உங்கள் வீட்டில் பணப்பிரச்சனை தீர்ந்து நேர்மறை ஆற்றல் பெருகி நிதி நிலை உயர்வடைய வாஸ்து பீரோ எந்த மூலையில் எந்த திசையில் வைத்தால் வீட்டில் பணம் தங்கும் என்பதை பார்ப்போம் .
உலகில் உள்ள ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுகின்றனர். சிலர் மட்டுமே அவர்களின் பரம்பரை சொத்துக்கள் கிடைப்பது, அதன் மூலம் அவர்கள் சுக வாழ்வு வாழ்வது வழக்கமாக உள்ளது. ஒருவருக்கு பரம்பரையாக என்ன தான் அதிக சொத்துக்கள் கிடைத்தாலும், அதை முதலீடாக வைத்து உழைப்பவர்களே அந்த உச்ச இடத்தில், சுக போகங்களுடன், பணக்காரராக தொடர்ந்து இருக்க முடியும்.
இப்படி ஒருவரின் வீட்டில் செல்வங்களை சேமித்து அல்லது பாதுகாப்பாக வைக்கக் கூடிய இடம் தான் வீட்டில் இருக்கும் பீரோ.
சிலர் என்ன முயற்சி செய்தாலும், வியாபாரம் செய்தாலும் அதில் லாபம் இல்லை. வீட்டில் இருக்கும் செல்வம் தங்காமல் போகுதல் போன்ற பிரச்னைகள் இருக்கக் கூடும்.
இதற்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள், ஒரு வீட்டில் எந்த இடத்தில் பீரோ மற்றும் லாக்கர் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் எப்படி நற்பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வீட்டில் செல்வங்கள் தங்காமல் இருக்க காரணம், அவர்கள் வீட்டில் இருக்கும் நமக்கே தெரியாத சில வாஸ்து பிரச்னை காரணமாக இருக்கும்
வீட்டின் செல்வ நிலை அதிகரிக்க, வீட்டில் பணம், நகை வைக்கக்கூடிய இடமான பீரோ எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும். வீட்டின் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது முக்கிய விஷயம்.
பணம் வைக்கும் திசை மற்றும் முறை இந்த இரண்டுமே வீட்டின் பணவரவை நிர்ணயம் செய்கிறது என்று வாஸ்து ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் வீட்டின் எந்த ஒரு திசையில் வேண்டுமானாலும் நாம் பணத்தை தாராளமாக வைத்துக் கொள்ளலாம் ஆனால் தெற்கு பார்த்தபடி பணத்தை வைக்கக் கூடாது என்பது நியதி. தெற்கு! பணத்தை நிலைக்கச் செய்யாது. கோடி கோடியாக அந்த இடத்தில் பணம் இருந்தாலும் கரைந்துவிடும்.
கிழக்கு மற்றும் மேற்கு திசையைப் பார்த்தபடி பணத்தை வைக்கலாம். ஆனால் அதை விட குபேரனுக்கு உரிய திசையாக இருக்கும் மேற்கு திசையை பார்த்தவாறு பணத்தை வைப்பது தான் நமக்கு மேலும் மேலும் பணத்தை பெருக செய்து, வருமானத்தையும் அதிகரிக்க செய்யும் என்று ஜோதிடம் கூறுகிறது. அப்படி வடக்கு திசையைப் பார்த்தபடி பணத்தை வைக்கும் பொழுது நாம் பணப்பெட்டி அல்லது பீரோ வைத்திருக்கும் போது தெற்கு திசையை பார்த்து நிற்க வேண்டும். பணம் வைக்கும் பொருளானது வடக்கு திசையைப் பார்த்தபடி இருக்க வேண்டும்.
பீரோ மற்றும் பணப்பெட்டி எதுவாக இருந்தாலும் ஒரு அறையின் நான்கு மூலைகளிலும் ஒட்டியுள்ளபடி வைக்கக் கூடாது. அதாவது நீங்கள் படுக்கை அறையில் பீரோவை வைத்து இருக்கிறீர்கள் என்றால், அந்த அறையின் நான்கு மூலைகளிலும் எந்த இடத்தில் நீங்கள் பீரோவை வைத்தாலும் சுவற்றை ஒட்டி வைக்க கூடாது. சுவற்றை ஒட்டி வைக்கும் பொழுது அங்கு பணத்தடை கட்டாயம் ஏற்படும். சுவற்றில் இருந்து சற்று தள்ளியே வைக்க வேண்டும்.
பீரோவை வடக்குத் திசையை பார்த்து வைக்கும் போது சுவற்றை ஒட்டி வைக்காமல் சற்று தள்ளி வைக்க வேண்டும். பீரோவின் பின்புறத்திலும் ஓரளவுக்கு சிறிய இடைவெளி ஆவது கட்டாயம் இருக்க வேண்டியது அவசியமாகும். அந்த இடத்தில் வாயு பகவான் ஊடுருவ இடம் இருக்க வேண்டும். காற்று அடைந்த பகுதியில் பணம் இருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் பணம் சேர்வது தடுக்கப்படும்.
அது போல ஒரு வீட்டில் பணம் என்பது மகாலட்சுமியாக மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே கண்ட இடத்தில் பணத்தை மற்றும் நாணயங்களை போட்டு வைப்பது என்பது மகா லட்சுமி கடாட்சத்தை குறைக்க செய்துவிடும். மணிபர்ஸ், பூஜை அறை, பீரோ, பணத்தை சேமிக்கும் கலன்கள் ஆகிய இடங்களில் மட்டுமே பணம் இருக்க வேண்டும். நீங்கள் கண்டபடி கண்ட இடத்தில் பணத்தை போட்டு வைத்தால் மகாலட்சுமி உங்களுடன் நிரந்தரமாக தங்க மாட்டாள்.
பணம் என்பது நிலையான ஒன்று அல்ல! இன்று உங்களிடம் இருக்கும், நாளை வேறு ஒருவருடைய கைகளில் இருக்கும், எனவே அதனை சரியான வழியில் சம்பாதித்து, சரியான வகையில் தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். இது போன்ற சிறு சிறு விஷயங்களை நாம் பின்பற்றும் பொழுது நம்முடைய வருமானம் அதிகரிக்கும் மேலும் மேலும் பணம் பெருகும் என்பது வாஸ்து மற்றும் ஜோதிட நம்பிக்கை.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக