ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதி என்று கருதபடகூடிய லக்னத்துக்கு ஐந்தாம் வீட்டுக்கு அதிபதி எந்த கிரகமோ அந்த கிரகம் தன்னுடைய சொந்த வீடாகிய ஐந்தாம் வீட்டில் இல்லாமலும் ,
ஒன்பதாம் இடமாகிய பாக்கிய ஸ்தானத்திலும் இல்லாமலும் லக்னத்துக்கு 2 4 10 11 ஆகிய வீடுகளில் இடம்பெறாமல் இருந்து லக்னத்துக்கு 3 6 8 12 போன்ற ஸ்தானங்களில் மறைந்திருந்தால் அந்த ஜாதகருக்கு பூர்வீகம் இல்லை.
இப்படிப்பட்ட ஜாதகர் சுய சம்பாத்திய சொத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது லக்னத்துக்கு 2 4 5 9 10 11 ஆகிய இடங்களில் இருந்து தான் அமர்ந்த வீட்டுக்கு உடைய கிரகத்தோடு சம்பந்தம் பெற்றிருக்க வேண்டும்.
லக்னாதிபதியும் ஐந்துக்கு உடையவனும் சேர்ந்து ஐந்தாம் இடத்தில இருந்தாலும் பதினொன்றாம் இடத்தில இருந்தாலும் அந்த ஜாதகர் தன சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்குவார்
லக்னாதிபதியும் லக்னத்துக்கு பத்தாம் வீட்டுக்கு உடையவனும் பத்தாம் இடத்திலோ அல்லது லக்னத்துக்கு நான்காம் இடத்தில இருந்தாலும் அந்த ஜாதகர் தன சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்கும் கிரக அமைப்பாகும்
லக்னாதிபதி லக்னத்திற்கு நான்காம் வீட்டு உடையவன் லக்னத்துக்கு ஐந்தாம் வீட்டுக்கு உடையவன் இவர்கள் மூவரும் ஒன்றாக சேர்க்கை பெற்று காணப்பட்டாலும் அந்த ஜாதகர் தன்னுடைய சுய முயற்சியால் சொத்து வாங்குவார்.
லக்னாதிபதியும் ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதியும் ஒன்று சேர்ந்து லக்னத்தில் அமர்ந்து இருந்தாலும் அந்த ஜாதனுக்கு தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்குவான்
மேலும் லக்னாதிபதியும் பாக்யதிபதி என்று சொல்ல கூடிய ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதியும் லக்னத்துக்கு பத்தாம் இடத்தில காணப்பட்டாலும் .
லக்னாதிபதி பாக்கியாதிபதி ஜீவனாதிபதி என்று அழைக்கப்படும் ஒன்று ஒன்பது பத்துக்கு உரிய கிரகங்கள் சேர்ந்து எந்த இடத்தில காணப்பட்டாலும் அந்த ஜாதகனுக்கு தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சொத்து அமையும் .
லக்னாதிபதி பாக்கியாதிபதி ஜீவனாதிபதி என்று அழைக்கப்படும் ஒன்று ஒன்பது பத்துக்கு உரிய கிரகங்கள் சேர்ந்து எந்த இடத்தில காணப்பட்டாலும் அந்த ஜாதகனுக்கு தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சொத்து அமையும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக