பார். ராசிக்கு 5ல் இருக்கும் சனி, 2,7,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். பாரப்பா இன்னுமொன்று பகரக்கேளு,பரமகுரு ஜென்மத்தில் வந்த போதுகூறப்பா கோதண்டபாணி வீரன்கொற்றவனே குடியேறி போகச் செய்தார்சீரப்பா ஜென்மனுக்கு வேதை மெத்த சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும் வீரப்பா வேந்தனும் தோஷமுண்டுவிளம்பினேன் கோட்சார வினையைக் கேளே!ஆம்...கோதண்டராமன் காட்டுக்குப் போனது ஜென்ம குரு காலத்தில் தான். பொன்பொருள் நஷ்டமுண்டு என்பதையும் இந்த வெண்பா மூலம் உணரலாம்.

இதுவரை சுபவிரயத்தை ஏற்படுத்திய குரு, ஜென்மராசியில் இருந்து சுமாரான பலன்களை வழங்குவார். உடல்நிலையில் ஆரோக்கியக்குறைவு உண்டாகும். செயலில் வேண்டாத தாமதத்தை சந்திப்பீர்கள். பொருளாதாரத்தில் தடுமாற்றத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு. எந்தச் செயலையும் நன்கு யோசித்து மேற்கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம் கவனம். வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்வது அவசியம். மற்றவர் விஷயத்தில் கருத்துச் சொல்வது கூடாது. 

மனதில் அடிக்கடி பயம் ஏற்படும். சகோதரர்களின் உதவி தேவையான சமயத்தில் கிடைக்கும். இயன்றவரை அவர்களை அனுசரித்து நடப்பது அவசியம்.தாயின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். பெற்றோரின் உடல்நிலை திருப்தி அளிக்கும். வீடு,வாகனவகையில் புதிய மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். இருக்கிற வாகனவசதியைப் பயன்படுத்துங்கள். 

குழந்தைப்பேறு வாய்க்கப்பெறாதவர்கள் குருவருளால் குழந்தைபாக்கியம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களைத் தக்க அறிவுரை கூறி நல்வழிப்படுத்த முயல்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். ஒருநாளைப் போல ஒருநாள் சீரான உடல்நிலை இருக்காது. சிலருக்கு மருத்துவச் செலவு அதிகமாகும். கடன் விஷயத்திலும் நிதானம் தேவை. கடன் வாங்கி கடன் அடைக்க முயல்வீர்கள். குடும்பச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றினால் கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியும். களஸ்திர ஸ்தானத்தில் குரு, சனி பார்வை படுவதால் திருமணம் கைகூடினாலும், அதில் தடைகளைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்துவேறுபாடும் உண்டாகும். 

விட்டுக்கொடுத்து நடந்தால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும்.ஆயுள்ஸ்தானம் பலப்படுவதால் உடல்நலக்குறைவு நேர்ந்தாலும் சமாளித்து விடுவீர்கள். மறைமுக எதிரிகளால் தொல்லைக்கு உள்ளாவீர்கள். எதிரிகளை இனம் கண்டு ஒதுங்கி இருப்பது நல்லது. தந்தை வழிச் சொத்துகளில் இருந்த பிரச்னை நல்லமுறையில் தீர்ந்து விடும். உயர்கல்விக்காக வெளியூர்ப்பயணம் செல்வீர்கள். கடந்த காலத்தில் கல்வியைத் தொடர முடியாமல் விட்டவர்கள் கூட, மீண்டும் படிக்கும் வாய்ப்பு குருவருளால் உண்டாகும். 

கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை வாய்க்கப் பெறுவீர்கள். தொழிலில் மிதமான வளர்ச்சியும், சீரான வருமானமும் கிடைக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு. வேலை தேடி முயற்சிப்பவர்களுக்கு விடாமுயற்சி தேவை. மூத்த சகோதரர்களின் ஆலோசனையை ஏற்கத் தயங்குவீர்கள். அவர்களுக்காகப் பணச் செலவும் செய்ய நேரிடும். வாழ்வில் இன்ப துன்பம் இரண்டையும் கலந்து உங்களுக்கு வழங்க மிதுனகுரு காத்திருக்கிறார்.

தொழிலதிபர்கள்: உற்பத்தியை உயர்த்த கடுமையாகப் பாடுபட வேண்டியிருக்கும். ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு கிடைக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு தேவையான வசதிகளைசெய்து கொடுத்து பணியில் ஆர்வமுடன் ஈடுபட வழி ஏற்படுத்துவீர்கள். சக தொழில் சார்ந்தவர்கள் உங்களிடம் நல் அபிப்பிராயத்துடன் நடந்துகொள்வர். நிர்வாகப்பணியில் ஈடுபட புத்திரர்களுக்கு தகுந்த பயிற்சி தந்து பணிபுரிய வைப்பீர்கள்.  

வியாபாரிகள்: முன்பைவிட போட்டி அதிகரிப்பதால் மனதில் குழப்பமும் செயல்களில் தாமதமும் இருக்கும். விற்பனையை உயர்த்த கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும். மூலதன தேவைகளுக்காக சிறு அளவில் கடன் பெறுவீர்கள். புத்திரர்களும், இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் ஒருவரும் வியாபாரம் செழிக்க தம்மால் இயன்ற உதவியை வழங்குவர். லாபம் ஓரளவுக்கு இருக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்வர். இதனால் மனதில் பதட்டமும் செயல்திறனில் குறைபாடுகளும் ஏற்படும். குடும்பத் தேவைகளின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே பணிபுரிவதில் ஆர்வம் வளரும். பணத்தேவையை சரிக்கட்ட கடன் பெற வேண்டி வரும். சிலர் கவனக்குறைவான செயல்களுக்காக நிர்வாகத்தின் கண்டிப்பை பெறுவர். சலுகைகள் கிடைப்பதிலும் தாமதம் இருக்கும். சக பணி சார்ந்தவர் உங்களுக்கு தொழில்நுட்ப உதவி தந்து உறுதுணையாக நடந்துகொள்வர். சூழ்நிலை, பணவரவு போன்றவற்றை கவனத்தில் கொண்டு செலவுகளை திட்டமிடுவது அவசியம். பணி அழுத்தத்தினால் வாழ்க்கைத் துணைவர் சிரமப்படும்பொழுது உங்களின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை அக்கறையுடன் மதித்து செயல்படுவது அவசியம். வேலைகள் குறித்த நேரத்தில் முடியாமல் இழுத்தடிக்கும். சலுகைகள் கிடைக்க தாமதமாகும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் அதிக உழைப்பு மற்றும் நிர்வாகத் திறமையினால் உற்பத்தி, விற்பனையை சராசரி அளவிற்கு கொண்டு வருவர். கடனுக்கு கிடைக்கிறதென்று அதிக பயன்பாடு தராத தொழில் கருவிகளை வாங்க வேண்டாம்.

மாணவர்கள்: தேவையற்ற விஷயங்களில் கவனம் கொள்வதையும் வெளியிடங்களில் சுற்றுவதையும் குறைத்துக்கொள்வதால் மட்டுமே படிப்பில் ஈடுபாடு வளரும். பெற்றோரின் சூழ்நிலை, எதிர்கால தேவைகளை உணர்ந்து படிப்பதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும். சக மாணவர்கள் சமூக நட்பு பாராட்டுவர். படிப்புக்கான பணவசதி ஓரளவுக்கு இருக்கும். தந்தையின் அன்பு, பாசம் ஊக்கம் தரும். படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வகையில் பணி கிடைக்கும். 

அரசியல்வாதிகள்: எதிரிகளின் குறுக்கீடு வருவதால் மனதில் சோர்வும் செயல்களில் தாமதமும் உருவாகும். பொறுமையையும் எதிர்கால நலன் குறித்த அக்கறையையும் மனதில் பதித்துக்கொள்வதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ் பெறுவதைவிட பெற்ற புகழை பாதுகாப்பதில் கவனம் கொள்ளவும். அரசிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். புத்திரர்களின் திறமையும் ஆலோசனையும் உதவிகரமாக அமையும். 

விவசாயிகள்: விவசாயப் பணிகளை மேற்கொள்ள தேவையான பணவசதி, இடுபொருட்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். வழக்கமான பயிரை விட்டு, வேறு பயிர் சாகுபடி செய்யலாமா என்பது போன்ற குழப்பமான எண்ணங்கள் உருவாகும். விளைபொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் முக்கிய செலவுகளுக்கு உதவிகரமாக இருக்கும். நிலம் தொடர்பான பிரச்னையில் பொறுமை காப்பது பலன் தரும். 

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தடைகள் நொறுங்கி நற்பலன் ஏற்படும்.

பரிகாரப் பாடல்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>