Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
கணபதி ஹோமம் நடத்துவது நல்லதா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணபதி ஹோமம் நடத்துவது நல்லதா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 மே, 2013

தொழில் தொடங்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் நடத்துவது நல்லதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் வாஸ்து நிபுணர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments


                                                     ஓம் சிவ சக்தி 

புதிதாக எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள். 

சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்கவேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள்.


செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம்.

நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும். நமது சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து இந்த பூஜையை நடத்தலாம். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை 5 ஆயிரம் ரூபாய்வரை இதற்கு செலவாகும். வீடுகளில் ஆயிரம் ரூபாய்க்குள் இந்த பூஜையைச் செய்து முடிக்கலாம். கணபதி ஹோமத்தை ஒருமணி நேரத்திற்குள் செய்து முடித்துவிடலாம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Continue reading >>