Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 17 டிசம்பர், 2024

அதிர்ஷ்ட பெயர் உங்களுக்கு அமைந்திருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

ஆங்கில எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையில் அபச குணமான ஆரம்ப எழுத்தை பொருளாக கொண்டு, ஆரம்பிக்கும் எழுத்துக்களில் D என்ற ஆங்கில எழுத்துக்கு அதிக பங்கு இருக்கிறது. 

DANGER (ஆபத்து), DOWN (கீழே), DARK (இருட்டு),DAMAGE ( உபயோகமில்லாதது) 

DEATH (இறப்பு), DIE (சாவு), DISEASE (வியாதி),இன்னும், பல அபச குணமான  சொற்கள்  இந்த D ஐ ஆரம்ப எழுத்தாக கொண்டு சொற்களாக  அமைவதை  காணலாம

இப்படி இந்த D , என்ற எழுத்து பெயரில் வரும்பொழுது , ஆபத்து, இருட்டு, உபயோகமில்லாதது, இறப்பு, சாவு, கீழே இறங்குதல், போன்ற அபசகுனமான , நிகழ்ச்சிகளை, குறிப்பதால், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

அதிலும் பெயரின் ஆரம்ப எழுத்தாகவே D என்று வரும்பொழுது மேலே சொன்ன கெட்ட  பலன்கள்  நிகழ்சிகள், இளம் வயதிலேயே அனுபவிக்க கூடிய சூழ்நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.

D என்ற எழுத்து, DIE (சாவு ) என்ற மரணத்தை உச்சரிக்கும் ஒரு சொல்லாக இருப்பதால் , ஒரு மனிதனின் பெயரின் ஆரம்ப எழுத்து, D இல் ஆரம்பித்து  பெயரின் கூட்டு எண் மற்றும் பெயரின் ஹீப்ரு பிரமிடு  4 , 13 , 22 , 31 , இப்படியாக வந்தால், இந்த எண்களை குறிக்கும் வயதுகளில் , அபாயகரமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.  இது பெரியவர்களுக்கும் பொருந்தும் சிறு குழந்தைகளுக்கும் பொருந்தும் . 

அதே போல் ஒரு தனி மனிதனின் பெயரில், WAR (போராட்டம் ) MAR (நாசம் விளைவிக்கிற)  NO (இல்லை) LOW (கீழ்நிலை) ILL (நோயுற்ற )  என்ற சொற்கள், வராமல் இருப்பது நல்லது.

ஒரு தனி மனிதனின் பெயரில் WAR என்ற சொற்கள் வந்தால் அவனுடைய வாழ்க்கை போராட்ட மாயமானதாகவும், மிகவும் சிரம பட்டு வாழ்க்கையை எதிர் நீச்சல் போட்டே காலத்தை ஓட்டவேண்டிருக்கும். 

உதாரண பெயர்கள் : 

ராஜேஸ்வரி RAJESWARI  
மஹேஸ்வரி MAHESWARI
புவனேஸ்வரி -BUVANESWARI 
பரமேஸ்வரி - PARAMESWARI
போன்ற பெண்களின் பெயர்களையும் 

மகேஸ்வரன் MAHESWARAN 
புவனேஸ்வரன் BUVANESWARAN 
போன்ற ஆண்களின் பெயர்களையும் சொல்லலாம் . 

ஒரு தனிமனிதனின்  பெயரில் MAR  என்ற சொற்கள் வருவதை  தவிர்க்கவும்  அப்படி இந்த சொற்கள் வந்தால் அவனுடைய வாழ்க்கைக்கு உயிருக்கு  நாசம் விளைவிக்ககூடிய அல்லது தீங்கு விளைவிக்க கூடிய ஒரு தவறான பாதைக்கு இந்த சொற்கள் அவனை அழைத்து செல்லும்.

மேலும் இந்த சொல் ஒரு தனி மனிதனின் பெயரில் வந்தால் அவனுடைய ஆயுளுக்கு உத்திரவாதம் இல்லை. இது மிகவும் ஆபத்தான சொல்லாகும். 

உதாரண பெயர்கள். 

KUMAR - குமார் 
PREMKUMAR - பிரேம்குமார் 
MARIYAPPAN - மாரியப்பன் 
MARUTHAVANAN - மருதவாணன் 
KUMARADEVAN - குமாரதேவன் 

இந்த பெயர்களில் MAR  என்ற சொல் வருவதை   கவனிக்கவும். 

அடுத்து ஒரு தனி மனித வாழ்க்கையில்  சொத்து , சுகம், இல்லையென்றாலும். அவனுக்கு நல்ல ஆரோக்கியமான நோய் நொடியில்லாத வாழ்க்கை, அமையும்பொழுது, இதை விட பாக்கியம் வேறென்ன வேண்டும்.

ஒரு மனிதனின் பெயரில், ILL என்ற சொற்கள் வராமல் இருப்பது நல்லது. காரணம், இந்த சொல் ஒரு மனிதனின் பெயரில் வரும்பொழுது, உள்ளுக்குள் நோயை பற்றிய பயம் அதிகமாகவும் ஒரு உடல் நலம் குன்றிய நபர் எப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்படுகிறாரோ அந்த உடல் மாதிரியான  அமைப்பை பெற்றிருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இவர்களுக்கு சிறு நோய் நொடிகள் தாக்கினால் கூட பெரிய பாதிப்புகளை உண்டு பண்ணும் . 

உதாரண பெயர்கள் 

MUHILAN - முகிலன் 
ILAVARASAN - இளவரசன்
ILAMATHI - இளமதி - 
இளையராஜா - ILAI YARAJA

இந்த பெயர்களில் IL என்ற சொல் ILL என்ற உச்சரிப்பை பெற்று வருவதை காணலாம் 

மேலும் இவர்களுக்கு உடல் ரீதியாக தீராத  நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

ஒருவருக்கு கவர்ச்சிகரமான பெயர் அமைவது முக்கியமல்ல . அந்த பெயரில் என்ன அர்த்தங்கள் ஒளிந்திருக்கிறது . அந்த அர்த்தங்கள் மூலம் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்குமா ? கெட்ட பலன்கள் கிடைக்குமா ? என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் . 

அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்ளுங்கள் . அதிர்ஷ்டகரமான வாழ்வை தேடிக்கொள்ளுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக